புரட்டு செய்திகளின  புகலிடமான இடதுசாரி ஊடகங்கள் பொய்களைப் பரப்புகிறது

மார்க்ஸ் யார் அம்பேத்கர் யார் என்பதை அறியாத இடதுசாரிகளின் போலி கருத்தாக்கத்தை ஆசிரியர் விமர்சிக்கிறார்

0
2206
மார்க்ஸ் யார் அம்பேத்கர் யார் என்பதை அறியாத இடதுசாரிகளின் போலி கருத்தாக்கத்தை ஆசிரியர் விமர்சிக்கிறார்
மார்க்ஸ் யார் அம்பேத்கர் யார் என்பதை அறியாத இடதுசாரிகளின் போலி கருத்தாக்கத்தை ஆசிரியர் விமர்சிக்கிறார்

இடதுசாரி புரட்டுச்செய்தி இணையதளம் ‘நியுஸ்லாண்டரி’ புரட்டு கருத்துகளை எப்படி திணிக்கிறது…

‘நியுஸ்லாண்டிறி’ புரட்டுச்செய்தி இணையதளம் என்பதற்கு எண் 1–4-லுள்ள ஆங்கில மேற்கோள்களை காண்க.

கேரள மாநிலத்தில் ஆட்சியிலுள்ள கட்சி இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆகும். மார்க்ஸிஸ்ட் என்றால் கம்யுனிஸத்தின் தந்தையான கார்ல் மார்க்ஸை பின்பற்றுபவர்கள். மதசார்பற்ற அந்த கம்யுனிஸ தலைவர் இந்திய கம்யுனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சிக்கு மிகவும் நெருக்கமான மதத்தினர் பற்றி கூறியதை பார்ப்போம்: “கிறிஸ்தவ நாடு பறிப்பு ஆட்சி முறைப்பற்றி வில்லியம் ஹௌவிட் கூறியது போல ஈவு ஈறக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக கொடூர பேராசையுடன் உலகெங்கும் கிறிஸ்தவ இனம் மக்களை சூரையாடி அடிமைப்படுத்தியவிதம் புவியில் எக்காலத்திலும் மனிதக்குலம் காணாத ஒரு இழிவு.”

இதற்கு வேறு அர்த்தம் கொடுக்க இடதுசாரி நினைக்கும். ஆனால் மார்க்ஸின் அந்த கட்டுரையின் தலையங்கத்தைப் பார்த்தால் அவர் கிறிஸ்தவர்களை மிக அடிமட்டமான எண்ணம் உள்ளவர்களாகவே கருதியுள்ளார் என்று ஐயமில்லாமல் மீண்டும் உறுதி செய்யலாம்: “பெரும் திருட்டு, அடிமைப்படுத்துதல், இனப்படுகொலை மற்றும் பல விதமான ஏமாற்று சாதனங்கள், குறிப்பாக கிழக்கத்திய நாடுகளில், கிறிஸ்தவ ஏகாதிபத்தியம் தனது சொத்தை பெருக்கிக்கொள்ள பயன்படுத்திய விதமும் செயல்முறைகளும்” என்று உள்ளது அந்த தலையங்கம்.

பாரத ரத்தினம் டாக்டர் அம்பேத்கரும் அதையே வேறு விதமாக கூறியுள்ளார்: “தாழ்த்தப்பட்டோர் இஸ்லாமியத்தையோ கிறிஸ்தவத்தையோ தழுவினால் அவர்கள் இந்து மதத்திலிருந்து போகவில்லை இந்து கலாச்சாரத்திலிருந்தும் போய்விடுகிறார்கள்… ஆகையால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதமாற்றம் அவர்களை இந்தியர்கள் அல்லாதவர்களாக (denationalise) மாற்றுகிறது… அவர்கள் இஸ்லாமியத்தை தழுவினால் முஸ்லிம் எண்ணிக்கை அதிகரித்து அது இஸ்லாமிய ஆதிக்கம் என்ற அபாயத்திற்க்கு வித்திடும்… அவர்கள் கிறிஸ்துவத்தை தழுவினால் கிறிஸ்தவ எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு கோடியாக உயரும். அத்தகைய நிலை வெள்ளையரின் அடிமை ஆட்சியை வேரூன்ற செய்துவிடும்.” இது ஏதோ ஒரு முறை அவர் கூறிய கருத்து அல்ல.

