கார்த்தி சித்ம்பரத்தை கைது செய்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு
கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தராத காரணத்தால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்திடம் இன்னும் மூன்று மாத அவகாசம் கேட்டு பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றம் 3 மாதம் அவகாசம்
உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அன்று [20-9-18] ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் அமலாக்க துறையினர் தம் விசாரணையை முடிக்க இன்னும் மூன்று மாத கால அவகாசம் அளித்தது. ‘இவ்வழக்கில் முக்கிய குற்றவளியான கார்த்தி சிதம்பரத்துக்கு விசாரணை நீதிமன்றம் அவரை கைது செய்யவிடாமல் இடைக்கால பாதுகாப்பு அளித்திருப்பதால் அவரிடம் விசாரனை நடத்த இயலவில்லை. அவரை கைது செய்து விசாரித்தால் மட்டுமே இவ்வழக்கு தொடர்பான பல உண்மைகளை அவரிடமிருந்து கொண்டு வர முடியும் என்பதால் அவரை கைது செய்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டனர். இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உச்ச நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
நீதிபதிகள் ஏ. கி. சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அடங்கிய அமர்வு இவ்வழக்கு மூன்று மாத காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமலாக்கத் துறையினருக்காக வழக்காடும் துஷார் மேத்தா குற்றம் சுமத்தப்பட்டவரிடம் சில மின்னஞ்சலகள் குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதால் இன்னும் இரண்டு மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். அமலாக்கத் துறை ஏற்கெனவே கார்த்தி சிதம்பரத்தின் மீது ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.இப்போது முக்கிய குற்றவாளியான ப.சிதம்பரம் மீது துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
அமலாக்கத் துறை விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி ஓ. பி. சைனி கார்த்திக்கு வழங்கிய இடைக்காலப் பிணையை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. இவ்வழக்கு இம்மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை நீதிபதியிடம் கார்த்தியை கைது செய்தாலன்றி அவரிடமிருந்து உண்மைகளை வரவழைக்க முடியாது என்று வலியுறுத்தியது. கார்த்தி தனது பணப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் தொடர்பாக வாய் திறக்க மறுக்கிறார்.
கார்த்தி இலண்டன் செல்ல அனுமதி
உச்ச நீதிமன்றம் கார்த்திக்கு கடந்து புதன்கிழமை அன்று செப்டெமபர் மாதம் 20 முதல் 30 தேதி வரை இலண்டன் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இப்போது மூன்று மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது. எனவே அமலாக்கத் துறையினர் கார்த்தியை கைது செய்து இந்த மூன்று மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்த மனுவில் கார்த்தி தங்கள் விசாரணையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு ‘அமைதியாக இருக்கும் தன் உரிமையைப் பயன்படுத்தி பதில் அளிக்க மறுப்பதாகத் தெரிவித்தனர். மேலும் ஒவ்வொரு முறை அவர் விசாரணைக்கு வரும்போதும் பாதியிலேயே கிளம்பி சென்று விடுவார். அத்துடன் இன்னும் ஒரு வாரத்துக்கு தன்னால் விசாரணைக்கு வர இயலாது என்றும் தெரிவிப்பார். விசாரணையின் போது சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் பதில் அளிப்பார். எந்தக் கேள்விக்கும் உரிய பதிலை முழுமையாக விளக்கமாகத் தர மாட்டார். இதனால் அவரை கைது செய்து விசாரித்தால் மட்டுமே அவரிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க முடியும் என்று அமலாக்கத் துறையினர் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
நீதிபதி ஓ பி சைனியிடம் இருந்து கார்த்தி தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடை பெறுவதற்கு முன்பு அமலாக்க்த் துறையினர் நடத்திய விசாரணையில் ஆவணங்கள்குறித்து கேள்விகள் கேட்டால் அவர் மிகவும் கோபப்படுவார். எரிச்சல் அடைவார். பதில் அளிக்க மறுப்பார். அமைதியாக இருப்பார். விசாரனைக்கு ஒத்துழைப்பு தராமல் முரண்டு பிடிப்பார். கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருக்க தேவையான எல்லா விதமான மோசமான தந்திரங்களையும் கையாளுவார், என்று அவர் மீது குற்றஞ்சாட்டினர்.இப்போது இடைக்கால ஜாமின் பெற்றுவிட்டதால் இனி விசாரணைக்கு வராமல் தப்பிக்க என்னென்ன உபாயங்கள் உண்டோ அத்தனையையும் கையாளுகிறார். அவரை கைது செய்து தமது இருப்பிடத்துக்குள் கொண்டு வந்தால் மட்டுமே அவரிடம் விசாரணையை எதிர்பார்த்தபடி நடத்தி வழக்கை முடிக்கலாம் என்று அமலாக்கத் துறையினர் உச்ச நீதிம்ன்றத்தில் வலியுறுத்தி கூறினர்.
ப சிதம்பரமும் அவர் மகன் கார்த்தியும் ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க விசாரணை தொடர்பாக பல மோசமான வழி முறைகளை பின்பற்றுகின்றன்ர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமலாக்கத் துறையினரின் இணை இயக்குனர் மற்றும் புலனாய்வு அதிகாரியான இராஜேஷவர் சிங்கின் மீது பல பினாமி நபர்கள் மூலமாக பொய் புகார்களை அனுப்பி வருகின்றனர்.
சி பி ஐயின் அடுத்த முயற்சி
ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நான்கு அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் இருந்து அனுமதி கேட்டுள்ளது. அக்டோபருக்குள் அனுமதிதருமாறு மனு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக இன்னும் அரசு தரப்பில் இருந்து இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் சி பி ஐக்கு வந்து சேரவில்லை.
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு அனுமதி வழங்கியதில் ப சிதம்பரத்துக்கு உதவியதாக அவரது நிதி அமைச்சகத்தின் செயலர்களான அஷோக் ஜா மற்றும் அஷோக் சவ்லா ஆகியோரும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அப்போது நிதி அமைச்சகத்தில் பணி செய்து வந்த ஐ ஏ எஸ் அதிகாரிகளான குமார் சஞ்சய் கிருஷ்ணன் மற்றும் தீபக் குமார் சிங் ஆகியோர் மீதும் சி பி ஐ குற்றம் சுமத்தியுள்ளது. ப சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு இந்த நால்வரையும் சிபிஐ விசாரித்தாக வேண்டும். அதற்கும் அரசு தரப்பில் இருந்து அனுமதி கிடைக்க வேண்டும்.