காங்கிரசுக்கு எனத் தனியாக  ஹார்வெஸ்ட் டிவி – விரைவில் அறிமுகம்

கபில் சிபல் & ப சிதம்பரம் நிதி உதவி - இந்த ஊழல் மலிந்தவர்களால் அந்தக்  கட்சிக்கு ஒரு தனி டிவி வந்து என்ன செய்ய போகிறது?

0
1628
கபில் சிபல் & ப சிதம்பரம் நிதி உதவி - இந்த ஊழல் மலிந்தவர்களால் அந்தக்  கட்சிக்கு ஒரு தனி டிவி வந்து என்ன செய்ய போகிறது?
கபில் சிபல் & ப சிதம்பரம் நிதி உதவி - இந்த ஊழல் மலிந்தவர்களால் அந்தக்  கட்சிக்கு ஒரு தனி டிவி வந்து என்ன செய்ய போகிறது?

வரும் புத்தாண்டில் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு பெற்ற ஹார்வெஸ்ட் டிவி ஹெச் டிவி என்ற பெயரில் மக்களை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பிரச்சாரத்துக்கு  உதவியாக இந்த டிவி விளங்க வேண்டும் என்பது இவர்களின் ஆசையும் கனவும் ஆகும்.  இந்த ஹெச் டிவிக்கு முழு ஆதரவு தந்து இருப்பவர்கள் ப சிதம்பரமும் கபில் சிபலும் ஆகும். ப சிதம்பரம் வீ கான் மீடியா மற்றும் ப்ராட்காஸ்ட்டிங் லிமிட்டட் நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டுகளில் இரு நூறு கோடி வழங்கி இருக்கிறார் என்று புலனாய்வு ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இது போல ஒரு ஆங்கில செய்தித்தாளை நடத்துவதாகக சொல்லி கணக்கு காட்டியதும் கோப்புகளில் பதிவாகி உள்ளன.

காலையில் நடக்கும் செய்தி நிகழ்ச்சிக்கு பர்கா தத்துடன் உரையாட பல காங்கிரஸ்காரர்களும் பி ஜே பிக்கு எதிரானவர்களும் அழைக்கப்படுவர் துடிப்பான பத்திரிகையாளர்களை அழைத்து இந்த டிவியில் நிகழ்ச்சி நடத்த பயன்படுத்துவர். ராஜ்தீப்  சர்தேசாயையும் இந்த டிவியில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கள்  அழைத்துள்ளனர்.  இந்த சேனலின் உரிமையாளரான வீ கான் மீடியாவிடம் ஏற்கெனவே பல ஆங்கில செய்தி சேனல்களுக்கான உரிமம் இருக்கிறது. ஹெச் டிவி பி ஜி பி க்கு ஆதரவளிக்கும் ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சிகளுக்காக போட்டியாக நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டு வருவதாக கபில் சிபலுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஹெச் டிவி செயல்படுவதற்கு கர்நாடகத்தில் இருந்து டி கே சிவகுமாரும் நவீன் ஜிண்டாலும் உதவப் போகின்றனர். உண்மையில் இந்த டிவி தோற்றத்துக்கு முக்கியக் கருவியாக இருந்தவர் கபில் சிபல்  மட்டுமே. அவரே பி ஜே பி யையும் சங்க பரிவாரையும் எதிர்க்க ஒரு டிவி தேவை எனக் காங்கிரஸ் தலைவரிடம வலியுறுத்தி அனுமதி பெற்றார். இது போன்ற முயற்சிகள் எடுப்பது கபில் சிபலுக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு தருண் தேஜ்பாலின் தெகெல்கா மூலமாக பி ஜே பியையும் நரேந்திர மோடியும்  தாக்கி விமர்சித்து செய்திகள் வெளியிட்டார்.

