ப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனுக்கு தீர்ப்பு வழங்க  தடை?

2
6823
ஐ என் எக்ஸ் - இறுதி சுற்று?
ஐ என் எக்ஸ் - இறுதி சுற்று?

சிதம்பரத்தின் முடிச்சுகள் அவிழும் தருணம் நெருங்கிவிட்டது. அவருக்கு முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவின் மீது தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

சிதம்பரத்தின் பித்தலாட்டங்களுக்கு சாவு மணி அடித்தது உயர் நீதிமன்றம்

ஐ என் எக்ஸ் மீடியா ஊழலில் கைது ஆகாமல் தப்பிக்க விரும்பி ப சிதம்பரம் எடுத்த முயற்சி அனைத்தும் வீணாகி விட்டது. அவர் முன் ஜாமீன் கோரி எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் உயர் நீதிமன்றம் சாவு அணி அடித்து விட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் முன்ஜாமீன் கோரினார். ஆனால் அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. போன வருடம் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி இவரது மகன் கைதானதைத் தொடர்ந்து இவர் மீதும் கைது நடவடிக்கை பாயும் என அஞ்சிய ப. சிதம்பரம் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். கடந்த பத்து மாதங்களாக சி பி ஐ விசாரணை மற்றும் அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு அவருடைய வக்கீல்களும் கட்சிக்காரர்களுமான கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி எடுத்த முயற்சிகள் அனைத்தும் இப்போது வீணாகி விட்டன.

சி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணைக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ப சிதம்பரத்தின் வக்கீல்களின் பொய்யும் புரட்டுமான வெற்று வாதங்களைக்  கடந்த பத்து மாதங்களாக கேட்டு வந்த  நீதிபதி சுனில் கவுர் இந்த முறை இடைக்கால் ஜாமீன் அளிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

ஐ என் எக்ஸ் மீடியா என்பது ஒரு வெளிப்படையான வழக்கு

ஐ என் எக்ஸ் மீடியாவை 2௦௦7 இல் பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமானது. அவர்கள் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் வெறும் ஐந்து கோடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வாங்கிவிட்டு 3௦5 கோடி ருபாய் முதலீட்டை வெளிநாடுகளில் இருந்து பெற்றனர். இதனால் இவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்தனர். கணவன் மனைவி இருவருக்கும் 2008ஆம் ஆண்டில் வருமான வரி செலுத்தாதற்கு அபராதம் செலுத்தும்படி வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியது. இவர்கள் இருவரும்  வருமான வரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கையில் இருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டி கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தனர்.  சந்தித்து வருக்கு ஐந்து கோடி இலஞ்சம் கொடுத்தனர். இந்த தொகையை கார்த்தியின் Advantage Strategic Consulting Private Limited மற்றும்  Chess Management Consulting Private Limited, என்ற நிறுவனங்கள் பேரில் வங்கியில் செலுத்தினர். இந்த நிறுவனங்கள் இரண்டும் ஏர்செல் மேக்சிஸ் ஊழலிலும் சிக்கியுள்ளன. மகன் மூலமாகப் பணத்தை பெற்ற ப சிதம்பரம் வாங்கிய பணத்துக்கு வேலை செய்தார். ஐ என் எக்ஸ் மீடியாவின் அந்நிய முதலீடுகளுக்கு  தடையில்லாச்  சான்றிதழை வழங்கி வருமான வரித்துறையினரின் பிடியில் இருந்து விடுவித்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவினார்.  அவர்கள் தொடர்ந்து தம் தொழிலைச் செய்ய ஏற்பாடுகளைச் செய்தார்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்து துளிர்த்தது தான் ஐ என் எக்ஸ் மீடியா வழக்கும் ஆகும். 2௦15ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம்  அமலாக்கத் துறையின் இணை இயக்குனர் ராஜேஸ்வர் சிங், கார்த்தி சிதம்பரத்தின் வீட்டையும்  அலுவலகங்களையும் சோதனையிட்ட போது ஐ என் எக்ஸ் மீடியாவுக்காக இலஞ்சம் வாங்கிய ஆவணங்களைக் கண்டுபிடித்தனர்.  அப்போது கார்த்தியின் அலுவலகத்தில் உள்ள கணினி மற்றும் வன்கலங்கள் [ஹார்ட்வேர்] அனைத்ததையும் கைப்பற்றிய அமலாக்கத் துறையினர், சிதம்பரம் குடும்பத்தினருக்கு பதினான்கு நாடுகளில் 21 வங்கிகளில் கணக்கு இருப்பதை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினர்.

