இந்தியப் பொருளாதாரக் கொள்கை வகுப்பதில் அமெரிக்க சார்ந்தவர்களை இங்குக் கொண்டு வரும் குற்றத்தை செய்தவர் யார்?

  அமெரிக்காவில் படித்த நிதி ஆலோசகர்களால் இதுவரை இந்தியா பயனடைந்ததா ? அல்லது அவர்களின் கொள்கைகள் நமக்கு பொருந்தவில்லையா?

  0
  1686
  அமெரிக்காவில் படித்த நிதி ஆலோசகர்களால் இதுவரை இந்தியா பயனடைந்ததா ? அல்லது அவர்களின் கொள்கைகள் நமக்கு பொருந்தவில்லையா?
  அமெரிக்காவில் படித்த நிதி ஆலோசகர்களால் இதுவரை இந்தியா பயனடைந்ததா ? அல்லது அவர்களின் கொள்கைகள் நமக்கு பொருந்தவில்லையா?

  அண்மையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆச்சார்யா பதவி விலகியதைத் தொடர்ந்து அனைவரது உள்ளத்திலும் ஒரு வினா எழுகிறது – அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை இந்தியாவில் புகுத்த முயன்று இந்த நிதி ஆலோசகர்களை அங்கிருந்து இறக்குமதி செய்யும் எண்ணத்தை உருவாக்கியது யார்? இது தவறான செயல்பாடா? அல்லது அமெரிக்கா தனக்குச்  சாதகமாக இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைக்க விரும்பி இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளை விலை பேசி அமெரிக்காவில் படித்தவர்களை இங்கு  நிதி ஆலோசகர்களாக  இங்கு அனுப்புகிறதா? இந்த வினாவுக்கு தீவிரமாக பதில் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

  அமெரிக்காவில் இருந்து ஆட்களை இந்தியப் பொருளாதார துறைக்கு இறக்குமதி செய்யும் நோய் 2௦12இல் ஊழல்வாதி ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருக்கும் போது தொடங்கியது. அந்த ஆண்டில் ரகுராம் ராஜன் என்பவர் தலைமைப் பொருளாதார ஆலோசகராக்கப்பட்டு பின்னர் அடுத்த ஆண்டிலேயே ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆக்கப்பட்டார். உடனே ஊடகங்களிடம் சொல்லி அவரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பாராட்டி கட்டுரைகளும் பேட்டியும்  வெளியிடச் செய்தனர். ஊடகத் துறையில் இருந்த சில பெண்கள் அவரை  கட்டிளம் காளை, கவர்ச்சி நாயகன் என்று கூட பேசியும் எழுதியும்  டிவிட்  செய்தும் அவரது பிம்பத்தை  உயர்த்திப் பிடித்தனர்.

  ரகுராம் ராஜனின் ஒரே இமாலய சாதனை சிறு மற்றும் இடைத் தரத் தொழில்களுக்கான  [MSME) வட்டி விகிதத்தை அதிகரித்தது மட்டுமே. பி ஜே பி கட்சியின் மூத்த தலைவரும் பொருளாதார நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இப்பிரச்னைக்குள் இறங்கி ரகுராம் ராஜனின் தவறான கொள்கைகளை வெளிப்படுத்தினார். இதனால் ரகுராமுக்குப் பணி நீட்டிப்பு கிடைக்காமல் போயிற்று. ஆனால் கடைசி நிமிடம் வரை சிறு மற்றும் இடைத்தரத் தொழில்கள் அவரைப் பாராட்டியே  வந்தன.

  வலையில் வீழ்ந்த மோடி

  அமெரிக்க இறக்குமதிகளின் வலையில் பிரதமர் மோடியும் சிக்கிக் கொண்டார்.  தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியத்தை நியமித்தது மோடி அரசு செய்த தவறுகளில் மாபெரும் தவறாகும். மோடி இந்நியமனத்தின் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் வலைக்குள் விழ்ந்துவிட்டார். அருண் ஜெட்லி முன்னாள் நிதி அமைச்சர் ஊழல்வாதி ப சிதம்பரத்தின் நெருங்கிய நண்பர்.  ப. சிதம்பரம் தனக்குச்  சாதகமானவற்றை  எல்லாம் அருண் ஜெட்லி மூலமாக இந்த அரசில் செய்து கொண்டார். அரவிந்த் சுப்பிரமணியம் மோடியின் அரசு குறித்து பல விமர்சனக் கட்டுரைகளை பொருளாதார நிபுணர் என்ற போர்வையில் காட்ட சாட்டமாக எழுதி வெளியிட்டவர். அவருக்கு தலைமை நிதி ஆலோசகர் பொறுப்பை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார். இவர் தனது கட்டுரையில் மோடி குஜராத் மாநிலத்தில் பின்பற்றிய ‘மேம்பாட்டு மாதிரி திட்டம்’ மிகச்  சாதாரணமானது என்றும் நிதிஷ் குமார் பீகாரில் நிறைவேற்றிய திட்டமே சிறப்பானது என்றும் விமர்சித்திருந்தார். இவரைத் தான் மோடி அரசு தலைமை நிதி ஆலோசகர் ஆக்கியது. இது  ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை.