ஹார்வஸ்ட் டிவிக்கு முதலில் சூட்டப்பட்ட  பெயர் வீ நியுஸ் என்பதாகும் அதன் பிறகு ஸ்ரீ எஸ் 7 என்று பெயர் மாற்றப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி நடந்த போதே வீ கான் உரிமையாளர் ஆங்கில செய்தி சேனலுக்கான உரிமத்தை பெற்றிருந்தார். அவரது  அலுவலகம் டில்லியில் மாளவியா நகரிலும் நோய்டாவில் ஐந்தாம் செக்டாரிலும் உள்ளன. உரிமங்கள் பெற்றிருந்த போதும் என்னவோ வி நியுசும் எஸ் 7 நியுசும் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்துவிட்டன. தனக்கென்று தனியாக ஒரு பிரச்சார  டிவி வேண்டும் என்று கருதிய காங்கிரஸ் கட்சியினர் கடைசியில் வீ கான் மீடியாவை அணுகி அவர்கள் வாங்கி வைத்திருந்த உரிமத்தை பெற்று இப்போது புதிய டிவி தொடங்குகின்றனர்.

வீ கான் மீடியாவின் இயக்குனர்களாக இருப்பவர்கள் லலித் குமார் ஸ்ரீவஸ்தவாவும் அமெரிக்காவில் வசிக்கும் ஜஸ்வந்த் குமார் ஸ்ரீவஸ்தவாவும் ஆவர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே அணில் அம்பானியிடம் இருந்து வந்த பிக் டிவி [BIG TV] மற்றும் டிஷ் டிவி சேவைகளில் விரைவில் முதலீடு செய்கின்றனர். இவர்களே இந்த  ஹெச் டிவியை நடத்தினாலும் இதன் தொன்னூறு சதவீதப் பங்குகள் காங்கிரஸ் தலைவர்கள் வசம் உள்ளன. சிதம்பரத்தின் நெருக்கமான ஒரு பெண் பேனா தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். அவர் இந்த வீ கான் மீடியாவின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக விரைவில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. ப. சிதம்பரத்தின் கறுப்புப் பணம் உள்ளே புகுந்து விளையாடி வெளியே வர இந்த ஹெச் டிவி நல்ல களமாக அமையப்  போகிறது.

புலனாய்வு அமைப்புகள் ப. சிதம்பரம் இந்த நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு நூறு கோடி அளித்திருப்பதாகக் தெரிவிக்கின்றன. வீ கானின் பங்குகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இயக்குனர்களுக்கு விற்கப்பட்டுள்ளன. புலனாய்வு அமைப்புகள் இந்த ஹெச் டிவிக்கு என ஆரம்பக் கட்ட செலவாக செலவழித்த்ட அல்லது செலவழித்ததாகக் கணக்கு காட்டப்பட போகிற பணத்தை கண்காணித்து கொண்டே இருக்கின்றனர்.  சிதம்பரம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இது போல ஒரு ஆங்கில செய்தித்தாளை நடத்துவதாகக சொல்லி கணக்கு காட்டியதும் கோப்புகளில் பதிவாகி உள்ளன. அந்தக் கோப்புகளின்படி ப சிதம்பரம் பத்திரிகையின் ஒரு ஆசிரியர் பெயரிலும் அவரது மனைவி பெயரிலும்  14 சதவிதம் பங்குகள் வைத்திருந்தார்.

புலனாய்வில் அமைப்புகள் ஹெச் டிவி வருவதில் பல் முறைகேடுகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளான். பங்கு விற்பனையில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றன. செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த டிவி சேனலுக்கு அலைக்கற்றை [ஃபிரிக்வேன்சி] ஒதுக்கிடு செய்ததிலும் குளறுபடிகள் நடந்துள்ளன. இவ்வாறாக பிறக்கும்போதே காங்கிரஸ் கட்சியின் இந்தக் கனவு குழந்தை பலவிதமான  பிரச்சனைகளுடன் பிறக்க போகிறது.

வரும் ஜனவரியில் ஆங்கில சேனல் அறிமுகமான உடனேயே இந்தி சேனல் ஒன்றும் அறிமுகமாகும். இந்த ஹார்வெஸ்ட் டிவியின் இந்தி சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர்களான புண்யா பிரசுன் பாஜ்பாய் அல்லது ரவீஷ்  குமார் போன்றோரை முக்கிய நிகழ்ச்சி நடத்துனராக நியமிக்க காங்கிரஸ் கட்சி  முடிவு செய்துள்ளது. ஆம் ஆத்மியின் தலைவர்  அஷுதொஷும் இந்த குழுவில் இடம் பெறுவார் என்றும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here