வருமான வரி ஆணையர் S K ஸ்ரீவாஸ்தவா கார்த்தி மீது  தேர்தல் ஆணையத்திடம் புகார்

கார்த்தி சிதம்பரம் தொகுதியில் பணம் தண்ணீராக வாரி இறைக்கப்படுகிறது

0
3019
கார்த்தி சிதம்பரம் தொகுதியில் பணம் தண்ணீராக வாரி இறைக்கப்படுகிறது
கார்த்தி சிதம்பரம் தொகுதியில் பணம் தண்ணீராக வாரி இறைக்கப்படுகிறது

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம்

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தியும் அவரது தந்தை முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் கருப்புப் பணத்தை தண்ணீராகப் புழங்க விடுகின்றனர் என்று வருமானவரித் துறை  ஆணையர் எஸ். கே.  ஸ்ரீவஸ்தவா தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தார். வாக்காளர்களுக்கு ஓட்டுப் போட மறைமுகமாக பணம் கொடுத்து வரும் கார்த்தி இதற்காக தனது கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் வெளியே கொண்டு வந்து இருப்பதாக வருமானவரித் துறை  ஆணையர் எஸ். கே.  ஸ்ரீவஸ்தவா புகார் அளித்துள்ளார். சிவகங்கை  மக்களவைத் தொகுதி முழுக்க வாக்காளர்களிடம் குறிப்பிட்ட கடைகளில் இலவசமாகப் பலசரக்குப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும்படி ரகசியமாகத் தெரிவித்துவிட்டு பலசரக்குக் கடைகளில் தனது கருப்பு பணத்தை கொடுத்து வைத்திருப்பதாக எஸ். கே.  ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

சிவகங்கை தொகுதியின் தேர்தல் செலவு கணக்கு ஆய்வாளரிடம் 67 புகார்கள் கொடுக்கப்பட்டும் அவர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த இலஞ்ச விவகாரத்தில் அப்பாவும் மகனும் சேர்ந்தே செயல்படுவதாகவும் தேர்தல் விதிமுறைகள் பலவற்றை இவர்கள் மீறியிருப்பதாகவும் இவர்களின் மீது உடனே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வருமான வரி துறை ஆணையர் எஸ். கே.  ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். பணப் பட்டுவாடா மறைமுகமாக நடப்பதை உள்ளூர் தேர்தல் அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் தெரிவித்தாலும் அவர்கள் கார்த்தி மற்றும் சிதம்பரம்  மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். மேலும் அவர் இவர்களைக் காப்பாற்றத் துடிக்கிறார். இவர்களின் அக்கிரமங்களுக்குக் காவலாகவும் இருக்கிறார்.

சிவகங்கை தொகுதியின் தேர்தல் செலவு கணக்கு ஆய்வாளரிடம் 67 புகார்கள் கொடுக்கப்பட்டும் அவர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மளிகைக் கடையில் இருந்து அனைத்து வாக்காளர்கள் வீட்டுக்கும் இலவசமாக பொருட்கள் அனுப்பி வைக்கபபடுவதை ஆதாரத்துடன் பிடித்து கொடுத்தும் அவர்கள் பேரளவுக்கு ஒரு விசாரணை நடத்துகிறார்களே தவிர உண்மையான நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் கண் துடைப்பு நாடகம் நடத்துகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்த பிறகும் தேர்தல் செலவு கண்காணிப்பாளர்  புகார் அளித்தவர்களை விசாரித்து அவர்களிடம் இருக்கும் ஆதாரங்களைப் பெற்று வழக்குப் பதிவதில்லை.  ப. சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்திக்கு ஆதரவாகவே உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே வருமான வரித் துறை ஆணையர் எஸ். கே.  ஸ்ரீவஸ்தவா உடனே தேர்தல் ஆணையத்திடம் கார்த்தி சிதம்பரம் மீது புகார் அளித்துவிட்டார். தன்னிடம் புகாரை  நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எஸ். கே.  ஸ்ரீவஸ்தவா  தன்னுடைய புகாரில் கார்த்தி மீது பதிவான வழக்கு பேருக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் அதில் நாடு முழுக்க இருக்கும் அவருடைய சொத்துக்கள் பற்றிய முழு விவரமும் கொடுக்கப்படவில்லை என்றும்  தெரிவித்தார். வருமான வரித் துறையும் அமலாக்கத் துறையும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் அவரது சொத்துக்களைக் கண்டுபிடித்து கொடுத்த பட்டியலை வைத்து அவர் மீது வலுவாக வழக்கு பதியவில்லை.

‘’சிவகங்கையில் நியமிக்கப்பட்டு இருக்கும் டி இ ஓ மற்றும் ஆர் ஓ எனப்படும் தேர்தல் செலவு கண்காணிப்பாளரும் ரிட்டர்னிங் ஆபிசரும்  நிதி மோசடிகளை கண்டுபிடிக்கும் அளவுக்கும் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லை. அவர்களுக்கு அதற்கான வசதிகளும் இங்கில்லை. மேலும் மோசடி செய்வதில் முழுத் தேர்ச்சி பெற்ற கார்த்தி சிதம்பரத்திடம் அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது. கார்த்தியும் சிதம்பரமும் நிதி மோசடியில் முழுத்  திறமை பெற்றவர்கள்.  இங்கிருக்கும் வசதிகளைக் கொண்டு இவர்களை விசாரிக்கலாம் என்றாலும் உள்ளூர் அதிகாரிகள் அதற்கு தயாராக இல்லை. அவர்கள் இந்த இருவரையும் பகைத்துக் கொள்ளவும்  தயாராக இல்லை’ என்று வருமான வரித்துற்றை ஆணையர் எஸ். கே.  ஸ்ரீவஸ்தவா தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here