ஜேட்லிக்கு நல்ல பாடம்

அருண் ஜெட்லி! சோனியா குடும்பத்துக்கு பரிவு காட்டுவதால் நல்ல பாடம் படித்தீர்களா?

0
1954
அருண் ஜெட்லி! சோனியா குடும்பத்துக்கு பரிவு காட்டுவதால் நல்ல பாடம் படித்தீர்களா?
அருண் ஜெட்லி! சோனியா குடும்பத்துக்கு பரிவு காட்டுவதால் நல்ல பாடம் படித்தீர்களா?

மல்லையா நாட்டை விட்டு ஓடிப்போனதற்கு நீங்கள் இப்போது நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். ராகுல் நிதி அமைச்சக விஷயங்களுக்குள் ஊடுருவியதால் ஜேட்லி செய்திருந்த நல்லவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன.

அருண் ஜேட்லி அந்த குடும்பத்துடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அவர்கள் மீது எடுக்கும் அனைத்து நடவடிக்கையும் பிசு பிசுத்து போய்விடுவதுண்டு.

பி ஜெ பி கட்சியினர் சிலரும் சோனியா காந்தி குடும்பத்தை இந்தியாவின்
முதல் குடும்பம் எனப் போற்றி (உண்மை அதுவல்ல என்றாலும்) வருவதால் அண்மையில் மல்லையா ஜேட்லி அவர்களின் பெயரை குறிப்பிட்டது அவர்கள் அனைவருக்கும் நல்ல பாடமாக அமைந்தது.

அருண் ஜேட்லி அந்த குடும்பத்துடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அவர்கள் மீது எடுக்கும் அனைத்து நடவடிக்கையும் பிசு பிசுத்து போய்விடுவதுண்டு. நேஷனல் ஹெரால்டு வழக்கை எடுத்துக்கொள்ளுங்கள் பர்க்கா தத் என்பவர் நடத்திய நேர்காணலில் கடனாகப் பெற்ற தொண்ணூறு கோடியை திருப்பி தந்துவிட்டால் வழக்கு முடிந்துவிடும் என்று ஜேட்லி சாதாரணமாக சொல்லி இருக்கிறார்.
நீதிமன்றம் மற்றும் வருமான வரித்துறை தொடர்பு கொண்டுள்ள ஒரு வழக்கில் ஜேட்லி எப்படி இவ்வாறு பொறுப்பற்ற முறையில் போகிற போக்கில் ஒரு கருத்தை எப்படி சொல்லலாம்? வருமான வரி துறைக்கு இவர் ‘கோடி’ காட்டுகிறாரா? தொண்ணூறு கோடி ரூபாயை கட்டச் சொல்லி வழக்கை முடித்து விடுங்கள் என்று குறிப்பு காட்டுகிறாரா?

ஜேட்லியும் டில்லி மாவட்ட கிரிக்கட் கழகமும்

ஜேட்லி கிரிக்கட் பிரியர் அல்ல; வெறியர் என்பது இங்கு இருக்கும் படத்தை பார்த்தாலே உங்கள் அனைவருக்கும் புரியும். டில்லி கிரிக்கட் கழக நடவடிக்கைகளே ஜேட்லியின் பலவீனம் என்பது ஊரறிந்த ரகசியம். சோனியா காந்தியின் ஆதரவில்லாமல் ஜேட்லியால் ஒரு நிமிடம் கூட டில்லி கிரிக்கட் கழகத்தில் [DDCA (Delhi District Cricket Association) இருக்க இயலாது. எனவே அவருக்கு கிரிக்கட் ஆசை காரணமாகவும் சோனியாவின் அதரவு தேவைப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக ஜெட்லி இந்த கிரிக்கட் கழகத்தின் பொறுப்பாளராக இருந்து வந்தார்.

இப்போது அவரது நண்பர் ரஜத் ஷர்மா அந்த பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த அரசியல்வாதிகள் பிஷான் சிங் பேடி என்பவரையும் பி ஜே பி கட்சியில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான 1983இல் உலகக் கோப்பை வெற்றி குழுவில் இருந்த கீர்த்தி ஆசாத் என்பவரையும் கிரிக்கட் குழுவில் இருந்து தூக்கி எறிந்து விட்டனர். சோனியா காந்தி குடும்பத்தாரிடம் ஜேட்லி காட்டும் பரிவு அவரை எந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது என்று பாருங்கள். விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதும் ஜேட்லியிடம் நன்றியில்லாத ராகுல் காந்தி அவரது நிதி அமைச்சகத்தைக் கடுமையாகச் சாடினார். தங்களின் அட்டூழியங்களுக்கு இடம் கொடுக்காதவர்களைக் கழுத்தை நெறிக்கும் கொடூர செயலை செய்யத் துணிந்த சோனியா குடும்பத்தினர் தங்களுக்கு இதுவரை ஆதரவாக செயல்பட்டு வந்த ஜேட்லியை இப்போது விஜய் மல்லையா வழக்கில் சாடி வருகின்றனர்.. நிதி அமைச்சராக இருந்த ஜேட்லி சோனியா குடும்பத்தினர் செய்த ஊழலுக்கு எதிராக நடந்த பல வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தார். இந்த ஊழல் வழக்குகள் தான் பி ஜே பி கட்சி மத்தியில் ஆட்சிக்கு வர உதவின. ஆனால் சோனியா குடும்பத்தினர் ஜேட்லி தங்களுக்கு செய்த உதவியையும் அவர் காட்டிய
கருணையையும் சுத்தமாக மறந்து விட்டனர்.

