ரஃபாலே ஒப்பந்தம் குறித்து வெளிவராத கதைகள் – ராகுலின் குற்றசாட்டுக்கான காரணங்கள் யாவை?

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி இன்றைய ஆட்சி வரை ரஃபாலே போர் விமான ஒப்பந்தத்தின் நோக்கும் போக்கும்

0
2489
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி இன்றைய ஆட்சி வரை ரஃபாலே போர் விமான ஒப்பந்தத்தின் நோக்கும் போக்கும்
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கி இன்றைய ஆட்சி வரை ரஃபாலே போர் விமான ஒப்பந்தத்தின் நோக்கும் போக்கும்

ராகுல் காந்தி தற்போது ரஃபாலே ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை வீசி வருகிறார். முதலில் ரஃபாலே போர் விமான ஒப்பந்தம் யார் யாருக்கு இடையே நடந்தது? எப்போது நடந்தது? அந்த ஒப்பந்தம் கடந்து வந்த பாதை என்ன? இதில் மோடி பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்த்து?

இதோ அடுக்கடுக்கான பதில்கள்…

காங்கிரஸ் கட்சியின் ரஃபாலே ஒப்பந்தம்

இந்திய விமானப் படை பொதுவாக ருஷ்யா அல்லது ஃபிரான்ஸ் நாடுகளில் இருந்து தனக்கு தேவையான போர் விமான்ங்களை வாங்கும். பாகிஸ்தானும் சீனாவும் வாங்கும் விமானங்களை இந்தியா வாங்காது . இதற்காக ருஷ்யா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளில் இருந்து வாங்கும் பழக்கத்தை வைத்திருந்தது. ருஷ்யா சிதைந்த போன பிறகு ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து  விமானங்களை வாங்கி வந்தது. 2006இல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ஜெட் விமானங்கள் வாங்க ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது இவ்வுலகில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கான ஒப்பந்தமாக அமைந்தது. இந்த வகையான போர் விமானங்களை விற்பனை செய்வதில் ஃபிரான்சில் உள்ள டசால்ட் நிறுவனமும் யூரோ ஃபைட்டரின்  டைஃபூனும் முக்கியமானவை.  சோனியா காந்தியின் அருளாசியால் இந்த ஒப்பந்தம் ரஃபாலேக்கு கிடைத்தது. இந்த ஒப்பந்தம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களால் நடந்துள்ளது என சுப்பிரமணிய்ன் சுவாமி பல முறை விமர்சித்தார். ஃபிரான்சு நாட்டு அதிபரின் இளம் மனைவி கர்லா புரூனி இத்தாலி நாட்டில் பிறந்தவர். இவரும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான இத்தாலியில் பிறந்த சோனியாவும் இணைந்து இந்த ஒப்பந்தம் உருவாகக் காரணமாக இருந்தனர். ஃபிரான்சு நாட்டு அதிபர் இந்தியா வந்த போது ஃபிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியா 126 போர் விமானங்கள் வாங்கப் போவதாக மத்திய அரசு அறிவிப்பு செய்தது.

முதலில் பதினெட்டு விமானங்கள் மட்டும் வெளி நாட்டில் இருந்து வாங்கி விட்டு மீதியை இங்கு இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் மூலமாக உருவாக்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இடையில் என்ன காரணமோ தெரியவில்லை 176,000 கோடி ரூபாய்க்கு [35 பில்லியன் டாலர் மதிப்புக்கு] இம்மாபெரும் ஒப்பந்தம் நடந்து முடிந்து விட்டது.  ரஃபாலே விமானங்களை குறைந்த விலைக்கு வாங்குவதாக காட்டி ஒப்பந்தம் செய்வதால் சோனியாவின் இரண்டு சகோதரிகளும் பிரான்சு நாட்டு அதிபரின் மனைவி கர்லா புரூனியும் 20% கமிஷன் பெறப் போவதாக சுப்பிரமணியன் சுவாமி அப்போது தெரிவித்தார். எதற்கு 126 போர் விமானங்கள் வாங்க வேண்டும்? அதிக எண்ணிக்கையில் விமானங்கள் வாங்கினால் அதிக தொகை கமிஷன் கிடைக்கும் அல்லவா? கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்ட சோனியாவின் சகோதரிகள் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி சோனியாவை வற்புறுத்தி இந்தியப் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். உடனே இங்கு அதிக எண்ணிக்கைக்கான தேவை இருப்பதாக ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் விமானங்கள் வாங்குவதற்கான நியாயம் கற்பிக்கப்பட்ட்து.

