பி ஜே பி யின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்தியாபுல்ஸ் நிதி நிறுவனத்தின் மீது கருப்பு பண மோசடிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இந்தியாபுல்ஸ் குருப் கடந்த பதினான்கு ஆண்டுகளாகக் கருப்பு பண மோசடியில் ஈடுபட்டு வந்திருப்பதாகவும் இது வரை சுமார் ஒரு இலட்சம் கோடி வரை மோசடி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் கணக்குகளை சிறப்பு தணிக்கை குழு ஆய்வு செய்ய வேண்டும்; பண மோசடி தீவிர ஆய்வு துறையினர் (SFIO], சி பி ஐ (CBI) மற்றும் அமலாக்கத் துறையினர் அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழு ஒன்றை ஏற்படுத்தி (SIT) அக்குழுவினரைக் கொண்டு ஆய்வு நடத்தி உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று சுவாமி தனது கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேஷனல் ஹவுசிங் வங்கியிடம் இருந்து பல போலி நிறுவனங்களால் ஏராளமான கடன் வாங்கப்பட்டு இம் மோசடி நடைபெற்றுள்ளது. இம் மோசடியில் சுவாமி முன்னாள் காங்கிரஸ் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஹரியானா மாநிலத்தின் முதல்வர் பூபீந்தர் சிங் ஹுடா ஆகியோருக்கு பங்கிருப்பதாகவும் சுவாமி குற்றம் சாட்டுகிறார். இந்தியாபுல்ஸ் குழுவினரில் சமீர் கேலாத் உட்பட பலர் தலைமறைவாகி விட்டனர். இதற்கு இந்த பெருந்தலைகள் இருவருமே உதவியிருப்பதாக சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாபுல்ஸ் வீட்டு வசதி நிதி நிறுவனமும் அதற்கு மோசடியில் உதவிய நூற்றுக்கும் அதிகமான வேறு பல போலி நிறுவனங்களும் நேஷனல் ஹவுசிங் வங்கியில் இருந்து கடன் வாங்கியுள்ளன.
“என்னிடம் உள்ள ஆதாரங்களின் படி இந்தியாபுல்ஸ் என்ற நிதி நிறுவனம் இப்போது தான் வழங்கிய கடனை வசூலிக்க இயலவில்லை என்று திவால் நோட்டிஸ் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது. இந்தியாபுல்ஸ் நிறுவனத்தார் நேஷனல் ஹவுசிங் வங்கி பணத்தையும் பொது மக்கள் பணத்தையும் மோசடி செய்து விட்டு இப்போது தப்பிக்க தயாராகின்றனர். இந் நிதி நிறுவனம் இது வரை பங்கு சந்தை, வீடு மனை விற்பனை, வங்கி கடன் வாங்கி தருதல் என பல வகைகளில் மோசடி செய்துள்ளது, ஆதாரப்பூர்வமாகத் தெரிய வந்துள்ளது”. என்று சுவாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நேஷனல் ஹவுசிங் வங்கி மூலமாக கோடிக்கணக்கான பணத்தை இந்த நிதி நிறுவனம் கடனாக வழங்கியுள்ளது.
இந்த செய்தியின் இறுதியில் சுவாமியின் கடிதம் இடம் பெற்றுள்ளது. “டில்லி, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகளின் துணையுடன் ஏராளமான போலி நிறுவனங்களின் பெயர்களில் கணக்கு திறந்து இந்தியாபுல்ஸ் நிதி நிறுவனம் வங்கி மூலமாக வீட்டு மனைக் கடன் வழங்கியுள்ளது. இந்தக் கடனை இப்போது போலிகள் செலுத்தாமல் எல்லாமே வாராக் கடனாக கணக்கு காட்டியாகி விட்டது.. இப்போது இந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த மோசடிக்கு உறுதுணையாய் நின்றவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள்” என்று சுவாமி தனது கடிதத்தில் விரிவாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாபுல்ஸ் வீட்டு வசதி நிதி நிறுவனமும் அதற்கு மோசடியில் உதவிய நூற்றுக்கும் அதிகமான வேறு பல போலி நிறுவனங்களும் நேஷனல் ஹவுசிங் வங்கியில் இருந்து கடன் வாங்கியுள்ளன. பின்னர் அந்த வங்கி கடனை பல டில்லி, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களிளும் குருகிராம், பெங்கலூரு, சென்னை போன்ற இடங்களிலும் உள்ள போலி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பெயருக்கு மாற்றி விட்டன. இவ்வாறு இந்தியாபுல்ஸ் நிதி நிறுவனம் தான் வாங்கிய கடனை தராமல் மோசடி செய்து ஏமாற்றி விட்டது.
