பொது சிவில் சட்டம் இப்போதைக்கு இல்லை

முஸ்லிம் சமுதாயத்தில் சீர்திருத்தத்துக்கு எதிராக நிற்பவர்கள் தங்கள் போராட்டத்தில் தோல்வியை காணப் போகிறார்கள்

0
2485
பொது சிவில் சட்டம் இப்போதைக்கு இல்லை
பொது சிவில் சட்டம் இப்போதைக்கு இல்லை

இந்திய அரசியல் உரிமைச் சட்ட விதி  44 இந்திய நிலப்பகுதி முழுமைக்குமான பொது சிவில் சட்டத்தை குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரலாம் என்று தெரிவிக்கின்றது.

முஸ்லிம் சமுதாயத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பாலின பாகுபாட்டுக்கு எதிரான எதிர்ப்புக் குரல் இப்போது  உரக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இக்குரல்தன உரிமைக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

அனைத்திந்திய முஸ்லிம் தனி மனித சட்ட வாரியம் [AIMPLB] இந்தியாவின் சட்ட ஆணையம் இன்றைய காலகட்டத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர இயலாது என்று தெரிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.  முஸ்லிம் சமுதாயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம நீதி வழங்கப்பட வேண்டும் அதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கருத்தில் தற்போதுள்ள அநீதியான சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளதரகு முழலும் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் . முஸ்லிம்களுக்கான தனி சட்டத்தில் இருக்கும் பாகுபாடுகளை அகற்ற உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த வாரியம் முனைந்துள்ளது.

இந்திய சட்ட ஆணையம் முஸ்லிம்களின் தனி சட்டங்களில் மாற்றம் கொண்டு வருவதோடு வேறு பல பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. மதங்களுக்கிடையேயான திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு திருமணச் சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர பரிந்துரைக்கின்றது. ஆண்களுக்கான திருமண வயதை 18 ஆக குறைக்க பரிந்துரைத்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் சேர்த்த சொத்தில் பங்கு தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வரவும் பரிந்துரைக்கின்றது. இந்த பரிந்துரைகள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு முஸ்லிம் தனிநபர்  சட்டத்தில் கொண்டுவர முயலும் மாற்றங்களைப் பற்றி மட்டுமே அனைவரும் விவாதித்து கொண்டே இருப்பார்

இந்து சமுதாயம் இந்த பரிந்துரைகள் பற்றி பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளாது. ஏனெனில் சட்டத்தில் கொண்டு வந்த பல சீர்திருத்தங்கலை இந்து  சமுதாயம் தொடர்ந்து  ஏற்றுக் கொண்டுள்ளது.1950களில் இந்து  சட்டம் உருவாக்கப்பட்டபோது உயர் மட்டத்தில் இருந்த சிலர் மட்டுமே மத அடிப்படையில் இதற்கான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.பொதுச் சட்டங்களை வகுத்த போதும்  தனிநபர்  சட்டங்களை தொகுத்தபோதும்  அரசியல் உரிமை சட்ட நிபுணர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அவர்கள் முஸ்லிம் சட்டங்களை தொகுத்தபோது மேற்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் பொது சிவில் சட்டம் உருவாகாதபடி முஸ்லிம் சட்டங்களை Directive Principles of State Policy எனத்தனியாக புகுத்திவிட்டனர். 44வது பிரிவு இந்திய நிலப்பகுதி முழுமைக்குமான பொது சிவில் சட்டத்தை குடி மக்களின் பாதுகாப்புக்காக கொண்டு அரசு கொண்டுவரலாம் என்று தெரிவிக்கிறது (ஆனால் இதுவரை கொண்டு வரவில்லை).

ஆனால் முஸ்லிம் மக்கள் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த சட்டப்பிரிவின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து அதனைத் துணிச்சலோடு மக்களிடம் எடுத்துச் சொல்லி பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர நம்முடைய சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  கட்சி சார்ந்த அரசியல்வாதிகள் இந்தியா சுதந்திரம் பெற்று பல பத்தாண்டுகள் ஆகியும் முன்வரவில்லை. இந்த நிலையில் முஸ்லிம் சமுதாயத்தில் பாலின பாகுபாதடை அகற்ற வேண்டும் என்று நினைக்கும் சமூக சீர்திருத்தவாதிகள் தமது வாதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பெண்களுக்கு எதிராக இதுவரை இருந்து வந்த அநீதியை பாதுகாத்து வந்த மக்கள் இப்போது உரிமை குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

அண்மையில் உச்ச நீதிமன்றம் முஸ்லிம் பெண்களுக்குஎதிராக உள்ள  முத்தலாக் திருமணம் விவாகரத்து முறையை நீக்கிவிட்டு சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெறக்கூடிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்தியாவில் விவாகரத்து சட்டம் என்பது அனைத்துப் பெண்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று இத்தீர்ப்பு எடுத்துரைக்கிறது. எனவே முத்தலாக் முறையை ஒழித்துவிட்டு பெண்களுக்கான சட்டம் சார்ந்த விவாகரத்து முறையை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு உள்ள கடமை என்பதை  உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டுகிறது.

நிதிமன்றத்தில் நிக்காஹ் ஹலாலா அல்லது  பலதார மணம் சட்டம் போன்ற வழக்குகள் குவிந்துள்ளது திருமண சீர்திருத்த சட்டங்களுக்கு எதிரானவர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. [ஜமாத்துக்கு கட்டுப்பட விரும்பாத பலர் இன்று ப நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்].  முத்தலாக் சட்டத்தை போலவே பல பெண்களை மணந்து கொள்ளும் பலதாரமணம் சட்டமும் சமயத்தின் [பெயரால் முஸ்லிம்களின் தனிநபர் சட்டங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மதகுருமார்கள் இச் சட்டங்களை மதத்தின் பேரால் ஆதரிக்கின்றனர்.பெண்களை எளிதாக  விவாகரத்து செய்யு உதவும்  முத்தலாக் சட்டமும் பல பெண்களை எளிதாக திருமணம் செய்ய உதவும் பலதாரமணச்  சட்டமும் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் பலத்த அடி வாங்கின.