பி ஜே பி கட்சி பல காலமாக காப்பாற்றி வந்த தொகுதியை இழந்த காரணத்தால் அந்த தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அங்கு நின்று தோற்றுப் போன அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கியது. இது பிரதமர் நரேந்திர மோடி செய்த தவறாகும். இது தவிர அருண் ஜேட்லிக்கு மோடி பாதுகாப்பு, தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை போன்ற முக்கிய துறைகளையும் வழங்கி கௌரவித்தார். அருண் ஜேட்லியுடனான பெரிய சிக்கல் என்னவென்றால் அவர் எப்போதும் வக்கீலாகவே செயல்படுவார். டாடா, அம்பானி, எஸ்ஸார் போன்ற நிறுவன்ங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பாம்பே கிலப்பின் [Bombay Club] வழக்கறிஞராகவே அவர் இன்றும் செயல்படுகிறார். அரசு தரப்பில் இருந்துகொண்டே எதிர் தரப்பு வக்கீல் போலப் பேசி விடுவார். பிரதமர் இன்னும் ஏன் இவரை நிதி அமைச்சகத்துக்குள் விடுகிறார் என்பது தெரியவில்லை. பியுஷ் கோயல் நிதி அமைச்சகப் பணிகளை நன்கு கவனித்து வருகிறார். சரக்கு மற்றும் சேவை வரியில் ஏற்பட்ட தவறுகளையும் சரி செய்து வருகிறார். மக்களின் தேவைகளை முன்னிறுத்தி தன் அமைச்சகப் பணிகளை செம்மையாக அவர் செய்துவரும்பொது நோய்க்கிருமி போல ஜேட்லி அங்கு புகுந்துகொண்டு ஏதாவது கோளாறு செய்துவிடுகிறார்.

சோனியா காந்தி மற்றும் அகஸ்டா வெஸ்ட்லேன்ட் உறவு

ஊழல் பேர்வழியான சோனியா குடும்பத்தினருடன் ஜேட்லி கொண்டிருக்கும் ஆழமான தொடர்புக்கு இன்னொரு சம்பவத்தையும் எடுத்துக் காட்டலாம். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜ்ய சபாவில் சுப்பிரமணியன் சுவாமி சோனியா காந்திக்கு தொடர்புடைய அகஸ்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழல் குறித்து முதன்மையேற்று பேசுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று பி ஜே பியின் பூபேந்தர் யாதவ் இந்த ஊழல் குறித்து பேசத் தொடங்கினார். இருபது நிமிடங்களாக அவர் என்னென்னவோ பேசினார் ஒரு முறை கூட சோனியா என்ற பெயரை உச்சரிக்கவில்லை. ஊழலில் சோனியாவின் பங்கு பற்றி பேசவில்லை. அன்று ஜேட்லி அவைக்கு வரவில்லை. அவர் சுவாமி சோனியா பற்றி பேசுவதை விரும்பவில்லை என்பதால் அன்று வராமல் இருந்துவிட்டார். இச்சம்பவத்தால் ஜேட்லிக்கு சோனியா குடும்பத்தின் மீதான பாசம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. யாதவின் பேச்சு சலிப்பூட்டியது அதன் பிறகு பேசத் தொடங்கிய சுவாமி முகத்துக்கு நேராக சோனியாவைச் சாடினார். இது போன்ற நேர்முகச்சாடலை இந்தியப் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பார்ப்பது அரிது…

