சிதம்பரத்தின்  உறவினர் ஏ சி முத்தையா ரூ. 102  கோடி வங்கி கடன் வாங்க ஏமாற்றியதாக சி பி ஐ வழக்குப் பதிவு

தனது வருவாயை உயர்த்தி காட்டி சிண்டிகேட் வங்கியில் இருந்து ரூ. 102  கோடி ரூபாய் தனது நிதி நிறுவனத்துக்கு கடன்  பெற்றதாக சோனியா காந்தியின் மற்றொரு கையாளான ஏ சி முத்தையா மீது சி பி ஐ வழக்கு பதிவு செய்துள்ளது

0
2394
ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க ஏமாற்றியதாக சி பி ஐ வழக்குப் பதிவு
ஏ சி முத்தையா ரூ. 102 கோடி வங்கி கடன் வாங்க ஏமாற்றியதாக சி பி ஐ வழக்குப் பதிவு

வெள்ளிக்கிழமை [8-6-2019] அன்று மாலை தொழிலதிபரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் உறவினருமான ஏ சி முத்தையா மீது வங்கி கடன் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது, சிண்டிகேட் வங்கியில் இருந்து ரூ. 102  கோடி ஏமாற்றி வாங்கியதற்காக இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ப சிதம்பரம் நிதியமைச்சரான 2004ஆம் வருடத்தில் இருந்து இந்த ஏமாற்று வேலையில் இவர் ஈடுபட்டு வந்ததாக சி பி ஐ தனது குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

குற்றப் பத்திரிகையில் முத்தையாவின் First Leasing Company of India (FCLI) தனது வருமானத்தை உயர்த்தி காட்டி பொதுத்துறை  நிறுவனமான சிண்டிகேட் வங்கியிடம் இருந்து ரூ. 102  கோடியை கடனாக பெற்று ஏமாற்றி வந்துள்ளது. அவரது கூட்டாளியான ஃபருக்கி இராணியும் இன்னும் இருபது பேரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1998 முதல் முத்தையாவின் நிறுவனத்தின் நிதிநிலை  தடுமாறத் தொடங்கிவிட்டது, அதனால் அப்போதிருந்தே தமது வருமானம் குறித்து பொய்யான தகவலை பரப்பி வந்துள்ளது. 2004ஆம் வருடம் தனது  உறவினர் ப சிதமபரம் நிதியமைச்சர் ஆனதும் பொய்யான தகவல்களை அளித்து சிண்டிகேட் வங்கியில் இருந்து பணத்தைக் கறக்கத் தொடங்கிவிட்டது.

சிதம்பரத்தைப் போலவே தொழிலதிபரும் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவருமான   ஏ. சி முத்தையாவும் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். போஃபோர்ஸ் ஊழலில் ஓட்டவியோ குவாட்ரோச்சிக்கு இடைத்தரகுக்கு பணப்பரிமாற்றத்துக்கு உதவிய ஏ இ சர்விசஸ் என்ற போலி நிறுவனம் ஆரம்பத்தில் முத்தையாவுக்கு சொந்தமானதாக இருந்தது என்று சுப்பிரமணியன் சுவாமி பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். பின்னர் வழக்கு நடக்கும்போதுதான்  அது வெளிநாட்டவர் பெயருக்கு மாற்றப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் பெல்ஜியத்தின் மதிப்புறு தூதுவராக[ Honorary Consul of Belgium] இருந்த முத்தையா சோனியா காந்திக்கு பெல்ஜியம் நாட்டின் மிக உயர்ந்த விருது ஒன்றை வழங்கினார். பின்னர் இவர் பல பொருளாதார முறைகேடுகளில் ஈடுபட்டதை அறிந்த பெல்ஜியம் அரசு இவரை 2013ஆம் ஆண்டு அவரை அந்த உயர் பதவியில் இருந்து நீக்கிவிட்டது.

சிண்டிகேட் வங்கி ப சிதம்பரத்தின் பதவிக்காலத்தின் போது முத்தையாவின் நிறுவனம் பொய்யான தகவலை தந்து ஏமாற்றி  தன்னிடம் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று விட்டதாக 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் முறையிட்டது. முத்தையா வங்கியின்  விதிகளை கடுகளவும் பின்பற்றாமல் தன உறவினரான சிதம்பரத்தின் ஆதரவாலும் அதிகாரத்தாலும்  வங்கிகளை மிரட்டி உருட்டி கடன் பெற்றார்.

சி பி ஐ தனது குற்றப்பத்திரிகையில் , ‘’சென்னையில் உள்ள [வங்கியல்லாத நிதி நிறுவனம்] சிண்டிகேட் வங்கியிடமிருந்து   2004 முதல் கடன் வாங்கியுள்ளது. கணக்கு வழக்குகள் ஆரக்கிளில் பதிவாகியுள்ளன. தனது வருமானத்தை பெருக்கி காட்டியும் தனக்கு சொந்தமில்லாத சொத்துக்களை தனதாகக் காட்டியும் இந்த நிதி நிறுவனம் ஏமாற்று வேலையில் பித்தலாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிதி நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு கடன் கொடுத்திருப்பதாக போய் கணக்கு காட்டியுள்ளது. உண்மையில் அந்த பணம் முழுக்க அதன் போலி நிறுவனங்களுக்கு போயுள்ளது. இந்தப் பணம் வாராக் கடனாகக் காட்டப்பட்டு பயனற்ற சொத்தாக [NPA ]கணக்கில் சேர்க்கப்பட்டது இதனால் இந்த நிறுவனத்தால் சிண்டிகேட் வங்கிக்கு 102.87 கோடி ருபாய் நஷ்டமாகிவிட்டது.

“புலனாய்வில் ஏழு போலி நிறுவனங்கள் நடத்தப்பட்டுள்ளதும் திட்டமிட்டு இந்த சதி நடந்துள்ளதும் போலி கணக்கு காட்ட நிறுவனத்தின் தணிக்கையாளர்கள் ஒத்துழைத்ததும் தெரியவந்தது. இவர்கள் வங்கி கடனைப் பெறுவதற்காக கூடுதலாக தமக்கு வருமானமிருப்பது போல போலி அறிக்கை தயாரித்து கடன் வாங்கி திட்டமிட்டு ஏமாற்றியுள்ளனர்.  இவர்களின் சதியால் சிண்டிகெட் வங்கிக்கு இப்போது 102.87 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது இந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்களும் மேம்பாட்டாளர்களும் தம்மை நம்பி பணம் கொடுத்த வாடிக்கையாளர்களின் பணத்தை ஏமாற்றி வேறு அறக்கட்டளை ஒன்றிற்கு தானமாக வழங்கிய குற்றத்தையும் செய்துள்ளனர்”. வங்கிக்கொள்ளை தலைவரான முத்தையாவின் மீது சி பி ஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here