சாம் கோஷ்டியினர் மோடியின் பெயரை கெடுப்பதில் காட்டும் தீவிரத்தை புரிந்து கொண்டு அவர்களின் சதியை நாம் முறியடிக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். போர்ப்படை தனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்’ என்றார் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம். விழிப்புடன் செயல்படுவது நமது முதல் கடமை ஆகும். எதிரிகளின் சதியை முறியடித்தால் மட்டுமே மோடி அவர்களின் பெயரை காப்பாற்றி, நாம் நெருங்கி வரும் பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறமுடியும்.
அண்மையில் சமுகவலைத் தளங்களில் பி ஜே பி யின் அயல் நாட்டு நண்பர்கள் மோடியின் வெற்றிக்கு அரும்பாடு படப்போவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி வந்துள்ளது. இது போன்ற தகவல்களை வெளியே கசிய விட வேண்டாம். எதிர் தர்பப்பினர் எச்சரிக்கை அடைய இது வழி வகுக்கும். அவர்கள் இன்னும் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கி விடுவர். நாம் நம் பணிகளை செவ்வனே செய்வோம். வீண் விளம்பரங்கள் நமக்கு வேண்டாம்
காங்கிரஸ் கட்சியின் அயல் நாட்டு இந்திய நண்பர்கள் குழு சாம் பிட்ரோடா என்பவரின் தலைமையில் சிகாகோவில் இருந்து செயல்படுகிறது. இவர்களின் ஆலோசனையின் மற்றும் வழி காட்டுதலின் பேரில் தான் காங்கிரஸ் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் செயல்பட்டு வெற்றிக்கனியை நம்மிடம் இருந்து தட்டி பறித்தது. இதே சாம் பிட்ரோடா தான் அன்று ராஜீவ் காந்திக்கு ஆலோசனைகள் கூறி இந்தியாவின் தொலை தொடர்பு துறையை நவீனப்படுத்த உதவினார். அன்று முதல் இன்று வரை இவர் ராஜீவ் காந்தியின் குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருந்து வருகிறார். அவருக்கு இந்திய அரசியல் அத்துப்படி,. இவர் தான் ரஃபேல் ஊழலை ஊதி பூதாகரமாக்கும்படி ராகுலுக்கு அறிவிரை கொடுத்தார். பி ஜே பி க்கு எதிராக பல விஷயங்களை சொல்லிக் கொடுத்து அவற்றை மூன்று சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலும் பயன்படுத்தும் முறைகளை கற்பித்து மோடியின் பிம்பத்தை குலைத்து போட்டார். எல்லோரும் ராகுலை பப்பு என்று செல்லம் பாராட்டிக்கொண்டு இருக்கும் போது அவர் குட்டிபையன் அல்ல என்று நிருபித்தவர் இந்த சாம் பிட்ரோடா தான். ராகுலுக்கு அரசியலை கற்றுக்கொடுத்து ஆயுதங்கள் பூட்டி தயார் செய்து அவரை களத்தில் நிற்க வைத்து மோடியை எதிர்க்க வைத்தவர் பிட்ரோடா .
நான் சாம் பிட்ரோடாவை பார்த்து இது குறித்து கேட்ட போது அவர் தான் இதைச் செய்யவில்லை என மறுத்துவிட்டார். தன்னுடைய சுய வரலாற்று நூலை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார். ‘Dreaming big’ என்ற அந்த நூலை வாசித்த நான் அந்த நூலில் உள்ள பல விஷயங்களால் கவரப்பட்டேன். அத்துடன் நிற்கவில்லை. அவரிடமே சில சவால்களை விடுத்தேன். அவர் தனது அறிவையும் திறமையும் அழிவுக்கு பயன்படுத்துகிறார். இவற்றால் அவர் நொறுங்கி விழும் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற இயலாது என்றேன். அவரோ தனக்கு இருக்கும் அதீத செல்வாக்கால் சோனியா மற்றும் ராகுலை வைத்து இந்தியாவை ஆக்கப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறார்.
நாம் இன்று அதை செய்யப் போகிறோம் இதை செய்ய போகிறோம் என்று பேசி திரிய வேண்டாம். நமது வெற்றியை வரலாறு பேசட்டும்; மக்கள் பேசட்டும். பேச்சை நிறுத்திவிட்டு செயல்பாட்டில் இறங்குவோம். நாம் நிறைய பேசிவிட்டு கடைசியில் காற்று போன பலூன் போல ஆகிவிட கூ’டாது. களத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்பதை நிரூபிப்ப்போம். தாயிடம் இருந்து பெறும் அன்பை போல தூய்மையானதாக , நமக்கு தேசத்தின் மீதான பற்று இருக்க வேண்டும். இதை தவிர நாம் எதையும் சுய நலத்துடன் எதிர்பார்க்கக் கூடாது. தேசம் சீர் பெற வேண்டும் என்ற ஒரே உயரிய சிந்தனையுடன் உழைக்க வேண்டும்.