இதுவரை முப்பது கோடி முதல் ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளது. மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடனை ஒதுக்கீடு செய்த பிறகு இந்தியாபுல்ஸ் நிறுவனம் அந்த கடன் தொகையை தனது முதலீடாக அறிவிக்கும். இதில் ஏராளமான வங்கி கடன்கள் பணமாக எவருக்கும் கை மாறவில்லை. வெறும் பதிவேட்ட்டளவில் நடை பெற்றுள்ளன (மஸ்டர் ரோல் ஊழலைப் போல்). இவ்வாறு சுவாமி தனது கடிதத்தில் பிரதமருக்குத் தெரிவித்துள்ளார்.
2௦16 ஆம் ஆண்டில் வருமான வரி துறையினர் இந்தியாபுல்ஸ் குழு மீது வரி எய்ப்பு வழக்கு பதிவு செய்தனர். அக்குழு அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. நிதி அமைச்சரிடம் இக்குழுமத்தில் நடந்திருக்கும் மோசடியை விரிவாக எடுத்துரைத்தனர். ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை, அதன் பிறகு வருமான வரி துறையினர் தங்களின் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டனர் என்று அத்துறையினர் மீது குற்றம் சுமத்தும் சுவாமி அடுத்தபடியாக மும்பையிலும் டில்லியிலும் உள்ள போலி நிறுவனங்களை பதிவு செய்ய உதவும் பதிவாளர் அலுவலங்களையும் குற்றம் சுமத்தியுள்ளார்.
“கடந்த பதினான்கு ஆண்டுகளாக ப சிதம்பரத்தின் ஆதரவினால் இந்தியாபுல்ஸ் குழுமத்திற்கு வங்கி கடன்கள் போலி நிறுவனங்களின் மூலமாக வருவது பற்றி தெரிந்த வருமான வரித் துறையினர் ப. சிதம்பரத்துக்கு பயந்து தீவிர சட்ட நடவடிக்கைகளில் இறங்கவில்லை. காங்கிரசார் 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் மூலமாக சம்பாதித்த கருப்பு பணத்தை ப. சிதம்பரத்தின் வழிகாட்டுதலால் இந்தியாபுல்ஸ் குழுமம் மூலமாக வெள்ளையாக்கி கொண்டனர்.
“தாவூத் இப்ராஹீம் மற்றும் 2ஜியுடன் தொடர்புடைய சில போலி நிறுவனங்களும் இந்தியாபுல்ஸ் குழுமத்துடன் செய்த சட்டத்துக்கு புறம்பான நிதி பரிவர்த்தனைகள் வழியாக ஆயிரம் கோடி ருபாய் வரை மோசடி செய்துளள்ளன. இப்போது இந்தியாபுல்ஸ் மூழ்கி கொண்டிருக்கிறது. அதனால் சுவாமி சிறப்பு புலனாய்வு குழுவினரின் ஆய்வு தேவை என கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக நேஷனல் ஹவுசிங் வங்கி அளித்துள்ள கடன்கள் குறித்து சிறப்பு தணிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்”, என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சு. சுவாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகல் கீழே தரப்பட்டுள்ளது:
Subramanian Swamy's Letter to PM on Indiabulls Scams June 2019 by PGurus on Scribd