வால்மார்ட் வருகை குறித்து தேவையற்ற அச்சம்

வால்மார்ட் வருகை குறித்து தேவையற்ற அச்சம் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகிறார் என். எஸ். வெங்கட்ராமன்

0
1580
வால்மார்ட் வருகை குறித்து தேவையற்ற அச்சம் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகிறார் என். எஸ். வெங்கட்ராமன்
வால்மார்ட் வருகை குறித்து தேவையற்ற அச்சம் கொண்டிருக்கிறார்கள்

உலகெங்கிலும் பரந்து, விரிந்துள்ள வால்மார்ட் வணிக நிறுவனம், இந்தியாவில் பிலிப்கார்ட் (Flipkart) என்ற இணைய தள வர்த்தக நிறுவனத்தின் 77 சதவீதம் பங்கை வாங்க உள்ளது என்ற அறிவிப்பு, இந்தியாவிலுள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களிடம், அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வால்மார்ட் வருகையால் பல சிறு, குறு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும் என்று சில அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர்.வால்மார்ட் நிறுவனத்தின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று சில சில்லரை வணிக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நிலைமையை சீராக ஆராய்ந்து நோக்கினால், இத்தகைய அச்ச உணர்வுகள் தேயைற்றது என்பது தெளிவாக புலப்படும்.

உலகளவில் வர்த்தக துறைகளில் விஞ்ஞான ரீதியாக ஏற்பட்டு வரும் மாறுதல்களை குறித்து தகுந்த அளவில் புரிதல் இல்லாததாலோ அல்லது இந்திய சில்லறை வணிகர் நிறுவனங்களின் அடிப்படை திறனை குறித்து ஒப்புக்கொள்ள முடியாத ரீதியில் குறைவான மதிப்பீட்டாலோ, இத்தகைய வால்மார்ட்டிற்கு எதிரான அனுகுமுறை ஏற்பட்டுள்ளதோ என்றும் தோன்றுகிறது.

தேவையற்ற அச்ச உணர்வு

சிறு, குறு சில்லைரை வணிக நிறுவனங்கள், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் பொருட்களை மிகவும் குறைவான விலையில் விற்று, நுகர்வோர்களை அவர்களிடம் ஈர்க்க முடியும் என்று அஞ்சுகின்றனர்.

பலவிதமான விலை குறைப்பு போன்ற சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்து தங்களது விற்பனை அளவை பெரிதளவு கூட்டிக்கொள்ள முயல்வார்கள் என்றும் அதனால் தங்களது விற்பனை அளவு பாதிக்கப்படும் என்று எண்ணி சிறு, குறு சில்லறை வர்த்தக நிறுவனங்கள் வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் வருகையை எதிர்க்கின்றனர்.

வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் பெரிதளவில் செயல்படுவதால் அவர்கள் விற்பனைக்காக வாங்கும் பொருட்கள் அதிக அளவுள்ளதால, அவர்களால் கணிசமான அளவு குறைவான விலையில் பொருட்களை வாங்க முடியும். இது சிறு,குறு சில்லறை வியாபாரிகளுக்கு சாத்தியமாகாது என்றும் சில்லறை வணிக நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.

மேற்கண்ட அச்ச உணர்வு கொண்ட எண்ணஙகளை அறவே நிராகரிக்க முடியாது. அதே சமயம், இத்தகைய போட்டியின் விளைவுகளை சமாளிக்க தேவையான அனுபவங்களும், ஆற்றலும் மற்றும் பல ஆதரவான சூழ்நிலைகளும் சில்லறை வணிகத்துறைக்கு உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பரவலாக பரவியிருக்கும் சில்லறை வணிகத்துறையின் முக்கியத்துவம்

தற்போது இந்தியாவில் சுமாராக 130 லட்சம் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெட்டிக்கடைகளும் அடங்கும்.அவை சிறிய கிராமங்களிலும், சிறிய மற்றும் பெரிய நகரங்களிலும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு, அருகில் வாழும் மக்களின்அன்றாடத் தேவைகளை நல்ல முறையில் பூர்த்தி செய்து கொண்டு வருகின்றன.

இந்த சில்லறை வர்த்தக நிறுவனங்கள் அநேகமாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு பொருட்களை விற்று வருகின்றன. இத்தகைய நடுத்தர மற்றும் குறைந்த வருமானத்தில் வாழும் மக்கள் தொகை இந்தியாவில் சுமார் 70 சதவீதமாகும் அதாவது 90 கோடிக்கு மேல். இவர்களுக்கு இணைய தள வர்த்தக முறையில் செயற்படும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் வியாபார முறையில் நாட்டம் குறைவு.

சிறு, குறு சில்லறை வணிக நிறுவனங்களில் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான, அதிக நாட்கள் வைத்துக் கொள்ள இயலாத (டழற ளாநடக டகைந) உணவு பொருட்கள், உதிரி பாகங்கள், மருந்து போன்ற சாதனங்கள் விற்க்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பொருட்களின் விற்பனையில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் அதிக ஆர்வம் காண்பிப்பதில்லை. மேலும் நுகர்வோர்களுக்கு உடனே தேவைப்படும் பொருட்களை சில்லறை வர்த்தக நிறுவனங்களால் தான் பூர்த்தி செய்ய முடியும். இணையதள வர்த்தக சந்தையில் பொருட்கள் கிடைக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை அடிக்கடி ஏற்படக்கூடும்.

