மற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்

சீனா, மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் இந்தியா நட்புறவு கொள்ள காரணமாக இருந்தது எது?

2
5086
அஞ்சா நெஞ்சர் சுப்ரமணியன் சுவாமி
அஞ்சா நெஞ்சர் சுப்ரமணியன் சுவாமி

  • மகா பெரியவருடன் சுவாமிக்கு உண்டான தொடர்பு குறித்த புதிய உண்மைகள்
  • சுவாமியின் வாழ்வில் நடந்த  சில சுவையான சம்பவங்கள்

சுவாமி பிரேக்சிட்டுக்கு பின்னர் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்குமான உறவில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி தர்மத்தின் வழியில் நடந்தவர். அவருக்கு இருந்த பல்வேறு அலுவல் சுமைகளுக்கு இடையில் எனக்கு சில நிமிடங்கள் ஒதுக்கி என்னிடம் பேசினார். சுவாமி பல அரசியல் நகர்வுகளை நடத்தி இருந்தாலும் அவருடைய அனுபவங்கள் அபரிமிதமானவை.

வெளிறிய ரோஸ் நிற குர்த்தாவும் ரோஸ் நிறப் புள்ளிகள் போட்ட கருப்பு சாக்சும் அணிந்து  அவர் ஒய்யாரமாக உட்கார்ந்தபடி என்னிடம் பேசத் தொடங்கினார். உண்மையில் அவருடைய பெயர் வெறும் சுவாமி தான் அவர் தந்தையார் பெயர் தான் சுப்பிரமணியன். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது இந்திரா காந்தி சாதி பெயர்கள் ஒருவரின் இயற்பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருப்பதை நீக்கி விடுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். சுவாமிக்கு சுப்பிரமணியன் என்பது சாதிப் பெயர் அல்ல ஆனால் அவர் ஒரு சைவ பிராமணர் என்பதை உறுதி செய்தது. எனவே அவர் தனது  பெயரை எஸ். சுவாமி என வைத்துக்கொண்டார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் இவரை  எஸ் சுவாமி என்றே அழைத்தார். பெயரின் விளக்கம் கேட்டதற்கு இவர் எஸ் என்றால் தந்தையார் பெயர் சுப்பிரமணியன் என்று பதில் அளித்தார்.

சுவாமியை அவரது தாயார் மிகவும் நேசித்தார். தனது மகனின் திறமையையும்   எதிர்ப்பு குணத்தையும் அவர் வெகுவாக ரசித்துக் கொண்டாடினார். சிறு வயதில் சுவாமி நன்றாகப் பாடுவார்; கார்ட்டூன் படங்கள் வரைவார் என்று அவரது பால்ய கால நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். சுவாமி டில்லியில் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தார் அங்கு அவர் இந்து மதம் குறித்து எதுவும் படிக்கவில்லை. ஆனால் நெருக்கடி காலகட்டத்தின் போது அவருக்கு ஒளிந்து கொள்ள இடம் கொடுத்த வீடுகளில் நிறைய இந்து சமயப் புத்தகங்கள் இருந்தன.  அவற்றைப் படித்து சுயமாக அவர் இந்து சமயம் குறித்து ஆழமாக அறிந்துகொண்டார்.

அரசியல் வாழ்வில் சுவாமி ஈடுபடுவதற்கு அவருக்கு வலுவான தூண்டுகோலாக இருந்தவர் காஞ்சி காமகோடி  பீடத்தின் பீடாதிபதியாக இருந்த மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இந்த திருப்புமுனை அவரது வாழ்வில் 1977இல் வந்தது. தமிழகத்தில் ஒரு குக்கிராமத்தில் சுவாமி ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருந்த  போது அங்கு  ஓர் இடத்தில் ஏராளமான சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மக்கள் பல நூறு பேர் கூடியிருந்தனர். சுவாமி என்ன கூட்டம் என்று அருகில் சென்று பார்த்தார். அங்கு மகா பெரியவர் வீற்றிருந்தார். அவரிடம் மக்கள் தங்கள் கஷ்டங்களைச்  சொல்லி ஆறுதல் பெற்றனர். அப்போது மகாபெரியவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும். அவர் சிறிது நேரம் அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்துவிட்டு பின்னர் ஒரு குடிசைக்குள் போய் விட்டார். கதவும் மூடப்பட்டது. இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்த சுவாமியும்  தனது காரை நோக்கி கிளம்பி விட்டார். மடத்தை சேர்ந்த ஒருவர்  சுவாமியின் பின்னால்  ஒடி வந்து ‘உங்களை மஹா பெரியவர் பார்க்க வேண்டும்’ என்கிறார் வாருங்கள என்று சுவாமியைக் குடிசைக்கு அழைத்து வந்தார். குடிசைக்குள் நுழைந்ததும் பெரியவர் ‘என்ன  என் உத்தர்வைப் பெறாமல்  கிளம்பிவிட்டாய்’ என்றார். ‘சுப்பிரமணிய சாமி தமிழரா’ என்ற தலைப்பில் வந்த ஒரு செய்தித்  துணுக்கை  எடுத்து சுவாமியிடம் மகாபெரியவர் கொடுத்தார். பின்பு சுவாமிக்குப் பெரியவர் விடை கொடுத்து அனுப்பி வைத்தார். சுவாமி தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.

