விழித்திடுங்கள் ஹிந்துக்களே!

விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே.

0
2290
விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே.
விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே

இத்தொகுப்பின் ஒன்றாம் பாகம் இங்கே காணலாம்

விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே

இவை அனைத்தையும் பதப்படுத்தி இன்றும் காத்து வளர்ப்பது யார்? கிறிஸ்தவ பிரிட்டிஷ் வெள்ளைகாரணிடம் இருந்து இந்திய அரசைப் பெற்றுக்கொண்ட அரசியல் வாதிகளே. ஏனெனில் இவர்கள் படித்த படிப்பும் வளர்ந்த கலாச்சாரமும் குருகுல தமிழ் கொடுத்த ஹிந்து சைவ நெறிமுறை வழி வந்தவை அல்ல; இவை அனைத்தும் மற்றும் அவர்கள் வாழ்க்கை முறையும் அவர்களின் கிறிஸ்தவ வெள்ளைக்கார பள்ளிக்கூட முறையில் கற்று பயின்ற பண்பாடே. தொட்டில் பழக்கம் சுடுகாடவரையில் அல்லவா?

சமுதாய கிராமங்களும் தார்மீக பொது உடமையும்

இதேபோன்று நில உரிமையிலும் பாரதிய கிராம அமைப்புகள் முன்னோடியாகத் திகழ்ந்தன. கிறிஸ்தவ வெள்ளைக்கார ஆட்சி காலத்து அரசு சுவடிகளின் ஆதாரமாகவே வெளிவரும் நில உரிமை அமைப்பு என்னவெனில் தமிழகம் முழுவதுமே அனைத்து கிராமங்களும் சமுதாய கிராமங்களாகவே இருந்துள்ளன. வட மாநிலங்களிலும் இஸ்லாமிய ஆட்சிக்கு முன் இவ்வாறே இருந்தன என்றும் அந்த சுவடிகள் குறிப்பிடுகின்றன.

அதாவது வீடும் அதன் பின்னுள்ள தோட்டம் மட்டுமே தனியார் நிலமாகவும் கிராம நிலங்கள் விளைநிலங்கள் உள்பட ஏனைய அனைத்தும் கிராமத்தின் பொது சொத்தாக இருந்தன. கிராம மக்களுக்கு குடும்பம் வாரியாக அந்த கிராம நிலங்களில் வரும் விளைச்சலில் பங்குகள் மற்றுமே அவரவர் பங்குக்கு ஏற்ப பிரித்து வழங்கப்பட்டன.

ஜாதி  –  கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு?

இவ்வாறு இருந்திருக்க ஊரே ஒன்றாகக் கூடி விவசாயம் முதல் வழிபாடுகள் வரை இணைந்து ஆற்றியுள்ள பொழுது எவ்வாறு பிறப்பால் ஜாதி வேறுபாடுகளும் தொழிலால் ஏற்ற தாழ்வும் பாரதிய மக்களால் கடைபிடித்திருக்க இயலும். இது மட்டுமின்றி இக்கால எண்ணிக்கை அளவுவரை மக்கள் தொகை இல்லாத காலத்தில், அதாவது சுமார் 200–300 வருடங்களுக்கு முன்னால் வரை நான்கு வர்ணங்களாக கூட பிறப்பால் பிரிந்து இருக்க இயலாது என்று கணக்கு ஆராய்ச்சி கூறுகிறது. விவரங்களுக்கு இச்சிறு தமிழ் கட்டுரையைப் பார்கவும் (demographic collapse).

இவ்வாறு ஹிந்துக்கள் ஒரு 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதற்கு ஒரே காரணம் அவர்கள் தங்கள் ஹிந்து சைவ நெறி வாழ்க்கை முறையை கற்றரிய முடியாமல் போனதாலும் அதை கற்றுக்கொடுக்கும் பாரம்பரிய குருகுலங்கள் அழிந்து போனதாலுமேயாகும்.

இந்த பாரத கலாச்சாரத்தையம் பண்பாட்டையும் கல்விமுறையையும் புனருத்தாரணம் செய்வது என்பது இந்திய குடியரசின் பொய் “மதச்சார்பற்ற” ஹிந்து துவேஷ ஆட்சியில் முடியாத காரியம் ஆகிவிட்டது. சபரிமலை முதல் சரவெடி வரை ஹிந்துக்களின் பண்பாட்டு வழக்கங்களும் பண்டிகைகளும் மட்டுமே தாக்கப்படுகின்றன. இப்பொழுதும் நிலைமை கிறிஸ்தவ ஆங்கில ஆட்சி காலத்தில் இருந்த நிலையே நீடிக்கிறது. பா.ஜ.க. போன்ற ஹிந்து துவேஷமில்லாத கட்சிகள் ஆட்சி பிடித்தாலும் அவர்களால் இந்து துவேஷ “மதச்சார்பற்ற” அரசியல் சாசனத்தையும் அதை மேலும் துஷ்பிரயோகம் செய்யும் உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களையும் மீறி நடக்க இயலுவதில்லை, இயலவும் முடியாது. இது மட்டுமின்றி பா.ஜ.கா. அரசியல்வாதிகளும் இதே இந்து துவேஷ “மதச்சார்பற்ற” கல்வியையே சிறு வயதிலிருந்து பயின்று வளர்ந்ததால் இதன் தாக்கத்தை அவர்களால் முழுமையாக உணர இயலாதவர்களாகவே பெரும்பாலும் உள்ளனர். சுயநலத்தின் பிடியில் சிக்கியதாலும் அதில் சிலர் அவர்களே ஹிந்து துவேஷ செயல்களிலும் ஈடுபடத் தயங்காதவர்களாகவும் உள்ளனர்.

