ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

விரைவில் சிதம்பரம் மீதும் சி பி ஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

0
1342
விரைவில் சிதம்பரம் மீதும் சி பி ஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
விரைவில் சிதம்பரம் மீதும் சி பி ஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

சிதம்பரம் ஆட்களால் கார்த்தியையும் சிதம்பரத்தையும் இனி காப்பாற்ற இயலாது. ப சிதம்பரம் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கலாக உள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினர் (ED) முன்னாள் நிதி அமைச்சரான ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீதும் அவரது [Advantage Strategic Consulting Pvt. Ltd. and Chess Management Services Pvt. Ltd]. இரண்டு நிறுவனங்களின் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். 2ஜி நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன்பு அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்தபோது அரசு வழக்கறிஞர் ‘கார்த்தி தனது தந்தை நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த அவரிடம் முறைகேடாக அனுமதி பெற்று தருவதற்கு சுமார் இரண்டு மில்லியன் டாலரை சேவை கட்டணம் என்ற பெயரில் கார்த்தி பெற்றுள்ளார்’ என்றார். அமலாக்கத் துறை தற்போது ப சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகிறது . அவர் மீது மேலும் ஒரு துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஏர்செல் மேக்சிஸ் ஊழல் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வாரங்களில் அப்பா மகன் என இவ்விருவர் மீதும் மத்தியப் புலனாய்வு துறை [சி. பி. ஐ] குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை ஒட்டி 2ஜி நீதிமன்றம் தனது அடுத்த விசாரணையை வரும் ஜூலை மாதம் நான்காம் தேதிக்கு ஒத்தி வைத்தது. குற்றப்பத்திரிகையில் உள்ள விவரங்களின்படி ப. சிதம்பரம் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (FIPB) மூலமாக முறைகேடாக அனுமதி வழங்கியதற்கு அவர் மகன் கார்த்தி மேக்சிசிடம் இருந்து 90 கோடி ரூபாயும் ஏர்செல் டெலிவென்சர் நிறுவனத்திடம் இருந்து 26 இலட்ச ரூபாயும் பெற்றிருக்கிறார். இந்த ஏர்செல் மேக்சிஸ் ஊழல் விவகாரம் 2012 ஏப்ரல் மாதம் பி ஜெ பி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மூலமாக வெளிவந்தது. கார்த்தியின் அட்வான்ட்டேஜ் ஸ்ட்ரட்டெஜிக் கம்பெனிக்கு 26 இலட்ச ரூபாய் முறைகேடாக வந்திருப்பது குறித்த ஆவணங்களை காட்டி சுவாமி இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும் போராளியுமான சுப்பிரமணியன் சுவாமி ப. சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தன் மகனுக்கு பணம் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

கார்த்தி தற்போது இலண்டனில் இருக்கிறார். அவர் வரும் 28ஆம் தேதி இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் உயர் நீதிமன்றத்துக்கு உறுதி அளித்திருக்கிறார். அமலாக்கத் துறை கடந்த 12ஆம் தேதி ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியது. மீண்டும் அவரை இந்த மாத கடைசி வாரம் விசாரணைக்கு வரும்படி தெரிவித்துள்ளது. கார்த்தி மீது அமலாக்கத் துறை கருப்பு பணத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை அடுத்து இப்பிரச்சனையில் இருந்து விடுபட சிதம்பரத்துக்கும் வாய்ப்பு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. அவர் 2012 ஏப்ரல் முதல் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டு வருகிறார்.

2015இல் அமலாக்கத் துறையினர் கார்த்தியின் நிறுவனங்களில் ரெய்டு நடத்திய போது மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து இரண்டு மில்லியன் டாலர் வரை கார்த்தி இலஞ்சம் பெற்றதற்கான ஆவணங்களைக் கைப்பற்றினர். அமலாக்கத் துறையின் அதிகாரி ராஜேஷ்வர் சிங் ரெய்டு நடத்திய போது சிதம்பரம் குடும்பத்தினருக்கு 14 நாடுகளில் இருக்கும் மூன்று பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களையும் கணக்கில் காட்டப்படாத 21 அந்நிய வங்கி முதலீடுகளையும் கண்டுபிடித்தார்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி மீதும் அவரது இரண்டு நிறுவனங்கள் மீதும் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சாஃப்ட்வெர் சர்விசுக்காக மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்தும் மலேசியாவில் உள்ள அதன் துணை நிறுவனங்களிடம் இருந்தும் கார்த்தியின் செஸ் மேனேஜ்மெண்ட் செர்வீசஸ் நிறுவனம் 90 இலட்ச ரூபாய் பெற்றுள்ளது. இந்த சாஃப்ட்வெர், இந்திய சட்டங்கள் தொடர்பானதே தவிர மலேசிய நிறுவனத்துக்கு எவ்வகையிலும் உதவக் கூடியதல்ல என்று அமலாக்கத் துறையின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 2017 அக்டோபரில் கார்த்தியின் வங்கி கணக்கில் காட்டபட்டுள்ள 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் இணைத்துள்ளனர். இவ்வழக்கு கருப்பு பணத் தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here