இதன் முதற்பகுதி இந்திய அரசியலில் வேடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு என்ற பெயரில் வெளிவந்தது. இது அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் ஆகும்.
சி ஐ ஏ எனப்படும் சென்டரல் இண்டலிஜென்ஸ் ஏஜென்சியும் வேடிகன் இந்திய அரசியலில் செய்த இடையீடும் நம்முடைய விவாதப் பொருள ஆகும். இந்த தலைப்பில் வரும் இரண்டாவது கட்டுரை இது. லோனப்பன் நம்படனும் தந்தை ஜோசப் வடக்கனும் தங்கள் புத்தகங்களில் 1959இல் விடுதலை போராட்டம் [விமோசன சமரம்] என்ற பெயரில் நடத்தி சி ஐ ஏ யும் வேடிகனும் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடு அவர்களின் அரசை கவிழ்த்தது பற்றி விளக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் இந்த போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் ஆவர். நம்படன் தான் எழுதிய சஞ்சாரிக்குன்ன விசுவாசி என்ற பெயரில் வெளியிட்ட தன் வரலாற்று நூலிலும் தந்தை வடக்கன் எண்டே குதிப்பும் கித்தாப்பு என்ற பெயரில் எழுதி மாத்ரு பூமி பதிப்பித்த புத்தகத்திலும் வேடிகன் தந்து இந்திய பிரதிநிதியான ஜேம்ஸ் ராபர்ட் ஹாக்ஸ் மூலமாக இந்த விடுதலை போராட்டத்தை எப்படி வேடிகன் நடத்தியது என்பதை பல்வேறு காரணிகளைக் காட்டி விளக்கியுள்ளனர்,
முக்கிய ஊடகங்கள் புறக்கணித்த ஒரு முக்கியமான தென் கேரளச் செய்தி ஒன்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறோம். இந்த அண்மைக்கால அரசியல் முன்னேற்றத்தை மரியாதைக்குரிய வாசகரின் கவனத்துக்கு கொண்டுவருகிறோம். கேரளாவில் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக் காலம் முடியப் போகிறது. சி. பி ஐ – எம் சார்பில் இருவரும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருவரும் இந்த ராஜ்ய சபா பதவிகளுக்கு அனுப்பப்படலாம்.
ராஜ்ய சபாவின் துணைத் தலைவராக இருக்கும் பி. ஜே. செரியனே மீண்டும் காங்கிரசால் பரிந்துரைக்கப்படலாம். மார்த்தோமா கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த குரியனுக்கு திருச்சபையின் ஆதரவு பலமாக இருக்கிறது. கேரளக் கிறிஸ்தவத்தில் அதிக மக்கள் செல்வாக்கு உடைய பிரிவு இதுவாகும். ஆனால் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி இந்த பதவியை கேரள காங்கிரசுக்கு [மணி கோஷ்டிக்கு] விட்டுத்தர முடிவு செய்துள்ளது. இந்த காங்கிரஸ் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் செல்வாக்கு பெற்றதாகும். கேரள காங்கிரஸ் லோக் சபா உறுப்பினராக இருக்கும் ஜோஸ் கெ மணி என்பவரை ராஜ்ய சபா உறுப்பினராக்க முடிவு செய்துள்ளது. இவர் கோட்டயத்தில் இருந்து லோக் சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் இன்னும் ஒரு வருட பதவிக்காலமும் இருக்கிறது. கத்தோலிக்க திருச்சபை கட்சி தலைவர் மணியின் மகனான ஜோஸ் கெ மணியை ராஜ்ய சபா உறுப்பினராக்க விரும்புகிறது. கேரளக் காங்கிரசும் அதற்கு சம்மதித்துவிட்டது.
விடுதலை போராட்டத்தில் 1959இல் பங்கேற்ற அனைவருக்கும் பண உதவி செய்து வேடிகன் இ எம் எஸ் அரசை மத்திய அரசு மூலமாக கலைக்க தூண்டியது. விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் அதிகமான தலைவர்களை ஒரு சுற்றுலா அழைத்து சென்று மாற்றத்துக்கான முயற்சி என்ற பெயரில் சுவித்செர்லாந்தில் உள்ள காகஸ் (Caux) என்ற ஊரில் அவர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அவர்களை குஷிப்படுத்தினர். [சஞ்சாரிக்குன்ன விசுவாசி ப 32]
மாரல் றி ஆர்மமென்ட் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த பயிற்சிக்காக காகஸ் கிராமத்தில் ஒரு பெரிய ஓட்டல் கட்டப்பட்டு திருச்சபைக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி அரசில் குழப்பத்தை விளைவிப்போருக்கு அங்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் காத்திருந்தன. தந்தை ஜோசப் வடக்கனும் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பல களியாட்டங்கள் வெளிநாட்டில் காத்திருந்தன என்று தெரிவிக்கிறார். அங்கு நடந்த கொண்டாட்டங்களில் பரிமாறப்பட்ட மது வகைகளை கூட [குறிப்பாக விஸ்கி] குறிப்பிட்டுள்ளார். இந்த கொண்டாட்டங்களை வேடிகன் எம் ஆர் ஏ மற்றும் வேறு சில அமைப்புகளும் ஏற்பாடு செய்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார். [சஞ்சாரிக்குன்ன விசுவாசி 158-161]
இந்திய தேசிய காங்கிரசில் இருந்து கேரள காங்கிரஸ் பிரிந்து வந்ததற்கு முக்கிய காரணம் அதன் கத்தோலிக்க சார்பாகும். சில வருடங்களில் ஆர்த்தோடாக்ஸ், ஜேகொபியர், மார்த்தோமா ஆகிய கிறிஸ்தவ பிரிவுகள் தம்மை கத்தோலிக்கர்கள் புறக்கணிப்பதாக கருதி கேரளா காங்கிரஸ் [மணி], கேரளா காங்கிரஸ் [ஜேகொப்], கேரள காங்கிரஸ் [பிள்ளை] என பலவாறாக பிரிந்துவிட்டன. இவர்கள் தம்முள் சில சிஷயங்களுக்கு ஒன்றுபட்டாலும் பெரும்பாலும் இக்கட்சிகள் அரசியல் காற்றடிக்கும் பக்கமாகவே சாய்வது வழக்கம்.
