தமிழ் நாடு பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு புகலிடமா?

தமிழ் நாட்டில் தீவிரவாதிகளும்  சமுக விரோத சக்திகளும் தங்கி இருப்பது உறுதியாகிவிட்டது

0
3186
தமிழ் நாட்டில் தீவிரவாதிகளும்  சமுக விரோத சக்திகளும் தங்கி இருப்பது உறுதியாகிவிட்டது
தமிழ் நாட்டில் தீவிரவாதிகளும்  சமுக விரோத சக்திகளும் தங்கி இருப்பது உறுதியாகிவிட்டது

தமிழ்நாட்டில் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்களோடு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் துப்பாகிகளோடு வலம் வருவதாக இன்னொரு நம்பத்தகுந்த வட்டாரமும் தெரிவிக்கிறது.

தீவிரவாதிகளை பற்றிய இந்த தகவல் ஒன்றும் கேள்விப்பட்டதல்ல இந்திய அரசை சேர்ந்த இருவரால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஆகும். ராஜ்ய சபா உறுப்பினரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன்சுவாமி சனிக்கிழமை அன்று தமிழ் நாட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் உலவுவதாக தெரிவித்தார்.

நிதி, தரைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறையின் அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணன் தீவிரவாதிகள், தேச விரோத சக்திகள் மற்றும் மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தனக்கு ரகசிய தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள்  குறித்து தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக சுவாமி ஆணித்தரமாகத் தெரிவித்தார். மேலும் ‘’தூத்துக்குடியில் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வித்திட்ட போராட்டம் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் இணைந்து திட்டமிட்டு நடத்திய போராட்டம் ஆகும். அவர்கள் அப்பாவி கிராமத்து மக்களைத் தூண்டிவிட்டு போராட்டத்துக்கு வரவழைத்து அவர்களை போலிசின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக்கிவிட்டனர். போலிசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான பதிமூன்று பேரில் எட்டு பேர் தீவிரவாதிகள் ;மீதி ஐந்து பேர் அப்பாவிகள்.’’ என்றார் சுவாமி.

சுவாமி ‘இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் இடது சாரியினர்  தங்களை சமாதானப் பேரணியில் கலந்துகொள்ளும்படி வற்புறுத்தினர்’ என்று  சொன்னதாகக் கூறினார்.  கிராமத்தினர் போராட்டம் எல்லாம் வேண்டாம் நாங்கள் வரவில்லை என்று மறுத்த போது அந்த மாவோயிஸ்டுகள்  போராட்டம் அமைதியாக நடக்கும் எந்தப் பிரச்சனையும் உங்களுக்கு வராது என்று உறுதியளித்துள்ளனர். ஆனால் வன்முறை வெடித்த பிறகு தான்   இந்த கிராமத்து ஜனங்களுக்கு ‘பேரணி என்ற பெயரில் நாம் பலிகடா ஆக்கப்பட்டோம்’ என்ற உண்மை உறைத்திருக்கிறது. என்று தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் சுவாமி தெரிவித்தார்.

மேலும் பேசுகையில் சுவாமி இந்த பிரச்சனை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றாக தெரியும் அவர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  ஆனால் இது போதாது. நிலைமை மோசமாகாமல் தடுக்க தமிழக அரசு  இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றார்.

1991 இல் திமுகவும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் கை கோர்த்த போது திமுக அரசு மத்திய அரசால் கலைக்கப்பட்டதையும் சுவாமி நினைவு கூர்ந்தார்.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இருக்கும் தீவிரவாதிகள் அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்து மக்களிடையே பீதியை கிளப்பி வருவதாக தெரிவித்த 24 மணி நேரத்தில் சுவாமியும் அக்கருத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாவட்ட சட்ட சேவை அமைப்பிடம் வந்த  மாடத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்த  மக்கள் இடதுசாரியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று எங்களுக்கு மூளைச் சலவை செய்து அழைத்து சென்றனர். இந்த போராட்டம் பெரிய அளவில் கலவரமாகி வன்முறை வெடித்ததால் பதிமூன்று பேர் போலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி விட்டனர். என தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், ‘’மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கைப்பற்ற எங்களை மக்கள் அதிகாரம் என்ற அமைப்பை சேர்ந்த இரண்டு வக்கீல்கள் தூண்டினர். இப்போது அவர்கள் இருவரும் தமக்கும் இந்த போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒதுங்கிக்கொண்டனர் இது எங்களுக்கு பயமாக இருக்கிறது’’. என்று ஒரு மனு அளித்துள்ளனர்.

