கிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது

அரசியல் கட்சிக்கு எதிரான ஜெப விண்ணப்பத்தை திருச்சபை தனது மக்கள் முன்னிலையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வைப்பது, இது ஒன்றும் முதல் முறை கிடையாது

1
5123
கிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது
கிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது

தில்லியின் பேராயர் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக இனி வாக்களிக்க வேண்டாம் என்ற தொனியில் ஒரு ஜெப விண்ணப்பத்தை அனைத்து தேவாலயங்களுக்கும் அனுப்பிவிட்டு இப்போது அதன் பொருள் அதுவல்ல என்று சமாளிக்கிறார். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் நாங்கள் எதிர்க்க வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை என்கிறார். கடந்த சில தினங்களாக கிறிஸ்தவ திருச்சபையை நம் நாட்டில் சில சுவாரஸ்யமான விஷயங்களை உருவாக்கிவிட்டது. தில்லியின் பேராயர் கோட்டு என்பவர்,  அனைத்து பங்கு தந்தைகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் நாட்டில் ஜனநாயகம் மற்றும் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கின்ற கொந்தளிப்பமான அரசியல் சூழ்நிலை  நிலவுவதால் அதில் இருந்து இந்தியாவை மீட்க, ஒரு ஆண்டுக்கு தொடர்ந்து நாம் ஜெபம் செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. இந்தக் கடிதமும் ஜெப விண்ணப்பமும் கிறிஸ்தவர்களை மோடிக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியாகும். இதில் நாட்டின் ஜனநாயகமும் இறையாண்மையும் நசிந்துவிட்டதாக ஒரு புரிதல் இருப்பதும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பேராயரின் அலுவலகம் இந்த கருத்தை நம்மிடம் இருந்து மாற்றுவதற்கு சில பலவீனமான முயற்சிகளை மேற்கொண்டன. அதாவது நாட்டின் நன்மையை நாடி இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதே தவிர மோடியையோ ஆளும் கட்சியையோ எதிர்த்து இக்கடிதம் அனுப்பப்படவில்லை. என்று திருச்சபை ஒரு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் வேடிகன் திருச்சபை உண்மையை உடைத்துவிட்டது.

வேடிக்கன் சபை ‘நம்முடைய இலக்கு இந்து ஆதரவு மோடி அரசை வீழ்த்துவதாகும்’ என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்து ஆதரவு அமைப்பு என்று இச்சபை கருதிய பாரதீய ஜனதா கட்சியும் ஆர். எஸ்.எஸ் அமைப்பும் இதற்கு பதிலடி கொடுத்தன. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதமரை எதிர்ப்பது ஜனநாயகமாகாது. கிறிஸ்தவ திருச்சபை ஒரு மத அமைப்பு என்பதால் அது அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; இந்த போக்கை ஆதரிக்க கூடாது; இது மாபெரும் துரோக செயல் ஆகும் என்று பதிலடி கொடுத்துள்ளன. இப்போது பேராயரின் கடிதம் அவரது ஆதரவாளர்கள் புரிந்துகொண்ட அளவுக்கு தீங்கானது அல்ல என்பதை இந்திய திருச்சபை அரசுக்கு உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மோடி அரசு கிறிஸ்தவத்துக்கு எதிரானது என புரிந்துகொள்ளும்படி தான் ஒரு சொல் கூட அந்த கடிதத்தில் எழுதவில்லை என்று மூத்த ஆயர் சில டிவி சேனல்களில் தோன்றி  விளக்கம் கொடுத்து வருகிறார். தான் உருவாக்கிய குழப்பத்தில் இருந்து விடுபட திருச்சபை அரும் முயற்சி எடுத்துவருகிறது. இதனால் திருச்சபையின் மூத்த  ஆயர் பலர்  தொலைக்காட்சிகளில் தோன்றி பின்வரும் விளக்கத்தை அளித்தனர். ‘’ ‘’திருச்சபைக்கு பிரதம மந்திரி மீதோ அவருடைய அரசின் மீதோ எவ்வித வருத்தமும் குறையும் கிடையாது. நாட்டின் முன்னேற்றத்துக்கு அரசாங்கத்துடன் இணைந்து திருச்சபையும் செயல்பட்டு வருகிறது. பிரதமரையோ மூத்த அமைச்சர்களையோ சந்திக்கும்போது நல்ல வரவேற்பு பெற்றுள்ளோம். கிறிஸ்தவர்கள் இங்கு அச்சுறுத்தலுடன்  வாழவில்லை [சில இடங்களில் பிரச்சனைகள் தோன்றினாலும் அது இந்தியாவுக்கு மட்டுமே உரியது என்று சொல்லிவிட முடியாது. எல்லா இடத்திலும் நடப்பது தான்]; பேராயரின் கடிதத்தின் மூலமாக இந்த தவறான புரிதல் ஏற்பட்டிருப்பதால் அதை சீராக்க வேண்டிய கடமையும் எங்களுக்கு இருக்கிறது. வேடிகனில் இருந்து வந்த செய்தி சபையின் நேரடி செய்தி அல்ல எனவே அதை வேடிக்கனின் கருத்தாக கொள்ளவேண்டியதில்லை’’

