கற்காலத்துக்கு இந்தியாவைக்  கொண்டுபோக விரும்பும் பசுமை  தீவிரவாதிகள்

மனித நாகரீகத்துக்கு முற்றுப்புள்ளி  வைப்பதே பசுமை தீவிரவாதிகள்  இலட்சியம்

மனித நாகரீகத்துக்கு முற்றுப்புள்ளி  வைப்பதே பசுமை தீவிரவாதிகள்  இலட்சியம்
மனித நாகரீகத்துக்கு முற்றுப்புள்ளி  வைப்பதே பசுமை தீவிரவாதிகள்  இலட்சியம்

ஸ்டெர்லைட் தொழிற்சாலை இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தாமிர உருக்காலை ஆகும். உலகின் ஏழாவது பெரிய ஆலையும் ஆகும். நம் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு தாமிரத் தேவையை இந்த ஆலை தான் நிறைவேற்றுகிறது.

தமிழ்நாட்டில் அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா நிறுவனத்தினரின் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழகத்தின் திறனற்ற, செயல்படாத அரசு எடுத்திருக்கும் அராஜகமான முடிவாகும். சமூக விரோதிகளின் ஊடுருவல் நடந்திருப்பதாக ஏராளமான குறிப்புகள் கிடைத்த பின்பும் மாவட்ட நிர்வாகம மற்றும் போலிஸ் செய்த குளறுபடியால் உண்டான பதிமூன்று பேரின் மரணத்துக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தை  பலிகடா ஆக்குகின்றனர்.. இந்த சம்பவம் நான்கு முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.

முதலாவது, தொழில்முறை புரட்சியாளர்கள், மேம்பாட்டுக்கு எதிரான செயல்பாட்டாளர்கள், பசுமை தீவிரவாதிகள், பகட்டு பேச்சாளர்கள் , வீண் பேச்சு பத்திரிகையாளர்கள் எல்லோரும் ஸ்டெர்லைட்டை வறுத்தெடுக்கும்போது 99 நாள் அமைதியாக நடந்த போராட்டத்தை மறுநாள் திட்டமிட்டு ரத்தக் களறியாக மாற்றியவர்கள் யார் என்பது பற்றி யாரும் அதிகமாக பேசவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்  சுப்பிரமணியன் சுவாமி இந்த போராட்டத்தை துப்பாக்கி சூடு வரை கொண்டு சென்றவர்கள் விடுதலை புலிகள் என்கிறார்.  அவர்கள் தான் போராட்டத்தை வன்முறைக்கு திசை திருப்பியவர்கள். அவர்களால் தான் துப்பாக்கி சூடு நடந்தது என்கிறார். எடப்பாடி பழநிச்சாமியும் தனது உரையில் சமூக விரோதிகளின் ஊடுருவல் இருந்ததை குறிப்பிட்டுள்ளார். தன ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் அப்பாவிகளை தூண்டிவிட்டு வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

இந்த போராட்டம் பற்றிய ஆய்வில் ஏன் எவரும் இதை தூண்டி விட்டவர்களை பற்றி பேச மறுக்கின்றனர்?   ஸ்டேர்லைட்டின் தவறுகளைப் பற்றி மட்டுமே விலாவாரியாக விவரித்து பேசுகின்றனர்.  அதன் உரிமையாளர் ஒன்றும் அவதார புருஷர் அல்லர் ஆனால் அவருடைய பணியாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட எவரையும் கொன்று போடவில்லை.

இரண்டாவது, நிர்வாகத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஏராளமான நஷ்டத்துக்கு யார் பொறுப்பு? இதனால் ஏற்படும்  பொருளாதாரத் தாக்கத்தை யார் கவனிப்பார்? 3500 பேர் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இது தவிர வேறு பலர் இந்த நிறுவனத்தை சார்ந்த சில வேலைகளை செய்துவந்தனர். ஆலையில் நேரடியாகவும் இந்நிறுவனத்தைச் சார்ந்தும் வேலை பார்த்தவர்கள் சுமார் 26000-50000 பேர் ஆவர். இத்தனை பேரும் இன்று வேலை இழந்து நிற்கின்றனர். இந்தியாவில் உள்ள மற்ற தாமிர ஆலைகளில் வேலை செய்வோர் எண்ணிக்கை இவற்றை விட குறைவு என்று ஸ்டெர்லைட் பொறியாளர் பிபிசி பேட்டியில் குறிப்பிட்டார். மேலும் அவர் பல தொழிலாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தாமிர உருக்காலை ஆகும். நம் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு தாமிரத் தேவையை இந்த ஆலை நிறைவேற்றுகிறது. உலகின் ஏழாவது பெரிய தாமிர ஆலையும் ஆகும். இந்த ஆலையை மூடிவிட்டால் தாமிரம் தேவைப்படும் மற்ற தொழிற்சாலைகளுக்கு தாமிரம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் விலை உயர்வும்   நுகர்வோருக்கு  அதிக சிரமும் ஏற்படும். தாமிரம் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டால் இப்போதைய நடப்பு கணக்கு பற்றாக்குறை இன்னும்  மோசமாகும்