அமெரிக்காவில் பிறந்த ஜெரால்டு போஸ்னேர் வரலாற்றில் புலிட்செர் பரிசு பெற்றவர். இவர் தனது புகழ் பெற்ற கடவுளின் வங்கியாளர் [காட்ஸ் பேங்கர்ஸ்] என்ற புத்தகத்தில் வேடிகனை எதிர்த்து கொண்டு எந்த நாட்டிலும் எவரும் அரசாட்சி செய்ய இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த நூலில் இந்தியா என்று பெயர் குறிப்பிடாவிட்டாலும் அவர் சொல்ல வந்த விஷயம் தெளிவாக நமக்கு புரிகிறது.. போப்பும் கர்தினாலும் அடுத்த பிரதமர் யார் என்பதை கூடி முடிவு செய்கின்றனர். வேடிகனின் ‘ஒரு கையாள்’ கத்தோலிக்க கன்னியாஸ்திரியான தெரேசா. இவர் —இந்தியாவுக்கு வந்தார், மதர் தெரேசா என்ற பெயரில் மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி என்ற அமைப்பின் மூலமாக இங்கு பலவேறு மதமாற்ற வேலைகளை செய்துகொண்டு வந்தார். அவரது இந்த மதம் சார்ந்த வேலைகள் ஆரவாரமின்றி நடைபெற்று வந்தன. ஆனால் 1979இல் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது பிரதமர் மொரார்ஜி தேசாய் கட்டாய மதமாற்றத்தை ஒரு குற்ற நடவடிக்கையாக சட்டம் கொண்டு வர ஒ. பி. தியாகி என்பவரை நியமித்த போது தெரேசாவின் சுய ரூபம் தெரிய வந்தது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தெரேசா ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது கத்தோலிக்க சமயத்தாரே இந்த சட்டத்துக்கு எதிராக தமது முதல் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் உடனடியாக சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. இந்த பிரார்த்தனைக்கு ஒரு பலன் கிடைத்தது அதுவரை சுமூகமாக போய்க்கொண்டிருந்த ஆட்சியில் பல் வேறு தலைவர்கள் முகிழ்த்து தனக்கு தலைமை பதவி வேண்டுமெனக் கேட்க தொடங்கினர். அதுவரை ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியினர் இந்த சட்டத்தை காரணம் காட்டி ஆதரவு தர மறுத்துவிட்டனர். சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆர் எஸ் எஸ் ஐ காரணம் காட்டி தியாகி கொண்டு வந்த சட்ட முன்வரைவை எதிர்த்தார். மார்சிஸ்ட், முல்லா, மேத்ரான் [திருச்சபை] ஆகியவற்றின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஊடகங்களும் மேட்டுக்குடியினரும் ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாக காட்டின. ஜனதா கட்சியை கொண்டு வர அரும்பாடு பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனும் கூட தலைவர்கள் தம்முள் சண்டையிடும் பொது செய்வதறியாது திகைத்தார். சரண் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் மொரார்ஜி தேசாய் பதவி விலக வேண்டும் என்றனர் சரண் சிங் பிரதமராக வேண்டும் என்றனர். வேடிகனின் முகவர்கள் ஜனதா கட்சிக்குள் குழப்பத்தை கொண்டுவந்தனர். பி gurus இணைய தளத்தில் ‘சரண் சிங்கை நினைவு கூரும் சுவாமி’ என்ற கட்டுரையில் சுவாமி அந்த காலத்தில் ஜனதா கட்சியில் என்ன நடந்தது என்று விவரித்துள்ளார்.
பின்னர் சரண் சிங் கோஷ்டி ஜனதா கட்சியை விட்டு விலகி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் எம் பிக்களுடன் இணைந்து புதிய அரசு அமைத்தது சரண் சிங் பிரதமர் ஆனார். இந்திரா காந்தி மற்றும் அவர் குடும்பத்தினர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ் அதற்கு சரண் சிங் உடன்படாததால் சில நாட்களிலேயே காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கி கொண்டது. ஒரு முறை கூட பாராளுமன்றத்தை கூட்டாமல் சரண் சிஙகின் மந்திரிசபை கவிழ்க்கப்பட்டது.
இந்திய அரசியலில் வேடிகனின் இடையீடு குறித்து இன்னும் விளக்கமாக காண்போம்.
தொடரும்…