அமித் ஷாவின் ‘மிஷன் காஷ்மீர்’ – உள்ளேயிருந்து ஒரு குரல் – அந்தர் கி பாத்

    அந்தர் கி பாத்தின் முதல் அத்தியாயத்தில் பத்திரிகை ஆசிரியைக்கு தலைவலி, ஃபட்நாவிசின்  செல்வாக்கு உயர்வு, அமித் ஷாவின் மிஷன் காஷ்மீர் என  இன்னும் பல

    0
    1507
    அந்தர் கி பாத்தின் முதல் அத்தியாயத்தில் பத்திரிகை ஆசிரியைக்கு தலைவலி, ஃபட்நாவிசின்  செல்வாக்கு உயர்வு, அமித் ஷாவின் மிஷன் காஷ்மீர் என  இன்னும் பல
    அந்தர் கி பாத்தின் முதல் அத்தியாயத்தில் பத்திரிகை ஆசிரியைக்கு தலைவலி, ஃபட்நாவிசின்  செல்வாக்கு உயர்வு, அமித் ஷாவின் மிஷன் காஷ்மீர் என  இன்னும் பல

    அந்தர் கி பாத் என்ற பெயரில் பல உண்மைகள் அடங்கிய ஒரு புதிய தொடர் வெளிவருகின்றது. இதன் மூலமாக இந்தியாவை இங்கே இருந்தும் வெளி நாட்டில் இருந்தும் அசைத்து பார்க்கும் சிலரைப் பற்றிய  குட்டி தகவல்கள் அவ்வப்போது உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

    காத்திருப்பீர், பார்த்திருப்பபீர்; படித்திடுவீர்;

    இதோ முதல் பகுதி

    சிக்கலில் சிக்கிய ஆசிரியர்

    ஒரு கேவலமான பத்திரிகை ஆசிரியை   இப்போது புலனாய்வு அமைப்புகளின் பிடியில் சிக்கியுள்ளார். அவர் இந்திய படைகள் பற்றி அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டார். காஷ்மீரில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருவோருக்கு  எதிராக இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கைகளால் இப்பெண் வேதனை அடைந்தார். இவர் ஒரு காலத்தில் இந்தியாவில் முடி சூடா மன்னனாக விளங்கிய தொழில் அதிபருக்கு  வேண்டப்பட்டவருக்கு நெருக்கமானவர். இவர் அந்த ‘மன்னருக்கு’ எதிராக அமலாக்கத் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ரகசியமாக அறிந்து வந்து சொல்லும்படி தனது நிருபர்களுக்குக் கட்டளை இட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இவர் இந்தப் பணிகளை செய்துவருகிறார். கட்சியில் மத பேதம்ற்ற கொள்கை பின்பற்றப்படுவதாக ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார்.

    இந்தப் பத்திரிகையின் பெண் மோகம் கொண்ட உரிமையாளர் காங்கிரசுடன் தொடர்ந்து பேசசச்சு வார்த்தை நடத்துவதற்கு இந்த பெண்ணே உதவியாக இருக்கிறார்.

    ஃபட்நாவிசின் கெட்டிக்காரத்தனம்

    முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பி ஜே பி கட்சியில் சேர வந்த போது ‘அமலாக்கத் துறையினரின் விசாரணையில் இருப்போர் பி ஜே பி யில் சேர இயலாது’ என்று சாமர்த்தியமாகத் தடுத்துவிட்டார். அந்த காங்கிரஸ்காரர் பி ஜே பி கட்சியில் சேர்ந்தால் தன மீது உள்ள ஹவாலா மோசடி மற்றும் கருப்பு பண மோசடி வழக்குகளில் நடவடிக்கை எடுத்துவரும் அமலாக்கத் துறையினரின் பிடியில் இருந்து தப்பிவிடலாம், மேலும் அடுத்த தேர்தலில் மகாராஷ்ட்டிராவில் போட்டியிட்டு வெற்றியும்  பெறலாம் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத் திட்டமிட்டார். ஆனால் ஃபட்நாவிஸ் டில்லியில் உள்ள பி ஜே பி தலைவர்களிடம் இவரைப் பற்றிய உண்மைகளைத்  தெரிவித்து இவரை  பி ஜே பி யில் சேர விடாமல் தடுத்துவிட்டார். உண்மையில் காங்கிரஸ் கட்சியின் இந்த ஊழல் தலைவர் பி ஜே பி கட்சிக்கு ஏராளமான கோடிகளை கட்சி நிதியாக அளிக்கவும் முடிவெடுத்திருந்தார்.

    அமித் ஷா மோடியின் ஆள்

    குறுகிய காலத்தில் உள்துறை அமைச்சராக அமித் ஷா செயல்படும் விதத்தைப் பார்த்து அரசியல் நோக்கர்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த சிறப்பு தூதுவர்களும் நிருபர்களும் வெளிநாட்டுத் தலைவர்களும் வியப்படைந்துள்ளனர். அமித் ஷா உள்துறை அமைச்சர் ஆகும்வரை அவரை ஒரு மாநில அமைச்சர் என்ற அளவிலேயே மக்கள் கருதி வந்தனர் அவருடைய அனுபவங்களும் அவ்வளவே என்று தான் நினைத்திருந்தனர். ஆனால் அவர் உள்துறை அமைச்சகத்தில் செயல்படும் விதத்தை கண்டு என்று பலரும் பாராட்டுகின்றனர். மற்றவர்கள் கூறுவதை அவர் கவனமாக கேட்கின்றார். காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார் அனைவரையும் அரவணைத்து பணிகளை விரைவாக செய்து வாங்குகின்றார். புலனாய்வு அமைப்புகள் தன்னிடம் நேரடியாக வந்து தினந்தோறும் அறிக்கையிட வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இவர் சட்டப்பிரிவு 370 நீக்கவும் 35 Aயை மாற்றியமைக்கவும் எடுத்துவரும் முயற்சிகள் இன்னும் நீண்ட காலத்துக்கு பேசப்படும். பாராட்டப்படும் பிரதமர் மோடி அரசியலிலும் நிர்வாகத்திலும் அதிக அளவுக்கு நம்பக்கூடிய நம்பகமான மனிதர் இவர் ஒருவர் மட்டுமே. தொலைநோக்கு உடைய செயல் திறனுடைய ஒரு மாமனிதர் அமித்ஷா.

    இம்ரான் கான் ‘அவுட்’

    இம்ரான் கான் வாஷிங்க்டன் நகரில் இருந்த போது கொடுத்த பேட்டி பாகிஸ்தான் ராணுவத்துக்கு  ஆத்திரத்தை  ஊட்டியுள்ளது. இராணுவத்தின் உதவியுடன் சுமார் நாற்பதாயிரம் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டது பாஜ்வா வழக்கறிஞர் குழுவை மிகுந்த தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி விட்டது. தீவிரவாதங்களின் மூளையாக செயல்படும் ஹஃபிஸ் சையதுவை குறி வைப்பது சன்னி தலைவர்களுக்கு கோபம் ஊட்டியுள்ளது. அகமதியா பிரிவினைச்  சேர்ந்தவரான பாஜ்வா, சன்னி பிரிவை சேர்ந்த தலைவர்களுடன் அருமையான நட்புறவு வைத்திருந்தார்.  ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னைகளைப் பற்றி பேசியதில் இம்ரான் கான் மீது தலிபான்களும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவமும் ஐ எஸ் ஐ அமைப்பும் இம்ரான் கானை ஓரங்கட்ட நினைப்பது சாத்தியமே. அல்லது இம்ரான் கானே ஒதுங்கி விடுவாரா?

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here