அஹ்மத் பட்டேல் தொடர்பு கொண்ட நிறுவனத்தின் 4700 கோடி சொத்துக்களை ED பறிமுதல்

சந்தேசரா குழுமம் & ஸ்டேர்லிங் பையோ டெக்கின் 4,700 கோடி ரூபாய் சொத்துக்கள் மீது விசாரணை

0
2286
சந்தேசரா குழுமம் & ஸ்டேர்லிங் பையோ டெக்கின் 4,700 கோடி ரூபாய் சொத்துக்கள் மீது விசாரணை
சந்தேசரா குழுமம் & ஸ்டேர்லிங் பையோ டெக்கின் 4,700 கோடி ரூபாய் சொத்துக்கள் மீது விசாரணை

அஹ்மத் பட்டேலுக்கு நெருக்கமாக இருக்கும் அவரது மருமகனின்  நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை (ED) குறி வைத்திருப்பது அவருக்கு சூட்டை கிளப்பி விட்டது.

ஸ்டேர்லிங் நிறுவனம் அஹ்மத் பட்டேலுக்கு ‘மிகவும் வேண்டிய’  நிறுவனம். அதற்கு இப்போது அமலாக்கத் துறையினர் குறி வைத்துள்ளனர். இந்த தகவல் அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் அஹ்மத் பட்டேலின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்று வரும் இந்த ஸ்டெர்லிங் பயோ டெக் நிறுவனம் மற்றும் அதன் பொறுப்பில் செயல்படும் சந்தேசரா நிறுவனத்தின் 702  மில்லியன் மதிப்புடைய  4,700  கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை தனது விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு இவை பொது வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றியுள்ளன என்பது தான் வழக்கின் சாராம்சம் ஆகும். இது கருப்பு பணத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய வழக்கு ஆகும் .

ஏற்கெனவே இந்நிறுவனங்களின் மீது மத்தியப் புலனாய்வு (CBI) துறையும், அமலாக்கத் துறையும் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளன.  முதல் வழக்கு சந்தேசரா நிறுவனம் மற்றும் ஸ்டெர்லிங் பயோ டெக் நிறுவனத்தில்  இருந்து குஜராத்தின் அரசு துறை அதிகாரிகளுக்கு பணம் இலஞ்சமாகக் கொடுத்த விவகாரம் ஆகும். வருமான வரித்துறை  அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாக அகமத் பட்டேலின் மருகன் இர்ஃபான் சித்திக் மத்திய புலனாய்வு துறை முதல் தகவல் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த பால் வள நிறுவனத்தில்  டாக்டர் சுபாஷ் சந்திரா வருமான வரி என்ற பெயரில் 75000 ரூபாய் 25.02.2011 அன்று  ரொக்கமாக வரவு வைக்கப்பட்ட விவரம்  அன்றாட கணக்குவழக்கு தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வதோதராவிடம் இருந்து தேடுதல் குழுவின் எண் 17க்குரியவர் கைப்பற்றினார்.  இந்த  தொகைக்கான ரசீதும் அத்துடன்  இர்ஃபான் பாய் எனப்படும் ஒருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது. இந்த பெருந்தொகையும் மொத்த ரசீதுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘’ஷோகீன் ப்ராப்’’ [டில்லி பண்ணை வீடு]  என்று வதோதராவின் பெயருக்கு கீழ் ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் கொடுத்ததாக கணக்கேடுகளில் பற்று வைக்கப்பட்டுள்ளது. அது போல காகன் தவான், டாக்டர் சுபாஷ் சந்திராவிடம் இருந்து 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி முப்பது இலட்சம் பெற்றதாகவும் அதை ஷோகீன் ப்ராப்பெர்ட்டிஸ் ப்ரைவேட் லிமிட்டட் உரிமையாளர் ஷோகீனிடம் கொடுத்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. இர்பான் பாய் என்று அழைக்கப்படும் இர்பான் சித்திக் அகமத் பட்டேலின் மகள் மும்தாஜ் பட்டேலின் கணவர் ஆவார். டில்லியில் வசிக்கும் காகன் தவான், காங்கிரஸ் தலைவர் அகமத் பட்டேலுக்கு மிகவும் நெருங்கியவர் ஆவார். விசாரனைக்குள்ளாகும்  இந்த நான்காயிரத்து எழுநூறு கோடி சொத்துக்களில் காகன் தவான் சொத்துக்களும் அடக்கம்.

