இடைத்தரகர் உபேந்திரா ராய் மீது இன்னுமொரு வழக்கு

பத்திரிகையாளர் உருவில் உலவி வந்த இடைத்தரகர் ராய் போலி ஆவணங்களை சமர்ப்பித்தற்காக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

0
1992
பத்திரிகையாளர் உருவில் உலவி வந்த இடைத்தரகர் ராய் போலி ஆவணங்களை சமர்ப்பித்தற்காக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
பத்திரிகையாளர் உருவில் உலவி வந்த இடைத்தரகர் ராய் போலி ஆவணங்களை சமர்ப்பித்தற்காக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாலும் அவற்றிற்கு போலி ஆவணங்களை உபேந்திரா ராய் சமர்ப்பித்ததாலும் அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பத்திரிகையாளர் என்ற பெயரில் இடைத்தரகராக டில்லி மாநகரில் வலம் வந்த இருந்த உபேந்திரா ராய் மீது மத்திய குற்றப் புலனாய்வுத் துறை புதிதாக ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர் பத்திரிகையாளர் என்ற பெயரில் விமான நிலைய நுழைவு சீட்டு பெற்று14.6 மில்லியன் டாலர் அதாவது 100 கோடி மதிப்புடைய பணப் பரிவர்த்தனைகளை போலி ஆவணங்களை காட்டி செய்துள்ளார். மேலும் இந்த 100 கோடி பணப் பரிவர்த்தனையும்  2017 – 2018 ஆம் ஆண்டில் மட்டுமே நடைபெற்றுள்ளன.இதனை ஆதாரங்களோடு கண்டுபிடித்த சிபிஐ உபேந்திரா ராய் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்கிறது. மனையடி நிலம் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்திடம் இருந்து அவர்களைப் பற்றிய அவதூறு  செய்தி வெளியிடப் போவதாக மிரட்டி 2.2 மில்லியன் டாலர் மதிப்புடைய சுமார் 15 கோடி ரூபாய் பணத்தை உபேந்திர ராய் பெற்றுள்ளார். இதற்கும் இவர் மீது சிபிஐ ஒரு வழக்குப்பதிவு செய்கிறது உபேந்திரா அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரிடம் வருமான வரித்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி அவர்களின் வருமான வரி முறைகேடுகளை தான் மறைத்து விடுவதாகவும் அதற்காக தனக்கு ஒரு கமிஷன் தொகை தரவேண்டும் என்றும் மிரட்டி பணம் வாங்கி இருக்கிறார் இவ்வாறு இவர் 100 கோடி ரூபாய்க்கு மேலாக மிரட்டி. வாங்கி வங்கிக் கணக்கில் வைத்திருந்த பணம் வருமானக் கணக்கு காட்ட முடியாத   கருப்பு பணம் என்பதால் அமலாக்கத்துறையினரும்  இவர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். உபேந்திர ராய் பசுத்தோல் போர்த்திய புலியாக பத்திரிகையாளர் என்ற பெயரில் பலரை மிரட்டி பணம் பெற்றுள்ளார்.

பி குரூஸ் என்ற நமது செய்திதளம் உபேந்திர ராய் குறித்து விரிவான செய்தி கட்டுரை ஒன்றை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அவருக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருக்கும் பல சொகுசு கார்கள், ஆடம்பர வீடுகள் மற்றும் பல அசையும் அசையாச் சொத்துக்கள் குறித்து அந்தக் கட்டுரையில் விளக்கமாக தரப்பட்டுள்ளது இவர் இந்த சொத்துக்களை பத்திரிகையாளர் என்ற பேரில் பல பணக்காரர்களுடன் மிரட்டிப் உருட்டி பெற்றுள்ளார்.

ஏற்கனவே சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் உபேந்திரா ராயை சி பி ஐ அதிகாரிகள் ஆகஸ்ட் முதல் தேதி அன்று இன்னொரு வழக்கிலும் கைது செய்தனர். இவர் மே மாதம் மூன்றாம் நாளிலிருந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிபிஐபுதிய குற்றப்பத்திரிகையை நீதிபதி சந்தோஷ் நீதிமான் முன்னிலையில் தாக்கல் செய்தது. பீரோ ஆப்  சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி  துணை இயக்குனர்  ராகுல் ரத்தோர்  மற்றும்  ஏர் ஒன ஏவியேஷன்  நிறுவனத்தின் நிறுவனத்தின்  தலைவரும்  மேலான இயக்குனருமான அலோக் ஷர்மா ஆகியோரின் பெயர்களும் இக்குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆகஸ்டு 6ஆம் நாள்  நீதிமன்றம் இந்த குற்றப்பத்திரிகை குறித்த விசாரணையைநடத்தும்..

