47 ஆண்டுகளாகப் போராடிய வழக்கில்  40 இலட்ச ரூபாய்க்கு மேல் டில்லி ஐ ஐ டியியிடம் இருந்து பெறுகிறார் சுவாமி

நீதிமன்றத்தில் சுவாமி நடத்திய ஐ ஐ டி பணி நீக்க வழக்கில் [ஏப்ரல் எட்டாம் தேதி , 2௦19] சுவாமிக்கு சாதகமான தீர்ப்பு

3
4567
நீதிமன்றத்தில் சுவாமி நடத்திய ஐ ஐ டி பணி நீக்க வழக்கில் [ஏப்ரல் எட்டாம் தேதி , 2௦19] சுவாமிக்கு சாதகமான தீர்ப்பு
நீதிமன்றத்தில் சுவாமி நடத்திய ஐ ஐ டி பணி நீக்க வழக்கில் [ஏப்ரல் எட்டாம் தேதி , 2௦19] சுவாமிக்கு சாதகமான தீர்ப்பு

டில்லி ஐ ஐ டி யில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருந்த  சுப்பிரமணிய சுவாமியை திடீரென பணி நீக்கம் செய்ததால் சுவாமி அக்கல்வி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு நாற்பத்தேழு ஆண்டுகளாக நடந்தது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் நடந்த நீண்ட கால சேவை வழக்கு இதுவே எனலாம். தீர்ப்பு இவருக்கு சாதகமாக வெளியானதால் அவர் தனது நிலுவை சம்பளத்தை எட்டு சத வீத வட்டியுடன் ஐ ஐ டி யிடம் இருந்து பெறுவார்.  1972இல் பொருளாதாரத் துறை பேராசிரியராக இருந்த சுவாமிக்கு பொருளாதாரக் கொள்கையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால்  அவரை டில்லி ஐ ஐ டியில் இருந்து வேலையை விட்டு வெளியேற்றினர்.  சுவாமி இந்தியப் பொருளாதாரக் கொள்கை சோவியத் கொள்கை சார்ந்தது என விமர்சனம் செய்தது இந்திரா காந்திக்கு கோபத்தை உண்டாக்கியது. ஓர் இளம் பொருளியலாளர் தனது பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்தது பிரதமருக்குப் பிடிக்கவில்லை. இதன் விளைவு அவர் ஐ ஐ டி யில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இடது சாரி கல்வியாளர்களும் சுவாமியின் மீது வெறுப்பைக் காட்டினர்.

முனைவர் ரோக்ஸ்னா சுவாமியும் வெளியேற்றப்பட்டார்.

மாவட்ட நீதிபதி விநீதா கோயல் பல ஆண்டுகளாக இவ்வழக்கை விசாரித்து வந்தார். ஏபரல் மாதம் எட்டாம் தேதி எட்டு சத வீத வட்டியுடன் ஐ ஐ டி சுவாமியின் சம்பள பாக்கியைத் தர வேண்டும் என  உத்தரவிட்டார்.

ஒப்பந்த அடிப்படையில் கணக்கு துறையில் பேராசிரியராக இருந்த சுவாமியின் மனைவி ரோக்ஸ்னாவையும் ஐ ஐ டி வெளியேற்றியது. அத்துடன் இருவரும் அவர்கள் அங்கு குடியிருந்த  ஐ ஐ டி குடியிருப்பையும் விட்டு உடனே காலி செய்ய வேண்டியதாயிற்று. அப்போது  1969இல்  ஐ ஐ டியில் சுவாமியைப் பேராசியராகத்  தெரிவு செய்தவர் நேர்காணல் குழுவின் தலைவராக இருந்த  சிறந்த பொருளியல் நிபுணரான முனைவர் மன்மோகன் சிங் ஆவார். [இவர் பிற்காலத்தில் பிரதமரும் ஆனார்]. சுவாமி அது வரை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்தவர் அப்போது ஐ ஐ டியின் பொருளாதாரத் துறைத் தலைவராக இருந்த அமர்த்தியா சென்னின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்தார்.  ஆனால் இங்கு சுவாமி வந்த பிறகு சென் இடது சாரி கல்வியாளர்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி தன் மனதை மாற்றிக் கொண்டார். சுவாமிக்கு  அதுவரை வேலை தருவதாக உறுதி அளித்திருந்த  அமர்த்தியா சென் இப்போது தன் உறுதியில் இருந்து பின் வாங்கிவிட்டார். ஆனால் சுவாமியின் கல்வித்திறனால் ஈர்க்கப்பட்ட மன்மோகன் சிங் அவரை ஐ ஐ டி பொருளாதாரத் துறையின் பேராசிரியராக நியமித்தார். இந்நிலையில் இளம் பேராசிரியரான சுவாமியின் சந்தை பொருளாதாரம் பற்றிய கட்டுரைகள் பத்திரிகைகளில் வந்ததைக் கண்டதும் அவை  அன்றைய பிரதமருக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது. சுவாமி பிரதமரின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சித்து விட்டு தன்னுடைய சந்தை பொருளாதாரக் கொள்கையே சிறந்தது எனவும் அக்கட்டுரைகளில்  விளக்கினார்.  இதனைக் கண்டு பொறுக்க முடியாத இந்திரா காந்தி உடனே அவரைப் பணியில் இருந்து நீக்கும்படி செய்தார்.

