ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ஜுன் 12  அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்படி அழைப்பு

ஏர்செல் மேக்சிஸ் பற்றி ஒன்றும் தெரியாது என்ற ப சிதம்பரத்தை அமலாக்கத் துறை ஜுன் 12  அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்படி  அழைப்பு

0
2105
ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ஜுன் 12 அன்று விசாரணைக்கு வரும்படி அழைப்பு
ஏர்செல் மேக்சிஸ் ஊழல்: ஜுன் 12 அன்று விசாரணைக்கு வரும்படி அழைப்பு

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி செவ்வாய்கிழமை [ஜுன் ஐந்து] ப சிதம்பரத்திடம் ஏழு மணி நேரம் விசாரணை செய்த பிறகு அவரது வார்த்தை ஜாலங்களுக்கு மயங்காத அமலாக்கத் துறையினர் (ED) அவரை மீண்டும் ஜுன் 12 அன்று விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். காலை பதினோரு மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்த ப சிதம்பரம் அங்கு நடந்த விசாரணையில் அனைத்து ஊழலுக்கும் தனது மூத்த அதிகாரிகள் மீது பழி சுமத்திவிட்டு தனக்கு ஏதும் தெரியாது என்றார். தற்போது செயல்படாமல் இருக்கும் ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் எடுத்துக்கொள்வதற்கான அனுமதியைப் பெற 4700 கோடி பணம் புரண்டதாக கூறப்பபடும் வழக்கில் தனக்கு எதுவும் தெரியாது என்றார் ப சிதம்பரம். அவரது மகன் கார்த்தி மேக்சிஸ் என்ற மலேசிய நிறுவனத்தின் முன்று கிளை நிறுவனங்களிடம் இருந்து இரண்டு மில்லியன் டாலர் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை ஒன்றரை கோடி மதிப்புள்ள அவரது சொத்துக்களையும் வங்கி கணக்குகளையும் வழக்கில் இணைத்துள்ளனர்.

சிதம்பரம் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தனக்கு அந்த அனுமதிக்கான மதிப்பு தொகை பற்றி தெரியாது என்றும் அதிகாரிகள் சரி பார்த்து நீட்டிய கோப்புகளில் மட்டும் தான் கையொப்பம் இட்டதாகவும் கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏழு மணிக்கு அமலாக்க துறை விசாரணை முடிந்து வெளியே வந்த ப. சிதம்பரம் தன் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) கூட இல்லாத நிலையில் எதற்காக தன்னை அமலாக்கத் துறையினர் அழைத்து விசாரணை நடத்துகின்றனர் என்று டிவிட்டரில் பொய்யுரை பரப்பினார். மூத்த வக்கீலான ப சிதம்பரம் ஒரு பொதுவெளியில் இப்படிப்பட்ட அடிப்படை இல்லாத விஷயத்தை எப்படி சொல்கிறார் என்று படித்தவர்கள் வியந்து போயினர். ஆனால் இவருக்கு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை.

காலை பத்து மணி அளவில் ப சிதம்பரத்தின் வக்கீல்கள் காங்கிரஸ் தலைவர்  அபிஷேக் சிங்வியின்  தலைமையில் முன்ஜாமீன் கேட்டு மனு போட்டனர்.  அமலாக்கத் துறையின் வக்கீல் சிதம்பரத்தின் மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் கேட்டார். சிறப்பு நீதிபதி ஒ. பி. சைனி ஜுலை பத்தாம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார். அதுவரை அவரை கைது செய்வது போன்ற எந்த நடவடிக்கையிலும் இறங்க கூடாது என்றும் நீதிபதி ஆணையிட்டார்.

புதன்கிழமை அன்று [ஜுன் 6]

ஐ என் எக்ஸ் மீடியா (INX Media) ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரின் நீதிமன்றத்தில் ப சிதம்பரம் ஆஜராக வேண்டியிருந்தது.  இந்த வழக்கில் அவரது  மகனுடனும் மேக்சிஸ் வழக்கில் அவர் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய சி பி ஐயும் அமலாக்கத்துறையும்  தயாராகி வருகின்றன. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் பீட்டர் மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் 2007இன் நடுவில்  சிதம்பரம் சொல்லித்தான் தாங்கள் அவர் மகன் கார்த்தியிடம் ஐந்து கோடி ருபாய் இலஞ்சம் கொடுத்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here