செயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை
2019 பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மூன்று மாதங்களில் நடக்கவிருக்கும் நிலையில், பிரதமர் மோடி ஐந்தாண்டு ஆட்சியை பூர்த்தி செய்யும் நிலையில், மோடி அரசின் செயல்பாட்டினைக் குறித்து வருந்த வேண்டிய எந்தவிதமான அவசியமும் ஏற்படவில்லை.
மோடி அரசின் செயல்பாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்தால், அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தனது நம்பிக்கையின் அடிப்படையிலும், எந்தவித சாராரையும்குறித்து வெறுப்புணர்ச்சி இல்லாமலும் அமல்படுத்;தப்பட்டிருக்கிறது. திரு.மோடியின் சில செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு முன்னேறாமலும், வேறு சிலசெயல்பாடுகள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவும் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. மொத்தமாக மோடி அரசின் செயல்பாடுகளை ஆராயும் போது, அவரதுஅரசின் செயற்பாடுகள் மகழ்ச்சியளிக்கும் நிலையிலுள்ளது என்பது கண் கூடாகத் தெரிகிறது.
மோடி அரசு ஐந்தாண்டு கால செயல்பாடுகளை ஒருமித்து ஆராய வேண்டும். ஒவ்வொரு செயல்பாடும் மற்ற துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதால், செயல்பாடுகளைத் தனித்தனியாக ஆராய்ந்தால் சரியான முடிவுக்கு வர இயலாது.
எளியவர்களின் நலனை குறித்து திட்டங்கள்
திரு.மோடி பொருளாதார, சமுதாய முன்னேற்றத்திற்காக பலவித ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டுள்ளார். முக்கியமாகத் தெரிவது, மக்களின், குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் கணிசமான அளவில் கூட்டியுள்ளநிலையே ஆகும். பொது மக்களிடம் இந்தியாவின் கலாசாரத்தைப்பற்றியும், பழமை வாய்ந்த சித்தாந்தங்களைக்குறித்தும் நம்பிக்கை ஏற்படுத்துவதும்,பலவிதமான சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் செயலும் முக்கியமானவை.
தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு மோடி அரசு பெரிதளவில் முக்கியத்துவம் கொடுத்தாலும், இத்தகைய வளர்ச்சி, சமுதாய முன்னேற்றத்தில் குறிப்பாகஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்பதில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பல திட்டங்கள் ஏழை மக்களுக்கு தன்னம்பிக்கையும், கௌரவத்தையும் அதிகரிக்கும் ரீதியில் அமைந்துள்ளன.
ஆக்கபூர்வமான திட்டங்கள்
ஆக்கபூர்வமான திட்டங்கள் சமுதாய வளர்ச்சிக்காகவும், மக்களின்அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் மோடி அரசால்தொடங்கப்பட்டுள்ளன.
இவற்றில் தூய்மை இந்தியா திட்டம், யோகா பயிற்சி திட்டம், ஆயிரக்கணக்கில் ஏழை மக்களுக்காக கழிப்பறைகள் கட்டும் திட்டம்,லட்சக்கணக்கான ஏழைமக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் திட்டம், ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயிரக்கணக்கான கிராமங்களுக்குமின்சாரம் கொண்டு செல்லும் திட்டம் போன்றவை அடங்கும்.
ஏழை மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக இதுவரை மத்திய அரசு சுமார் 850 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 6000 ஏழை மக்கள் இந்த திட்டத்தின் அடிப்படையில் பயன் அடைந்து வருகிறார்கள்.இதுவரை 6.4 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
அடுத்து வரும் அரசுகள் இந்த திட்டங்களை கட்டாயம் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இந்த அளவு முன்னேற்றப்பாதையில் நாட்டை கொண்டு செல்ல நல திட்டங்களை சுதந்திர இந்தியாவில் வேறு ஒரு அரசுசாதித்திருக்கிறதா என்பது சந்தேகமே.
லஞ்ச ஊழலை தவிர்க்க அடிப்படை முயற்சிகள்
ஐந்து வருடங்களுக்கு முன்னால் திரு.மோடி பதவி ஏற்றபோது லஞ்ச ஊழல் மிகுந்த அரசு நிர்வாகமே அவரிடம் ஒப்படைக்கப்பட்டது . இந்தியாவில் லஞ்சஊழல் இல்லாத அரசு ஏற்படுமா என்ற பெரிய சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருந்தது.
ஐந்து வருட ஆட்சியில் மத்திய அரசின் மேல்மட்ட நிர்வாகத்தில் எந்தவிதமான லஞ்ச ஊழலுக்கு இடமளிக்காமல் லஞ்ச ஊழல்; இல்;லாத மத்திய அரசுசாத்தியமே என்பதை மோடி அரசு எடுத்துக்காட்டியுள்ளது. மாநில அரசுகளிலும், கீழ்மட்ட அரசு நிர்வாகங்களிலும் லஞ்சப்பேய் தற்போதும் குடியுள்ளதுஎன்பது உண்மை. லஞ்ச ஊழலை எதிர்த்து நடத்தப்படும் போராட்டம், சிறிய காலகட்டத்தில் முடியக்கூடியது அல்ல.
