சாரதா ஊழலில் ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து ஆறு மாத காலக் காத்திருப்புக்கு பின்பு ஒரு வழியாக அனுமதி கிடைத்துள்ள நிலையில் சி பி ஐ தனது விசாரணைகளை வேகப்படுத்தி உள்ளது. நேற்று 2ஜி நீதிமன்றத்தில் நீதிபதி ஓ பி சைனி முன்னிலையில் சி பி ஐ முன்னாள் நிதி துறை செயலரும் இந்நாள் தேசியப் பங்கு சந்தையின் தலைவருமான அசோக் சாவ்லா மீது விசாரணை நடத்துவதற்கான அனுமதிக் கடிதத்தை சி பி ஐ சமர்ப்பித்தது. இதன் பின்னர் சில மணி நேரங்களில் அசோக் சாவ்லா தனது NSE தலைவர் பதவியை விட்டு விலகினார்.
தற்போது சிதம்பரம் மற்றும் அவர் குடும்பத்தார் மீது பத்து வழக்குகள் உள்ளன
ஜனவரி பதினோராம் நாள் சிதம்பரம் குடும்பத்துக்கு கிரகம் பிடித்த நாளாகி விட்டது. அன்று சிதம்பரத்தின் மனைவி நளினி மீது சாரதா சிட் ஃபண்டு நிறுவனத்தின் தலைவரான சுதிப்தா சென் என்பவரிடம் இருந்து 1.4. கோடி இலஞ்சம் பெற்றதற்கான குற்றப் பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நளினியும் அவர் கணவர் சிதம்பரம் போலவே உச்ச நீதிமன்றத்தின் மூத்த வக்கீல் என்பதால் சி பி ஐ இந்த குற்றப் பத்திரிகையை தன மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் இருக்க கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து குறுக்கு வழிகளையும் கையாண்டார். அவை பலனளிக்காமல் போக இப்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நளினி மீது சி பி ஐ அதிகாரிகள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இனி அவர் அடிக்கடி இந்த வழக்கு காரணமாக அடிக்கடி கொல்கத்தாவுக்கு பறந்து வருவார்.
ஒரு வக்கீல் தனது கட்சிக்காரரிடம் இருந்து தனக்குரிய சேவை கட்டணத்தை [ நிதி நிறுவன அதிபரிடம் இருந்து] பெற்றதற்காக எப்படி அவரை குற்றப்படுத்தலாம் என்று நளினியின் நண்பர்கள் போராட்ட குரல் எழுப்பினர். ஆனால் நளினி வாங்கியது தனது கட்சிக்காரரிடம் இருந்து அல்ல; அவருக்கு எதிராக இருக்கும் எதிரியான நிதி நிறுவன அதிபரிடம் இருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்றார் என்பது தான் வழக்கின் அடிப்படை காரணம். தனது கட்சிக்காரரான . மனோரஞ்சனாவுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தை தன கட்சிக்காரரின் எதிரியான சிட் ஃபண்டு நிறுவனத்தை கட்டாயப்படுத்தி வாங்கும்படி செய்தார். இதில் இவர் எதிரியிடம் இருந்தும் பணம் வாங்கியுள்ளார். இந்த மனோரஞ்சனா மீது ஏற்கெனவே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் பிணையில் [ஜாமீனில்] வெளியே வந்தார்.
சிறப்பு சி பி ஐ அதிகாரிகள் கொல்கத்தாவில் இருக்கும் பாரசத் நீதிமன்றத்தில் நளினி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தபோது அதில் நளினியும் சாரதா குழுமத்தின் உரிமையாளரான சுதிப்தா சென்னும் அவர்களுடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் சாரதா நிறுவனங்களின் குழுவுக்குரிய நிதியை தவறாகக் கையாள சதித்திட்டம் தீட்டினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சி பி ஐயின் செய்தி தொடர்பாளர் நமக்கு இத்தகவலை தெரிவித்தார்.
