சிதம்பரத்தை நிலைக்குழுவில் இருந்து அகற்ற  சுவாமி முயற்சி

சிதம்பரத்தை நிலைக்குழுவில் இருந்து அகற்ற  சுவாமி முயற்சி - வெங்கைய்யா நீக்குவாரா?

0
1339
சிதம்பரத்தை நிலைக்குழுவில் இருந்து அகற்ற  சுவாமி முயற்சி
சிதம்பரத்தை நிலைக்குழுவில் இருந்து அகற்ற  சுவாமி முயற்சி

உள்துறை விவகார நிலைக்குழுவில் இருந்து சிதம்பரத்தை அகற்றும்படி துணை ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்;

டிவிட்டரில் சு. சுவாமி அமித் ஷாவுக்கு வேண்டுகோள்

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான டாக்டர் சுப்பிரமணியன் ப  சிதம்பரத்துடனான தனது சண்டையில் அவரை பதவியில் இருந்து ‘தூக்கிவிட’ முயற்சி செய்கிறார். சு. சுவாமி பாராளுமன்றத்தின் உள்துறை விவகார நிலைக்குழுவின் தலைவராக இருக்கும் ப. சிதம்பரத்தை அந்த பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம்  கூறும்படி டிவிட்டரில் அமித் ஷாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு டிவீட்டுக்கு பதில் அளிக்கையில் சுவாமி இந்த வேண்டுகோளை வைக்கிறார்.

கருத்து முரண்

சுப்பிரமணியன் . சுவாமி லோக் சபாவின் சபாநாயகர சுமித்ரா மகாஜன்னுக்கும் ராஜ்ய சபாவின் தலைவர் ஹமீத் அன்சாரிக்கும் தனித்தனியாக  இரண்டு மனு அளித்துள்ளார்., உள்துறை நிலைக்குழுவின் தலைவராக பதவி வகிக்கும்  ப சிதம்பரம் மீது அந்த துறையில் இருந்தே புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அங்கிருந்தே அழித்தார் என்பதால் அவரே முக்கிய குற்றவாளியும் ஆகிறார் என்று அந்த மனுக்களில் சு சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

ப. சிதம்பரம் விவகாரத்தில் தீவிரமான கருத்து முரண்பாடு  இருப்பதால் டில்லி போலீசில் முதல் தகவல் அறிக்கை [FIR] பதிவு செய்திருப்பதால்  அவர் அந்த தலைவர் பதவியை வகிக்க கூடாது.  ஒரு மரபு காரணமாக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் நிலைக்குழு மற்றும் பொது கணக்கு குழு போன்றவற்றிற்கு தலைவராக உள்துறையால் நியமிக்கப்படுகின்றனர்.

மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் இஷ்ரத் ஜெஹானின் என்கவுண்டர் மரணம் தொடர்பான ஆவணங்களை அழித்தல் போன்றவற்றிற்காக ப. சிதம்பரம் மீது டில்லி போலீசில் உள்துறை அமைச்சகம் கிரிமினல் புகார் அளித்துள்ள தகவலை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்த வழக்குக்காக உள்துறை அமைச்சகத்தில் யு. பி. ஏ அரசில் 2009-2012  வரை உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிலரும் விசாரிக்கப்படுவர்

குற்றம் நடந்த காலகட்டத்தில் அந்த துறையின் அமைச்சராக இருந்தவர் ப சிதம்பரம் அவரை நிங்கள் இப்போது எதிர்க்கட்சிக்காரர் என்ற முறையில் பாராளுமன்றத்தின் உள்துறை விவகார நிலைக்குழுவின் தலைவராக நியமித்தீர்கள். இவ்விஷயத்தில்  கடுமையான கருத்து முரண்பாடு  ஏற்படுகிறது. எனவே அந்த குற்றப் பத்திரிகையின் அடிப்படையில் வழக்கு விசாரணையின் போக்கை அறிந்து அந்த குற்றச்சாட்டில் அவர் பங்கு என்ன என்பது தெளிவாகும் வரை அவரை இந்த பதவியில் இருந்து தானே விலகிகொள்ளும்படி கேட்டுக்கொள்வதே முறையாகும்’ என்று சு. சுவாமி தனது கடிதங்களில் கேட்டுக்கொண்டுள்ளார்..  இதற்குரிய வழிமுறைகளையும் சு. சுவாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here