இத்தகைய லஞ்ச ஊழலை எதிர்த்து போராட்டத்தை மத்திய அரசின் மேல்மட்ட நிர்வாகத்தில் மோடி அரசு வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளதை மறுக்கமுடியாது.
மோடி பிரதமராகப் பதவியேற்ற போது லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என்ற வாக்குறுதியுடன் தான் பதவியேற்றார். லஞ்ச ஊழல் வானளாவிய அளவில் மத்தியஅரசில் பெருகியிருந்ததால,; அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் தேவைப்பட்டன.
ஊழலை அறவே ஒழிக்க அடிப்படை தீர்வுகள் அவசியமான நிலையில், பணமதிப்பிழப்பு, பினாமி ஒழிப்பு திட்டம், டிஜிட்டல் முறைக்கு மாற்றுதல் போன்றதிட்டங்களைச்; செயல்படுத்தினார். பலன்கள் முழுதளவில் கிடைக்காவிட்டாலும்,பயன்கள் ஏற்படக்கூடிய அறிகுறிகள் காணப்பட்டு முன்னேற்றமானநிலைக்கு நாடு தற்போது மாறிக் கொண்டுள்ளது.
அரசு வங்கிகளின் வாராக்கடனை குறைக்கும் முயற்சி
மோடி பதவியேற்கும் முன்பு அரசு வங்கிகளில் வாராக்கடன் பல கோடி ரூபாய்க்கு உயர்ந்து அரசு வங்கிகள் தள்ளாடும் நிலைக்கு மாறிக்கொண்டிருந்தன. அரசு வங்கிகளே திவாலாகிவிடுமோ என்று கூட மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இத்தகைய நிலையிலிருந்து வங்கிகளை காப்பாற்ற திவாலா சட்டம்அமலாக்கப்பட்டது.
இந்த திவாலா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியதால,; கடந்த இரண்டு ஆண்டுகளில் இது வரை சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் அரசு வங்கிகளுக்குகடன்பட்டவர்களால் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வாராக்கடன் வங்கிகளுக்கு திருப்பிகிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசு பதவியேற்கும் முன்பு தொழில் அமைப்புகளில் நஷ்டம் ஏற்பட்டு அரசு வங்கிகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், தொழிற்சாலைகள்மூடப்படும், ஊழியர்கள் வேலை இழப்பார்கள். ஆனால், தொழிலதிபர்கள் பெருமளவில் பாதிக்கப்படமாட்டார்கள். தற்போது, த்pவாலா சட்டத்தின்;அடிப்படையில் தொழிற்சாலைகள் நஷ்டம் அடைந்தால,; ஊழியர்கள் வேலை இழக்கமாட்டார்கள்.ஆனால், தொழிலதிபர்கள் தொழிற்சாலையை இழந்துவேறு தொழில் அமைப்புகள் தொழிற்சாலையை ஏற்று நடத்தும்.
லெட்டர்பேட் கம்பெனிகளை ஒழிக்கும் செயல்
வரி ஏய்ப்பு செய்வதற்காக, மோடி அரசு பதவியேற்கும் முன்பு, ஆயிரக்கணக்கில் லெட்டர்பேட் கம்பெனிகள் இயங்கி வந்தன. அவைகள் அடையாளம்காணப்பட்டு சுமார் 2 லட்சம் லெட்டர்பேட் கம்பெனிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான தனிநபர்களும், நிறுவனங்களும் வருமான வரி செலுத்தக் கூடியவர்களாக உட்படுத்தப்பட்டுள்ளனர்.
உலகளவில் அங்கீகாரம்
திரு. மோடி பிரதமராகப் பதவியேற்ற பின் உலகளவில் இந்தியா பெறும் அங்கீகாரம் பல மடங்கு பெருகியுள்ளது. பாரீஸ் நகரத்தில் நடந்த உலக சுற்றுச்சூழல்மாநாட்டில் இந்தியாவின் ஆலோசனைகள் பெறுமளவில் வரவேற்கப்பட்டன. பல வெளிநாடுகள் இந்தியாவுடன் நட்புறவை பொருளாதார, அரசியல் ரீதியில்பெருக்கிக் கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தை காட்டிலும,; தற்போது இந்தியா உலகளவில்;நன்மதிப்பு பெற்ற நாடாக உருவாகியுள்ளது.
அண்டை நாடுகளுடன் பிரச்சினைகள்
பல சரித்திர காரணங்களினால் இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் சிக்கலான உறவுகள் உள்ளன.இருப்பினும், இந்தஉறவுகளில் பெருமளவில் வன்முறை வெடிக்காமல், போர் மூளாமல் சாதுர்யமாக காய்களை நகர்த்திக் கொண்டு வருகிறது மோடி அரசு.
