புத்தக சுருக்கம்
புத்தகத்தின் பெயர்: அழகிய மரம்: 18ஆம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி
புத்தக ஆசிரியர்: காந்தியவாதி திரு தரம்பால் (1983)
தமிழில் மொழிப்பெயர்ததவர்: திரு பீ. ஆர். மகாதேவன் (2016)
வெளியீடு: தமிழினி, 67 பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600014
பக்கங்கள் – 520, விலை 450/-
கவனிக்க: இந்த நூலும் அதன் மூலமுமான ஆங்கிலேய அரசின் கணக்கெடுப்பை இந்நூல் ஆசிரியர் 1983ல் ஆங்கிலத்தில் வெளியிட்டார். ஆனால் இதை இன்று வரை உங்களிடம் மிக சாமர்த்தியமாக மறைத்துள்ளார்கள் காங்கிரஸ், திராவிட கழகங்கள், கம்யுனிஸ்ட் நக்சல் மற்றும் அனைத்து இடதுசாரி திருடர்கள். ஏன்? நீங்களே அவர்களிடம் கேளுங்கள்[1].
பிறப்பால் சாதி என்பது உருவாக்கப்பட்டது கிறிஸ்தவ வெள்ளைக்கார ஆட்சி காலத்தில் தான் என்று கணக்கு ரீதியாக நாம் முன்னதொரு கட்டுரையில் பார்த்தோம். அதற்கு முன் தகுதி அடிப்படையில் மட்டுமே வர்ணம் இருந்தது என்று அந்த கணக்கு நிருபணம் செய்தது. ஒன்றும் ஒன்றும் இரண்டு தான், அது ஒன்றரையோ மூன்றோ ஆகயிலாது. ஆகையால் கணக்கை மறுக்கவும் இயலாது[2].
அப்படி கிறிஸ்தவ வெள்ளையர்களால் உருவான பிறப்பால் சாதியில் ஏற்றத்தாழ்வு (மேல் சாதியென்றும் கீழ் சாதியென்றும், குறிப்பாக தீண்டத்தகாதவர்கள் என்றும்) என்று உருவானதும் அவர்கள் ஆட்சியின் விளைவே. சுற்றிவளைத்து பேசாமல் உள்ளதை உள்ளப்படி சொன்னால் இது அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியே.
இதற்கு மறுக்க முடியாத ஆதாரம் கிறிஸ்தவ ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தைய கணக்கெடுப்புகளே. அவர்களே அவர்களுக்கு எதிராக எதிர் ஆதாரமாக பொய் கணக்கு எழுதுவார்களா? இல்லை. ஆகையால் அதைப்பற்றி இப்பொழுது சுருக்கமாக பார்ப்போம்.
இந்த கணக்கெடுப்புகள் எல்லாம் கிறிஸ்தவ ஆங்கிலேயர் இந்தியாவில் ஆங்கில கல்வி முறையை கட்டாயம் ஆக்கியதற்க்கு சில வருடங்களுக்கு முன்புதான் நடத்தப்பட்டுள்ளன. அதாவது 1822 முதல் 1837 வரை. ஆங்கிலேய கல்வி முறை சட்டம் ஏற்றி திணிக்கப்பட்ட வருடம் 1835. ஆங்கிலேய கல்வி முறை வரும் வரை நாடு முழுவதும் பிராமணர்களும், சூத்திரர்களும், மற்றும் பிற அனைத்து சாதியினரும் சாதி அல்லாதவரும் ஒருவரை ஒருவர் தீண்டாமையின்றி தீண்டாமை என்று ஒன்றை அறியாமலே ஒன்றாக அமர்ந்து பாடம் பயின்றுள்ளார்கள். அதிலும் பள்ளிகளில் சூத்திரர்களும் இன்று தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்படும் “பிற சாதிகளே” அதிகம் எண்ணிக்கையில் இருந்திருக்கின்றனர். ஆகையால் இந்து கல்வி முறையை அழித்து ஆங்கில கல்வி முறை வந்த பின்பே சாதி ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் சமுதாயத்தில் பிறந்துள்ளன என்று திட்டவட்டமாக தெரியவருகிறது.
இவ்விளக்கப் படங்களை காண்க (இதில் தென்னிந்தியா மட்டுமே காட்டப்பட்டுள்ளது. அழகிய மரம் புத்தகத்தில் அனைத்திந்திய கணக்கு விபரங்கள் உள்ளன).
இந்து பாரம்பரிய பள்ளிகளில் 1822–25 ஆகிய ஆண்டுகளில் கிறிஸ்தவ ஆங்கிலேய வெள்ளைக்கார அரசின் கணக்கெடுப்பில் சூத்திரர் தீண்டத்தகாதவர் (பிற சாதியினர்) என்று கூறப்படும் மாணவர்களின் எண்ணிக்கை:
(இந்தக் கட்டுரையை திருத்தங்கள் மீளாய்வு செய்ததற்கு திரு கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு நன்றி!)
மேலும் விவரங்களுக்கு:
[1] அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி – Jun 14, 2018, TamilHindu.com
[2] சாதி – கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு? – May 19, 2017, PGurus.com