சட்டங்களில் சீர்திருத்தம் கூடாது என்று சமயத்தை காரணம் காட்டி பேசி வருகின்றவர்களுக்கு முஸ்லிம் மக்களிடையே எழுந்து வரும் எதிர்ப்புகள்  ஒரு சவாலாக அமைந்து விட்டன.அதனால் விரைவில் முஸ்லிம் சமுதாயத்திற்கான தனிநபர் சட்டங்களில் மாற்றம் நிகழலாம் அல்லது பலதார மணம் சட்டம் மற்றும் முத்தலாக் எனப்படும் பெண்களுக்கான விவாகரத்து சட்டங்கள் உடனடியாக நீக்கப்படலாம்.

மூன்றாவதாக சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக நிற்பவர்கள் சந்திக்கும் சவால்கள் முதல் இரட்டின் தொடர்ச்சியே ஆகும். அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் பல பத்தாண்டுகளாக இந்திய அரசியல் உரிமை சட்டத்தை பாதுகாக்கும் வகையில் முஸ்லீம் தனி நபர் சட்டத்தில் நிறைவேற்றி வருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறது. இந்திய அரசியல் உரிமைச் சட்டம் உறுதி செய்கின்ற ஆண் பெண் சமத்துவம்அனைத்து முஸ்லிம் தனிநபர் சட்டங்களை விடப் பாதுகாப்பானது  என்பதுதான் நடைமுறை யதார்த்தம். இதனால் முஸ்லிம் பெண் உரிமை ஆர்வலர்கள் எல்லாவகையிலும் முழு சமத்துவத்திற்கான சம உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இன்று அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் மதகுருக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முஸ்லிம் பெண்ணுரிமைக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.  அரசியல் களத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் கூட இந்த விஷயத்தில் சமய குருமார் போலவே சிந்திக்கின்றனர்.

இந்தியச்  சட்ட ஆணையம் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர இயலாது என்பதை வெளிப்படுத்தி இருந்தாலும் சில சட்டங்கள் நீர்த்துப் போகும் போது முஸ்லிம் தனிமனித சட்டமும் தனது இறுக்கத்தில் இருந்து விடுபடும் என்று தெரிவித்துள்ளது. இதை சரியாகப் புரிந்துகொள்ளாத இப்போது பொது சிச்வில் சட்டம் வராது என்பதை மட்டுமே  தங்களுக்கு சாதகமானதாகப் புரிந்து கொண்ட முஸ்லிம் தலைவர்கள் தங்கள் சமுதாயத்தில் தங்களுடைய செல்வாக்கு உயர்ந்திருப்பதாக கருதுகின்றனர்..  இப்போதைக்கு பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் சூழ்நிலை இல்லை என்றாலும் பல சீர்திருத்தங்களை சட்டரீதியாக கொண்டு வரலாம் என்றஇந்திய சட்ட ஆணையத்தின்  பரிந்துரை முஸ்லிம் சமயவாதிகளுக்கு வெறுப்பை ஊட்டியுள்ளது பெருவாரியான முஸ்லிம்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எதிராக பொது சிவில் சட்டம் கொண்டு வரக் கூடாது அதற்கான சூழ்நிலை மக்கள் மனமாற்றம் இன்னும் உருவாகவில்லை என்று தான்  இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

[ஒரு பெண்ணை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகாமல் அவள் பக்கத்தில் நியாயங்களை எடுத்துரைக்க வாய்ப்பளிக்காமல் அவளைப் பார்த்து அவள் கணவன் தலாக் என்று மூன்று முறை சொல்வது அவளுக்கு விவாகரத்து அளித்து விட்டதாகவும் என்பதை பொதுவாக சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோல ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்வதையும் பெண்களுக்கான சம உரிமை இல்லாமல் இருப்பதையும் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்படுவது முஸ்லிம் பெண்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மொத்த முஸ்லிம் சமுதாயம் தங்கள் சட்டத்தில் கொண்டு வரும் நல்ல மாற்றத்தை கூட தங்கள் மீதான சமய அடக்குமுறை எனத் தவறாகக் கருதுகிறது.]

இந்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரைப்படி இப்போதைக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவர படமாட்டாது.ஆணையத்தின் பரிந்துரையை மீறி மத்திய அரசு அதைக்  கொண்டு வந்தாலும் மக்களவையில் கிடைக்கும் ஆதரவு மாநில அவையில் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் முன்வைத்து உறுப்பினர்களின் ஆதரவை பெற இயலாது. எனவே இச்சூழ்நிலையில் இந்திய சட்ட ஆணையம் கூறிய பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு பொது சிவில் சட்டம் பற்றி எதுவும் விவாதிக்காமல் இருப்பதே .

முஸ்லிம் தனிநபர் சட்டங்களில் காணப்படும் பாலின பாகுபாடு அடக்குமுறையை ஏற்றத்தாழ்வையும் மெல்ல மெல்ல படிப்படியாக எடுத்துக்காட்டி  பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கான சூழ்நிலையை உருவாக்கி முஸ்லிம் சமுதாயத்தினரின் ஆதரவைப் பெறலாம். இதற்கு நீதிமன்றமும் மக்கள் மன்றமும் ஒத்துழைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here