ப சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவரை வழக்கில் இருந்து காப்பாற்ற முனைகிறார். அவருக்கு உதவியாய் இருந்த ஐந்து அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார். இவ்வாறு அருண் ஜெட்லி கால தாமதம் செய்வதால் வழக்கு விசாரணை தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இப்போது அடுத்த வருடம் ஜனவரி பதினோராம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைக்காதவரை ப சிதம்பரம் வெளியே சுதந்திரமாக உலவ முடியும். இந்த ஐவரையும் விசாரித்தால் மட்டுமே ப சிதம்பரத்தை கைது செய்யலாம். ஜெட்லி தனது நண்பர் ப சிதமபரத்தை கைதில் இருந்து காப்பாற்ற நிதி அமைச்சர் முடிவு செய்துவிட்டார்.
அருண் ஜேட்லியின் மகன் ரோகன், மகள் சோனாலி மருமகன் ஜெயேஷ் பக்ஷி ஆகியோர் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக சட்ட ஆலோசகர்கள் என்ற பெயரில் கோடி கோடியாக ச்மபாதிப்பதை சுட்டிக் காட்டி மிரட்டுகிறாரா?
நவம்பர் 26 அன்று பிரதமர் அனுமதி விரைவில் அளிக்க வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் சொல்லியிருந்த படியால் சி பி ஐ நீதிமன்றத்தில் டிசம்பர் பதினெட்டாம் தேதி வரும் அடுத்த விசாரணையில் ஐந்து நிதி அமைச்சக அதிகாரிகளையும் கைது செய்து விசாரிப்போம் என தெரிவித்தது. அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெறுவதற்காக ப சித்மபரமும் இந்த நிதியமைச்சக அதிகாரிகளும் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்வதற்காக இவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது. இங்குள்ள ஏர்செல் நிறுவனமும் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனமும் இணைந்து புதிய நிறுவனமாக ஏர்செல் மேக்சிஸ் என்ற பெயரில் இந்தியாவில் இயங்க அனுமதி பெறுவதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் முக்கியப் பங்கு வகிக்கும் அதிகாரிகள் இன்னும் விசாரணை வளையத்துக்குள் சிக்காமல் தப்பித்து வருகின்றனர்.
- அசோக் ஜா முன்னாள் நிதி செயலர்
- அசோக் சாவ்லா, முன்னாள் நிதி செயலர்
- குமார் சஞ்சய் கிருஷ்ணன், ஐ ஏ எஸ், தற்போது அஸ்ஸாம் பனி பிரிவில் உள்ளார்
- தீபக் குமார் சிங், ஐ ஏ எஸ். தற்போது பிஹார் பனிப் பிரிவில் உள்ளார்.
- ராம் சரண், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் முன்னாள் செயலர் [அண்டர் செக்கரட்டரி]
இந்த ஐவரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் ஆகும். ஜுலை மாதம் 19 ஆம் தேதி சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பே நிதி அமைச்சகத்தின் பணியாட்கள் துறையிடம் இருந்து இவர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி கோரியது.. இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. ஆறுமாத காலமாக சி பி ஐ யின் கோரிக்கை நிலுவையில் உள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடனே அனுமதி வழங்கி வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரலாம். அவர் சட்டத்தை மதிப்பவராக இருந்தால் அனுமதி அளித்திருப்பார். ஆனால் அவரோ குற்றம் சாட்டப்பட்ட தனது நண்பரை காப்பாற்றும் நோக்கத்தில் அந்தக் குற்றத்துக்கு துணை போன அதிகாரிகளை விசாரிக்க அனுமதி மறுக்கிறார்.
சிதம்பரம் அருண் ஜெட்லியை மிரட்டுகிறாரா?
அருண் ஜேட்லியின் மகன் ரோகன், மகள் சோனாலி மருமகன் ஜெயேஷ் பக்ஷி ஆகியோர் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக சட்ட ஆலோசகர்கள் என்ற பெயரில் கோடி கோடியாக ச்மபாதிப்பதை சுட்டிக் காட்டி மிரட்டுகிறாரா? இந்த சந்தேகம் வருவதில் யாரையும் குற்ற சாட்ட இயலாது. இது எல்லோருக்கும் வரக் கூடிய பொதுவான சந்தேகம் தான்.
காரணம் எதுவாக இருந்தாலும் அருண் ஜெட்லி அனும்தி அளிப்பதில் காலம் தாழ்த்துதல் கூடாது. இனியும் பிரதமர் இந்த அநியாயத்தை பார்த்துக்கொண்டு பொறுத்திருக்க கூடாது. அவர் தன கை முஷ்டியை மடக்கி ஓங்கி ஒரு குத்து விட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அரசின் கருத்துக்கு புறம்பாக யார் நடந்தாலும் அவர்கள் கண்டிக்கப்பட் வேண்டியவர்கள் என்பதை பிரதமர் அமைச்சர்களுக்கும் அமைச்சக அதிகாரிகளுக்கும் உணர்த்தியாக வேண்டும்.