விமானப் போக்குவரத்து பாதுகாப்பு  அமைப்பிற்கு  [Bureau of Civil Aviation Security]தவறான தகவல்களை கொடுத்து  விமான நிலையத்தின் நுழைவு சீட்டை  பெற்றதற்காகவும்  அதன் மூலமாக ஏராளமான பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்காகவும்  சிபிஐ விசாரணையை மே மாதம் 3 ஆம் நாள் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது. உபேந்திர ராயிடம் இருந்த பத்திரிகை ஆசிரியர் பிரிவிற்குரிய  அனுமதிச்சீட்டு சி பி ஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.  அவர் ஒரு முழுநேர பத்திரிகையாளர்  என்று காட்டிக் கொள்வதற்காக  போலியாக இந்த  சீட்டை வைத்திருந்தார். அவர்  பிரிண்ட்லைன்  என்ற பெயரில் ஒரு இணைய  தளத்தை நடத்தி வந்தார்.  இதுதவிர தெகல்கா  பத்திரிகையிலும்  சஹாரா குழுமத்தின்  ஊடகங்களிலும்  இவர் தலைமைப் பதிப்பாசிரியராக இருப்பதாகக் காட்டிக்கொண்டார் .

2017ஆம் ஆண்டில்  ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம்  உபேந்திராவின் வங்கி கணக்கில்  சுமார் 29 கோடி ருபாய் வைப்புத் தொகையாக ஏறி உள்ளது.ஒரீ வருடத்தில் விமானநிலைய  அனுமதிச்சீட்டு  மூலமாக  நடத்திய பணப்பரிவர்த்தனையில்  இவரது வங்கி கணக்கில்  இவ்வாறு பணம் குவிந்தது. இப்பணம்  முறைகேடாக  பணக்காரர்களை  மிரட்டி உருட்டி சம்பாதிக்கப்பட்ட  கருப்புப் பணம் என மத்தியப் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து  இவர் மீது  கருப்புப்பணம் சட்டத்தின்கீழ்  முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ஒயிட்  லயன்  என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் பல்வீந்தர் சிங் மல்கோத்ரா  என்பவரை இவர் தான் பிரிண்ட் லைன் என்ற செய்தி தளத்தின் ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவரைப் பற்றிய அவதுஉறு செய்திகளை வெளியிடப் போவதாக  மிரட்டினார்.  அவருடைய வருமான வரி ஆவணங்களை அவரிடம் காட்டி தனக்கு 15 கோடி ரூபாய் கொடுத்தால் அவர் செய்திருக்கும் முறைகேடுகளை பத்திரிகையில் எழுதிக் கேவலப்படுத்தாமல் விட்டுவிடுவதாக அச்சுறுத்தினார். மேலும் அவருடைய வருமான வரி வழக்கு பிரச்சனையை வருமானவரித் துறையின் உயர் அதிகாரிகளிடம் பேசி சுமூகமாக முடித்து தருவதாகவும் உறுதி அளித்தார். மல்கோத்ரா போலீஸாரிடம் உபேந்திரா யைப்பற்றி புகார் தெரிவித்திருப்பதால் சிபிஐ அவர்மீது இப்போது இரண்டாவது முறையாக  முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

36 வயதாகும் உபேந்திர ராய்க்கு சொந்தமாக லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கான்ஜ் பகுதியில் ஒரு வீடும் மும்பையில் ஒரு வீடும் பூனேயில் ஒரு வீடும் அவருடைய கிராமத்தில் பெரிய பங்களாவும் இலண்டனில்  ஒரு வீடும் உள்ளது.இவை தவிர அவருக்கு டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பெரிய பங்களா ஒன்று இருக்கிறது. நரேஷ் பிரசாத் ரீன் மற்றும் மது சரீன்  ஆகியோரிடமிருந்து ஆறரை கோடி ரூபாய்க்கு உபேந்திர ராய் ஒரு வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். அந்த வீடு புதுடில்லியில் ஹேய்லி சாலையில் ஆஷா தீப் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள 801எண் வீடாகும். இந்த வீட்டின் உண்மையான் மதிப்பு சுமார் 10 கோடி ஆகும்.

ஊழலுக்கும் மிரட்டலுக்கும் சொந்தக்காரரான உபேந்திர ராய் நாலரை கோடி ரூபாய் மதிப்புடைய மேபக் கார் வைத்திருக்கிறார். இவரிடம் 70 லட்சம் மதிப்புடையஆடி காரும் [DL 3CCN 6148]இருபத்தைந்து லட்சம் மதிப்புடைய டொயோட்டா இன்னோவா கிறிஸ்டா காரும் (DL3CCN 1915] 11 லட்சம் மதிப்புடைய மாருதி (DL9CX 3081)காரும் 26 லட்சம் மதிப்புடைய ஹோண்டா அக்கார்டு என்ற காரும் (DL3CBA 5300]உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here