இதனால், இந்திய பொருளாதார வளர்ச்சியில் தோய்வு ஏற்படாமல் காப்பாற்றப்படுகிறது.
அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நெடுநாளைய திட்டங்கள்
மக்கள் ஜனத்தொகை மேலும் வளர்ந்து வரும் நிலையில் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் ஒரளவு வேலையில்லா திண்டாட்டம்உள்ளது என்பது உண்மை. மேலும், விவசாயிகளின் பிரச்சினைகள், ஜாதி சண்டைகள் போன்றவையும் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளன.
பல அடிப்படை பிரச்சினைகளினால் தொழில், விவசாயத்துறைகளில் பல வருடங்களாக உள்ள பிரச்சினைகளினால், இவற்ற்pற்கு குறுகிய காலத்தில் எந்தஅரசாலும் தீர்வு காண இயலாது. குறுகிய கால மற்றும் நெடுநாளைய திட்டங்கள் தேவை. இந்த அணுகுமுறையைதான் மோடி அரசு கடைபிடித்துக் கொண்டுவருகிறது.
தொழில் திறனை வளர்க்கும் திட்டம், இளைஞர்களுக்கு புதிய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் திட்டம் போன்றவை வேகமாக அமல்படுத்தப்பட்டுவருகின்றன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
பல சிறிய நன்மை பயக்கும் திட்டங்கள்
மோடி அரசின் பல திட்டங்கள் பெரிதளவில் விவாதிக்கப்பட்டாலும் பல திட்டங்களால் ஏற்பட்டுள்ள நன்மைகளை போதுமான அளவில் மக்கள் புரிந்துக்கொள்ளவில்லை.
உதாரணமாக, தற்போது இந்தியாவில் 499 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் 70 ஆயிரம்மருத்துவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர். இந்தியாவில் சுமார் 24 சதவீதம் மருத்துவ படிப்பு இடங்கள் மோடி அரசு பதவிக்கு வந்த பின் கூட்டப்பட்டுள்ளன.
மோடி அரசு பதவிக்கு வரும் முன் நாட்டின் சூரிய மின் சக்தி சுமார் 1500 மெகாவாட் என்ற அளவிலேயே இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் தற்போது சூரியமின்சக்தி 25000 மெகாவாட் அளவிற்கு உயர்ந்துள்ளது. காற்றாலை மின்சக்தி கடந்த 5 ஆண்டுகளில் 35000 மெகாவாட் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
இது போன்ற வேறு பல முன்னேற்றமான திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்துக் கூற முடியும்.
திரு. மோடியின் சேவை நாட்டுக்கு தேவை
வரும் பாராளுமன்ற தேர்தலில் திரு.மோடிக்கும், சில எதிர்கட்சி தலைவர்களுக்கும் நடக்கும் நேரடி போட்டியில், திரு.மோடி என்ற தனி நபரை எதிர்க்க பலஎதிர்கட்சித்; தலைவர்கள் ஒன்றாகக் கூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தன்னம்பிக்கையிலும், தனி மனித முயற்சியிலும், எதிர்கட்சித்தலைவர்கள்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திரு.மோடியை எதிர்க்க முடியுமா, தேர்தலில் அவர்கள் வெற்றி காண முடியுமா என்பதைக் குறித்து தற்போது பெரியவிவாதம் நாட்டில் நடந்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசின் செயல்பாடுகள் திரு.மோடியின் தலைமையையும், அவரது குறிக்கோளையும் பிரதிபலிக்கின்றது. ஐந்தாண்டுகளிலஏற்பட்டுள்ள நிறைவுகளுக்கும், குறைபாடுகளுக்கும் திரு.மோடியே முழுதளவில் பொறுப்பு. பா.ஜ.க கட்சியில் திரு.மோடிக்கும் மற்ற தலைவர்களுக்குமுள்ளதிறமையின் வித்தியாசம், செயற்பாடுகளிலுள்ள வேகத்தின் அளவிலுள்ள வேறுபாடு கணிசமான அளவில் கண் கூடாகத்தெரிகிறது.
வரும் 3 மாதங்களில், திரு.மோடி தனது அரசின் சாதனைகளையும், போதுமான அளவு சாதனைகள் சில துறைகளில் ஏற்படாதது குறித்தும் விளக்கமாகமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதனை திரு.மோடியால் மட்டுமே செய்ய முடியும்.
மேலும் 5 வருடங்களுக்கு திரு.மோடியின் தலைமை நாட்டிற்கு தேவை என்று லட்சக்கணக்கான மக்கள் எண்ணுகின்றனர்.
திரு.மோடி ஏற்படுத்திய பல நெடுநாளைய திட்டங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்திய மாற்றங்கள், லஞ்ச ஒழிப்பை எதிர்த்து போராட்டங்கள் தொடர்வதுஇந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்கு மிகவும் தேவை.
இந்த நிலை தொடர்வதற்கு திரு.மோடி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
Thanks for the post in Tamil This will reach many who are misled by DK, DMK
Title of the article can be positive It looks very defensive