லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் எழுதிய 24 பக்க கடிதம் இப்போது வெளியாகியுள்ளது. ரானுவத்தில் புலனாய்வு அதிகாரியும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் 2008 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தன்னை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்தது குறித்து 2013 டிசம்பரில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு எழுதி முறையிட்ட கடிதம் இப்போது வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஹேமந்த் கர்காரே மற்றும் தற்போது தாநேயின் காவல்துறை ஆணையராக இருக்கும் பரம்பீர் சிங் டில்லி தலைமையகத்தில் இருந்த ராஜீவ்குமார் ஸ்ரீவஸ்தவா என்ற ஆர். கெ. ஸ்ரீவஸ்தவா ஆகியோர் தன்னை கொடூரமாக சித்திரவதை செய்ததை அந்தக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
A bone-chilling letter by Lt Col Purohit accessed, barbarity that Lt Col Purohit allegedly suffered in custody revealed, he claims he was stripped, beaten and threatened to own up to a crime that he never committed @MeghaSPrasad takes you through the details #PurohitTortureLetter pic.twitter.com/a4T1kyUFab
— TIMES NOW (@TimesNow) June 13, 2018
2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் தன்னை அதற்கு பிறகும் முன்னரும் மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளான மோகன் குல்கர்னி [அப்போதைய மும்பை ஏ.சி.பி.] மற்றும் அருண் கவால்கர் [ அப்போதைய மூத்த ஆய்வாளர்] தன்னை சித்திரவதைப்படுத்தியதை கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக்கடிதத்தைப் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது நாம் இப்போது அந்த கடிதத்தை வெளியிடுகிறோம்.
காங்கிரஸ் ஆட்சி போலியாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டு அதை நிரூபிக்கும் வகையில் இவரை பலிகடா ஆக்க இவரைப் பல வகையிலும் கொடுமையாக சித்திரவதைப்படுத்தியது என்பதை இந்தக் கடிதம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி, ஒரு விவாதத்தில் கலந்துகொள்ளும்படி டில்லி புலனாய்வு தலைமையகத்தில் இருந்து வந்த கடிதத்தை காட்டி மத்தியப்பிரதேசத்தில் ராணுவத்தின் கல்வி சேவை பயிற்சி பள்ளியில் இருந்த புரோஹித்தை பிடித்துக்கொண்டு போயினர். அவரை கைது செய்வதாக அறிவித்த பின்னர் அவரிடம் இருந்த அலைபேசிகளை போபால் விமான நிலையத்தில் இருந்து பறித்து கொண்டனர். யாருக்கும் போன் செய்ய கூடாது செய்தால் அடிப்போம் என்று மிரட்டினர். மும்பை விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவு அதிகாரி சஞ்சீவ் கார்க் புரோஹித்தை கூட்டி செல்ல வாகனத்தோடு நின்றிருந்தார். நள்ளிரவில் விசாரணை தொடங்கியது.
விசாரணை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அடிக்கத்தொடங்கினர். மலேகான் குண்டுவெடிப்புக்கு பொறுப்பு ஏற்குமாறு வற்புறுத்தி அடித்தனர். ஹேமந்த் கர்கரே மற்றும் பரம்பீர் சிங்கின் முன்னிலையில் இந்த அடி மிதி சித்திரவதை எல்லாம் நடந்தன. அப்போது திடீரென ஆர். கெ. ஸ்ரீவஸ்தவா தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து புரோஹித்தை கொடுஉரமாக தாக்க தொடங்கினார். அவரது தாய், மகள், சகோதரி பற்றி ஆபாசமாக பேசி திட்டினார். முகத்தில் சட் சட் என்று அறைந்தார். கால்களால் எல்லா இடங்களிலும் உதைத்தார். ஏற்கெனவே எல்லாம் திட்டமிட்டபப்டி அங்கிருந்த ஆய்வாளர் மற்றும் காவலர் அனைவரும் அடுத்தடுத்து அடிக்க தொடங்கினர்.