  அரவிந்த் சுப்பிரமணியன் அமெரிக்காவின் தன்  முன்னாள் முதலாளி PFIZER என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும்  பேசியதைக் கண்டுபிடித்த சுப்பிரமணியன் சுவாமி அதை பலரும அறிய அம்பலப்படுத்தினார்.  அவரது பேச்சு இப்போது யூ டியுபில் வேகமாகப் பரவி கொண்டிருக்கிறது. அமெரிக்க மருந்து கம்பெனிகள் இலாபம் அடைவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா எப்படி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இப்பேர்ப்பட்ட [பச்சோந்தியை தேசத்  துரோகியை ] நமது அரசு  தலைமை நிதி ஆலோசகராகக் கொண்டிருந்தது .  நல்ல வேளை சிறிது காலத்திலேயே ரகுராம் ராஜன் மற்றும் அரவிந்த் சுப்பிரமணியனின் பித்தலாட்டங்களைப் பிரதமர்  தெரிந்துகொண்டு நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் பரிந்துரைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவர்களுக்குப் பணி நீட்டிப்பு தராமல் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இப்போது இருவரும் மோடியை வெறுத்து பேசி வருகின்றனர்.  நாளந்தா பல்கலைக் கழகத்தைக் கொள்ளையடித்த கிழட்டு நரி அமர்த்தியா சென் போல இவர்கள் இருவரும் பேசி வருகின்றனர்.

  ராஜனை அனுப்பிவிட்டு மீண்டும் மோடி அரசு ஒரு தவறானவரைத் தான் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகக் நியமித்தது. அவரும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். அவர் பெயர்  உர்ஜித் படேல்.  இவரும் தன் பணிக் காலம் நிறைவடையும் முன்னரே பணியில் இருந்து விலகி விட்டார். இந்தியாவில் வாழும் 13௦ கோடிப் பேரின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரக் கொள்கையை வகுக்கத் தெரியாதவர்களாக இருந்ததனால் இவர்கள் எவருமே சிறந்த நிதி ஆலோசகர்களாக வெற்றி பெற இயலவில்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குரிய பொருளாதாரக் கொள்கையும் நடைமுறைகளும் பற்றி இவர்களுக்கு எதுவும் முறையாகத் தெரிந்திருக்கவில்லை.

  நிதி ஆயோக் அமைப்புக்கு அரவிந்த் பனகாரியா என்பவரைத் தலைவராகக் அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்தது தான் சிறிதும் பொருந்தாத செயல். இவருக்கு இந்தியப் பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியவில்லை. அமைச்சரவைக் கூட்டங்களில் இவருடைய ஆலோசனைகள் வரவேற்புப் பெறவில்லை.  நடைமுறைக்குப் பொருந்தாத இவருடைய ஆலோசனைகளை நகைப்புக்கு இடமாயின. கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

  ரகுராமன் ராஜனின் தந்தையை ‘ரா’ உளவு அமைப்பில்  இருந்து ராஜீவ் காந்தி நீக்கினார்.

  ப சிதம்பரத்தின் மிக சிறந்த நண்பரான ஐ பி  எஸ் அதிகாரி கோவிந்த ராஜனின் மகன் தான் இந்த ரகுராம் ராஜன்.  ரா என்ற உளவு அமைப்புக்குத்  [Research and Analysis Wing (RAW)]  தலைவராகக் நியமிக்கப்பட்டிருந்த கோவிந்த ராஜனை அப்போது இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பணியிலிருந்து நீக்கிவிட்டார். 1987 ஆம் ஆண்டில் கோவிந்த ராஜனின் மகன் ரகுராம் ராஜனுக்கு அமெரிக்கா செல்வதற்கான நிதி உதவியை சி ஐ ஏ என்ற இந்திய உளவு அமைப்பு வழங்கியதாக ராஜீவ் காந்திக்கு செய்தி கிடைத்தது. தனது  பதவியை தவறாக சுய நலத்துக்குப் பயன்படுத்தியவர் கோவிந்த ராஜன் என்பதை ராஜீவ் காந்தி அறிந்துகொண்டார். இந்தியப் புலனாய்வு அமைப்பின் தலைவர்  எம் கே நாராயணன் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ரகுராம்  ராஜனுக்கு கல்விக்கட்டணம் செலுத்திய ரசீதுகளை ராஜீவ் காந்தியிடம் காண்பித்து கோவிந்த ராஜனின் ஊழலை உறுதி செய்தார்.

  மேற்கண்ட குற்றப் பின்னணிக்கு இடையிலும்  26 ஆண்டுகள் கழித்து 2௦12 ஆம் ஆண்டில் ப சிதம்பரம் தனது  நண்பர் கோவிந்த ராஜனின் மகன் ரகுராம் ராஜனை இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராகக்  கொண்டு வந்துவிட்டார்.

  ஏன் ஏன் ஏன்?

  இந்திய அரசியல் தலைவர்கள் நமது பொருளாதார தலைமைக்கும் ஆலோசனைக்கும்  வெளிநாட்டில் இருந்து குறிப்பாக அமெரிக்காவில் இருந்து ஆட்களைக்  கொண்டு வந்து நியமிப்பது ஏன்? இந்தியப் பொருளாதாரத்தை ஆக்கப் பாதையில் கொண்டு செல்லும் சரியான ஆட்களை நியமிக்க வேண்டிய தலையாயப் பொறுப்பு இந்தியத் தலைமைக்கு இருக்கிறது. புதிய பொருளாதார ஆலோசகர்கள் சேமிப்பு சார்ந்த பொருளாதாரத்தை மையப்படுத்த வேண்டுமே அல்லாது செலவை அதிகரிக்கும் அமெரிக்காவின் நுகர்வுப் பொருளாதாரத்தை வளர்க்க நினைக்கக் கூடாது. ஒரே குடும்பம் சார்ந்த ஆட்களை நியமிப்பதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சார்பாகப் பணியாற்றக் கூடிய ஆட்களை இந்திய பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்தில் ஊடுருவ விடுவதும் இனி கூடாது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here