மோடி அவர்களே மௌனச் சுவரைக் கிழித்து எறியுங்கள்

மோடி நிதி அமைச்சர் யார் என்பதை தெளிவுபடுத்தும் நேரம் நெருங்கிவிட்டது 

0
1483
மோடி நிதி அமைச்சர் யார் என்பதை தெளிவுபடுத்தும் நேரம் நெருங்கிவிட்டது 
மோடி நிதி அமைச்சர் யார் என்பதை தெளிவுபடுத்தும் நேரம் நெருங்கிவிட்டது 

அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் ரஷ்ய அதிபரை பார்த்து மௌன சுவரை கிழித்து விடுங்கள் கோர்பசேவ் என்றார். பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது கிழக்கு மேற்கு ஜெர்மனிகள் ஒன்றிணைந்தன. இந்தியாவில் பிரதம மந்திரி அலுவலகத்தில் ஒரு நிதி அமைச்சரும் நிதி அமைச்சகத்தில் இன்னொரு நிதி அமைச்சரும் இருந்து கொண்டு இரண்டு பேரும் இந்தியாவை நிர்வகித்து வருவது கண்டு இந்த செய்தி தளம் கவலைப்படுகிறது. . இந்த இருவரில் ஒருவர் காரியங்கள் மின்னல் வேகத்தில் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் நடப்பவை எல்லாம் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாகவே உள்ளன. மோடி அவர்களே யார் நம் நாட்டின் நிதி அமைச்சர்? இதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்

மோடி அவர்களே நாங்கள் உங்களின் ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையை மதிக்கிறோம்.

ஜி எஸ் டி [Goods and Services Tax Network (GSTN)] வரியை அறிமுகம் செய்த இந்த அரசு அதன் தொடர்ச்சியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை அறிய இந்த செய்தி தளம் ஆவலோடு காத்து கிடக்கிறது. இதுவரை கூடுதலாக கட்டப்பட்ட தொகையை என்ன செய்ய போகிறது இந்த அரசு? இந்த வரி கணக்குக்கு சி ஏ ஜி [Comptroller And Auditor General (CAG] உண்டா? இல்லையா? ஜி எஸ் டி வரியை வைப்பு நிதியாக கொண்டிருந்த பொது துறை வங்கியை [பாரத் ஸ்டேட் வங்கி] தவிர வேறு வங்கிகளில் வரித்தொகையை வைக்கும் எண்ணம் உண்டா? இந்த சந்தேகத்தை எல்லாம் நிதி அமைச்சர் தீர்த்து வைப்பாரா?

கடந்த சில மாதங்களில் ஜி எஸ் டி வரி பற்றிய பல பிரச்னைகள் எழுப்பப்பட்டு அவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக ஜி எஸ் டி டெண்டர் அனைத்தும் சர்வ ரகசியமானவை என்றும் அவற்றை தணிக்கைக்கு அனுப்ப இயலாது என்றும் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஹஸ்முக் ஆதியா இந்த தேசத்திடம் இருந்து எதையோ மறைத்துவிட  விரும்புகிறார். அது என்ன?

சி ஏ ஜி அதிகாரி சொல்வதை போல இந்த டெண்டர்கள் மறைக்கப்பட்டால் அவை தேசத்தின் கவனத்தை ஈர்த்த காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான விளையாட்டு [Common Wealth Games (CWG)] போட்டிகளில் நடந்த ஊழலை போலாகி விடும். அப்போது டெண்டர் தனியாருக்கு வழங்கப்பட்டது.  அதன் விதிமுறைகள் மறைக்கப்பட்டன. அதே நிலை தான் இப்போது ஜி எஸ் டி என்  டெண்டர்களிலும் நடந்துள்ளது. தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை அனைத்தும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.  இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

மோடி அவர்களே நாங்கள் உங்களின் ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையை மதிக்கிறோம்.  ஆனால் இந்தியா அதனை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பதற்கு முன்பு எத்தனையோ மைல்கள் பயணிக்க வேண்டியுள்ளது. முதலில் இந்தியாவின் நிதி அமைச்சர் யார் என்பதை உறுதி செய்துவிட்டு பிறகு இந்த குழப்பத்தை தெளிவு படுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here