மாடத்தூர் கிராமத்தை சேர்ந்த பொன் பாண்டி என்பவர் தன் மீது நாற்பது வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் ஆனால் தனக்கும் இந்த வன்முறைக்கும் யாதொரு தொடர்புமில்லை என்றும் தெரிவித்துள்ளார். அது போல திரேஸ்புரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாக அவர்களும் மாவட்ட சட்ட சேவை அமைப்புக்கு [DLSA] வந்து புகார் அளித்தனர். ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு தான் கிராமத்து மக்களை பிரச்சனையில் இழுத்துவிட்டதாக புகார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு இந்த வாரச் சட்ட மன்ற விவாதங்களில் முதலமைச்சர் பழனிச்சாமி மறுப்பேதும் சொல்லவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே என்று முதலமைச்சரை பார்த்து கேட்ட போது அவர் சில குழுக்களால் அமைப்புகளால் தமிழ்நாட்டுக்கு சில பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறினார். சில குழுக்கள் பிரச்சனைகளை உருவாக்கி அதன் மூலம் தான் பிரபலமடையக் கருதுகின்றன. இதனால் சில பிரச்சனைகள் நாட்டில் தோன்றுகின்றன. என்றார்.

முதல்வர் ஐ எஸ் ஐ எஸ் (ISIS) போன்ற தடை செய்யப்பட அமைப்புகள் மீண்டும் துளிர்க்கா வண்ணம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.  ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஏழு பேரை மாநில போலீசார் தேசிய புலனாய்வு அமைப்புடன் சேர்ந்து பிடித்து கைது செய்திருப்பதாகவும் அவர் சட்ட மன்றத்தில் தெரிவித்தார். அவர் சுவாமி மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்களை மறுக்கவோ அவற்றிற்கு கண்டனம் தெரிவிக்கவோ இல்லை.

தமிழ் நாட்டின் ஊடகங்கள் மாவோயிஸ்ட் மற்றும் தீவிரவாதிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன என்பது ராதாகிருஷ்ணனின் கருத்தாகும். ‘’ காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் மாவோயிஸ்ட் மற்றும் தேச விரோத சக்திகளின் அக்கிரமங்கள் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன. பரமக்குடியில் கைதான மாவோயிஸ்ட் தலைவர் காளிதாஸ் தெரிவித்த கருத்துக்கள் எந்த பத்திரிகையிலயும் டிவியிலும் வரவில்லை. மாவோயிஸ்டுகள் தமிழ் நாட்டை கைப்பற்றக் கூடிய தறுவாயில் இருக்கின்றனர். என்று காளிதாஸ் தெரிவித்தார் தமிழ்நாட்டை மாவோயிஸ்ட் மையமாக மாற்றும் முயற்சி முழு வீச்சில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இவை எதுவும் பெரிய பத்திரிகைகளில் வரவில்லை சில சிறிய தமிழ் பத்திரிகைகள் மட்டுமே இதனை செய்தியாக வெளியிட்டன.

அல்லையன்ஸ் பார் மீடியா என்ற பெயரில் ஒரு ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. இந்த அமைப்பில் மார்க்சிஸ்ட் ஆதரவாளரான இருவர் இந்து [The Hindu]பத்திரிகையின் அதிபர் ராம் மற்றும் டைம்ஸ் ஆப இந்தியாவின் [Times of India]ஆசிரியர்  அருண் ராம். இவார்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர். இந்த இருவரும் அண்மையில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களிடமும் புகைப்பட நிபுணரிடமும் அதிமுக அரசு காவல் துறை மூலமாக  கடுமையாக நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தி உள்ளனர். மக்களின் நியாயமான போராட்டங்களை அதிமுக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதாக குற்றம் சுமத்துகின்றன்ர்..

இந்த பத்திரிகை சுதந்திரம் என்ற அமைப்பு உருவாக அடிப்படை காரணம் என்னவென்றால் எட்டு வழி சாலை அமைக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக கிராமத்து அப்பாவிகளை தூண்டிவிட்டு இவை அவற்றை பரபரப்பு செய்தி ஆக்குவதை அரசு ஆதரிக்கவில்லை. மேலும் அந்த பகுதிக்கு செல்லும் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களையும் அரசு கைது செய்யவும் தயங்குவதில்லை. அதனால் இந்த பத்திரிகைகள் சுதந்திரம் கேட்டு ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளன.சேலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வருவாய் துறையினர் வந்து நிலங்களை அளந்த செய்த போது தமிழ் பத்திரிக்கை ஒன்று குறுக்கீடு செய்தது. அப்போது காவல் துறையினர் அந்த பத்திரிகையாளர்களை கைது செய்தனர்.