“நாற்காலியில் உட்கார்த்தி என் கைகளை பின்னால் இழுத்து கட்டிவிட்டு அவர்கள் விடும் குத்துக்கள் என் முகத்தில் நேரடியாக விழும்படி என்னை தாக்க தொடங்கினர்” என்று புரோஹித் அந்தக் கடிதத்தில் விளக்குகிறார்.
கர்னல் ஆர். கெ. ஸ்ரீவத்சவாவுடன் மறைந்த முன்னாள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியான ஹேமந்த் கர்கரேயும் தாநேயின் காவல் ஆணையர் பரம்பீர் சிங்கும் தன்னை குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறுஅந்தரங்க பகுதிகளில் மிதித்து உதைத்து சித்திரவதைப்படுத்தினர். மலேகானில் வெடிகுண்டு வைத்தது அவர் தான் என்று ஒப்புக்கொள்ளும்படி சித்திரவதைப்படுத்தினர். இந்து தீவிரவாதம் என்ற தவறான கருத்தியலை உருவாக்க இவர் மீது வீண் பழி சுமத்தி இவரை கொடுமைப்படுத்தியது இவர் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தின் மூலம் தெரிய வருகிறது.
முன்னாள் உள்துறை செயலர் ஆர் வி எஸ் மணி எழுதி வெளியிட்ட ‘Hindu terror –ninsiderofHomeaffairs’ என்ற புத்தகத்தில் திக்விஜயசிங்குக்கும்காங்கிரஸ் தலைவருக்கும்ஹேமந்த்கர்கரேவுக்கும் இருந்த தொடர்பு பற்றி தெரிவிக்கிறார். 2006 இல்நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ்தலைமையகத்துக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து சில மணி நேரங்களில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ்பாட்டில் வி. எஸ் மணியை அங்கு வரும்படி அழைக்கிறார். ஸ்வராஜ்பாட்டில் அமைதியாக இருக்கும்போது ஹேமந்த்கர்கரே ஆர் வி எஸ் மணியிடம் குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று கேட்டார். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் செயலராக இருந்த மணி சிமி (SIMI) அமைப்பு தான் குண்டுவெடிப்புக்கு காரணம் என்று சொன்னதை எவரும் ஏற்கவில்லை. இந்த புத்தகத்தில் எப்படி இந்து தீவிரவாதம் என்ற போலியான கருத்தாக்கத்தைபரப்பத்தொடங்கினர் என்பதை விவரிக்கிறார்.
சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அவரது கட்டளைப்படி கர்னல் புரோஹித் கொடுமைப்படுத்தப்பட்ட செய்திக்கு வருவோம். நவம்பர் ஐந்தாம் தேதி புரோஹித்தை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். புரோஹித் துணிச்சலாக தன்னை கர்னல் ஆர். கெ ஸ்ரீவஸ்தவா,ஹேமந்த் கர்கரே மற்றும் பரம்பீர் சிங்கும் சித்திரவதைக்கு உள்ளாக்கியதை நீதிபதியிடம் தெரிவித்தார் .
