சுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’

சுனந்தா மரண வழக்கில் புலனாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இன்னும் தாமதம்

0
2300
சுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’
சுனந்தா வழக்கில் மீண்டும் டில்லி போலீஸ் ‘டிமிக்கி’

சசி தரூர் தனது மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம  மரண வழக்கில் சுப்ரமணிய சுவாமி ஆஜராவதற்கு எதிர்ப்பு

டெல்லி போலீசார் புலனாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயங்குவது ஏன்?

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமாக இறந்து கிடந்ததுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சசிதரூருக்கு இம்மரணத்தில் பங்கு இருப்பதாக குற்றம் சுமத்தி பிஜேபி தலைவர் சுப்ரமணிய சுவாமி வாதாடுவதை சசி தரூரும்  அவருடைய வழக்கறிஞர்களும் எதிர்த்து வருகின்றனர்.கடந்த வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரு தரப்பினருக்கு இடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. சுப்ரமணிய சாமி இந்த வழக்கு குறித்து 200 பக்கம் மனு அளித்து தன்னையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்தை வேண்டிக் கொண்டார்.  இந்தக் கோரிக்கை  மனுவில் அரசு தரப்பில் விடுபட்டு போன தகவல்களை எல்லாம் சுவாமி அளித்திருக்கிறார். மேலும் இவ்வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க மற்றவர்களின் உதவியை நாடுவதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார். சுனந்தா மரணம் அடைந்தபோது அந்த ஹோட்டலில் போய் விசாரணை நடத்திய காவல் துறையின் இணை ஆணையர் விவேக் கோகியா தலைமையிலான போலீஸ் குழு அவர்களின் முதல் விசாரணை அறிக்கையை இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.சுனந்தா இறந்து பல மாதங்களாகியும் இவ்வாறு காலதாமதம் செய்வது ஏன் என்று பிஜேபி தலைவர் சுப்ரமணியசாமி வியாழக்கிழமை [23-8-2018] நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த விவாதத்திற்கு பிறகு கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி சமர் விஷால் இவ்வழக்கை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். டெல்லி போலீசார் பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தரூரின் வக்கீல் விகாஸ் பாவாவிடம் அளித்தனர்.

சுப்பிரமணியசாமி இந்தியக் குற்றவியல் சட்டம் (CrPC) 302ஆம் பிரிவின்படி தீர்ப்பு வழங்கப்பட்ட  பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார். ஜேகே இன்டர்நேஷனல் வழக்கு மற்றும்  தரம்பாலுக்கு எதிரான அரியானா மாநில வழக்கு; மன்மோகன் சிங்குக்கு எதிரான சுப்பிரமணிய சுவாமி வழக்கு  ஆகிய வழக்குகளின் தீர்ப்புகளில் வழக்குகளுடன் நேரடி தொடர்பில்லாதவர்கள் ஆஜராகி வழக்குக்குத்  தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் என்பதால்; வழக்கு தவறான பாதையில் எடுத்துச் செல்லப்படும் போது முக்கிய குற்றவாளிகளை தவற விட்டு வாய்ப்பு இருப்பதால் வழக்குக்கு  நேரடி தொடர்பில்லாதவர்கள் கூட நீதிமன்றத்திற்கு வந்து குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்கான முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அதற்கு நீதிபதி அனுமதி வழங்கலாம் என்று தன்னுடைய 200 பக்க மனுவில் குறிப்பிட்டிருந்தார். இக்கருத்துக்கள் அடங்கிய தன்னுடைய வாதங்களையும் நீதிமன்றத்தின் முன் வைத்தார். இது குறித்து நீதிபதி கே தன்னை வழக்கில் வாதாட அனுமதி வழங்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

சுவாமி  தன்னுடைய மனுவில் சசிதரூரை டில்லி போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு 306 மற்றும் கணவன் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுதல் பிரிவு 498Aபோன்ற இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்.டில்லி போலீசாரம்  சுனந்தாவின் உடல் மீது காணப்பட்ட பண்ணிரெண்டு காயங்களைக் குறித்து அவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த காயங்கள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தங்களுடைய பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சசி  தரூர் இந்த  மருத்துவர்களுக்கு பல மின்னஞ்சல்களை இதுகுறித்து அனுப்பி உள்ளார்.

காவல் துறை இணை ஆணையர் விவேக் கோகியா தலைமையிலான போலிஸ் குழு தன்னுடைய முதல் விசாரணையின் போது பல ஆவணங்களை தவறவிட்டுவிட்டது.அவற்றைத் தெரியப்படுத்தும் வகையில் அவர்கள் தம்முடைய முதல் அறிக்கையை நீதிமன்றத்தில் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் நீதிபதியிடம் சுவாமி கேட்டுக்கொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக இவ்வாறு சுவாமி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தும் டெல்லி போலீசார் அந்த அறிக்கையை இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

சசி தரூர் போன மாதம் ஜூலை 7ஆம் தேதி தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கும்படி நீதிமன்றத்தில்ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தார். மேலும் தான் ஐரோப்பா செல்வதால் வெள்ளிக்கிழமை தான் நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராக இயலாது என்றும் தனக்கு அன்றைய தினம் விலக்கு அளிக்கும்படியும் வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார். இரண்டு இலட்ச ரூபாய் நிலை வைப்பு நிதி ரசீதை காட்டிய பின்பு நீதிமன்றத்தில் இருந்த அவருடைய கடவுச்சீட்டு அவருக்கு திரும்ப கொடுக்கப்பட்டதால் அவர் இப்போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஐரோப்பா நாடுகளுக்கு சென்றுவிட்டார்.

சுனந்தாவின் மர்ம மரண வழக்கில் குற்றப்பத்திரிகையை வேறு யாருக்கும் காட்டக்கூடாது என்றும் சசி தரூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here