இது தான் இந்திய திருச்சபையின் முடிவு என்றால் பின் ஏன் பேராயர் அவ்வாறு ஒரு கடிதம் எழுத வேண்டும்? அவர் தனது  கடிதத்தில் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார் அச் சூழல் எப்படி நாட்டின் ஜனநாயகத்துக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை விளக்கவில்லை. அக்கடிதத்தின் குரல் அவரது மனசாட்சியின் குரலாக இருந்தால் 1984இல் சீக்கியர்கள் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டபோது இவர்கள் எங்கிருந்தனர்? டில்லி திருச்சபை தவிர மற்ற திருச்சபைகள் அமைதியாக உள்ளன. மேற்கு வங்காளத்தில் சில நாட்களுக்கு முன்பு பஞ்சாயத்து தேர்தலில் பெரியளவில் வன்முறை வெடித்தது. மம்தா பானர்ஜி  தலைமையில்  இயங்கும் திரிணமுல் காங்கிரசின் ஆட்சியில் ஜனநாயகமும் இறையாண்மையும் கேலி கூத்தாயின. அப்போது திருச்சபை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஜெபத்துக்கான தேவை அப்போது எழவில்லை.

திருச்சபை இந்தியாவில் அரசியல்ரீதியாக கோரிக்கை வைப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த நாகாலாந்து தேர்தலில் அந்த மாநிலத்தில் இருக்கும் பாப்டிஸ்ட் திருச்சபை, ‘விசுவாசிகள் பி.ஜே.பிக்கு வாக்களிக்க கூடாது, பி.ஜே.பியும் ஆர்.எஸ்.எஸ்  அமைப்பும் நமக்கு பெரியளவில் அச்சுறுத்தலாக உள்ளன’’ என்று தன சபையினரை கேட்டுக்கொண்டது.  ‘’இயேசு கிறிஸ்துவின் இதயத்தில் துளைக்கும் கட்சியினரிடம் நம்மை ஒப்படைக்க கூடாது’’ என்று தேவாலயங்களில் பிரச்சாரம் செய்தது. ‘நமக்கு அச்சுறுத்தல்’ என்ற அவர்களின் வாசகத்தை பிஜேபி கட்சியினர் ஆழமாக கருத்தில் கொண்டனர்.

இதை போல மேகாலயாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையும் சட்டசபை தேர்தல் வர இருந்த சமயத்தில் காரோ மலைப்பகுதியில் ஒரு நாள் போராட்டம் நடத்தியது. இதில் நாட்டில் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் நடப்பதாக கவலை தெரிவித்தது. ஒரு கத்தோலிக்க தந்தை, ‘’ஒரு கிறிஸ்தவர் பாதிக்கப்பட்டாலும் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர் ஆவோம்’’ என்றார். இன்னொருவர் , ‘’பிஜேபி ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பல விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வரும்’’ என்றார். காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் இலாபத்துக்காக இவ்வாறு மக்கள் மனதில் விஷத்தை விதித்துள்ளது.  இவ்வாறு நஞ்சை கலந்தும் கூட காங்கிரசால் இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க இயலவில்லை.

கோவாவிலும் கத்தோலிக்க திருச்சபை தனக்கு தேவையில்லாத இதுபோன்ற அரசியல் பிரச்சனைகளை உருவாக்கியது. 1980களின் பிற்பகுதியில் அலுவலக மொழிக்கான போராட்டம் நடந்த பொது திருச்சபை கொங்கனி மொழிக்காக கொடி பிடித்தது. மராத்தி மொழியை அலுவல் மொழியாக்கக் கூடாது என்று போராடியது. அது போல அரசு நடத்தும் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளிலும் பாட மொழி பிரச்சனயில் தலையிட்டது. கொங்கன் ரயில்வே திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கடற்கரையின் சூழல் அமைப்பு பாதிக்கப்படும் என்று செயற்பாட்டாளர்கள் அனைவரையும ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தி எதிர்த்தது. ஆனால் இன்று அந்த ரெயிலில் கோவாவில் இருந்து மும்பைக்கு அதிகமாக பயணிப்பது கத்தோலிக்க குருமார்கள் தான்.

இந்திய திருச்சபையின் முக்கிய நபர்கள் ஜனநாயக மதிப்புகள் பாதிக்கப்படுவதாகப் பேசுவதற்கு முன்பு ஜெரால்டு போஸ்னர் எழுதிய  God’s Bankers என்ற புத்தகத்தை வாசிக்க வேண்டும். இந்த புத்தகம் புலிட்சர் பரிசுக்குரிய இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற எழுத்தாளர் எழுதியதாகும். . இதில் 1930களின் பின்பகுதியில் இருந்து 1940களின் நடுப்பகுதி வரை வேடிக்கன் வங்கி ஐரோப்பிய தலைவர்களுக்கு எதிராக நாஜிக்களுக்கும் பாசிசப் படைகளுக்கும் மறைமுகமாக உதவியதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறுகிறது.  இந்த புத்தகத்தை எழுதியவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவரோ பிஜெபிக்காரரோ அல்ல. இந்த நூல் 2015இல் வெளிவந்ததாகும் இந்த நிலையில் இருந்து திருச்சபை இன்னும் மாறவில்லை. எனவே மற்றவருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பு தனது வரலாற்றை ஒரு முறை திருச்சபை திரும்பிப் பார்க்க வேண்டும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here