இந்த செய்தியின் முடிவில் நாங்கள் கர்னல் புரோஹித்தின் முறையீட்டை வெளியிட்டுள்ளோம். அதில் இந்து தீவிரவாதக் கொள்கையை உருவாக்க அவர்களின் தலைவர்கள் கற்றுக்கொடுத்ததை உண்மையாக்க புரோஹித்தை ரவுடி அதிகாரிகள் அடித்து கொடுமைப்படுத்திய விதத்தை அறியலாம். வாசகர் அனைவரும் சோனியாகாந்தியின் கொடூர ஆட்சி பற்றி தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
நடுவர் நீதிமன்றத்தில் புரோஹித் ஆஜர் செய்யப்பட்டதும் நீதிபதி அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பினார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வழங்கிய மருத்துவமனை அறிக்கையில் அவருக்கு அந்தரங்கபகுதிகள் உட்பட உடம்பின் பலவேறு பகுதிகளில் ரத்தக்கட்டும் காயமும் இருந்ததை குறிப்பிட்டிருந்தனர். இதை விட கொடுமை என்னவென்றால் புரோஹித்தை மருத்துவமனியில் சிகிச்சை முடித்து வெளியே அனுப்பியதும் மீண்டும் இந்த ரவுடி அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றுவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் இந்து தீவிரவாதம், காவி தீவிரவாதம் என்று போலியான கருத்தியலை ஊரெங்கும் பரப்பி வந்தனர். மகாராஷ்டிராவும் அப்போதைய உள்துறை அமைச்சகத்தின் குரலாக ஒலிக்கும் என். டி. டிவி, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தெகல்கா ஆகியன இந்த போலியான கருத்தியலைப்பரப்பியது. தின்றதை கக்கும் சில பத்திரிகையாளர்களும் இவர்களின் போலி வார்த்தைகளை நம்பி செய்திகளை பரப்பினர். இந்தப்பத்திரிகையாளர் சிலர் சிறந்த சேவை ஆற்றியதற்கு விருதும் பெற்றுள்ளனர்.
சாத்வி பிரக்யா என்ற அமைப்பு இந்து தீவிரவாதிகள் அமைப்புக்கு நான் தான் வெடிகுண்டு வழங்கினேன் என்று புரோஹித்தை ஒப்புக்கொள்ளும்படி சித்திரவதை செய்தனர். அவர் உடம்பை இரும்புத்தடியில் கட்டிவிட்டு பயங்கரவாத தடுப்பு படை பிரிவினர் சரமாரியாக அடித்து துவைத்தனர். புரோகித்தை வைத்து இளம் காவலர்கள் அடித்து பழகிமகிழும்படி அதிகாரிகள் ஊக்கம் அளித்தனர்
புரோகித்தை சித்திரவதைப்படுத்திய அதிகாரிகள் அவர் வீட்டில் வெடிகுண்டு வீச செய்வோம் தாயாரையும் மனைவியையும் சிறையில் தள்ளுவோம் – உன் பிள்ளைகள் அனாதையாகி விடுவர் என்றும் மிரட்டினர். வாரக்கணக்காக நடந்த இந்த கொடுர சித்திரவதையில் அவரை நிர்வாணமாக்கி அவரது அந்தரங்க உறுப்புகளை மிதித்து உதைத்தனர்.
இரும்பு தடியில் வரை பல்வேறு கோணங்களில் தொங்கவிட்டு அடித்து கொடுமைப்படுத்தினர்.
வாசகர்களிடம் மீண்டும் அழுத்தி சொல்கிறோம். புரோஹித்தின் கடிதத்தை வாசியுங்கள். அவர் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு எழுதிய இந்த 24 பக்க கடிதத்தை வாசியுங்கள். அரசியல் இலாபத்துக்காகசோனியாகாந்தியின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் 2008-2009இல் இந்து தீவிரவாதம் என்ற போலியாக கருத்தியலை பரப்பியதனால் புரோஹித் அனுபவிக்க நேர்ந்த கொடுமைகள் பற்றி நிங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
மிரட்டியகாவலரின் கோரிக்கைகளுக்கு அடி பணியாமல் துணிச்சலாக நின்று போரிட்ட புரோஹித்தை நாம் பாராட்ட வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமும் தேசிய புலனாய்வு முகமையும் உடனடியாக விசாரணை நடத்தி கொடுரமாக நடந்துகொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சோனியா காந்தி, திக்விஜய் சிங் மற்றும் ப. சிதம்பரம் ஆகியோரது மோசமான தலைமையில் சித்திரிக்கப்பட்ட தவறான போலியான கருத்தியலை குறித்தும் தீவிரமான நீண்ட விசாரணை நடத்த வேண்டும்
புரோஹித் அனுப்பிய 24-பக்க கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. வாசித்துபாருங்கள்.
Annexure 2 by PGurus on Scribd