இந்த இரு நிறுவனங்களின் வழக்கில் அப்போது மத்திய புலனாய்வுத் துறை  அதிகாரியாக இருந்த கறை படிந்த கரங்களை உடைய சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.  2011 ஆம் ஆண்டின் ஸ்டேர்லிங் நாட்குறிப்புகளில் இருந்து குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வருமான வரி ஆணையர்களில் இவரும் ஒருவர். அப்போது அஸ்தானா சூரத்தில் போலிஸ் ஆணையராகப் பணியாற்றினார். ஸ்டெர்லிங் நிறுவனத்தில் நடந்த ஊழலில் இவரது பெயரும் அடிபடுவதால் இவரை சிறப்பு இயக்குனராக்கக் கூடாது என்று மத்தியப் புலனாய்வு துறை இயக்குனர் அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதே ஸ்டேர்லிங் நிறுவனம் மீது இரண்டு வழக்குகள் பதிவாகி இருந்தன.  அஹமத் பட்டேல் தொடர்புடைய இந்த நிறுவனத்திடம் இருந்து முன்று கோடிக்கும் அதிகமான தொகையை அஸ்தானா பெற்றிருப்பதாக ஸ்டெர்லிங் நாட்குறிப்புகள் காட்டுகிறது என்று  பிரபல வழக்கறிஞரும் சமுக செயற்பாட்டாளருமான பிரஷாந்த் பூஷன்  தனது  வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தலைமை நுண்ணறிவு ஆணையரும் [Chief Vigilance Commissioner] அரசும் உச்ச நீதிமன்றமும் அஸ்தானா குறித்து மத்திய புலனாய்வு இயக்குனர் தெரிவித்த மறுப்பை மதிக்காமல் அவருக்கு பதவியைத் தூக்கி கொடுத்தன.  ஏன் அவர்கள் அவரது மறுப்புக்கு செவி சாய்க்கவில்லை என்பது இன்றும் புரியாத புதிர். காங்கிரஸ் கட்சியும் அஸ்தானாவுக்கு பதவி உயர்வு கொடுப்பதில் அக்கறையாக செயல்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அகமத் பட்டேலுக்கு ராகேஷ் அஸ்தானாவுடன் இருந்த நெருக்கம் தான். இன்று நரேந்திர மோடி, பிஜேபி தலைவர் அமித் ஷா ஆகியோருடன் நெருக்கமாக இருக்கும் சில தந்திரமான  ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2014 ஆம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருந்த அஹமத் பட்டேலுடனும் இன்றும் நெருக்கமாக இருக்கின்றனர். இரட்டை குதிரையில் சவாரி செய்யும் இந்த அதிகாரிகள் அரசியல்வாதிகளை ஏமாற்றி வருகின்றனர்.

