5000 கோடி ரூபாய் வங்கி ஊழல் பற்றி புலனாய்வு செய்து வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் ஸ்டெர்லிங் பயோ டெக் மற்றும் சந்தேசாரா குழுமத்திடம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அகமது படேலிடம் நேரடியாக பணம் கொடுத்த விவரத்தை கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் ஏற்கனவே பிடிபட்ட ஜானி என்ற ரஞ்சித் மாலிக் இந்த உண்மைகளை ஒரு கடிதம் வாயிலாக அம்பலப்படுத்தி விட்டார். இவர் இப்போது அகமத் படேலுக்கு Rs.25 லட்சம் வாங்கிக் கொடுத்த வழக்கில் அமலாக்கத்துறையினரின் விசாரணையில் இருக்கின்றார். அமலாக்கத்துறையினர் விசாரணை நீதிமன்றத்தில் ஜானி மீது வழக்கு பதிவு செய்து இவரைக் கைது செய்து தங்கள் பொறுப்பில் வைத்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் மதர் தெரசா கிரசன்ட் தெருவில் உள்ள 23ஆம் நம்பர் என்னுடைய அகமத் படேலின் வீட்டில் ராகேஷ் சந்திரா என்பவர் மூலமாக 25 லட்ச ரூபாய் பணம் கொடுத்து அனுப்பப்பட்டது என்ற தகவலை ஜானி அதிகாரிகளிடம் விசாரனையின் போது தெரிவித்தார்.
இந்த ஊழல் வழக்கில் அகமது படேலின் மருமகனின் பங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமான வரி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவரம் ஏற்கனவே நமது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. வதோதரா விடமிருந்து கைப்பற்றப்பட்ட 17 ஆம் எண்ணுள்ள தேடு பொருளான டைரி ஒன்றில் 25 -2- 2011 அன்று டாக்டர் சுபாஷ் சந்திரா என்பவருக்கு 75 லட்சம் அவரது வங்கிக் கணக்கில் வைப்பு தொகையாக போடப்பட்ட தகவல் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னொருவர் மூலமாக இர்பான் பாய்க்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதும் அந்த டைரியில் பதினோராம் பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வதோதரா என்ற தலைப்பின் கீழ் “ஷோகீன் ப்ரோப்”[டெல்லி ஃபார்ம் ஹவுஸ்] என்ற பெயரின் கீழ் இன்னுமொருவருக்கு இருபத்தஞ்சு லட்சத்துக்கான தொகை கொடுக்கப்பட்டதும் குறிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சுபாஷ் சந்திரா என்பவர் ககன் தவானுக்கு 2-4-2011 அன்று 30 லட்சம் ரூபாய் கொடுத்தாக டைரிக் குறிப்பு தெரிவிக்கின்றது. பின்பு அந்த பணத்தை ககன் தவான் ஷோகீன்பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெரின் ஷோகீனிடம் கொடுத்துவிட்டார். இத தகவல்கள் அந்த டைரியில் இடம்பெற்றுள்ளன. இந்த கொடுக்கல் வாங்கல் கணக்கு தொடர்பாகவும் புலனாய்வு விசாரணைகள் நடந்து வருகின்றன.
அஹமத் படேலின் மருமகனான இர்பான் பாய் என்று அழைக்கப்படும் இர்பான் சித்திக் அவர் மகள் மும்தாஜ் கணவர் ஆவார். இவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த ககன் தைவானை சி பி ஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அமலாக்கத் துறையினரால் கருப்புப் பண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுனில் யாதவ் சந்தேசாரா குழுமத்தில் வேலை பார்த்தவர். அவர் அஹ்மத் பட்டேலின் மகன் ஃபைசல் பட்டேலுக்கும் அவர் மருமகன் இர்ஃபான் சித்திக்கும் பணத்தை கொடுத்து வாங்குவதில் நேரடித் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஃபைசல் பட்டேலின் கார் ஓட்டுனரிடம் சேத்தன் சந்தேசாரா சார்பாக தான் பணத்தை கொடுத்ததாகவும் அதை அவர்களின் மகன் ஃபைசலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தான் தெரிவித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். யாதவின் கடிதத்தில் ஸ்டெர்லிங் குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சேத்தன் கருப்புப் பணம் கை மாற்றுவதில் ஈடுபட்டிருந்ததால் அடிக்கடி புதுடெல்லியில் உள்ள படேலின் வீட்டிற்கு செல்வார்.அகமத் படேலின் வேட்டை அக்குழுமத்தினர் ஹெட் க்வார்டர்ஸ் 23 என்று குறிப்பிடுவது வழக்கம் இத்தகவலையும் ஜானி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஃபைசல் பட்டேலை ஜே-1 என்றும் சித்திக்கை ஜே-2 என்றும் சந்தேசாரா குடும்பம் குறிப்பிடும் என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது சந்தேசாரா குழுமம் இரண்டு சி பி ஐ வழக்குகளில் சிக்கியுள்ளது. ஒன்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு. இரண்டாவது வங்கியில் 5000 கோடி மோசடி செய்த வழக்கு. குஜராத்தில் உள்ள இந்த ஸ்டெர்லிங் பயோ டெக் மற்றும் சந்தேசாரா குழுமத்தின் 4,800 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் தங்கள் வழக்கில் இணைத்துள்ளனர்.
சந்தேசாரா குழுமம் மற்றும் ஸ்டெர்லிங் பயோ டெக் நிறுவனத்தினர் குஜராத்தில் உள்ள ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் ஒரு வழக்கில் சிக்கி உள்ளனர். வழக்கில் சிக்கிய ஸ்டெர்லிங் டயரியில் பல உயர் அதிகாரிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. சி பி ஐ யின் சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானா என்பவர் 2011இல் இந்த குடும்பத்தினரிடமிருந்து 3.8 கோடி லஞ்சம் பெற்றதாக ஒரு வழக்கில் சிக்கியுள்ளார். அவர் அப்போது சூரத்தில் காவல் துறை ஆணையராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மகன் அங்குஷ் அஸ்தானா இந்த ஸ்டெர்லிங் சந்திரா குடும்பத்தின் மூத்த அதிகாரி ஆவார். அஸ்தானாவின் மகள் திருமணம் இந்த நிறுவனத்தின் பண்ணை வீட்டில் மிக ஆடம்பரமாக நடந்தது.