தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல என்று தேசீய நிலத்தடி நீர் குழுமம் (Central Ground Water Board) அளித்த ஆய்வறிக்கைக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
தமிழக அரசு மாசு கட்டுபாட்டு வாரியம் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைதான் தூத்துக்குடி மக்களின் உடல் நல பாதிப்பிற்கும், பாதுகாப்பிற்கும் மிகவும் அச்சுறுத்தலாயிருக்கிறது என்று ஆய்வறிக்கை சமர்பித்துள்ள நிலையில் மத்திய அரசு நிறுவனத்தின் ஆய்வறிக்கைக்கு அவசியம் என்ன என்பதே தமிழக அரசின் கேள்வி.
மத்திய அரசின் நிறுவனங்கள் நாடெங்கிலும் பலவிதமான சுற்றுப்புற சூழல் விவகாரங்கள், நதிகள், நீர்நிலை, அணைகள், மலைப்பிரதேசங்கள், கடல் நீர், நிலத்தடி நீர் போன்ற விவரங்களை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்வது ஒரு வழக்கமான நடவடிக்கை. மத்திய அரசின் திட்டங்களை வகுக்ககவும், நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான அணுகுமுறைகளை தீர்மானிப்பதற்கும் இத்தகைய ஆய்வு பணிகள் மிகவும் அவசியம். பல உலகநாடுகளுடன், இத்தகைய இயற்கை சூழ்நிலைகளை குறித்து புள்ளிவிவரங்களை பகிர்ந்துகொள்வதும் மிகவும் அவசியம். உலகளாவிய கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் ஐக்கியநாடு சபை தீர்மானிப்பதற்கும்,இத்தகைய புள்ளிவிவரங்களை ஐக்கிய நாடு சபை கோரும்போது அவற்றை தர வேண்டியது ஒவ்வொரு நாட்டின் தவிர்க்க முடியாதகடமையாகும்.
சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்தடி நீர் போன்ற விவரங்களை குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆய்வுசெய்வது என்ற முறை பல காலமாக உள்ளது. இத்தகைய ஆய்வு அறிக்கைகளில், வித்தியாசமான கருத்துகள் வெளிவர வாய்ப்புகள்உள்ளன. இத்தகைய தருணத்தில், ஆய்வு செய்த பல நிறுவனங்களும் ஒன்றாக கூடி, தக்க முடிவுக்கு வருவதும் வழக்கம். இத்தகையஅணுகுமுறை இந்தியாவில் மட்டுமல்ல, பல வளர்ந்த நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தகைய தேவையான ஆய்வு அறிக்கைகளை மத்திய அரசு சார்ந்த நிர்வாகம் செய்யும் போது, மாநில அரசு அதிருப்தியை தெரிவிப்பதுதேவையற்றது. தவிர்க்க வேண்டியது.
ஸ்டெர்லைட் ஆலையை குறித்தும், தூத்துக்குடி நிலத்தடி நீர் குறித்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு மேற் கண்ட இவ்விருஆய்வறிக்கைகள் கிடைக்கும் நிலையில, தீர்ப்பாயம் அவற்றை தீவிரமாக ஆராய்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்காலம் குறித்துதீர்ப்பளிக்க வேண்டியது அவசியம்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழகஅரசு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் அறிக்கையை உற்றுநோக்குவது போல தேசிய நிலத்தடி நீர் குழுமம்அளித்த ஆய்வறிக்கையும் உற்று நோக்குவதில் தவறில்லை.
தனக்கு தேவையான பல் வேறு ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து, அதன் அடிப்படையில் நியாயமான தீர்ப்பு வழங்குவதேதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கடமை தேசிய நிலத்தடி நீர் குழுமம் அளித்த ஆய்வறிக்கையால் தூத்துக்குடி மக்களிடையே தீவிரமான எதிர்ப்பு எழும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது
இது போன்ற தொழில் சார்ந்த, விஞ்ஞானம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கும் உரிமையை போராட்டக்காரர்களின் கையில்ஒப்படைக்க கூடாது.