யுரோ ஃபைட்டரிடம் வாங்காமல் டசால்ட்  நிறுவனத்தாரிடம் வாங்க வேண்டும் என்பதற்காக விலை குறைத்து காட்டப்பட்டதற்கான விதி மீறல்கள் குறித்தும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு வழியாக ஒப்பந்தம் முடிந்த பின்பு 2012இல் இதை அறிவிக்கலாம் என்று கருதிய வேளையில்  சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதராவின் ஊழல் பூதாகரமாக வெடித்த்து.  அப்போது வதராவின் பினாமி சஞ்சய் பண்டாரியும் தனது ஆஃப்செட் சொல்யுஷன்ஸ் லிமிட்டட் நிறுவனம் மூலமாக டசால்ட் நிறுவனத்தாரிடம் விமானங்கள் கேட்டிருந்தார்.  ஆனால் அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. டசால்ட்டின் இந்திய முகவரான ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த முகேஷ் அம்பானியும் டசால்ட்டும் இணைந்து 21012 பிப்ரவரி மாதத்தில் தங்களின்  கூட்டு திட்டம் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டனர்.

Figure 1. Rafale timeline under UPA
Figure 1. Rafale timeline under UPA

அதே 2012 ஆம் ஆண்டில் சுவாமி இந்த போர் விமான ஊழல் குறித்து சோனியா காந்தியின் மீது குற்றம் சுமத்தி இராணுவ மந்திரிக்குஒரு புகார் மனு அனுப்பினார்.  அப்போது இராணுவ மந்திரியாக இருந்த அந்தோனி அந்த புகார் மனுவை கிடப்பில் போட்டு விட்டார். ஆனால் அவர் எந்த முக்கியமான ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, அவற்றை  அனுமதிக்கவில்லை; பலவற்றில் கொக்கி  [கேள்விக்குறி] போட்டும் அனுப்பியுள்ளார். 2013இன் தொடக்கத்தில் இந்த ரஃபாலே ஒப்பந்தம் தானாகவே  ரத்து ஆயிற்று

பி ஜே பி அரசின் ரஃபாலே ஒப்பந்தம்

2013இன் கடைசியில் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த அதுவரை சண்டையிட்டு கொண்டிருந்த முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் ஒற்றுமையாக இணைந்தனர். தனது தொலை தொடர்பு நிறுவனம் மற்றும் உள்கட்டமைப்பு துறை சார்ந்த தொழில்களில் பல பின்னடைவுகளை சந்தித்து வந்த அனில் அம்பானிக்கு அவர் சகோதரர் முகேஷ் அம்பானி தன்னிடம் இருந்த இராணுவத்  துறை சார்ந்த தொழிலை பிரித்து கொடுத்தார். அப்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்  2ஜி ஊழலிலும் நிலக்கரி ஊழலிலும் சிக்கியிருந்தது.  டில்லியின் விமான நிலைய செயல்பாட்டு நிர்வாகத்தில் இருந்து வெளியேறிய பிறகு அனில் அம்பானியின் ரிலையன்ஸ்  நிறுவனத்துக்கு  அவப்பெயர் ஏற்பட்டு விட்டது. . பொது மக்களும் தங்களுடைய கட்டண உயர்வு காரணமாக இந்த நிறுவனத்தின் மீது கோபமாக இருந்தனர். சி பி ஐ கூட ஒரு முறை,‘’இந்த நிறுவனம் விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பதில்லை அல்லது புரண்டு புரண்டு [மாற்றி மாற்றி] பேசுகின்றனர்’’ என்று தெரிவித்திருந்தது.

ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. இங்கு அருண் ஜேட்லி இராணுவ அமைச்சர் ஆனார். ரத்தான ரஃபாலே ஒப்பந்தக் கோப்புகளை பார்த்தார். அதை உயிர்ப்பிக்க முயன்றார். இதனால் முகேஷ் அம்பானி தன் தம்பி அனிலுக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்கும் என்று அகமகிழ்ந்தார். பிரதமர் மோடி 2015இல் ஃபிரான்சுக்கு சென்ற போது இந்தியா 36  ரஃபாலே விமானங்களை வாங்க முடிவு செய்திருப்பதாக அங்கு அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தைமத்திய அரசு டசால்ட் நிறுவனத்துடன் செய்துகொள்ளவில்லை. மாறாக இந்த ஒப்பந்தம்  இரு நாட்டு அரசுகளுக்கும் இடையில் நடந்தது. இந்த புதிய ஒப்பந்தப்படி ஏழரை பில்லியன் டாலருக்கு 36 விமானங்கள் வாங்குவதாக முடிவு ஆயிற்று. இந்த 36 விமானங்களையும் ஃபிரான்சு தயாரித்து 2019 -2022க்குள் இந்தியாவுக்கு அனுப்பி விட வேண்டும்.நமக்கு கிடைத்த தகவலின் படி 25% தொகையை அரசு டசால்ட் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது.

அனில் அம்பானி தனது குடும்பத்தாருடன் கொண்டிருத வர்த்தகப் பங்கீடு காரணமாக இப்போது டசால்ட்டின் விமான ஒப்பந்தத்தைப் பெற்றார். அதாவது முகேஷுக்கு கிடைக்க வேண்டிய ஒப்பந்தம் அவர் தனது தம்பி அனிலுக்கு கொடுத்ததால் கிடைத்துள்ளது. டசால்ட் நிறுவனத்தில் ஜெட் விமானங்கள் தயாரிக்கும் ஃபேல்கன் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது.இந்தியாவை சேர்ந்த பல தனியார் நிறுவனங்களும் இந்த ஃபேல்கனுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கு ராபர்ட் வதராவின் பினாமி சஞ்சய் பண்டாரி மீண்டும் முயற்சி செய்தும் அவருக்கு கிடைக்கவில்லை.  அவர் இப்போது  நேபாளம் வழியாக இந்தியாவை விட்டே ஓடிப் போய்விட்டார்.  அவர் வதராவுக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் வழியாக ஆராயும் போது அவர் வதராவின் பினாமி சொத்தான அவர் வீட்டில் இலண்டனில் இருப்பதாக தெரிய வருகிறது.

