ஐ சி ஐ சி ஐ வங்கித் தலைவி  சந்தா கோச்சார் பிடிபட்டது எப்படி?

ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து வீடியோகான் ஊழலில் ஐ சி ஐ சி ஐ வங்கியின் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் & வி என் தூத் மீது சி பி ஐ வழக்கு பதிவு செய்தது

0
2334
ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து வீடியோகான் ஊழலில் ஐ சி ஐ சி ஐ வங்கியின் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் & வி என் தூத் மீது சி பி ஐ வழக்கு பதிவு செய்தது
ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து வீடியோகான் ஊழலில் ஐ சி ஐ சி ஐ வங்கியின் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் & வி என் தூத் மீது சி பி ஐ வழக்கு பதிவு செய்தது

2010ஆம் ஆண்டு முதல் நிதி அமைச்சகத்தில் சந்தா கோச்சாரின் ஊழல் பற்றி பேசப்பட்டு வந்தது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் வீடியோகானுக்கு 2௦12இல் மொசாம்பிக் என்ற இடத்தில் எண்ணெய் எடுக்க தடையில்லாச் சான்றிதழ்  வழங்கினார்.

சந்தா கோச்சாரின் ஊழல் நிதி அமைச்சகத்துக்கு நன்கு தெரிந்து தான் நடந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் இவ்விஷயம் அந்த அமைச்சகத்துக்கு தெரிந்திருந்தது.

வீடியோகான் நிறுவனத்துக்கு ஐ சி ஐ சி ஐ வங்கியின் தலைவி சந்தா கோச்சார் விதிமுறைகளை மீறி முறைகேடாக கடன் வழங்கியதாக குற்றம் சுமத்தி  சி பி ஐ அவர் மீதும் அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகானின் மேலாண் இயக்குனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்தது.  இந்த முறைதவறிய கடனால் இந்த வங்கிக்கு Rs 1,730 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சந்தா கோச்சாரின் ஊழல்

நமது செய்தித்தளம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி சந்தா கோச்சாரின் ஊழல் பற்றி செய்தி வெளியிட்டது. இச்செய்தியின் அடிப்படையில் உடனே மறு நாளே ஐ சி ஐ சி ஐ வங்கி நடவடிக்கை எடுத்தது. ஐ சி ஐ சி ஐ  வங்கியின் நடவடிக்கையை வைத்து இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

வீடியோகான் நிறுவனத்துக்கு மிகப் பெரிய தொகையாக 35௦௦ கோடி ருபாய்  கடன் கொடுத்ததாகவும் சந்தாவின் கணவர் தீபக் கோச்சார் விடியோகானில் இருந்து அப்பணத்தை  தன்னுடைய நிறுவனங்களுக்கு எடுத்துக் கொண்டு போனதாகவும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டன. 2௦16 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு சிறிய நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் குப்தா பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதி அமைச்சககத்தின் தலைமை அதிகாரிகளுக்கும் சி பி ஐ போன்ற புலனாய்வு அமைப்புகளுக்கும் இந்த ஊழலை விசாரிக்கும்படி கடிதம் எழுதி கேட்டுக்கொண்டார். ஐ சி ஐ சி ஐ வங்கியின் விளம்பரத்தால் பயனடைந்திருந்த ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடத் தயங்கின.

ஆனால்  அரவிந்த் குப்தா ஒவ்வொரு ஊடக அலுவலகத்தின் கதவையும் தட்டி நீதி வேண்டும் என்று குரல் எழுப்பினார். பின்னர் ஊடகங்கள் குப்தாவின் குரலுக்கு செவி சாய்த்து செய்தி வெளியிட்டன. தொண்டு நிறுவனம் வைத்திருக்கும் அனில் என்பவர் ஒரு புகார் அளித்தார். மேலும் தான் வெளியிடும் சிறு பத்திரிக்கை ஒன்றில் ஐ சி ஐ சி ஐ ஊழலை வெளிப்படுத்தினார். அரவிந்த் குப்தா தன்னுடைய வலைப்பூ [ப்ளாக்] ஒன்றிலும்  இத்தகவல்களை வெளியிட்டார். அரவிந்த் குப்தா மார்ச் மாதம் 25ஆம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் நமது செய்தித்தளமான பி குருஸ் செய்திகள் வெளியிட்டது.

சந்தா கோச்சாரின் ஊழல் நிதி அமைச்சகத்துக்கு நன்கு தெரிந்து தான் நடந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் இவ்விஷயம் அந்த அமைச்சகத்துக்கு தெரிந்திருந்தது. இருந்தும் ப. சிதம்பரம் 2௦12இல் வீடியோகான் நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கினார். ஆப்பிரிக்காவில் மொசாம்பிக் என்னும் இடத்தில் எண்ணெயின் இருப்பை கண்டறிய நிதி அமைச்சகம் ஐ சி ஐ சி ஐ வங்கி வீடியோகானுக்கு நாற்பதாயிரம் கோடி கடன் வழங்கும்படி  பரிந்துரை செய்தது.  ஏற்கெனவே 2ஜி ஊழலில் மாட்டிய ப. சிதம்பரம்  எங்கேயோ ஆப்பிரிக்காவில் இருக்கும் மொசாம்பிக் என்னும் இடத்தில் எண்ணெய் இருக்கிறதா என்பதை கண்டறிய விடியோகானுக்கு கடன் வாங்கும்படி ஐ சி ஐ சி ஐ  வங்கியை ஏன் நிர்பந்தித்தார் என்பதை இன்று வரை யாரும் கேட்கவில்லை.

2018இல் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி நம் செய்தித்தளம் இந்த மாபெரும் ஊழல் பற்றி மீண்டும் செய்தி வெளியிட்டது. இப்போது ஒரு வருடம் கழித்து சி பி ஐ சந்தாவை குற்றவாளி என வழக்குப் பதிவு செய்திருக்கிறது. வீடியோகானுக்கும் அதனுடன் தொடர்புடைய வேறு பல நிறுவனங்களுக்கும் மொத்தம்  1,875  கோடி ருபாயை ஆறு தவணையாக கடன் வழங்கியது தொடர்பாக இப்போதைய ஐ சி ஐ சி ஐ வங்கியின் தலைவரான சந்தீப் பக்க்ஷி முதல் பழைய அதிகாரிகளான சஞ்சய் சாட்டர்ஜி, ஜரின் தருவாலா, ராஜீவ் சபர்வால், கே வி காமத், ஹோமி குஸ்ரோகான் ஆகியோர் மீதும் வாழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு வழக்கு பதிவானதும் சி பி ஐ அதிகாரிகள் வியாழன் அன்று அதிகாலை மும்பையும் அவுரங்காபாத் நகரிலும் உள்ள வீடியோகான் நிறுவனத்துக்கு சொந்தமான நியு பவர் ரேநியுபில்ஸ் மற்றும் சுப்ரீம் எனர்ஜி நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இந்த நிறுவனம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் நடத்தி வருவதாகும். சுப்ரீம் எனர்ஜி என்ற நிறுவனம் ஒரு காலத்தில் தூத் வசம் இருந்தது..

வீடியோகான் நிறுவனத்துக்கு சொந்தமான வேறு சில நிறுவனங்களுக்கு முறைகேடாக 3,250 கோடி கடன் வழங்கியது தொடர்பாக முதல் கட்ட வழக்கு பதிவு தாக்கல் செய்யப்பட்டது.

சுப்ரீம் எனர்ஜி என்ற நிறுவனத்தில் தூத் 64 கோடி ருபாய் முதலீடு செய்திருப்பது தொடர்பாகவும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here