மூன்றாவதாக, சுற்றுப்புறச் சூழலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து ஆலைகளையும் மூடிவிட வேண்டுமா என்று சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் என்பவர்களையும் போராட்டக்காரர்களையும் கேட்கிறேன்? தாமிரம் என்பது மின்விசிறி, ஏர் கண்டிஷனர், கேபிள் வயர் எனப் பலவற்றிலும் பயன்படுகிறது. இவை இல்லாமல் நாம் வாழ்ந்துவிட முடியுமா?  அனைத்து ஆலைகளையும் வேண்டாம் என்று போராட்டம் நடத்துவோர் இந்த வசதிகள் இல்லாமல் தான் வாழ்கின்றனரா?

இப்போது இங்கே நான் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். என் முன்னால் என் கணினி இருக்கிறது அதில் இந்தக் கட்டுரையை  தட்டச்சு செய்கிறேன். இங்கே ஒரு மேசை, நாற்காலி, கணினி, தொலைபேசி, கட்டில், ஏர் கண்டிஷனர், புத்தக அலமாரி., துணிமணி வைக்கும் அலமாரி,  என்று பல பொருட்கள் இருக்கின்றன. என் வீட்டில் ஆயிரக்கணக்கான பொருட்கள் உள்ளன. இவற்றை தயாரித்ததில் சுற்றுப்புறச்சூழல் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். பிறகு மின்சாரம் இருக்கிறது. மின்சார உற்பத்தியும் சுற்றுப்புறத்துக்கு ஏதேனும் தீங்கு இழைத்திருக்கலாம்.  [இந்தியாவில் அணு மின் நிலையம் வந்த பிறகு இன்னும்]

உங்கள் பகுதியை சுற்றிப்பாருங்கள். சாலை, கார், பேருந்து, ரயில், அஞ்சல். அங்காடி, திரையரங்கு, பள்ளிக்கூடம் கல்லூரி, – என இவையனைத்தும் சேர்ந்து தான் மனித நாகரிகத்தை உருவாக்குகிறது. இவையெல்லாம் சுற்றுச்சுழலுக்கு விலை கொடுத்ததனால் கிடைத்தவையே.

என் கருத்தை எளிமையாகச் சொல்லி விடுகிறேன். இயற்கையான உலகத்தை மாற்றித்தான் இந்த நவ நாகரீக உலகம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய இயற்கை சுழலை மாற்றாமல் எதுவும் செய்ய இயலாது. இயற்கைக்கு கேடு விளைவிக்காமல்  நாகரீகமான வாழ்க்கை வாழ முடியாது.

எனவே ஸ்டெர்லைட்டையும் மற்ற ஆலைகளையும் மொத்தமாக எதிர்க்கும் இயற்கை சுழல் ஆர்வாலர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டால் நாகரீகத்தின் அத்தனை அம்சங்களையும் தகர்த்தெறிந்து விட்டு நாம் பழைய கற்காலத்துக்கே போய்விட வேண்டும்.  ஏனெனில் கற்காலத்தில் தான் மனிதன் இயற்கைக்கு எந்த கேடும் ஏற்படுத்தாமல் அதனுடன் முழுமையுடன் இணைந்து வாழ்ந்துவந்தான். ஹாப்ஸ் என்பவர் கூறுவது போல அந்த வாழ்க்கை ‘வறுமையும் அழுக்கும் கொடுரமும் குறுகிய வாழ்நாளும் கொண்டதாக‘ இருக்கும்.

முடிவாக பசுமை தீவிரவாதிகளின் ஒரே கொள்கை நாகரீகத்துக்கு முடிவு கட்டுவது தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் என்பது இந்திய நிறுவனங்கள்  பெருமைப்படத்தக்க நிறுவனமும் அல்ல. சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய காரணத்துக்காக   அதற்கும் நூறு கோடி அபராதம் விதிக்கப்பட்டது உண்டு.  சட்டரீதியான சமூக ரீதியான பொறுப்புணர்ச்சியின் அடிப்படையில் தான் அதன் இயக்கமும் இலாபமும் இருக்கிறது. ஆனால் இன்று போராளிகள் என்பவர்கள் இந்த ஆலைக்கு மட்டும் எதிரானவர்கள் அல்லர். அவர்கள் இந்திய பொருளாதார முன்னேற்றத்துக்கே எதிரானவர்கள். முன்னேற்றத்தை அவர்கள் விரும்புவது கிடையாது. இதனால் தான் அவர்கள் அரசு நடத்தும் நர்மதா மற்றும் தெஹ்ரி திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சுருக்கமாகக் கூறினால் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது அதன் பின்னணியில் இருப்பவர் யார் என்பதை நன்கு ஆராய்ந்து அறிய வேண்டும். அல்லது நாம் கற்காலத்தில் தான் வசிக்க நேரிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here