பெரும் மரியாதைக்குரிய பத்திரிகையாளரான எம் ஆர் சுப்பிரமணியன்  சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பயணம் செய்து முக்கிய பெரிய பத்திரிகைகளில் களத்தில் காணப்படவில்லை என்பதை உறுதி செய்தார்.  நில அளவையின் போது எங்குமே பிரச்சனை காணப்படவில்லை. தமிழக அரசு நிலத்துக்கு ஈடான நல்ல இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்பதை நில உரிமையாளர்களிடம் எடுத்து சொல்லவேண்டும். வழியில் எங்கேயும் மக்களிடம் எதிர்ப்பு காணப்படவில்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.  இவருடைய நெடிய பயணமும் அனுபவமும் சுயராஜ்யா என்ற மாத இதழில் [ஜுலை] விரிவாகத் தரப்பட்டுள்ளது.

மின்னணு பத்திரிகையான ‘இப்போது’ என்ற இதழின் முக்கிய செயல் அதிகாரியாக இருக்கும் பீர் முகம்மது என்பவர் இந்த அலையன்ஸ் ஃபார் மீடியா ஃப்ரீடம் அமைப்புக்கு தலைவராக இருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் அனைத்து பத்திரிகையாளர்களையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருவேன் என்றார். ‘’இது காலத்தின் கட்டாயம். நாங்கள் வெவ்வேறு கருத்தியலை பின்பற்றலாம். ஆனால் அனைவரும் உண்மையை கொண்டு வரும் ஒற்றை குறிக்கோளில் தான் செயல் படுகிறோம்.அதிகாரிகள் உண்மையை பிரசுரிக்க விடாமல் மறைக்க முயல்கின்றனர். இதை முகத்தில் அறைவது போல நாங்கள் கண்டிக்க வேண்டும்’.  என்றார்.

பீர் முகம்மதுவை பொருத்தவரை அதிமுக அரசு தூத்துக்குடி கலவரங்களை பற்றிய உண்மையை வெளியே விடக் கூடாது என்று கருதுகிறது. எட்டு வழிச் சாலைக்கு மக்களிடையே இருக்கும் எதிர்ப்பு பத்திரிகைகளிடம் வந்துவிடக் கூ’டாது என்று நினைக்கிறது என நம்புகிறார் அனால் அவர் தனது கருத்தை உறுதி செய்யும் வகையில் ஆதாரங்களை தர முடியவில்லை.  நல்ல வேளை! ஹிண்டு பத்திரிகையின் நிருபர் ராஜேஷ் தூ’த்துக்குடி கலவரம் நடந்த மறு நாள் வெளியிட்ட செய்தியில்  கலவரத்தின் பொது தான் போட்டோ எடுத்த கேமராவை போலீசார் தன்னிடம் இருந்து பறித்துக்கொண்டு அதில் இருந்த படங்களை நீக்கிவிட்டு பின்பு தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இச்செய்தி பீர் முகம்மதுவின் கருத்துக்கும் நம்பிக்கைக்கும் ஓர் ஆதாரம் ஆயிற்று.

இந்த Alliance for Media Freedom என்ற அமைப்பு மத்தியில் உள்ள பி ஜே பி அரசை பற்றி தவறான செய்திகளை வெளியிட ராம் & ராம் ஆகியோரால் திட்டமிட்டு தொடங்கப்பட்ட அமைப்பாகும். இவர்கள் அதிமுக அரசைக் குறை கூறி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசசைக்  கொண்டு வர முயல்கின்றனர். முக்கிய செய்திகளயும் மேம்பாட்டு திட்டங்களையும் பற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு அரசுக்கு எதிரான செய்திகளை கூறி மக்களை நம்ப வைப்பதே இவர்களின் நோக்கம் ஆகும்.

நியுஸ் 18 டிவி சேனலின் ஆசிஃப் என்பவர் இன்னொரு பத்திரிகையாளர் அமைப்பை உருவாக்கி உள்ளார்.  இது Journalists For Change என்ற பெயரில் உருவாகி உள்ளது.  இந்த அமைப்பு மோடிக்கு எதிராகவும் இந்துத்துவாவுக்கு எதிராகவும்  இளம் பத்திரிகையாளருக்கு பயிற்சி அளிக்கும். என்று அவருடன் இணைந்து பணியாற்றும் ஓரு சக பத்திரிகையாளர் தெரிவித்தார். இவர் தான் பயிற்சி திட்டத்துக்கான பாடங்களை உருவாக்கி வருகிறார். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here