ராகுல் என்ன  குற்றஞ்சாட்டுகிறார்?

இப்போது ராகுல் காந்தி இந்த ரஃபாலே ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் பங்கு குறித்து கேள்வி எழுப்புகிறார். ஏனென்றால் அனில் அம்பானிக்கு தொழில் நசித்துபோய்விட்டதால் அவருக்கு எப்படி  இந்த ஒப்பந்தம் கிடைத்தது என்கிறார். அவர் தொடங்கி நடத்தி வந்த தொலைதொடர்பு நிறுவனம், நிலக்கரி தொழில், உள்கட்டமைப்பு தொழில் என அனைத்தும் தோல்வி கண்டதால் இது மட்டும் எப்படி சாத்தியம் என்று ராகுல் கேட்கிறார்?  மோடி ஏன் தொழிலில் நசித்து போன ஒருவரிடம் இந்த ரஃபாலே ஒப்பந்தத்தை  கொடுக்க வேண்டும்?  என்ற நியாயமான கேள்வி எழுகிறது

பி ஜே பி தலைவர்கள் மேற்கண்ட கேள்விக்கு தக்க பதில் வைத்திருக்கிறார்கள்.  அதாவது டசால்ட் நிறுவனத்தார் தான் அனில் அம்பானியுடன் ஒப்பந்தம் வைத்திருக்கிரார்களே தவிர இதில் பி ஜே பி அரசின் பங்கு எதுவும் கிடையாது. ஆம். இது தான் பதில். இது சரியான பதில் என்றாலும் கூட  அரசியலுக்கு என்று ஓர் அறம் தர்மம் இருக்கிறதல்லவா?  மத்திய அரசு முந்தைய ஆட்சியில் ஊழல் கறைபடிந்த ஒரு நிறுவனத்தாருடன் ஏன்  இப்போது தொடர்பு வைக்க வேண்டும். இது சாமான்யரின் கேள்வி.

இதே டசால்ட் நிறுவனம் இந்தியாவில் வங்கி கடனை அடைக்காமல் ஓடி போன விஜய் மல்லையா அல்லது மேஹுல் சோக்சி அல்லது நீரவ் மோடியின் நிறுவனங்களுடன் கூட்டு வைத்தால் ஒப்பு கொள்வோமா? 2ஜி ஊழலில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பங்கு உண்டு என்பது தெரிந்த பிறகும் அந்த நிறுவனத்துக்கு போர் விமான ஒப்பந்தத்தை ஏன் கொடுக்க வேண்டும்? இது டசால்ட்டின் விருப்பம் அல்லது முடிவு என்றாலும் இதை ஏன் பி ஜே பி அரசு ஆதரிக்க வேண்டும்?  2015இல் ரஃபாலே ஒப்பந்தம் பற்றி மோடி ஃபிரான்ஸ் நாட்டில் வைத்து அறிவித்த போது அனில் அம்பானியை தன்னுடன் அங்கு அழைத்து சென்றிருக்க கூடாது. இதனால் அனில் அம்பானி மோடிக்கு நெருக்கமானவர் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

ஊழல் ஒப்பந்தத்துக்கு ஏன் மோடி உயிர் கொடுத்தார்?

ஊழல் மலிந்த இந்த ரஃபாலே ஒப்பந்தத்துக்கு ஏன் மீண்டும் மோடி உயிர் கொடுத்தார் என்பது நம் முன் எழும் மற்றொரு வினா? மத்திய அரசு இன்னொரு புதிய ஒப்பந்தத்தை வெளிப்படையாக அறிவித்து பெற்றிருக்கலாம். அப்படி ஏன் செய்யவில்லை என்பதை இராணுவ அமைச்சராக இருந்த  அருண் ஜேட்லியும்  பிரதமர் மோடியும் தான் நமக்கு சொல்ல வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் போது பல உள்ளடி வேலைகளை செய்து தான் குறைந்த தொகைக்கு ஒப்பந்தத்தைப் பெற்றனர். 25% தொகை கொடுத்துவிட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் நல்ல நிறுவனத்துடன் தான் செய்யப்பட்டுள்ளதா என்பதை மோடி அரசு சோதித்து அறிந்திருக்க வேண்டும். இப்போதாவது அந்த பணியை செய்து முடிக்க வேண்டும் . பொதுமக்களிடம் நம்பிக்கை இழந்த  தொழில் நிறுவனங்கள், திவாலாகி போன நிறுவனங்கள் போன்றவற்றிற்கு இராணுவத் துறையில் இடமில்லை என்பதை மோடி அவர்கள் உறுதியாக தெரிவிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here