அப்போதிருந்தே சுவாமி தன்னைப் பணி நீக்கம் செய்தது செல்லாது என்று நீதிமன்றத்தில் வாதாடி வந்தார். அதே சமயம் அவர் தீவிர அரசியலிலும் இறங்கி விட்டார். 1974 முதல் ஜன சங்கம் கட்சியின் ராஜ்ய் சபை உறுப்பினரானார். மீண்டும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்குள்ள பொருளியல் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். 1991 ஆம் ஆண்டில் நீதிமன்றத் தீர்ப்பு இவருக்குச் சாதகமாக வந்தது. நீதிமன்றம் இவரைப் பணியில் இருந்து நீக்கியது செல்லாது என தீர்ப்பு அளித்தது. அவரும் டில்லி ஐ ஐ டியில் திரும்பப் போய் பணியில் சேர்ந்தார். சேர்ந்த ஒரே நாளில் அந்தப் பணியில் இருந்து விலகினார். சட்ட நுணுக்கம் தெரிந்த சுவாமி தான் பணியில் சேர்ந்த நாள் வரையிலான தனது சம்பள பாக்கியை கேட்டார். அதாவது 1972 முதல் 1991 வரையிலான 19 வருடங்களுக்கு சம்பள பாக்கியை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அவரை எதிர்த் து வந்த அவருடைய அரசியல் எதிரிகள் அவ்வழக்கை நடக்க விடாமல் இழுத்து அடித்தனர். அவருக்கு சம்பள பாக்கி கிடைக்க விடாமல் அனைத்து உத்திகளையும் தந்திரங்களையும் கையாண்டனர்.

ராம் ஜெத்மலானியும் அருண் ஜெட்லியும்

அந்தக் காலத்தில் ராம் ஜெத்மலானியும் சுவாமியும் தீராப் பகை கொண்டிருந்தனர். [இப்போது நண்பர்களாகி விட்டனர். அது வேறு விஷயம்]  சுவாமிக்கு ஐ ஐ டி யினர் சம்பள பாக்கியை கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக ராம் ஜெத்மலானி எழுத்து மூலமாகவும்  வாய்மொழியாகவும் மிரட்டல் விடுத்தார். இடது சாரி கல்வியாளர்களும் இவருக்கு சம்பள பாக்கியை தரக் கூடாது  என்று வாதிட்டனர். சுவாமிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கிரிமினல் வழக்கை சந்திக்க நேரிடும் என்று ராம் ஜெத்மலானி பகிரங்க மிரட்டல் விடுத்தார். 1993இல் ராம் ஜெத்மலானியின் சட்டத் துணைவராக இருந்த அருண் ஜெட்லி  ஐ ஐ டி க்கு ஒரு மட்டமான சட்ட ஆலோசனையை வழங்கினார். அதாவது ஐ ஐ டி சம்பள பாக்கியை சுவாமிக்கு  வழங்கும்  முன்பு அவர் அந்த இடைப்பட்ட காலத்தில் ஹார்வார்டு பலகலைக் கழகத்தில் கற்றுக்கொடுத்ததற்குப் பெற்ற சம்பளத்தையும் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்ததற்குப் பெற்றுக்கொண்ட சம்பளத்தையும் அவரது ஐ ஐ டி சம்பளப் பாக்கியில் இருந்து  கழித்துகொள்ளலாம் என்று அருண் ஜெட்லி ஐ ஐ டிக்கு ஆலோசனை வழங்கினார். இடைப்பட்ட காலத்தில் சுவாமி தான் சம்பாதித்த தொகை எவ்வளவு எனத் தெரிவித்தால் அதைக் கழித்து கொண்டு தரலாம் என்றதும் சுவாமி இந்த விதி ஐ ஐ டிக்கு பொருந்தாது என அருணின் யோசனையை கிண்டலடித்தார்.