சிகாகோவில் இருந்தபடி தொழில்முறை ஆலோசகர்களைக் கொண்டு பிட்ரோடா தீர்க்கமான சிந்தையுடன் என்ன செய்கின்றார்?
பி ஜே பி கட்சி மீது பொதுவாகவும் மோடி அவர்கள் மீது குறிப்பாகவும் காங்கிரஸ் கட்சி சாட்டிய குற்றங்கள் இந்த தேர்தலில் நமது வெற்றி வாய்ப்பை அவர்கள் பறிக்க காரணமாக இருந்தன. அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்படும் அஸ்திரம் ‘’வேகமாக அடித்து ஓடு’’ என்ற போர் முறை ஆகும். இது ஒருவரை பற்றிய பழிச் சொற்களை வேகமாக அம்பு எய்வது போல தாக்கிவிட்டு விரைந்து ஓடுதல் ஆகும். அதை போல இங்கும் காங்கிரஸ் கட்சியினர் மடமடவென்று மோடி அவர்கள் மீது ரஃபேல் ஒப்பந்த ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை போகும் இடமெல்லாம் திரும்ப திரும்ப கூறினர். நிற்காமல் நிறுத்தாமல் கூறிக்கொண்டே சென்றனர். மக்களின் மனதை மூளைச் சலவை செய்துவிட்டனர். உண்மை என்ன என்பதை மக்கள் ஆராய்ந்து அறிய முற்படும் முன்பே திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி அவர்களின் மனதில் இந்த ஊழல் பி ஜே பி செய்தது என்று பதிய வைத்து விட்டனர்.
சிகாகோவில் காங்கிரஸ் கட்சிக்கான ஆலோசகர்கள் செயல்படும் அறையில் இது போன்ற குற்றச்சாட்டு ஆலோசனைகள் துளிர்த்துக் கொண்டு இருக்கின்றன. அவை களத்துக்கு ஏற்றவாறு கொம்பு சீவப் படுகின்றன. சத்யநாராயன் கங்காராம் பிட்ரோடா [சாம்] என்பவர் தலைமையில் அங்கே சிகாகோவில் கூடி சிந்தித்து செயல்முறைகளை தீட்டி இந்தியாவுக்கு அனுப்பி ராகுலுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இவர்களுக்கு மிக அதிக சம்பளம் தரப்படுகிறது. இவர்களின் வேலை இந்தியாவில் மிக அசிங்கமாக அரசியல் நடத்த சொல்லி கொடுப்பதாகும். மோசமான கீழ்த்தரமான அரசியல் பாடங்களை அவர்கள் உருவாக்குகின்றனன்ர். அதை ராகுலுக்கு கற்பித்து மோடி அவர்களின் தூய அரசின் மீது சேற்றை வாரி இறைக்கும் படி செய்கின்றனர். இதற்கு ஊடகங்களும் துணை போவது தான் விந்தையிலும் விந்தை. ஊடகங்களை விலைக்கு வாங்குவது எப்படி என்ற கள்ளத்தனங்களை எல்லாம் காங்கிரசார் நன்கு கற்று தேறி இருக்கின்றனர். அவற்றை ராகுலுக்குச் சாதகமாக செயல் திட்டமாக வகுத்து தருகின்றனர். இந்த செயல் திட்டக் குழு தினமும் ராகுலுக்கு பாடம் எடுக்கிறது. அவரும் அந்த குழுவினரிடம் கீழ்ப்படிதல் உள்ள மாணவனாக நடந்து கொண்டார். அவர் அம்மாவிடம் இருப்பதை போல அவர் தொல்லை கொடுக்கவில்லை.
அவர்களின் முக்கிய ஆயுதம் இந்திய ஊடகங்களை விலைக்கு வாங்கி திரித்து கூறும் செய்திகளை பரப்புவதாகும். இந்திய ஊடகங்ளுக்கு நாம் இலஞ்சம் கொடுத்தால் அது எந்த குப்பையையும் வெளியிடும். சில மாதங்களுக்கு முன்பு சாம் இந்திய ஊடகங்களை அழைத்து விருந்து வைத்து தங்களின் பொய் செய்திகளை வெளியிட்டால் கோடிக்கணக்கில் பணம் தருவதாகக் தெரிவித்தார். அவையும் பணத்துக்கு சோரம் போய்விட்டன. மூன்றே முக்கால் கோடி ரூபாய் வரை பல செய்திதாள்களுக்கு [Wire, Scroll, Quint, Print] Independent and Public Spirited Media Foundation, மூலமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த பவுண்டேஷனின் நிர்வாகிகளாக இருப்பவர்களில் சிலர் இங்கு 1௦, ஜன்பத் சாலையில் இருக்கின்றனர். அவர்கள் நஷ்டத்தில் பிசினஸ் ஸ்டான்டர்டு பத்திரிகை நடத்தி வரும் ராமச்சந்திர குஹாவும் டி என் நின் என்பவரும் உண்டு.. இந்த பத்திரிகை கடந்த சில வருடங்களாக மோடி அவர்களுக்கு எதிராகக் செயல்பட்டு வருகிறது. என் டி டிவி நமக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது. ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஸ், சேகர் குப்தா, நிதி ரஸ்தான் போன்றோர் பி ஜே பி பற்றிய கட்டுக்கதைகளை உருவாக்கி பரப்பி விடுவதற்காகவே சம்பளம் பெறுகின்றனர்.