2௦17ஆம் ஆண்டு மே மாதம் சிபி ஐ ஐ என் எக்ஸ் மீடியா வாழகில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது.  இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கார்த்தியை கைது செய்தது. கார்த்தி  கைதானதை கண்ட அவரது தந்தை ப. சிதம்பரம் நீதிமன்றத்துக்கு ஓடிப் போய் கைது நடவடிக்கையில் இறுதி தனக்கு விலக்குப் பெற விரும்பி முன் ஜாமீன் மனு ஒன்றை அளித்தார். இந்த வழக்கு சட்ட வல்லுனர்களின் உதவியால் இப்போது பத்து மாதங்களாக நடந்து வருகிறது. இன்னும் தீர்ப்பு வந்த பாடில்லை. இப்போது தான் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் முன்பு நடத்திய விசாரணையின் போது ஒழுங்காகப் பதில் அளிக்காத காரணத்தால் அவரை கைது செய்து விசாரித்தால் மட்டுமே அவரிடம் இருந்து உண்மைகளைப் பெற முடியும் என்று நீதிமன்றத்தில் வாதிட்டு வரும் சி பி ஐயும் அமலாக்கத் துறையும் டில்லி உயர் நீதமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று அவருக்கு முன் ஜாமீன் வழங்கவே கூடாது என்று தனது  கருத்துக்களை எடுத்து நீதிபதி முன் வைத்தன. அவரது பதவிக் காலத்தில் அவர் அனுமதியோடு ஒரு மீடியா நிறுவனம் ஐந்து  கோடிக்கு அனுமதி பெற்ற பின்பு 3௦5 கோடி முதலீட்டைப் பெற்றிருப்பது குறித்து அவருக்கு தகவல்கள் தெரியாமல் இருக்க இயலாது. அவரை விசாரிக்கும் முறைப்படி விசாரித்தால் மட்டுமே அவரிடமிருந்து முழு உண்மைகளைப் பெற முடியும் என்று சி பி ஐ தரப்பில் வாதிட்டனர்.

சி பி ஐ தரப்பில் வாதாடிய டில்லி உயர் நீதிமன்ற மத்திய அரசு வக்கீல் துஷார் மேத்தா, சி பி ஐ தனது அதிகாரத்தை செயல்படுத்த அனுமதி கேட்கிறது. விசாரணையில் ஒத்துழைக்காத ப சிதம்பரத்தை இப்படியே விட்டுவிட இயலாது. அவரிடம் இருந்து  உண்மைகளை வரவழைக்க வேண்டும் அதற்கு முதற்கட்டமாக போலிசை கொண்டு அவரை கைது செய்ய வேண்டும்.  பிறகு தனது  பாதுகாப்பில் எடுத்து சி பி ஐ விசாரித்தால் மட்டுமே அவரிடம் இருந்து பதிலை வரவழைப்பது சாத்தியம் ஆகும். எனவே அவருக்கு முன் ஜாமீன் அளிக்க கூடாது என்றார்.

மூத்த வக்கீல் கபில் சிபல் சிதம்பரத்துக்காக ஆஜரானார். அவர் ‘’ப சிதம்பரத்தைப் போன வருடம் ஜுன் மாதம் விசாரணைக்காக  சி பி ஐ அழைத்தனர். அவர் குற்றம் சுமத்தப்பட்டவர் என்று கூட முதல் தகவல் அறிக்கையில் சி பி ஐ குறிப்பிடவில்லை’’, என்றார்.

மேலும் அவர் நீதிபதியிடம் இந்த வழக்கில் ப. சிதம்பரத்தை தவிர மற்ற நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஸ்கர் ராமன் ஆகிய அந்நால்வரும் ஜாமீனில் வெளியே தான் இருக்கின்றனர். இந்நிலையில் ப. சிதம்பரத்தை மட்டும் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ஸ்பெயின், இலண்டன், ஊட்டி, புதுடில்லி ஆகிய இடங்களில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்தின் ஐம்பது கோடி மதிப்புள்ள சொத்துக்களை [சந்தையில் அவை 3௦௦ கோடி மதிப்பு பெறும்]   அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ்

2ஜி வழக்குக்கான நீதிபதி சைனி ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இது போன்ற முன் ஜாமீன் வழக்கில் ப சிதம்பரத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளார். டில்லியில் உச்ச நீதிமன்றம் ஆறு மாதத்துக்குள் 2ஜி வழக்கை முடிக்க வேண்டும் என்று சி பி ஐ க்கும் அமலாக்க துறைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவர்களை வழக்கு தொடர்பாக விரைந்து செயல்படாதபடி குற்றம் சுமத்தப்பட்ட ப சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் அளித்தால் அவரை விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர்வது எப்படி?

சி பி ஐ யும் அமலாக்கத் துறையும் ஐ என் எக்ஸ்  மீடியா வழக்கில்  விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப. சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்பார்த்திருக்கின்றனர். டில்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை அடுத்து சி பி ஐ முழு முயற்சி செய்து கைது ஆணையை பெற்றுவிடக் கூடும்.

2 COMMENTS

  1. முழுக்க முழுக்க பொய் வழக்கு. மூட்டை மூட்டையாய் புளுகு செய்தி.கூடிய விரைவில் அரசு தோற்றிடும்.
    வாய்மை வென்றிடும். குருமூர்த்தி சாயம் வெளுக்கும்.

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
    சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே

    சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
    பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
    பாமர மக்களை வலையினில் மாட்டி
    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே

  2. INX media case is a simple one.Given permission for 5 cr as investment but secured 305 cr defying the permitted limit by giving the bribe of 5 cr to Karthi Chidambaram.Even obtaining 1000 RS as bribe is punishable under anti corruption act and in India so many govt servants got punished for gratification.A whooping 5 cr gratification is not a small thing and qualify for maximum punishment.IPC is common for all citizen irrespective of erring peoples status.A let off situation will render a hopelessness in the minds of common public.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here