தேனி கலவரம் திட்டமிடப்பட்டதா? தற்செயலானதா?

தேனி கலவரம் - தூண்டப்பட்டதா?

0
7739
தேனி கலவரம் - தூண்டப்பட்டதா?
தேனி கலவரம் - தூண்டப்பட்டதா?

போலிஸ் முஸ்லிம்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்?

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்து வருவதை கெடுக்கும் பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்து வருவதையே அங்கு நடைபெற்று வரும் கலவரங்கள் காட்டுகின்றன. தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் அங்கு அண்மையில் நடைபெற்ற வாக்குவாதமும் கைகலப்பும் விடுதலை சிறுத்தைகளால தூண்டிவிடப்பட்டனவாக தெரிகின்றன. தலித்துகளை இஸ்லாமுக்கு கட்டாய மதம் மாற்றம் செய்யும் முயற்சியாக இந்த கலவரங்கள் இருப்பதாக கருதுவதாலும் தலித்துகள் கட்டப் பஞ்சாயத்து அடிதடி போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாலும் சாதி இந்துக்கள் இவர்களை விட்டு ஒதுங்கியே நிறகின்றனர். இதில் தலையிட மறுக்கின்றனர்.

பெரியகுளம் அருகில் ஒரு கிராமத்தில் முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் இருபது பேரை போலிசார் கைது செய்தனர். [இவர்களில் பதினோரு பேர் தலித்துகள் ஒன்பது பேர் முஸ்லிம்கள்], ஆனால் இந்த பதினோரு பேர் மீதும் 1988இல் அறிமுகமான ஜாமீனில் வெளிவர முடியாத வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி இஸ்லாமியர் வாழும் பகுதி வழியாக தலித்துகள் தங்களின் சவத்தை எடுத்து சென்ற போது அவர்கள் தங்கள் பகுதி வழியாக செல்ல கூடாது என்று தடுத்து விட்டனர். இதில் தொடங்கியது தான் பிரச்சனை. இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. போலிஸ் செய்தியறிந்து வந்து உடனே இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விடியோவில் தலித்துகள் அடி வாங்குவதும் இஸ்லாமியர் அவர்களை அடித்து உதைப்பதும் தெளிவாக பதிவாகி இருப்பதை காணலாம்.

அடுத்து ஏப்ரல் 28ஆம் நாள் அன்று தலித்துகள் வாழும் பகுதி அருகே உள்ள தனது தோட்டத்தில் காய் பறிக்க போன சையது என்ற முஸ்லிம் இளைஞரை தலித்துகள் தங்கள் பகுதி வழியாக போகக் கூடாது என மறித்தனர். சுற்றிப் போகும்படி வலியுறுத்தினர். அப்போது மீண்டும் இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலிசாரின் கருத்துப்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முஸ்லிம் தெருவுக்குள் புகுந்து அங்கிருந்த வீடுகள் மீது கல்லை விட்டு எறிந்தனர். ஒரு வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரை தீ வைத்து கொளுத்தினர்.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று தலித்துகள் முஸ்லிம்கள் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து அங்கிருந்த சோபா , மேசை, டிவி, போன், போன்ற விலை மிகுந்த பொருட்களை உடைத்து விட்டதாகவும் செய்தி வெளியிட்டது. நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மே மாதம் ஐந்தாம் தேதி அன்று விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த மணிகண்டனை கைது செய்திருப்பதாக செய்தி வெளியிட்டது. இவர் ரங்கையா என்பவரிடம் தன சொந்த செலவுக்காக நான்கு இலட்சம் ரூபாய் தரும்படி கேட்டு மிரட்டி இருக்கிறார். அவர் போலிசில் புகார் கொடுத்ததால் போலிசார் மணிகண்டனை கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியினர் தங்களுக்கென சொந்த வருமானம் எதுவும் இல்லாமல் கட்டப் பஞ்சாயத்து, பணம் கேட்டு மிரட்டுதல், தன் சாதியினரிடம் உயர் சாதிப் பெண்களைக் காதலிக்க துண்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்களின் அறிவுரைப்படி தலித்கள் வாழும் கிராமத்தில் உருவான ஒரு குழு தலித் இளைஞரை உயர் சாதி பெண்களை காதலிக்க தூண்டி அதற்கான வசதிகளை செய்து கொடுக்கிறது. அந்த பெண்களை திருமணம் செய்துகொண்டு பிறகு அவர்களை கைவிட்டு விடுவது தான் அவர்களின் எண்ணம் ஆகும்.

தேனீ கிராமங்களில் தலித்துகளும் முஸ்லிம்களும் ஆதிக்க கூட்டத்தினராக இருந்தாலும் இதுவரை இவர்களுக்கு இடையே மோதல் வந்ததில்லை. இதுவரை இருவரும் ஒருவரோடு ஒருவர் கை கோர்த்து சாதி இந்துக்களின் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். தேவர், பள்ளர், மறவர் ஆகியோர் மீது இவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் உள்ள கிராமங்களில் வாழும் சாதி இந்துக்களை தலித்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து வந்தனர். சென்னையில் இருந்து கலவரப் பகுதிக்கு களஆய்வுக்கு சென்ற ஆர். எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த மூத்தவர் ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை ‘’தலித்துகளும் முஸ்லிம்களும் சகோதரர் என்றும் சாதி இந்துக்கள் தமக்கு பகைவர்’’ என்றும் பிரச்சாரம் செய்ததால் சாதி இந்துக்களின் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே கைகலப்பும் மோதலும் ஏற்பட்டுள்ளது. தலித்துகள் முஸ்லிம்களால் கடுமையாக தாக்கப்பட்ட போதும் போலிஸ் முஸ்லிம்கள் மீது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியவில்லை. இது குறித்து கேட்டறிய இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தேசிய ஆணையத்தின் தலைவரான எல். முருகன் என்பவரை தொடர்பு கொண்ட போது அவர் கிடைக்கவில்லை.

Update

எல் முருகன் கமிட்டி அளித்த அறிக்கை

பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான [எஸ் சி] தேசிய ஆணையத்தின் துணைத்தலைவரான எல் முருகன் தேனியில் கலவரம் நடந்த கிராமங்களை போய் பார்வையிட்ட பின்பு பின்வரும் விவரங்களை தெரிவித்துள்ளார்.

இந்த கலவரம் துரதிர்ஷ்டவசமானது ஆகும். இங்கு சுமார் ஆயிரம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர் தலித்துகளின் எண்ணிக்கை வெறும் நானூறு மட்டுமே. இவர்கள் முஸ்லிம்களிடம் படாத பாடு படுகின்றனர். முஸ்லிம்கள் தலித்துகளின் கோயிலை ஆக்கிரமித்துள்ளனர். தலித்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் போலீசுக்கும் புகார் அளித்த பின்பும் அரசோ காவல் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலித்களை மட்டும் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்குகின்றனர் தொல்லை கொடுக்கின்றனர. நான் இத்தகவலை டி எஸ் பியிடம் தெரிவித்தேன்.. இங்கு புலனாய்வு செய்யும் போலிஸ் அதிகாரி நியாயமாக செயல்படவில்லை என்ற சந்தேகம் எனக்கிருப்பதால் அவரை மாற்றும்படியும் கூறினேன். போலீசார் பிடித்து வைத்திருக்கும் நபர்கள் மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று அறிவுறுத்தினேன். இந்த கலவரத்துக்கு காரணமானவர் முஸ்லிம்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here