இரவில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு வந்த சுவாமி மீண்டும் மகாபெரியவரைப் போய்ச்  சந்தித்தார். அந்தச்  செய்தி துணுக்கைக் கொடுத்தது பற்றி அவரிடம் கேட்டார். அப்போது மகாபெரியவர் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரஷ்யா நொறுங்கிவிடும். கம்யுனிசம் காலியாகிவிடும். அதனால் இப்போதே  நீ இந்தியாவுக்கு சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடனான தொடர்புகளை வளர்த்து விட வேண்டும் என்றார். சுவாமிக்கு சந்தேகம். என்ன இவர் இப்படி சொல்கிறாரே என மனதில் ஒரு கேள்வி எழுந்தது. அதை உணர்ந்த மகாபெரியவர் ‘என் பேச்சை கேட்டு அதன்படி நட’ என்றார்.  அப்போது இந்தியா இஸ்ரேலை கொஞ்சமும் ஆதரிக்கவில்லை.

1962இல் நடந்த இந்திய-சீனா போருக்கு பின்பு சீனாவுடனான உறவுகள் முறிந்து போயிருந்த நேரம் அது. 1977 இல் நடந்த விஷயம் இது. இந்த இரு பகை நாடுகளுடன் இந்தியா எப்படி புதிதாக உறவு வளர்ப்பது என்ற கேள்வி சுவாமியின் மனதுக்குள் எழுந்தது. மகா பெரியவர் மேலும் ஒரு வார்த்தை சொன்னார். ‘நீ பதவியின் பின்னால் போகாதே பதவி உன்னைத் தேடி வரும்’ என்றார். விதி விளையாடியது. மொரார்ஜி பிரதமர் ஆனார். சுவாமி எம் பி ஆனார். மொரார்ஜி சுவாமியை நிதி அமைச்சராக்க விரும்பினார் ஆனால் வாஜ்பேயி அவர் கட்சியின் தேசியச் செயலாளராக இருக்கட்டும். கட்சியை வளர்க்க வேண்டிய முக்கியப் பணி இன்று நம் முன் இருக்கிறது என்று சொல்லிவிட்டார். ஆனால் தினமும் அதிகாலை ஆறு மணிக்கே மொரார்ஜியும் சுவாமியும் சந்தித்து அன்றாட நாட்டு நடப்புகளை விவாதித்து வந்தனர். சுவாமி இந்தியாவும் சீனாவும் இஸ்ரேலும் நட்புறவுடன் விளங்க வேண்டும் எனறு சொன்ன  கருத்தை மொரார்ஜி ஏற்றுக்கொண்டார்.

சுவாமி சீன தூதரகத்துக்கு பேசி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அக்டோபர் முதலாம் நாள் நடக்கும் கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக சீனா சுவாமியை அழைத்தது. இவ்வாறாக இந்தோ சீனா நட்புறவுக்கான வாசல் சுவாமியால் திறக்கப்பட்டது. அடுத்தபடியாக மொரார்ஜி சுவாமியிடம்  அருணாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் எல்லைப் பகுதி பிரச்சனை குறித்து ஆலோசனை கேட்டார். சுவாமி பிரதமரிடம் ஊசுரி நதியில் உள்ள சென்பாவோதாவோ தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தால் சீனா நம்மிடம் இனி எல்லைத்  தகராறில் ஈடுபடாது என்றார். அந்த நேரத்தில் அங்கு ரஷ்யா தனது படைகளை அங்கு நிறுத்தி சீனாவுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வந்தது. சீனாவுக்கு அமெரிக்காவுடனும் நல்லுறவு இல்லை என்பதால் சீனா தவித்து கொண்டிருந்தது. ரஷ்யா இந்தோ சோவியத் ஒப்பந்தத்தைக் காட்டி இந்தியா சோவியத் நாட்டுக்கு ஆதரவாகத் தனது படைகளை சீனாவுக்கு எதிராக நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்திரா காந்தியிடம் கேட்டுக்கொண்டது. அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் சுவாமி அதை நாம் செய்ய வேண்டாம் என்று மொரார்ஜியிடம் சொல்லிவிட்டார். மொரார்ஜியும்  சம்மதித்தது சீனாவுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதி தர 1964க்குப் பிறகு முதன் முறையாக இந்தியாவில் இருந்து  அரசு விருந்தினராக சுவாமி சீனாவுக்கு சென்றார். அவர் அங்கு சென்றதன் விளைவு    அடுத்தபடியாக வாஜ்பேயி சீனாவுக்கு வரவழைக்கப்படுவதற்கு சாதகமாக அமைந்தது.  வாஜ்பேயி 1979 இல் சீனா சென்று திரும்பினார்.