அமலாக்கத் துறையினரின்  விசாரணைக்கு உள்ளாகும்  சொத்துக்களில் நான்காயிரம்  ஏக்கர் நிலம், அதில பால் சுத்திகரிப்பு ஆலைக்குரிய இயந்திரங்கள், பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் உள்ள இரு நூறுக்கும் அதிகமான வங்கி கணக்குகள்  6.67 கோடி மதிப்பிலான பங்குகள் மற்றும் சொகுசு கார்கள் பலவும் அடங்கியுள்ளன. டில்லியில்  இந்த கருப்பு பண வழக்கில் புலனாய்வு  நடந்தபோது அதற்குரிய சிறப்பு நீதிமன்றம் [Special PMLA Court] மூலமாக ஸ்டெர்லிங் நிறுவனத்தை சேர்ந்த நிதின் சந்தேசரா, சேதன் சந்தேசரா உட்பட பலருக்கும் ஜாமீனில் வெளிவராத கைதாணை [வாரன்ட்]  பிறப்பிக்கப்பட்டது.  இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் சந்தேசரா குடும்பத்தினர் முந்நூறுக்கும் அதிகமான ஷேல் நிறுவனங்களை தங்கள் பெயரிலும் பினாமி பெயரிலும் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இவை வங்கியில் கடன் வாங்கும் பணத்தை பிரித்து விடவும் தவறாக பயன்படுத்தவும் இவர்களுக்கு உதவின. இவற்றை டம்மி இயக்குனர்கலை கொண்டு  நடத்தினர். அதாவது ஸ்டெர்லிங் குழுமத்தைச் சேர்ந்த வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருவோரை இந்த நிறுவனங்களின் இயக்குனர்களாகப் பெயர் பதிவு செய்துகொண்டு அவற்றில் நஷ்டக் கணக்கு காட்டி திரும்ப திரும்ப வங்கிகளில் கடன் வாங்குவதுண்டு.  இந்த பினாமி நிறுவனங்களுக்குள் பொருட்கள் விற்றது போலவும் வாங்கியது போலவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. கடனாக பெற்ற தொகையும் பல்வேறு பினாமி நிறுவனங்களுக்குள் மாறி மாறி கொடுத்து வாங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.   இந்த தகவல்களை எல்லாம் கடந்த வெள்ளிகிழமை அன்று அமலாக்கத் துறை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

நிறுவனங்களுக்குள் மாற்றப்பட்ட வங்கிக் கடன் தொகையில் ஸ்டெர்லிங் பையோ டெக் மற்றும் ஸ்டெர்லிங் இன்டர் நேஷனல் என்டர்பிரைசஸ்  லிமிட்டட் நிறுவனத்தில் பங்குகள் வாங்குவதற்காக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதனால் இதற்கு சந்தை மதிப்பு உயர்ந்திருப்பதாகவும் நிறுவனங்கள நல்ல இலாபத்தில் இயங்குவதாகவும் ஒரு தோற்றம் காட்டப்பட்டது. 140 கோடி ருபாய் மதிப்புடைய பல்வேறு சொகுசு கார்களான போர்ஷ், ரேஞ் ரோவர், ஆடி, மெர்சிடிஸ், பி. எம் டபிள்யு போன்றவற்றை வங்கி கடனில் தீப்ராஜ் டிரேடிங் லிமிட்டட், கேட்ஸ்பி டிரெடிங் லிமிட்டட், நியு போர்ட் என்டர்பிரைசஸ் லிமிட்டெட், ராஜ் போன்ஸ் லிமிட்டட் போன்ற  பினாமி கம்பெனிகளின் பேரில் வாங்கப்பட்டதாக கணக்கு காட்டி அந்தத் தொகையில் சொந்த உபயோகத்துக்காக தங்க வைர நகைகளை வாங்கிக்கொண்டனர். . இவ்வாறு  மாற்றப்பட்ட தொகைகளில் கொஞ்சம் அரசு அதிகாரிகளுக்கும் இலஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போது அமலாக்க துறை இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்த தகிடுதத்தங்களையும் அறிய முற்பட்டுள்ளது.  நைஜீரியாவில் எண்ணெய் பீப்பாய், சொகுசு படகு விடுதல், எண்ணெய் கிணறுகள் வாங்குதல் என பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளது. மொரிஷியஸ், ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், செஷெல்ஸ் ,அமெரிக்கா மற்றும் வேறு சில நாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்திருப்பதாக தெரிகிறது.  ஸ்டெர்லிங் குழுமத்துக்கு சொந்தமாக வெளிநாடுகளில் சுமார்  ஐம்பது வங்கி கணக்குகள், சொத்துக்கள், நிறுவனங்கள், இருப்பதாக அமலாக்க துறை கண்டுபிடித்துள்ள தகவலை பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் வெளியிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here