
செவ்வாய் மாலை [19-6-18] சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம்,வருமான வரி துறையினர் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் அளித்த குற்றப்பத்திரிகையைக்கருத்தில் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி அவரது மனைவி ஸ்ரீ நிதி ஆகியோரைஜுன்25 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படிஉத்தரவிட்டுள்ளது. ப சிதம்பரம் இலண்டனில்மெட்ரோ வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் கணக்கில் காட்டப்படாத தொகைக்கும், இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜில் உள்ள பெரிய மாளிகைக்கும் இன்னும் பல வெளிநாடுகளில் குடும்பத்தினர் பேரில் சட்டத்துக்கு புறம்பாக ரகசியமாக வாங்கியுள்ள சொத்துக்களுக்குமாக வருமான வரி துறையினர் அவரது குடும்பத்தினர் மீது தாக்கல் செய்துள்ள முறைகேடான சொத்து குவிப்பு வழக்கில்தலைமை பெரு நகர் நீதிபதியின் அழைப்பாணைக்கு பணிந்து சிறப்பு நீதிமன்றத்தின் முன் குடும்பத்தினருடன் அவர் ஆஜராக வேண்டும்.
பதினான்கு நாடுகளிலும் இருபத்தோரு வெளிநாட்டு வங்கிகளிலும் ப சிதம்பரம் குடும்பத்தினருக்கு இருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்கி இருப்புகளை சுவாமி வெளிப்படுத்தினார்
கருப்பு பணச்சட்டத்தின் கீழ் வருமான வரி துறையினர் தாக்கல் செய்துள்ளவழக்கில் ஆஜராகாமல் இருக்க ப சிதம்பரத்தின் குடும்பம் இதுவரை பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது வழக்கை நேரில் சந்திக்க திராணியற்று நளினி சிதம்பரம் இந்த அமைப்புக்கு [சிபி ஐ] அதிகாரம் இல்லை, என்றும் முறையீட்டு படிவத்தை வழங்கவில்லை, என்றும் இந்த அதிகாரிகளுக்கு கருப்பு பணச் சட்ட வழக்குகளைக் கையாளும் அதிகாரம் என்றும் சில மட்டமான காரணங்களை காட்டி வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிக்கிறார். இந்த நீதிமன்றத்துக்கே தங்கள் வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று கூட ஒரு கேவலமான மனுவை இந்தக் குடும்பத்தினர் அளித்தனர். ஆனால் இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத சிறப்பு நீதிமன்றம் இந்தியாவின் ஊழல் குடும்பங்களில் ஒன்றான இந்த ப. சிதம்பரம் குடும்பத்தினரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர தனது இரும்பு கரத்தை நீட்டி விட்டது.
வருமான வரி துறையினர் இப்போது தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் அமெரிக்காவில் இருக்கும் 3.28 கோடி மதிப்பிலான சொத்துக்கள், பிரிட்டனில் உள்ள 80 இலட்சம் மதிப்பிலான சொத்துக்கள், இங்கிலாந்தில் கேம்ரிட்ஜ் நகரில் இருக்கும் அசையா சொத்துக்கள் ஆகியவற்றை முழுவதுமாகவோ ஒரு பகுதியாகவோ மறைத்ததற்காக வழக்கு போடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே பதினான்கு நாடுகளில் உள்ள சொத்துக்களுக்கும் இருபது அந்நிய நாட்டு வங்கிகளில் இருக்கும் ரகசிய வங்கி இருப்புகளுக்கும் எதிராக கருப்பு பணச்சட்டத்தின் கீழ் இவ்வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்குகள் பெரும்பாலும் கார்த்தியின் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளன.
கேம்ப்ரிட்ஜ் நகரில் இருக்கும் சொத்துக்கள் தவிர அமெரிக்க்காவில் Nano Holdings LLC என்ற நிறுவனத்தில்கார்த்தி முதலீடு செய்திருக்கும 3.28 கோடி ருபாயும் பிரிட்டனில் Totus Tennis நிறுவனத்தில் அவர் செய்திருக்கும் முதலீடும் இந்த கருப்பு பண வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. கார்த்தியின் செஸ் குளோபல் அட்வைசரி என்ற நிறுவனமும் வருமான வரி துறையினரின் பிடியில் சிக்கியுள்ளது. வருமான வரி துறையினரின் கணக்குப்படி சிதம்பரம் குடும்பத்தாருக்கு பதினான்கு நாடுகளிலும் இருபத்தோரு வங்கிகளிலும் இருக்கும் மொத்த சொத்து மற்றும் இருப்பின் மதிப்பு மொத்தம் மூன்று பில்லியன் டாலர் ஆகும். இந்த விவரங்கள் சிதம்பர ரகசியம் என்ற செய்தி கட்டுரையில் நமது செய்தி தளத்தில் விரிவாக தரப்பட்டுள்ளன.
கார்த்தியின் நிறுவனத்தில் 2015 டிசம்பர் மாதம் ஏர்செல் மேக்சிஸ் ஊழல் தொடர்பாக அமலாக்கத்த்துறையினரும் (ED) வருமான வரி துறையினரும் இணைந்து ஆய்வு நடத்தியபோது ப சிதமபரம் குடும்பத்தினரின் கருப்பு பண விவகாரங்கள் வெளியே தெரிய வந்தன. இந்த ஆய்வுகளை நடத்திய ராஜேஸ்வரசிங் என்ற அதிகாரியை டில்லியில் அதிகாரம் மிக்க பதவிகளில் இருக்கும் சிதம்பரத்தின் நண்பர்களும் அவரது கையாட்களும் பாடாய் படுத்தினர். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிஜேபி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி ப சிதம்பரம் மீதான இந்த வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டார். வருமான வரி துறையினரின் இரு நூறு பக்க அறிக்கையை வெளியிட்டு பதினான்கு நாடுகளிலும் இருபத்தோரு வெளிநாட்டு வங்கிகளிலும் ப சிதம்பரம் குடும்பத்தினருக்கு இருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்கி இருப்புகளை சுவாமி வெளிப்படுத்தினார். அதுவரை நிதி அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியே விடாமல் ஒரு வருடகாலமாக மூடி மறைத்து வந்தது.