பூளுடாக்ரசி (Plutocracy)

இதற்கு மிக முக்கியமான மற்றொரு காரணம் மக்களாட்சி என்ற பெயரில் அமைந்துள்ள சிறுகூட்டத்தின் ஆதிக்க ஆட்சி (plutocracy, பூளுடாக்ரசி). இந்த பிரச்சினை பாரதத்திற்கு மட்டுமல்ல. உலகெங்கும் உள்ள மக்களாட்சி அமைப்பின் குறைபாடே இது. இந்த முறை மக்களை ஏமாற்ற கிறிஸ்தவ வெள்ளைக்கார்களால் விரிவமைக்கப்பட்டது. ஒருவனோ அல்லது ஒரு சிறு குழவினரோ அனைத்து சமுதாய செயல்பாடுகளையும் கையகப்படுத்தும் முறையில் அமைந்திருக்கும் பூளுடாக்ரசியை பொய்யாக மக்களாட்சி என்று முலாம் பூசி ஏமாற்றுவதே இந்த முறையாகும்.

விளக்கமாக கூறினால் இவ்வாறு: சுதந்திரம் முதல் இன்று வரை, மோதி ஆட்சிக்கு வரும் வரை, ஒரு சில குடும்பங்களைச் சார்ந்த சிலரே ஆட்சியில் தேசத்திலும் மாநிலங்களிலும் திரும்ப திரும்ப வந்துள்ளனர். அவர்களே அனைத்து நீதிமன்றங்களில் இன்றும் உள்ள நீதிமான்களையும் அமர்த்தியுள்ளனர். அவர்கள் வைத்த பரிட்சைகளை எழுதியுமே தேர்வாகியுமே அதன் பின் அவர்கள் அமைத்த அரசு பயிற்சி கூடங்களில் பயிற்சி பெற்றுமே அரசு பதவிகளில் அமரும் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அவர்களின் நியமனங்களே. அவர்கள் வழி நடக்கும் தொழில் முனைவர்களே செல்வந்தர்களாக ஆக முடியும். அவர்கள் வைத்த சட்டமே கல்வி முறையாகவும் உள்ளது. அவர்களே நீதி துறை, பொருளாதாரம், கல்வி, ஆட்சி என்று அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இது கிறிஸ்தவ வெள்ளையரால் மக்களாட்சி என்று பறைசாற்றப்பட்டு உலகையே ஏமாற்றி வரும் உண்மையில் ஒரு பூளுடாக்ரசி ஆட்சியேயாகும். அதாவது இது ஒரு சிறு கும்பலின் ஆதிக்க ஆட்சி. ஆனால் மக்களை இது தான் மக்களாட்சி என்று ஏமாற்றி நம்பவைத்து வாழ்வாதாரத்தை நசுக்கும பொய்க்கூற்று ஆட்சி. மக்களை ஆட்டு மந்தையாக்கி பலியிடும் ஆட்சி. ஆகையால் தான் ஒரு டீ விற்றவர் பிரதமர் ஆனதும் இவர்களுக்கு பொறுக்கவில்லை. இதற்கு அவர்களின் கைக்கூலி ஊடகம் பெரும்பாலும் துணை. அதனாலையே ஹிந்துக்களின் பண்பாட்டையும் மத கருத்துகளையும் வாழ்க்கை முறையையும் பெரும்பாலான ஊடகங்கள் உடைத்து நொறுக்க முயல்கின்றன.

கிறிஸ்தவ பிரிட்டிஷ் ஆட்சி காலம் முதலாகவே கோவில்கள் முதல் கல்வி கூடங்கள் மற்றும் பள்ளிகள் வரை அரசு பராமரிப்பு என்ற பெயரில் இவர்கள் கையிலே போய்விட்டது. எஞ்சி இருப்பவை (கல்லுரிகள், தொழில்கள்) வெள்ளைக்கார கைக்கூலி அரசியல் வாதிகள் வசம் வந்துவிட்டன.

