
முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு மூன்று பில்லியன் டாலர்
கருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரி துறை சிதம்பரம் குடும்பத்தார் மீது நான்கு வழக்குகள் பதிவு
காத்திருந்த காலம் கனிந்துவிட்டது.
முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீது வெளிநாடுகளில் சட்டத்துக்கு புறம்பாக அவர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துக்களுக்கும் அந்நிய நாட்டு வங்கிகளில் வைத்திருந்த கணக்குகளுக்கும் கருப்பு பணச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை நகர் நீதிமன்றத்தில் வருமான வரி துறையினர் சிதம்பரத்தின் மனைவி வழக்கறிஞர் நளினி, மகன் கார்த்தி, மருமகள் பரத நாட்டிய கலைஞர் ஸ்ரீநிதி ஆகிய நால்வர் மீதும் கருப்பு பணச் சட்டம் பிரிவு ஐம்பதின் கீழ் நான்கு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் போது இவர்களுக்கு பத்தாண்டு சிறைத்தண்டனையும் இந்த சொத்து மதிப்புக்கு 120 சதவீதம் அபராத தொகையும் செலுத்த வேண்டும்.
இப்போது பதிவான வழக்கில் காட்டப்பட்டுள்ள சொத்து மதிப்பு முழுமையானதா அல்லது ஒரு பகுதி மட்டுமா என்பது தெரியவில்லை இன்னும் கண்டுபிடிக்க வேண்டி இருக்குமா என்பது தெரியவில்லை. குற்றப் பத்திரிகையில் அமெரிக்காவில் உள்ள 3.28 கோடி ருபாய் சொத்தும் பிரிட்டனில் கேம்பிரிட்ஜில் உள்ள 5.37 கோடி மதிப்பிலான சொத்தும் இன்னொரு இடத்தில் உள்ள 80 லட்ச ருபாய் மதிப்பிலான சொத்தும் குறிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதம் 11 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டி சிதம்பரம் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் பொருத்தமில்லாத அற்பத்தனமான மனுக்களை தாக்கல் செய்தனர். தம்மால் இயன்ற .அனைத்து முறைகேடான வழிகளையும் பின்பற்றினர். ஆனால் போன வாரம் சென்னை உயர் நீதி மன்றம் தாமதப்படுத்தும் நோக்கில் வந்த அனைத்து மனுக்களையும் நிராகரித்துவிட்டது. இனி சிதம்பரம் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப் பத்திரிகையை பெற்றுக்கொண்டு வழக்கை சந்திப்பதை தவிர வேறு வழி இல்லை.
கார்த்தி சிதம்பரத்துக்கு கேம்ப்ரிட்ஜில் உள்ள சொத்துக்களும் அமெரிக்காவில் நாநொ ஹோல்டின்சில் 80 இலட்ச ரூபாய் மதிப்பிலும் 3,28 கோடி ரூபாய் மதிப்பிலும் உள்ள சொத்துக்களும் தவிர பிரிட்டனில் டோடுஸ் டென்னிஸ் நிறுவனத்தில் உள்ள சொத்தும் வங்கி கணக்கும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. கார்த்தியின் செஸ் குலோஎபல் அட்வைசரியும் வருமான வரி துறையினரின் பிடியில் இருந்து தப்பவில்லை.
வருமான வரி துறையினரின் தற்போதைய கணிப்பு படி சிதம்பரம் குடும்பத்தினர முறைகேடாக சேர்த்த சொத்தின் மதிப்பு மூன்று பில்லியன் டாலர்கள் ஆகும். இவை பதினான்கு நாடுகளிலும் இருபத்தொரு வங்கிகளிலும் இருந்து கணக்கிடப்பட்டவை. ஏற்கெனவே நாம் இவர் பற்றிய செய்தியை சிதமபர ரகசியம் என்ற தலைப்பில் வெளியிட்டுளோம்.
2015 டிசம்பர் – இல் ஏர்செல் மேக்சிஸ் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து சிதம்பரம் செய்த ஒவ்வொரு ஊழலும் வெளிச்சத்துக்கு வர தொடங்கிவிட்டது. அவர் தன குடும்பத்தினர் மீது வழக்கு பதியாமல் தப்பிக்க நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளின் உதவியை நாடினார். ஆனால் 2016 பிப்ரவரியில் சுப்ரமணியன் சுவாமி வருமான வரித்துறையினரின் ஆவனங்களின் தகவல்களை பொது மக்களுக்கு வெளிப்படுத்திவிட்டார். அடுத்து அவர் கருப்பு பணம் மற்றும் பினாமிக் குற்றங்களில் தப்பிவிடாமல் தண்டிக்கும் பொருட்டு புதிய சட்டத்தின் கீழ் சிதம்பரத்தின் மீது வழக்கு பதியும்படி கேட்டு பிரதம மந்திரிக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினார்.
பிரதம மந்திரி கடுமையாக ஆணை பிறப்பித்த பின்பும் சில அதிகாரிகள் நிதி அமைச்சகத்தில் இருந்து சிதம்பரத்திற்கு மறைமுகமாக உதவினர். இந்த அதிகாரிகள் சிதம்பரம் மீது வழக்கு பதிவதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் செய்தனர். அவர் நீதிமன்றத்துக்கு போக கால அவகாசம் அளிக்க ஏதுவாக அவருக்கு உதவினர். ஆனால் அவர்களின் மறைமுக உத்திகள் பலிக்கவில்லை சிதம்பரம் குடும்பம் இப்போது வழக்கின் பிடியில் சிக்கிவிட்டது. கருப்பு பணச் சட்டம் பாய்ந்த பிறகு சிதம்பரம் குடும்பத்தினர் மீது பினாமி சட்டம் கடுமையாகப் பாயும் என்று எதிர்பார்க்கலாம்.