ஏர்செல் மேக்சிஸ் ஊழல் பற்றி விசாரிக்க அனுமதி தாமதம் குற்றம் சுமத்தப்பட்ட ப. சிதம்பரம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை மிரட்டுகிறாரா?

ஜேட்லியின் பிள்ளைகளின் வங்கி கணக்கை அம்பலப்படுத்தி விடுவதாக ப. சிதம்பரம் மிரட்டுகிறாரா?

0
1980
ஜேட்லியின் பிள்ளைகளின் வங்கி கணக்கை அம்பலப்படுத்தி விடுவதாக ப. சிதம்பரம் மிரட்டுகிறாரா?ஜேட்லியின் பிள்ளைகளின் வங்கி கணக்கை அம்பலப்படுத்தி விடுவதாக ப. சிதம்பரம் மிரட்டுகிறாரா?
ஜேட்லியின் பிள்ளைகளின் வங்கி கணக்கை அம்பலப்படுத்தி விடுவதாக ப. சிதம்பரம் மிரட்டுகிறாரா?

கடந்த நான்கு மாதங்களாக சி பி ஐ ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் ப சிதம்பரத்துடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற காத்திருக்கிறது. இன்னும் கிடைக்கவில்லை. இந்த ஏர்செல் மேக்சிஸ் ஊழல் குறித்து போன ஜூலை மாதம் பத்தொன்பதாம் தேதி சி பி ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. அந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே இந்த ஊழலில் ப சிதம்பரத்தொடு இணைந்து செயல்பட்ட நிதி துறை செயலர்களான நான்கு ஐ ஏ எஸ் அதிகாரிகள மீது நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சகத்திடம் சி பி ஐ அனுமதி கேட்டிருந்தது. நிதி அமைச்சகம் அனுமதி வழங்க விடாமல்  ப. சிதம்பரம் நிதி அமைச்சர் ஜேட்லியை மிரட்டி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரது மிரட்டலுக்கு பயந்து ஜெட்லி அனுமதி வழங்காததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஜெட்லியில் மகன் ரோகன்  மகள் சோனாலி மருமகன் ஜெயேஷ்  ஆகியோருக்கு  கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து கோடி கோடியாக பணம் இவர்களின் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படுகின்றது, இதன் ரகசியத்தை வெளியுலகுக்கு சொல்லிவிடுவதாக ப சிதம்பரம் ஜேட்லியை மிரட்டி வருகிறார்.

ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் குற்ற செயல்களில் இணைந்து செயல்பட்ட நிதி அமைச்சக செயலர்கள் நால்வர் யார்?

நிதி அமைச்சகத்திலும் வருமானவரி துறையிலும்  இருக்கும் உயர் அதிகாரிகள் ப சிதம்பரத்துக்காக தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இப்போது ரத்தக் கண்ணீர் சிந்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தற்போதைய நிதி அமைச்சர் ஜேட்லி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காததே ஆகும். உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பர். மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் நேரம் இருந்திருக்காது. அவர்களிடம் ஜெட்லி இரக்கம் காட்டியதால் அவர்கள் வரம் கொடுத்த சிவனின் தலையில் கை வைத்த கதையாக இவரையே இப்போது மிரட்டுகின்றனர்.

2017  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீரவ் மோடி மற்றும் மேகுள் சொக்சி நிறுவனங்களில் வருமான வரி துறையினரும் வருவாய் புலனாய்வு இயக்குனரகமும் சோதனை நடத்தின. அப்போது ஜேட்லியின் மகள், மருமகன் கணக்குகளில் ஏராளமான பணம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இந்த தகவலை நிதித்துறையின் சில புல்லுருவிகள் ப சிதம்பரத்துக்கு ரகசியமாக அனுப்பிவிட்டனர்.  2011இல் இருந்து ஜேட்லியின் மகன், மகள், மருமகனின் வருமானம் பற்றிய தகவல் உட்பட இவர்களை பற்றிய அனைத்து தகவல்களையும் சில  அதிகாரிகள் ரகசியமாக தங்களின் முன்னாள் முதலாளியான ப. சிதம்பரத்துக்கு அனுப்பிவிட்டனர். இந்த ஆவணங்கள் ஜேட்லியின் பிள்ளைகள் கணக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து கோடிக்கணக்கான பணம் பரிவர்த்தனை செய்திருப்பதை தெளிவாக காட்டுகின்றன.  நீதிமன்றத்துக்கு அதிகமாக வராத இந்த இவர்கள் வங்கிக் கணக்கில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் இவ்வளவு அதிகமான பணத்தை செலுத்த வேண்டும் என்ற வினா எழுகின்றது.