மேலும், நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும் போது அவற்றை நேரில் பார்த்து, கையால் தொட்டுப் பார்த்து அதன் பின்னரே சந்தையிலுள்ள பலவிதமான பொருட்களில் தங்களுக்கு தேவையானவைகளை தேர்ந்தெடுத்து வாங்க விரும்புவர்.இந்த “வாங்கும் சுகம்” இணையதள வர்த்தக சந்தையில் நுகர்வோர்களுக்கு கிடைக்காது.

பல சில்லறை வியாபாரிகள், தங்களுக்கு பரிச்சியமான, நம்பிக்கையுள்ள நுகர்வோருக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் சலுகைகளையும் தருவதுண்டு. இணையதள வர்த்தகத்தில் இது சாத்தியமாகாது.

சில்லறை வர்த்தகம் செய்வதற்கு அதிக முதலீடு தேவையில்லை. ஆடம்பர மற்றும் விளம்பர செலவுகள் மிகக்குறைவு. பல சில்லறை நிறுவனங்கள் குடும்பத்தாரால் நடத்தப்படுகின்றன. அதனால் வர்த்தக செலவும் குறைவே.

தற்போது இந்தியாவில் சுமார் 5 கோடி மக்களே இணையத்தில் nபுhருட்களை வாங்குகின்றனர் என்பது ஒரு புறமிருக்க, இவர்கள் எல்லோரும் இணையத்தில் மாத்திரம் தான் பொருட்களை வாங்குவதில்லை. அவர்கள் தங்களின் தேவைக்கேற்ப சில்லறை வியாபாரிகளிடமும் பொருட்களை தொடர்ந்து வாங்குவர்.இத்தகைய நிலை என்றும் தொடரும்.

மக்களின் அன்றாட தேவையை நேர்த்தியாக பூர்த்தி செய்து கொண்டு வரும் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் அடித்தளம் இந்தியாவில் வணிகத்துறையில் மிகவும் வலுவானது. அசைக்க முடியாதது.

சில்லறை வியாபாரிகளுக்கு, வர்த்தக துறையிலுள்ள இடம் தொடர்ந்து நீடிக்கும். மேலும் வளரும்.அதன் முக்கியத்துவம் எந்த விதத்திலும் குறையாது.

சில்லறை வர்த்தகத்திற்கும், இணைய தள வர்த்தகத்திற்கும் வணிக சந்தையில் போதிய இடம் உள்ளன.

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப, வணிகத்துறை ஆண்டொன்றிற்கு சுமார் 6 முதல் 7 சதவீதம் வரை வளர்ந்து வருகிறது. பொருளாதார, சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப வணிகத்துறை முன்னேறி வருவதை நாம் காலம் காலமாக பார்த்து வருகிறோம்.

தற்போது, இந்தியாவின் வணிகம் ஆண்டொன்றிற்கு சுமார் ரூபாய் 45 லட்சம் கோடியளவு உயர்ந்து நிற்கிறது. இவற்றில் இணையதள சந்தையின் அளவு சுமார் 2.5 சதவீதம் தான். அதாவது சுமார் 97.5 சதவீதம் வர்த்தகம் நேரடியாகவும், சில்லறை வர்த்தக வணிக நிறுவனங்கள் மூலமாகவும் தான் நடத்தப்படுகிறது.

வர்த்தகம் மேலும் ஆண்டொன்றிற்கு 6 முதல் 7 சதவீதம் அளவில் வளர்ந்து வரும் நிலையில், இணைய தள வர்த்தகமும், சில்லறை வணிக வர்த்தகமும, வளரும் வணிகத்துறையில் பங்கேற்று மேலும் வளரும். ஓன்றின் வளர்ச்சியை மற்றொன்றால் தடுக்க முடியாது.

பல வருடங்களாக இந்தியாவில் இணையதள வர்த்தக ரீதியில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றினால் சில்லறை வர்த்தகத்திற்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க பாதிப்பும் ஏற்படவில்லை.

வரும் காலங்களில், இணையதள வர்த்தகமானாலும், சில்லறை வணிகமானாலும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப இணைய தளத்தில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, தங்களது செயற்பாட்டினை மாற்றிக் கொள்வது அவசியம். இது தவிர்க்க முடியாததது. காலத்தின் கட்டாயம்.

சமீப காலங்களில், பல சில்லறை வணிக நிறுவனங்களும் தங்களது செயற்பாட்டினை தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சிறிது சிறிதாக மாற்றி கொண்டு வருகின்றன என்பதை காண்கிறோம்.

சில்லறை வர்த்தகத்துறையின் திறமையை குறைத்து மதிப்பிடலாகாது

இந்தியாவில் லட்சக்கணக்கில் செயற்பட்டு வரும் சிறு,குறு சில்லறை வணிகர்கள் மிகுந்த அனுபவமும், தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். அவர்களது ஆரோக்கியமான செயற்பாட்டினால், மக்களிடம் மதிப்பையும், மரியாதையையும் பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு தகுந்தவாறு செயற்பட்டு, தங்களை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களின் முன்னேற்றமான அணுகுமுறை மேலும் தொடரும் என்று நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here