சில நாட்கள் கழித்து மக்களவையில் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு உறுப்பினர் அல்லாத ஜேட்லி அமைச்சர் என்ற தோரணையில் வந்து வீற்றிருந்தார். சோனியா காந்தியும் அங்கு அமர்ந்திருந்தார். அவர் ஏன் வந்தார்? அவருக்கு அங்கு என்ன வேலை? ராஜ்ய சபாவில் நடந்தது போல அங்கு தன்னை எவரும் தாக்க மாட்டார்கள் என்று அவருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த்தால் அவர் வந்திருந்தார். மக்களவையில் பெரும்பானமை ஆதரவு பெற்றிருந்த பாரதீய ஜனதா கட்சி ஊழலில் தொடர்புடைய சோனியாவை ஒரு வார்த்தை கூடக் கடுமையாகப் பேசாதது மிகப் பெரிய வெட்கக்கேடான விஷயம் ஆகும். அன்றைய நடவடிக்கைகள் இவ்வாறு சுமூகமாக சென்றதற்கு அருண் ஜேட்லியே சூத்திரதாரி ஆவார். தன் நெருங்கிய நண்பரான ப சிதம்பரத்தை ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் இருந்து காப்பாற்ற ஜேட்லி மேற்கொண்டு வரும் முயற்சிகள் படு கேவலம். வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிவிட்ட நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் வைர நகைக் நிறுவனங்களுக்கு ஜேட்லியின் மகளே சட்ட ஆலோசகர் ஆவார். 2017ஆம் ஆண்டு டிசமபர் மாதக் கடைசியில் அப்பெண் சட்ட ஆலோசனைக்கு கட்டணம் பெற்றுள்ளார். அவர் தான் நீரவ் மோடிக்கு ஓடி போகும்படி ஆலோசனை வழங்கினாரோ? அதற்கு தான் கட்டணம் பெற்றாரோ?

இதை ஊடகங்கள் வெளியிடாத வகையில் தன் சொந்த செல்வாக்கை கொண்டு ஜேட்லி மறைத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியும் அப்போது இதை கிளறவில்லை. ஆனால் இனி காங்கிரஸ் அமைதியாக இருக்க போவதில்லை. ஓடிப் போனவர்களைப் பற்றி கடுமையாகத் தாக்கிப் பேசத் தொடங்கிவிட்டது. இனி ஜேட்லியும் அவர்களின் தாக்குதலில் இருந்து தப்ப இயலாது. விஜய் மல்லையா மற்றும் அவரது நிறுவனங்களுடன் ஜேட்லிக்கு சட்ட ரீதியான தொடர்பு இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கர்னாடகாவின் பி ஜே பி கட்சி தலைமை பொறுப்பை ஏற்றிருந்த ஜேட்லி அந்த மாநிலத்தில் இருந்து விஜய் மல்லையாவை மாநிலங்கள் அவையின் உறுப்பினராக்க உதவினார். இது தவிர விஜய் மல்லையாவுக்கு அருண் ஜேட்லிக்கும் நல்லுறவு உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆகும். இல்லையென்றால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இன்டியா, ஐ டி பி ஐ [IDBI] ஆகிய பொதுத்துறை வங்கிகள் மல்லையா தங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தாத காரணத்துக்காக அவரைக் கைது செய்து 2015 இல் சிறையில் தள்ளியிருக்கும்.

ஜேட்லி அவர்களே இந்த நாட்டு மக்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். சி பி ஐ விஜய் மல்லையாவைத் தேடுவோர் பட்டியலில் சேர்த்த விவரம் வலுவிழந்து போனது பற்றி எப்படி? ஏனெனில் புகார் கொடுத்த வங்கிகள் “நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்தால் மட்டுமே சி பி ஐ தான் தேடுவதை நிறுத்தும். தேடுவோர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கும். அப்போது இரண்டு ஆண்டுகளாக ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் தன் பணிக்காலத்தை வீணாகச் செலவிட்ட அனில் சின்ஹா என்ற சி பி ஐ இயக்குனர் முழுக்க முழுக்க அருண் ஜேட்லியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

பிரதமர் மோடி சி பி ஐ க்கு புதிய இயக்குனராக அலோக் ஷர்மாவை நியமித்தபோது அவரிடம் ப சிதம்பரம் கோஷ்டியினர் நடத்திய ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்த போது வலுவான வேட்பாளரை நிறுத்தி ஜேட்லியை தோற்கடித்த்து காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்களான சோனியாவும் ராகுலும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். பின்னர் ஜேட்லி தொடர்ந்து தன் ஆதரவை அவர்களுக்குக் காட்டுவது சரியா என ஆலோசிக்க வேண்டும். இப்போது ராகுல் காந்தி எள்ளளவும் இரக்கம் இல்லாமல் ஜேட்லியை விமர்சிக்கிறார்.

ஜேட்லி இதுவரை அந்த குடும்பத்திடம் பாசத்தோடும் பரிவோடும் நடந்து கொண்டதற்கு அவருக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை. இப்போது ஜேட்லி மீது சோனியா குடும்பத்தினரே சேற்றை வாரிப் பூசுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here