
மர்ம மனிதன் யார்?
ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஐ எஸ் ஐ (ISI) உளவாளி என்று சந்தேகிக்கப்பட்ட தானிஷ் ஷா ஒரு உளவாளியே அல்ல சண்டே கார்டியன் என்ற பத்திரிகைக்கு தானிஷ் ஷா அளித்த ஒரு பேட்டியில் அவர் அமலாக்கத் துறை (ED) அதிகாரி ராஜேஸ்வர சிங்கிடம் மது கோடா வழக்கில் தனக்கு தெரிந்த சில தகவல்களைக் தெரிவிக்கவே அவருடன் பேசியதாக கூறியுள்ளார். உண்மை இவ்வாறிருக்க றா உளவு அமைப்பு (RAW) மூலமாக ஒரு மர்ம மனிதர் இந்த உரையாடலை காரணம் காட்டி இவர்கள் இருவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகக் கதை கட்டி விட்டார். இதனால் ஏர்செல் மேக்சிஸ் ஊழல குறித்து ராஜேஸ்வர சிங் நடத்தி வரும் விசாரணையை முடக்கவும் அதில் இருந்து அவரை வெளியேற்றவும் திட்டமிட்டார். [உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை; பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை]
மோடி அவர்களே ஒரு கைது உங்களின் ஆயிரம் பேச்சுக்கு நிகரானது
பிரதமர் மோடி அவர்கள் தினமும் பதினெட்டு மணி நேரம் கடுமையாக உழைக்கிறார். நாடுமுழுக்க சுற்றுப்பயணம் செய்து மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி அவர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுகிறார். மோடி அவர்களே உங்களை 2014 இல் எதற்காக மக்கள்தேர்தெடுத்தார்கள் தெரியுமா? அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு மீது அவர்கள்கடும் ஆத்திரத்தில் இருந்தனர். நாட்டை முழுக்க காங்கிரஸ்காரர்கள் சுரண்டி விட்டனர் என்ற கடுங்கோபம் மக்களுக்கு இருந்தது உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக கையில் இருந்தும் முந்தைய காங்கிரஸ் மந்திரிசபையைச் சேர்ந்த ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை. திரு மோடி அவர்களே இங்கு என்ன தான் நடக்கிறது? இலஞ்சம் வாங்க மாட்டேம் இலஞ்சம் வாங்க விடவும் மாட்டேம் என்று நிங்கள் தேர்தல் மேடையில் முழங்கியதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களா? கொஞ்சமாவது நடவடிக்கை எடுங்கள் பிரதமரே. நீதி நிலைக்கட்டும்.; ஊழல் ஒழியட்டும்.
மர்ம மனிதனே — உன்னை இயக்கிய சூத்திரதாரி என்பதை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது
பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சி ஆள்வதை போன்ற ஒரு பிரமை ஏற்படுகின்றது என்பதை பலமுறை நமது ப் Gurus செய்தி தளம் சொல்லி வந்திருக்கிறது. இப்போது நேர்மையான அமலாக்கத்த் துறை அதிகாரி மீது அபாண்டமாக பழி சுமத்திய அந்த மர்ம மனிதன் யார்? அவனுக்குப் பின்னால் இருந்து அவனை இயக்கும் சூத்திரதாரி யார் என்பதை உலகுக்கு தெரிவிக்கும் தருணம் நெருங்கிவிட்டது. அவர் இந்திய கிரிக்கெட் மேட்ச்களில் பிக்சிங் செய்யும் கிரிக்கெட் கமிட்டியைச் சேர்ந்தவரா? பெரிய மனிதர்களை தனக்கு வேண்டியவர்கள் என்று சொல்லிக்கொண்டு மற்றவரை மிரட்டி காசு பறிக்கும் கூட்டத்தை சேர்ந்தவரா? ஒரு நேர்மையான அதிகாரியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதன் மூலமாக இப்போது நடைபெறும் நல்ல அரசாங்கத்தை பற்றி நீங்கள் என்ன எண்ணத்தை உருவாக்கப் போகிறீர்கள்?
அதாவது நேர்மை உடல்நலத்துக்கு ஊறு விளைவிக்கும்.. அப்படித்தானே என்று அவர்களிடம் கேட்டால் அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் தெரியுமா ‘’நீயும் சாப்பிடு எல்லோரையும் சாப்பிட விடு’’என்பார்கள்.
மோடி அவர்களே உங்கள் வீடு சிதைந்துவிட்டது – சரி செய்யுங்கள்.
மோடி உங்களின் வீட்டை நீங்கள் சரி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ராஜெஷ்வர சிங்குக்கு தடையாக நிற்கும் நிதி அமைச்சக அதிகாரிகளை அப்புறப்படுத்துங்கள். நீதி விசாரணை எவ்விதத் தடையும் இன்றி நடைபெற அனைத்து நடவடிக்கையும் எடுங்கள். ஊழலை எதிர்க்கும் உங்களின் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கும் நோக்கத்தில் முன்னாள் ஊழல் காங்கிரஸ் தலைவர்களைக் காப்பாற்றும் எண்ணத்தில் அந்த முயற்சியில் இறங்கியுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள். இந்தப் பணியில் இதுவரை நீங்கள் பூஜ்யம் மதிப்பெண் தான் பெற்றிருக்கிறீர்கள். அடுத்த தேர்தலிலும் நீங்கள் வெற்றி வாகை சூடி மறுபடியும் பிரதமராக வரவேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு நீங்கள் காங்கிரசில் ஊழல் செய்த பெரும்புள்ளிகளை பிடித்து சிறையில் தள்ள வேண்டும். இந்த அரசு ஊழலுக்கு எதிரான அரசு என்பதை மக்களிடம் நிரூபிக்க வேண்டும்.
அறுபது ஆண்டுகள் அரங்கேறிய அரசியல் அவலங்கள்,அத்துமீறல்கள்.
அடுத்து கெடுக்கும் அரசியல் அமைப்பு.
அவசரகாலசட்டம் அதற்கு அப்போது என்ன அவசியம் இருந்தது?
இன்று வரை விடை இல்லை
இந்திரா தான் இந்தியா
இந்தியா தான் இந்திரா
என்று கூவி களித்திருந்த கூட்டம்
இன்று வரை திருந்தவில்லை.
இந்நிலையில் இன்னும் ஒரு
அறுபது ஆண்டுகள்
ஆகுமோ…….
இல்லை இல்லை
இப்போதய ஆட்சி
இன்னும் இரண்டு முறை
வந்தாலே போதும்.நம்
இளைஞர்கள் அனைவரும்
அன்னப்பறவை போலவே
ஆட்சியரை அமர்த்துவர்
ஆராய்ந்து பார்த்த பின்.