இஸ்ரேலுடன் ஒரு வணிகக் குழு அமைத்த போது அத்தொடர்பு இந்துத்துவ முறையில் இருக்க வேண்டுமே தவிர ஆங்கில முறையில் இருக்க வேண்டாம் என சுவாமி முடிவு செய்தார். 1977இல் இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர் மோஷே தயான் அவர்களுடன் ஒரு ரகசிய சந்திப்பு நிகழ்த்தினார். 1982 இல் சுவாமியை இஸ்ரேலுக்கு அழைத்தனர்.  அவர் தன்னுடன் ஒரு பத்திரிகையாளர் குழுவையே அழைத்துச்  சென்றார். ஆனால் இஸ்ரேலால இங்கு மும்பையில் இருந்து டில்லி வரை இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு விசா கொடுக்க இயலவில்லை. உடனே சுவாமி தனது  இருப்பிடத்தையே தற்காலிக இஸ்ரேல் தூதரகமாக மாற்றினார் அங்கு இஸ்ரேல் கொடி பறந்தது. அங்கு தூதரக அதிகாரிகள் வந்து இருந்தனர். பத்திரிகையாளர்கள் அங்கு வந்து தங்களுக்குரிய  விசாவைப்  பெற்றுக்கொண்டனர். பின்னர் சுவாமியுடன் இஸ்ரேல் பயணித்தனர். அந்த ஒரே நாளில் அவர்கள் மனதில் சுவாமி பெரிய ஹீரோவாக உயர்ந்துவிட்டார்.

சங்கராச்சாரியாரும் சுவாமியும் வாழ்க்கை முழுக்க அரசியல் தான் பேசி வந்தனர். பெரியவர் சுவாமியிடம் அரசியல் மட்டுமே பேசுவார். எல் டி டி இ தலைவர் ,ஒரு சமயம், சுவாமியும் ராஜீவ் காந்தியும் கொல்லப்படுவர் என்று அறிவித்தார். அப்போது சுவாமி என்ன செய்வதென்று  அறியாமல் மகா பெரியவரிடம் போய் அறிவுரை கேட்டார். அதற்கு மகா பெரியவர் நீ என் அவனைக் கொல்லக் கூடாது? என்று கேட்டார். அப்போது விதி விளையாடியது. ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்ச பிரபாகரன் முல்லைத்தீவை விட்டு வெளியே வர இயலாதவாறு முடக்கிவிட்டார். சுவாமி அப்போது தனது நீண்ட கால நண்பரான மன்மோகன் சிங்கை ஒரு கலயாணத்தில் சந்தித்தார். மன்மோகன் சிங் சுவாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ஸ்ரீ லங்கா அரசு தன்  படைகளைக் கொண்டு பிராபகரனைப் பிடிக்க முன்னேறியது.

இராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் யாருக்கு அந்த இடம் உரியது என்பதைத்  தெரிவிப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம் என்றார். தான் எழுத்தில் கொடுத்திருக்கும் சமரசத் தீர்வை ஏற்றுக்கொள்வார்கள் என்றார். பின்னர் வெஸ்ட்மினிஸ்டரில் பேசும்போதும் அவருடைய மனுவில் குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயத்துக்கு பிரிட்டனில் நடந்த ஒரு விஷயம் ஆதாரமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

இந்தியப் பொருளாதாரத்தில் இரண்டு இலக்க வளர்ச்சி வருவதற்கு அதிகக் காலம் ஆகாது.  இரண்டு வாரம் மட்டுமே ஆகும் என்றார். அதற்கு, வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட வேண்டும், புதிய ருபாய் நோட்டுக்களை அச்சடித்துப் பணியாளருக்கு சம்பளம் கொடுக்கப் பயன்படுத்த  வேண்டும். விவசாயிகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார். இதை செய்துவிட்டால் மக்கள் உற்சாகமாகி விடுவார்கள் என்றார்.

வெஸ்ட் மினிஸ்டரில் பாப் பிளக்மேன் எம். பி. ஏற்பாடு செய்த கூட்டத்தில் சுவாமி பேசுகையில்  நெருக்கடி கால கட்டத்தில் தான் மறைந்து வாழ நேரிட்டபோது   இதே நாடாளுமன்றத்தில் தான் ஒளிந்து உட்கார்ந்திருந்ததை நினைவு கூர்ந்தார். அப்படி ஒளிந்து வாழ்ந்தவர் இன்று பெரிய சகாப்தமாகி விட்டார். அந்த மாபெரும் சகாப்தமாண சுவாமி  இப்போது பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரிட்டனும் இந்தியாவும் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் இணைந்து செயல்பட வேண்டும். என்றார்.  கடந்த 2௦௦ ஆண்டு கால முன்னேற்றமும் முதலீட்டாலும் உழைப்பினாலும் கிடைத்தது அல்ல. உருப்படியான கருத்துக்களால் கிடைத்ததே என்றார்.

Dr Swamy is shaking hands with UK Conservative MP Bob Blackman.

The person in the front is Pandit Satish Sharma
Dr Subramanian Swamy speaking at Edinburgh, Scotland

2 COMMENTS

  1. It is interesting to note Swamy’s interaction with Kanchi Periavar and I also wish him better success with China,so that two great civilisations can march hand in hand for the greater good of two people.

  2. இந்தியாவின் மிகவும் அறிவார்ந்த தலைவர் திரு சுப்ரமனின்ஸ்வாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here