சுவாமி பல முறை அருண் ஜேட்லியின் ‘அரிய’ யோசனைக்கு அவரை கிண்டல் அடித்திருக்கிறார். இந்த யோசனை ஐ ஐ டிக்கு கொஞ்சம் கூட பொருந்தாது. இவ்வாறு பொருந்தாத பயனற்ற ஆலோசனைகளை வழங்கி  வந்த அருண் ஜேட்லியின் அறிவை அவர் கிண்டல் செய்ததில் வியப்பொன்றும் இல்லை. இது குறித்து நீதிமன்றத்தில் சுவாமி கிண்டலடிக்கும் போது நீதிமன்றமே சிரிப்பலையில் அதிர்ந்ததுண்டு.  சுவாமியின் பழைய எதிரியான அடல் பிகாரி வாஜ்பேயியின் காலத்தில் இவருக்கு சம்பள பாக்கி கிடைக்காமல் இருக்க ஐ ஐ டி ஆளுநர் குழு [நிர்வாகக் குழு] மூலமாக தன்னாலான  அனைத்து முயற்சிகளையும் அவர்  மேற்கொண்டார். அன்றைய கல்வி மந்திரி கபில் சிபலும் அருண் ஜேட்லியின் கருத்தை ஆதரித்தார். ஆக எவருமே சுவாமிக்கு முழு சம்பள பாக்கியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினர். மோடியின் கல்வி மந்திரி ஸ்மிரிதி இராணியும் பிரகாஷ் ஜவடேகரும் ஐ ஐ டியிடம் சுவாமிக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியை தரும்படி அறிவுறுத்தினர். அவரிடம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து  பார்க்கும்படியும்  அறிவுறுத்தினர். ஏனென்றால் அவருக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியால் கருவூலத்தில் அதிகப் பணம் குறைந்து விடும் என்றனர். ஆனாலும் ஐ ஐ டி உடன்படவில்லை. நீதிமன்றத்தின் மூலமாக இப்பிரச்சனையை அணுகுவதே சரி என அந்நிறுவனம் கருதியது. வழக்கு விசாரணை நடந்துகொண்டே இருந்தது. இப்போது தீர்ப்பு வந்துள்ளது. ஐ ஐ டி சம்பள பாக்கியை எட்டு சத வீத வட்டியுடன் சுவாமிக்குக் கொடுக்க வேண்டும் என்பதே அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.

மாவட்ட நீதிபதி விநீதா கோயல் பல ஆண்டுகளாக இவ்வழக்கை விசாரித்து வந்தார். ஏபரல் மாதம் எட்டாம் தேதி எட்டு சத வீத வட்டியுடன் ஐ ஐ டி சுவாமியின் சம்பள பாக்கியைத் தர வேண்டும் என  உத்தரவிட்டார். இதனால் சுவாமிக்கு ஐ ஐ டி யில் இருந்து நாற்பது இலட்சத்துக்கும் அதிகமான தொகை கிடைக்கும்.  நியாயமான வழக்காக இருந்தாலும் சுவாமி மீது மற்றவர்களுக்கு உண்டான பகையுணர்வு இவ்வகை நாற்பத்தியேழு ஆண்டுகள் இழுத்தடித்துள்ளது.

3 COMMENTS

  1. Swamy sir, is great. This is a justice case and he has to be appreciated for tolerating the mental agony . He must have been compensated for that too. Kudos sir.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here