முன்னாள் மத்திய மந்திரி மாதங்க சின்ஹ என்பவரின் மனைவியான மனோரஞ்சனா என்பவர் நளினிக்கு சுதிப்தா சென்னை அறிமுகம் செய்து வைத்தார். செபி மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் போன்றவற்றின் பிரச்சனைகளில் இருந்து தன்னை மீட்கும்படி நளினியிடம் கேட்டுக்கொண்ட சுதிப்தா சென் 2010-2012 ஆகிய காலகட்டத்தில் அவருக்கு சுமார் ஒன்றரை கோடி ருபாயை வரை இலஞ்சமாகக் கொடுத்தார். இதனால் நளினி தனது கணவர் [2004 -2014 ]நிதி அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்ததை தவறாகப் பயன்படுத்தி சுதிப்தாவுக்கு இந்த உதவிகளைச் செய்ய மூன் வந்தார் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
குற்றப் பத்திரிகையில் நளினியோடு சேர்த்து அனுபூதி அச்சகம் மற்றும் பதிப்பகத்தார், சுதிப்தா சென் ஆகியோர் மீதும் சேர்த்து குற்றப் பத்திரிக்கை தாக்கலானது அனால் இந்த பதிப்பகத்தாரைத் தொடர்பு கொண்டு கருத்து பெற இயலவில்லை.
தற்போது சிதம்பரம் மற்றும் அவர் குடும்பத்தார் மீது பத்து வழக்குகள் உள்ளன. நமது செய்தி தளம் சிதம்பரம் மற்றும் அவர் குடும்பத்தார் மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்தும் அவர் செய்த பித்தலாட்டங்கள் மற்றும் ஊழல்கள் குறித்தும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டபப்டியே உள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரமும் அவரது மகனும் தவிர இன்னும் ஐந்து நிதி அமைச்சக அதிகாரிகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்திடம் இருந்து ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற உதவினர். அசோக் சாவ்லா தவிர, இன்னும் இருவர் இப்போது பணியிலுள்ளனர். அவர்கள் அஸ்ஸாம் பணிப்பிரிவைச் சேர்ந்த குமார் சஞ்சய் கிருஷ்ணன், மற்றும் பிஹார் பணிப்பிரிவைச் சேர்ந்த தீபக் குமார் சிங்கும் ஆவர். மலேஷியாவின் உரிமையாளர்கள் டி அனந்த கிருஷ்ணன் மற்றும் ரால்ப் மார்ஷல் ஆகியோருடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் அண்டர் செக்கரட்டரி ராம் ஷரன் என்பவர் ஆவார்.
போன வருடம் ஜுலை மாதம் இரண்டாவது வாரத்தில் சி பி ஐ அதிகாரிகள் நிதி அமைச்சக அதிகாரிகள் ஐவர் மீது விசாரணை தொடங்க வேண்டும் அதற்கு முன்பு அவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் அனுமதி கேட்டனர். அவர் தன்னால் இயன்றவரை அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். நமது செய்தித்தளம் போன்ற ஊடகங்களும் தேசப் பற்றுடைய வேறு சிலரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஜெட்லி இப்போது அனுமதி வழங்கிவிட்டார். சட்டப்படி அவர் மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்திருக்க வேண்டும். அருண் ஜெட்லி அவரே ஒரு வக்கீலாக இருந்தும் இந்த அனுமதி வழங்குவதை தேவையில்லாமல் இழுத்தடித்தார். ஏர்செல் மேக்சிஸ் வழக்கின் மனுதாரரான சுப்பிரமணிய சுவாமி நிதி அமைச்சர் அனுமதி வழங்க கால தாமதம் செய்கிறார் என்று பிரதமர் அலுவலகத்தில் பல முறை புகார் அளித்ததன் பேரில் இந்த அனுமதி இப்போது ஆறு மாதம் கழித்து கிடைத்திருக்கிறது. அருண் ஜெட்லி காரணம் இல்லாமல் அனுமதி தருவதை தாமதப்படுத்துகிறார் என்று சுவாமி பிரதமர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தபடியே இருந்தார். இந்த கால தாமதம் காரணமாக வழக்கை நடத்த முடியாமல் சி பி ஐ நீதிமன்றம் ஆறு மாதம் காத்துக் கிடந்தது.
ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தின் அனுமதியை பெறுவதில் ஊழல் நடந்த வழக்கில் சி பி ஐ விசாரணை நடத்துவதற்காக நிதி அமைச்சகத்தின் அனுமதியைக் கேட்டு காத்துக் கொண்டிருக்கிறது. சி பி ஐ யும் அமலாக்கத் துறையினரும் சிதம்பரம் மற்றும் அவர் மகன் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டு இவ்வழக்கு தொடர்பாக நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் 55 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளனர். இச்சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு 2௦௦ ரூபாய் கோடி ஆகும். இவை இந்தியாவில் டில்லி, ஊட்டி ஆகிய நகரங்களிலும் வெளி நாடுகளில் இலண்டன் ஸ்பெயின் போன்ற இடங்களிலும் உள்ளன.