அவற்றின் மதிப்பு எவ்வளவு?
நீரவ் மோடி அமெரிக்க நீதிமன்றத்தில் திவால் நோட்டிஸ் தாக்கல் செய்தார். நீதிமன்றம் நியமித்த டிரஸ்டி ஆய்வுக்குச் சென்ற போது அந்த அலுவலகத்தில் விலை மதிப்பு மிக்க சிற்பங்கள் இருப்பது அம்பலம். ஆயிற்று.
முன்னுரை
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த இயலாமல் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்கு ஓடிப்போன நீரவ் தீபக் மோடியின் வ\ழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர் அமெரிக்காவில் திவால் நோட்டிஸ் தாக்கல் செய்தார். . அங்கு அடுத்த விசாரணை ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி நடைபெறும்.
ஒரு இந்திய நிறுவனம் அமெரிக்காவில் திவால் நோட்டிசு கொடுத்தாள் என்ன செய்வது?
நீரவ் மோடி தலைமை நிர்வாக அதிகாரியாக விளங்கும் ஃபயர்ஸ்டார் டையமண்ட்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் சட்டப் பிரிவு 11இன் கீழ் திவால் நோட்டிஸ் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றம் ஒரு டிரஸ்டியை நியமித்துள்ளது. அவர் அலுவலகத்துக்கு வந்து சொத்துக்களையும் கடனையும் பற்றி கணக்கெடுப்பார். Firestar, Fantasy, AJ ஆகிய நிறுவனங்களுக்கு மோடி திவால் நோட்டிஸ் கொடுத்திருப்பதால் நீதிமன்றம் டிரஸ்டியாக ரிசார்ட் லெவின் என்பவரை நியமித்துள்ளது. இந்த நிறுவனங்களின் தன்மை, பங்குதாரர் முறைகள் பற்றியும் இந்த செய்தியின் கடைசியில் தரப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்வது என்றால் இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்தது தான் Firestar International Limited (“FIL”). இது இந்தியாவில் உள்ள நிறுவனம் ஆகும். இதன் தலைமை அதிகாரியாகவும் இயக்குனர்களில் ஒருவராகவும் நீரவ் மோடி இருக்கிறார்.
ஏன் இப்போது நீரவ் மோடி ரிகோ- RICO கண்காணிப்புக்குள் வந்தார்?
டிரஸ்டி நீரவ் மோடியின் அலுவலகத்துக்குப் போய் அங்குள்ள பொருட்களைக் கணக்கெடுத்த போது விலை மதிப்புள்ள 23 சிற்பங்கள் இருப்பதைக் கண்டார். இவற்றில் 22 டெரகோட்டா வகையை சேர்ந்தனவாகும். இவற்றை நீரவ் மோடி ஹாங்காங் முகவரி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளார். இந்த ஏலம் நியு யார்க் நகரில் கிரிஸ்டிஸ் இன்க் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. 23ஆவது சிற்பம் ஒரு பெண்ணின் தலை மட்டும் கொண்டதாகும். இது 2௦௦௦ ஆம் ஆண்டில் இந்திய சிற்பி ரவீந்திர ரெட்டியால் உருவாக்கப்பட்டது. இச்சிற்பத்துக்கு An Dalu என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இச்சிற்பம் 2௦௦௦ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள கிறிஸ்டிசில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை ஏலத்தில் யார் எடுத்தவர யார் என்பதை டிரஸ்டியால் கண்டுபிடிக்க இயலவில்லை. இவை எல்லாமே நியு யார்க் நகரில் ஐந்தாம் நிழற்சாலையில் 592ஆம் எண்ணுள்ள கட்டிடத்தில் இயங்கும் நீரவ் மோடியின் நிறுவனம் திவாலுக்கு மனு போட்டு காத்திருக்கும் வேளையில் கண்டுபிடிக்கப்பட்டனவாகும்.
டிரஸ்ட்டி நியமனத்துக்கு பிறகு நீரவின் மனைவி அமி மோடி அலுவலகத்துக்கு வந்து அந்த சிற்பங்கள் தன்னுடையவை என்றும் அவற்றை தன்னிடமே திருப்பித் தர வேண்டுமென்று டிரஸ்டியிடம் கேட்டார். அப்போது மார்க் சாம்சன் மறுகட்டமைப்பு அதிகாரியாக இருந்ததானால் அந்த சிற்பங்களைத் தர மறுத்துவிட்டார். காரணம் அவை அமிக்கு சொந்தமானவை என்பதற்கான ஆதாரங்களை அவரால் காட்ட முடியவில்லை.
அந்த சிற்பங்கள் யாருடையவை?
நீரவ் மோடியும் அவர் மனைவியும் அந்த சிற்பங்களை அலுவலகத்தை விட்டு வெளியே கொண்டு போகக் கூடாது என்பததில் அக்கறையும் ஆர்வமும் செலுத்தியும் அவர்களால் அவை யாருடையவை என்பதை நிரூபிக்க இயலவில்லை. இன்று வரை அந்த சிற்பங்களின் உண்மையான உரிமையாளர் யார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அது யாராக இருக்கும்? இது வெறும் தொடக்கம் தான். நீண்ட நெடிய வரலாறாக இது விரிந்து கொண்டே போகும் என்பது உறுதி.
COMPLAINT TO DETERMINE INTERESTS IN PROPERTY (SCULPTURES) by PGurus on Scribd