எஞ்சியிருப்பதில் மிக முக்கியமானதும் இன்றும் ஓரளவுக்கு தனித்திருப்பதும் ஹிந்துகளின் மடங்களும் குருமார்களுமே. ஆகையால் தான் மக்கள் நம்பி நம்பி திரும்ப திரும்ப ஏமாறும் வரை அவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் வெளியிட செய்வதும், அவர்களை ஆதாரமே இல்லாமல் சிறையில் அடைப்பதும், பொய் வழக்கில் இழுத்தடிப்பதும் என பற்பல வகையில் அழிக்க தீவிர முயற்சிகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. அவை யாவும் உச்ச கட்டத்தையும் தாண்டி அந்த அசுர சக்திகளே வெற்றியடையும் நிலை இன்று வந்துவிட்டது. கலி முத்திவிட்டது.

பூளுடாக்ரசி ஆட்சியிலிருந்து விடுதலை வேண்டும்

ஆகவே ஹிந்துகளுக்கு இதற்கு மேல் ஒரே வழி இந்திய குடியரசின் பூளுடாக்ரசி ஆட்சியிலிருந்து விடுதலையே. ஆனால் இவர்கள் கிறிஸ்தவ பிரிட்டிஷ் ஆட்சியின் வாரிசு வழியில் வந்த ஆட்சியர்கள். அவ்வளவு எளிதாக சுதந்திரம் பெற விடமாட்டார்கள். மாறாக மேலும் பொய்யை புகற்றி தங்கள் பூளுடாக்ரசி ஆட்சியை மேலும் மேலும் வலுவடைய வைக்கும் செயல்களை மட்டுமே செய்வார்கள்.

இதற்கு ஒரே தீர்வு  ஹிந்துகளுக்காக மட்டுமேயான ஒரு ஹிந்து நாடு, ஒரு ஹிந்து தேசமே. உலகில் பல கிறிஸ்தவ இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால் உலக ஜனத்தொகையான 700 கோடியில் 100 கோடியாக ஹிந்துக்கள் இருந்தும் அவர்களுக்கு என்று ஒரு நாடோ தேசமோ கூட கிடையாது. ஹிந்துக்கள் தான் அதிகம் வாழ்கிறார்கள் என்று சொல்லப்படும் இந்தியா என்கிற பாரத நாட்டில் கூட கொடுங்கோல் புரியும் ஹிந்து துவேஷ குடியரசு ஆட்சியும் ஆதிக்க பூளுடாக்ரசி (சிறு கும்பல்) ஆட்சியுமே நடக்கிறது. நீதித்துறையும் அவர்கள் வசமே உள்ளது.

ஆகையால் அனைத்து உண்மையான மனசாட்சியுள்ள ஊடகத்தை நம்பி ஏமாறாத ஹிந்துக்களும் சுவாமி நித்யானந்தா அமைத்துள்ள கைலாச தேசம் என்ற நாட்டை ஆதரித்து அவர்களால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்ய வேண்டும். தவறினால் தமிழர்களுக்கும் மற்ற பாரத மொழிகள் பேசும் ஹிந்துக்களுக்கும் இலங்கை தமிழ் ஹிந்துக்களுக்கு நிகழ்ந்த கொடுமையே காத்திருக்கிறது.

மதம் மாறியவர்கள் கூட தப்ப மாட்டார்கள் ஏனெனில் ரூவாண்டா என்ற ஆப்பிரிக்க நாட்டில் சர்ச்சுக்குள்ளே வைத்தே கிறிஸ்தவர்களாக மதமாறி வாழ்ந்து வந்த ரூவாண்டர்களை பாதிரியார்களே சுட்டு இனப்படுகொலை செய்தனர். எப்பொழுது? இப்பொழுது தான், சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே. கொன்று முடித்துவிட்டு 2016-ல் மன்னிப்பு கேட்டுவிட்டு போய்க் கொண்டே இருந்தார் கிறிஸ்தவர்களின் வெள்ளைக்கார போப். இது புதிதல்ல. இவ்வாறு கிறிஸ்தவர்கள் கையில் முழுமையாக அழிந்தே போன இனங்கள் பல்லாயிரம் உலகமெங்கும் மாண்டுள்ளன என்று வரலாறு ஆதாரத்துடன் கூறுகிறது. இவை அமெரிக்க செவ்விந்திய இனங்கள், ஆஸ்திரேலியா அபோரிஜன இனங்கள், பலப்பல ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் வெள்ளையர் ஆட்சியில் அழிந்த பாரதிய மக்கள் இனங்களும் உண்டு.

விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே. வாழ்க கைலாச தேசம், வளர்க ஹிந்து சைவ நெறி!

1. இங்கே வெளிப்படுத்திய கருத்துக்கள் ஆசிரியரின் கருத்துகளாகும். இவை PGurus கருத்துக்கள் அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here