சில வாரங்களுக்கு முன்பு வங்கி கடனை செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிப்போன மேகுள் சொக்சியின் நிறுவனத்தில் இருந்து ஜேட்லியின் பிள்ளைகளின் வங்கி கணக்கில் ஏராளமான பணம் செலுத்தப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ப. சிதம்பரம் ஜேட்லிக்கு தரும் ரகசிய எச்சரிக்கை  இது. சில மாதங்களுக்கு முன்பு இந்த மாதிரி ஒரு வங்கி கணக்கு குறித்து ப சிதம்பரம் ஊடகங்களுக்கு ஒரு ரகசிய செய்தியை கசியவிட்டார். அவர்களிடம்  நீங்கள் இது குறித்து ஜெட்லியிடம் கேளுங்கள் என்றார். ஜெட்லி மிகவும் பாடுபட்டு ஊடகங்களின் வாயை மூடி வைத்தார். ஊடகங்கள் தன ரகசியத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு தராத காரணத்தால் ப சிதம்பரம் இன்னொரு வழிமுறையை கையாண்டார். மேகுள் சொக்சியின் கணக்கில் இருந்து ஜெட்லியின் மகள் சோனாலியின் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தெளிவாக்கும்படி காங்கிரஸ் கட்சியிடம் சவால் விடுத்தார். இந்த சவால் அவர் ஜெட்லிக்கு விட்ட சவால் தான் ‘’நீங்கள்  என் விஷயத்தில் நடவடிக்கை எடுத்தால் நான் உங்கள் பிள்ளைகளின் வங்கி கணக்குகளை கிளறி ஒடி போனவர்களுக்கு உறுதுணையாக அவர்கள் இருக்கின்றனர் என்பதை உறுதி செய்வேன்’’ என்று சொல்லாமல் சொன்னார்.  இந்த மிரட்டலுக்கு அடி பணிந்து ஜெட்லி ப சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றார் என்று கருத வேண்டியுள்ளது,. இல்லையென்றால் ஏன் ஜெட்லி சி பி ஐ அனுமதி கேட்டு நான்கு மாதங்களாகியும் இது வரை அனுமதி வழங்காமல் இருந்தார். சி பி ஐ அதிகாரிகள் ஜுலை மாதம் பன்னிரெண்டாம் தேதி அனுமதி கேட்டனர். சி பி ஐ அதிகாரிகள் அனுமதி கேட்டால் பொதுவாக ஓரிரு நாட்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும். இந்த முறை நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.

யார் அந்த நான்கு பேர்?

ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் குற்ற செயல்களில் இணைந்து செயல்பட்ட நிதி அமைச்சக செயலர்கள் நால்வர் யார்?

  • முன்னாள் நிதி துறை செயலர் அசோக் ஜா
  • முன்னாள் நிதி துறை செயலர் அசோக் சாவ்லா, இவர் தற்போது தேசிய பங்கு சந்தையின் தலைவர்.
  • குமார் சஞ்சய் கிருஷ்ணன் அஸ்ஸாம் பணிப் பிரிவை சேர்ந்தவர்
  • தீபக் குமார் சிங் பிஹார் பணிப் பிரிவை சேர்ந்தவர்.

2ஜி நீதிமனறத்தில் போன முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது நீபதி ஓ சைனி இந்த நான்கு ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு நிதி அமைச்சகம்  இன்னும் அனுமதி வழங்காதது ஏன் என்று கடுமையாக கேட்டார்.  வரும்  இருபத்தாறாம் தேதிக்குள் அனுமதி பெற்று விசாரணை தொடங்கவில்லை என்றால் தானே அது குறித்து உத்தரவிடப் போவதாகவும் தெரிவித்தார்.

நான்கு ஐ ஏ எஸ் அதிகாரிகல் மீதும் வழக்கு தொடர  அனுமதி வழங்குவது கால தாமதமானால் முக்கிய குற்றவாளியான ப சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் நீரத்துப்  போக வாய்ப்புண்டு.  இது அமலாக்கத் துறையினரின் குற்றப் பத்திரிகையின் சாரத்தை குறைத்துவிடும். சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையினர் ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் தடுத்துவிடும். இவை அனைத்துக்கும் ஜெட்லி தான் பொறுப்பேற்க வேண்டும். இவர்  தனக்கு மிகவும்  நெருக்கமானவரான ப சிதம்பரத்துக்கு ஆதரவாக நடந்துகொள்வதால் வழக்குகள் சாரமற்று போகின்றன. உண்மையான குற்றவாளிகளை பிடித்து தண்டிக்க முடியவில்லை.

இந்த நிலையிலாவது  பிரதமர் அலுவலகம் தலையிட்டு குற்றவாளிகளை தண்டிக்க அவர்கள் மீது வழக்கு விசாரணை நடத்த வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டு நிதி அமைச்சகம் உடனடியாக அந்த நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கும்படி வலியுறுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here