தென்னிந்திய அரசியலில் ஊழலை எதிர்த்து சுவாமி களம் இறங்கியதில் வெற்றி

காங்கிரஸ் ஊழல்வாதிகளை சிறையில் அடைக்கும் சுவாமியின் போராட்டம் வெற்றிக் கனியை அளிக்கும் தருணம் கனிந்துவிட்டது

0
1636
காங்கிரஸ் ஊழல்வாதிகளை சிறையில் அடைக்கும் சுவாமியின் போராட்டம் வெற்றிக் கனியை அளிக்கும் தருணம் கனிந்துவிட்டது
காங்கிரஸ் ஊழல்வாதிகளை சிறையில் அடைக்கும் சுவாமியின் போராட்டம் வெற்றிக் கனியை அளிக்கும் தருணம் கனிந்துவிட்டது

தென்னிந்திய மாநிலங்களை ஊழலிலிருந்து விடுவிக்க சுவாமி எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்க தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டு அரசியலில் ஊழல் பெருச்சாளியான ப சிதம்பரத்தை நீக்கிவிட்டால் காங்கிரஸ் சுத்தமாகிவிடும். ப. சிதம்பரம் மற்றும் அவர் குடும்பத்தாரின் மீதான சுவாமியின் ஊழல் குற்றச்சாட்டுகள் ஒரு முடிவை எட்ட உள்ளன. இதனால் பழம்பெரும் கட்சியான காங்கிரசின் கறை நீங்கும்.  சிதம்பரம் தன் கட்சியில் செல்வாக்கு படைத்தவராக மாறியதும் அவர் அக்கட்சியை ஊழலில் உறைவிடமாக மாற்றி விட்டார். இந்தியாவில் நடந்த அனைத்து மிகப் பெரிய ஊழல்களுக்கும் [2ஜி, நிலக்கரி ஊழல், செயற்படாச் சொத்துக்கள் ஊழல், ஏர்செல் மேக்சிஸ், என் டி டி டிவி, வாசன் ஐ கேர்,சாரதா ஊழல், ஃபோரெக்ஸ் ஊழல் ஏர்பஸ் ஊழல்] சிதம்பரமே முழு முதற்காரணம் ஆவார்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுப்பிரமணிய சுவாமி ப. சிதம்ப்ரம் , அகமத் பட்டேல் மற்றும் காங்கிரசின் கர்நாடகப் பணப்பை டி கே சிவக்குமார் ஆகியோருக்கு இடையிலான கள்ள உறவை உலகுக்கு தோலுரித்து காட்டினார். ஆதாரங்களை அமலாக்கத் துறையினரிடம் சுவாமி வழங்கியதனால் டி. கே சிவக்குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ப சிதம்பரத்தின் ஏஜென்டாக செயல்பட்ட சிவகுமார் மீது வருமான வரி துறையினர் ஏராளமான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளனர். இவர் அகமத் பட்டேலுக்கும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் இங்கிருந்து பணத்தை பஸ்களில் ஏற்றி கொண்டு போய் கொடுத்துள்ளார். கர்னாடகாவில் ஜனதா தளம் [எஸ்] காங்கிரஸ் கட்சியினர் சிலர் தமக்கு பதவி கிடைப்பதில்  ஏற்பட்ட சில அதிருப்திகளால் இந்த மூன்று கொள்ளையர்கள் பற்றி சில ரகஸ்யங்களை கசிய விட்டனர். அது சுவாமியிடம் வந்து சேர்ந்துவிட்டது. இப்போது காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளந்துவிட்டது. இதில் கோவிந்த ராஜு என்பவரின் டைரியில் உள்ள சில பதிவுகள் களங்கம் படிந்த சிவகுமார் மீது இன்னும் கரியை பூசுகின்றன.

கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்டதும் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் அதிருப்தி தோன்றியுள்ளது. உடனே அதை விலக்க சிலர் முயன்ற போதும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசு உயர் அதிகாரிகள் சிதம்பரம் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதை கண்டிக்க வேண்டும் என்று  சுவாமி பிரதமர் அலுவலகத்தை கேட்டுக்கொண்டதனால் இந்த முறை யாராலும் இந்த சொத்து முடக்கத்தை ரத்து செய்ய முடியவில்லை. இந்த வழக்கில் ‘கம்பி எண்ணப்’ போகிறவர்கள் ப சிதம்பரம் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவர்களுடன் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா, அகமத் பட்டேல்,, பி எஸ் ஹூடா, சிவகுமார், வீரபத்ர சிங் ஆகியோரும் ஆவர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் அவர் மகன் ராகுல் காந்தியை இந்திய நீதிமன்றங்களின் படிகளை ஏற வைத்தவர் சுப்பிரமணீயன் சுவாமியே ஆவார்.  இவர்களும் இப்போது வருமான வரி வழக்கில் சிக்கியுள்ளனர். சுவாமியின் அறிவுறுத்தலின்படி பிரதமர் காங்கிரஸ்காரர்களின் ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்கும்படி ஆணையிட்ட்டுள்ளார். அப்போது தான் வர இருக்கின்ற பாராளும்னறத் தேர்தலில் மக்களை துணிச்சலாக சந்தித்து அவர்களூக்குஅளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக மார் தட்டி கொள்ளலாம். பிரதமர் அலவலகம் சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் நடத்தும் இலஞ்ச ஊழல் வழக்குகளை விரைந்து முடித்து மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று துரிதப்படுத்தியுள்ளது. இவ்வழக்குகளின் தீர்ப்பு வெளியாகி குறம் செய்தவர்கள் சிறையில் அடைக்கப்படும்போது மக்களின் ஏகோபித்த ஆதரவு பி ஜே பி க்கு வாக்குகளாக மாறி வாகை சூட உதவும்.

அரசியல்வாதிகளின் ஊழலுக்கு துணை போகும் அரசு உயர் அதிகாரிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவதாக சுவாமி சபதம் செய்துள்ளார். நேஷனல் ஹெராலடு வழக்கில் சோனியா காந்தி மற்றும் அவர் மகன் ராகுல் காந்தியையும் பலப்பல ஊழல் வழக்குகளில் ப. சிதம்பரம் குடும்பத்தைய்ம் ஹூடா வழக்கில் ஹூடாவையும் அகமத் பட்படேல் மற்றும் ப சிதம்பரம் கறுப்பு பண வழக்கில் டி. சிவக்குமாரையும் அடையாளம் காட்டியவர் சுவாமி ஆவார். இப்போது இவர்கள் மீதான வழக்கில் சரியான தீர்ப்பு கிடைக்க வேன்டும் என போராடி வருகிறார்.

அடுத்த சில நாட்களில் தமிழ்நாடு மற்றும்  கர்நாடகா அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழும்.  நாட்டை கொள்ளையடித்து இங்கு நக்சலிசம், மோசமான சுகாதாரம், கேவலமான கல்வி முறை, தவறான நீதி பரிபாலனம் மற்றும்  வறுமைக்கு வழி வகுத்த நெடாஸ் [Netas] குற்றவாளியாக சுவாமியே காரணமாக இருந்தார்.

“இந்தியாவில் வாழும் பூர்வீக மக்களின் துன்பங்களுக்கு எல்லாம் காரணமாக இருப்பது இங்கு நிலவும் ஊழலே ஆகும். இதனை நான் அரசின் ஆதரவுடனோ ஆதரவு இல்லாமலோ துடைத்தெறிய உறுதி பூண்டுள்ளேன்” என்று சுவாமி தெரிவித்தார்.

ஊழல் வழக்குகள் தவிர ஆந்திராவிலும் கேரளாவிலும் உளள  இந்துக் கோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்கவும் சுவாமி முயன்று வருகிறார். இங்குள்ள கோயின் காணிக்கை பணமும் சொத்துக்களும் கோயில் செலவு மற்றும்  பராமரிப்பு தவிர வேறு பல காரியங்களுக்காக செலவு செய்யப்பட்டு வருவதை கவனித்து அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here