அவர் கடைசிகாலத்திலும் கூட இதையே கூறினார்: “புத்த மதம் (பௌத்த மதம்) பாரத தேசத்தின் ஒரு மறுக்க முடியாத அங்கம். ஆகையால் நான் அந்த மதத்தை தேர்ந்தெடுத்தேன்.. இச்செயலால் (பௌதத்தை தேர்ந்து எடுத்ததால்) நான் பாரததின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் வரலாற்று பெருமை பாதிக்கப்படாமல் நான் பார்த்துக்கொண்டுள்ளேன். எனக்கும் மேல் சாதி இந்துக்களுக்கும் சில வாக்குவாதம் இருந்தாலும் நான் சபதமாக கூறுவது என்னவென்றால் நான் இந்த பாரத தேசத்திற்காக என் உயிரையே கொடுப்பேன்.”

உலகில் எங்குமே எந்த காலத்திலுமே காணயியலாத அளவுக்கு கொடுரமான ஈவு இறக்கமற்ற தீயவர்கள் கிறிஸ்தவ இனத்தினர் என்றும் அவர்கள் கொள்ளையர்கள், இனப்படுகொலையாளர்கள், பிறரை அடிமையாகி ஏகாதிபத்தியம் செய்பவர்கள், ஏமாற்று முதலைகள் என்றும் கூறிய மார்க்ஸின் கொள்கைகளை கொண்டாடும் கம்யுனிஸ்ட் கட்சி இந்தியாவில் இருக்கலாம் மாநிலங்களை ஆட்சி செய்யலாம் ஆனால் இந்துக்களே இந்துக்களுக்கு உதவுங்கள் என்று ராஜீவ் மல்ஹோத்ரா மட்டும் கூறக்கூடாது என்பது என்ன நியாயம்?

அவர் இந்துக்கள் அல்லாதவருக்கு உதவாதீர்கள் என்று கூறவில்லையே. அம்பேத்கரும் மார்க்ஸும் கூறியது போல் கூட அவர் எதுவும் கூறவில்லையே! சொல்லப்போனால் அவர் இடதுசாரி மற்றும் இந்திய கம்யுனிஸ பொய்யர்களைவிட அம்பேத்கருக்கும் மார்க்ஸுக்கும் உண்மையாக இருக்கிறார் என்று தான் அவர் கருத்து நிருபணம் செய்கிறது.

இருப்பினும் ராஜீவ் ஏதோ இந்து அல்லாதவர்களுக்கு உதவாதீர்கள் என்று கூறியது போலவும் மார்க்ஸ் அம்பேத்கர் கூறியதைவிட அதிகமாக கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் சாடியது போலவும் கட்டுக்கதைகள் கட்டுகிறது இடதுசாரி போலி செய்தி ஊடகங்களும் இணையதளங்களும். இது தான் பேச்சுரிமை என்று வெறும் முதலை கண்ணீர் விடும் இடதுசாரி முகத்திரையின் பின்னுள்ள உண்மை.

என்ன மார்க்ஸும் அன்னல் அம்பேத்கரும் தவறா? இல்லையே.அப்பொழுது அவர்கள் அளவுக்குக் கூட கடுமையாக பேசாத ராஜீவை ஏன் இவர்கள் பொய்யாக தாக்குகிறார்கள்?

இவர்களின் உண்மை நோக்கம் என்ன?

இவ்வாறென்றால் இவர்கள் அம்பேத்கர் துரோகிகள் தானே?

Note:
1. இங்கே வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஆசிரியருக்கு சொந்தம், இதை PGurus கருத்துக்களாக எடுத்து கொள்ள கூடாது.
2. இந்தக் கட்டுரையை திருத்தங்கள் மீளாய்வு செய்ததற்கு திரு கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here