பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

இராமர் கோயிலுக்கு இடம் வழங்க வேண்டும்: சுவாமி

0
2765
இராமர் கோயிலுக்கு இடம் வழங்க வேண்டும்
இராமர் கோயிலுக்கு இடம் வழங்க வேண்டும்

இந்துத்துவா தொடர்பான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பா ஜ க வின் மூத்த தலைவரான சு. சுவாமி ஞாயிற்றுக் கிழமை அன்று பிரதமருக்கு  கடிதம் எழுதியுள்ளார். தேசியச் சின்னமாக இராமர் சேது பாலத்தை விரைவில் மத்திய அரசு வெளியிட வேண்டும்;  அடுத்து இராமர் கோயில் விவகாரத்தில் கோயில் கட்டுவதற்கான நிலத்தை உடனடியாகக் கையகப்படுத்தித் தர வேண்டும். இந்த இரண்டையும் பிரதமர் விரைவாகச்  செய்து தர வேண்டும் என்று சு. சுவாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சுவாமி எழுதிய விரிவான கடிதத்தில் ‘மத்திய அரசின் வழக்கறிஞர்கள் இராமர் கோயில் கட்ட வேண்டிய இடத்தை மத்திய அரசே பெற்றுத் தரக் கூடிய அதிகாரம் இருக்கும் போது அந்தப் பிரச்சனையைத்  தேவையில்லாமல் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று கால தாமதம் செய்துவிட்டனர். எனவே இப்போது மத்திய அரசு தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இராமர் கோயில் கட்டுவதற்கான இடத்தைப் பெற்றுத்தர வேண்டும். அந்த 67 ஏக்கர் நிலத்தை ராம ஜன்ம பூமி நியாஸ் சமித்துக்குப் பெற்றுத் தர நீதிமன்றத் தீர்ப்பு அவசியம் இல்லை’, என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசின் கை வசம் இருத்த தேசியமயமாக்கப்பட்ட அயோத்தி இடத்தைக கையகப்படுத்தி அங்கு இராமர் கோயில் கட்டுவதற்கு  உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மத்திய அரசு வக்கீல்கள் தேவையில்லாமல் இரண்டு வழக்குகளைப் போட்டு இழுத்தடிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு ஒரு முடிவுக்கு வரலாம். மத்திய அரசு தனது பொறுப்பில் உள்ள அந்த அரசு நிலத்தை இராமர் கோயில் கட்டுவதற்கு வழங்கலாம். அதை உடனடியாகச்  செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சுவாமி வற்புறுத்தி உள்ளார். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 3௦௦ A யின் படி அரசுக்கு எந்த ஒரு இடத்தையும் பொது நல ஆர்வத்தின் பேரில் கையகப்படுத்த உரிமை உள்ளது என்றார் சுவாமி. நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருந்த நரசிம்ம ராவின் பிரமான வாக்குமூலத்தை சுட்டிக்காட்டி சுவாமி மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார். மேலும்  ராம ஜன்ம நியாஸ் சமிதி தவிர மற்ற கட்சிக்காரர்கள் அனைவரும் இழப்பீடு பெற்றுக்கொள்ள சம்மதித்துவிட்டனர். எனவே இவ்வழக்கு முடிந்துவிட்டது. உடனடியாக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டு கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சுவாமி.

Subramanian Swamy Letter to PM on Ram Mandir and Ram Sethu on May 31, 2019 by PGurus on Scribd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here