ரஃபாலே ஊழல் போன்ற கட்டுக்கதைகளை உருவாக்க அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆட்கள் இருக்கின்றனன்ர். ஆவர்கள் யுரோ ஃபைட்டர் நிறுவனத்திடம் இருந்து சில தகவல்களை பெற்று திரித்து அனுப்பி வைக்கின்றனர். பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் பேச வேண்டிய விவரங்கள் குறித்து அவருக்கு கற்பிக்கப்படுகின்றது. ஊர்வலம் மற்றும் பொதுமேடைகளில் உரையாற்ற வேண்டிய விஷயங்கள் எழுதித் தரப்பட்டு அவருக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு தயார் செய்யப்படுகின்றார். சாமும் அவருடைய குழுவினரும் சொல்லும் விஷயங்களை எழுதி தர இங்கு சில பத்திரிகையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமுக வலைத் தளங்கள் , டிவிட்டர் , முக நூல் போன்றவற்றில் என்ன எழுதி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதும் கற்பிக்கப்படுகின்றது. சாம் இந்த பிரச்சாரப் பணியின் தலைவராக இருந்து அனைத்து பணிகளையும் திட்டமிட்டு ஒருங்கிணைத்து செய்து வருகிறார். அவருடைய குழுவினர் இங்கு ராகுலுக்கும் மற்ற ஊடகவியலாருக்கும் எழுத வேண்டிய பேச வேண்டிய கருத்தை தெரிவிக்கின்றனர்.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரசின் கொரில்லா தாக்குதலில் பி ஜே பி சற்று தடுமாறி போயுள்ளது. இந்த தவறான பிரச்சாரத்தை முறியடிக்க பி ஜே பி சார்பாக ஆட்கள் இன்னும் தயாராகவில்லை. இது எதிர்பாராத தாக்குதல் என்பதால் அவர்களை எதிர்க்க இனி எதற்கும் துணிந்து நிற்கிற மனப்பக்குவத்தை நாம்பி ஜே பி வளர்த்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் பி ஜே பி யுடன் நடத்த திட்டமிடுவது அறப்போர் அல்ல. அந்த கட்சி தர்ம யுத்தத்துக்கு தயாராக இல்லை. அது குள்ள நரி தந்திரத்தோடு செயல்பட தொடங்கிவிட்டது. முள்ளை முள்ளால் எடுப்பது போல பி ஜே பி யும் தந்திரத்தை தந்திரத்தால் வெல்ல வேண்டும். இதற்கு நல்ல சூத்திரதாரி பி ஜே பி கட்சியில் இருக்க வேண்டும். டில்லியில் உள்ள பி ஜே பி கட்சியின் தொழில் நுட்ப குழுவினரை விட தன்னார்வலராக பணியாற்றும் செயல் வீரர்கள் சமுக வலைத்தளங்களில் சிறப்பாக இயங்குகின்றனர். சாம் கோஷ்டியினர் பி ஜே பி கட்சிக்கும் ஆட்சிக்கும் இழைக்கும் வன்கொடுமைகளை புரிந்து இனியாவது விழித்து கொண்டு செயல்பட்டால் விரைவில் அடுத்த பாராளுமன்றத்துக்கான போர் முறைகளை தாக்குதல்களை கற்றுக்கொள்ளலாம். பி ஜே பி எதிர்த்து போராடி வெற்றியும் பெறலாம்.
அரசியலில் வெற்றி தான் முக்கியமே தவிர அதற்கான வழிமுறைகள் என்பார் சாணக்கியர். எனவே இப்போது நாட்டின் நலனுக்காக பி ஜே பி கட்சி வெற்றி பெற வேண்டியது அவசியம். இல்லையென்றால் நாடு ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி குட்டிச் சுவராகிவிடும். பி ஜே பி தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விழித்துக்கொண்டு செயல்படுவோம் வெற்றி பெறுவோம்.