உர்ஜித் பட்டேல் உஷார்: புதிய துணை ஆளுநர் என்ற போர்வையில் [பெயரில்] ஓர் உளவாளி?

கிருஷ்ணன் துணை ஆளுநராக்க கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்

0
6004
கிருஷ்ணன் துணை ஆளுநராக்க கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்
கிருஷ்ணன் துணை ஆளுநராக்க கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்

CLICK HERE FOR THE ENGLISH VERSION

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்காக ஒரு ‘பெரியவர்’ தன் தரத்தில் இருந்து கீழ் இறங்கிப் போய் அலைவதை நம்ப முடியவில்லை

  • ப. சிதம்பரத்தின் கையாளை துணை ஆளுநராக்க கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்
  • இந்த வஞ்சகரால் ஆபத்து அதிகம்; அதனால் உங்கள் நலம் பாதிக்கப்படும்.

கொஞ்சம் கூட தகுதி இல்லாத கே. பி. கிருஷ்ணன் என்பவர் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் போகிறார். இத்தேர்வு, ஊழலை எதிர்த்து ஒழிப்பதில் அக்கறை இல்லாமல் இந்த அரசு இருக்கிறதே என்ற எண்ணத்தை வாக்காளர் மத்தியில் ஏற்படுத்தி அவர்களைச் சோர்வடைய வைக்கும். வாக்காளர்களுக்கு கே.பி.கேயின் ‘பாஸ்’ முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் செய்த ஊழல்கள் அனைத்தும் தெரியும் நான் இதற்கு முன்னர் எழுதி வெளியிட்ட நிதி துறையின் தேடுதல் குழு  [FSRASC] கே.பி.கேயை துணை ஆளுநராக தெரிவு செய்யக் கூடாது என்ற செய்திக்கட்டுரை நிதி அமைச்சகத்தில் எவ்வித உணர்வையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] சட்டத்தின் படி நான்கு துணை ஆளுநர்களை நியமிக்கலாம். அவர்களில் இருவர் அந்த வங்கியை சேர்ந்தவராகவும், ஒருவர் வணிக வங்கியாளராகவும் மற்றொருவர் பொருளாதார இயல் அறிஞராகவும் இருக்க வேண்டும்.  இவர்கள் பணக் கொள்கை [Monetary Policy] துறையின் தலைமை பொறுப்பில் இருப்பர். இதில் முனைவர் கிருஷ்ணன் எந்த தகுதியும் இல்லாதவர்.  இவரை துணை ஆளுனராக்குவது இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்திற்கு புறம்பானதாகவும் விதி மீறலாகவும் அமைந்துவிடும்.

எதற்கு இந்த விதிமீறல்?

இந்திய ரிசர்வ் வங்கியில் நல்ல தரமான ஆட்களை இப்போது நியமிக்க வேண்டியது மிக மிக முக்கியம் என்பதை நானும் பி குருஸ் இணைய தளமும் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். விதிகளை மீறி கே.பி.கே  தனது பெயரை தேர்வு பட்டியலில் கொண்டு வந்ததில் இருந்தே அவர் பெரிய  பித்தலாட்டக்காரர் என்பது தெளிவாகிறது. அவருக்கு அந்த பொறுப்புக்குரிய தகுதி இருந்தாலும் கூட அவரது நியமனம் ரிசர்வ் வங்கிக்கு நன்மை தராது. அதற்கான காரணங்கள் வருமாறு:

  1. கிருஷ்ணன்,நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்போதும் ப. சிதம்பரத்தின் தனிப்பட்ட இலாபத்துக்காகவே உழைப்பார். அவருடைய இந்த தனிப்பட்ட ஆர்வம் நாட்டுக்கு கெடுதல் விளைவிக்கும். இப்போது ப.சிதம்பரம் நிதி சந்தைகளில் விளையாடி வருவது எல்லோருக்கும் தெரியும்.
  2. இணை செயலர் என்ற முறையில் இவர் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் நபார்டு வங்கிகளை கட்டாயப்படுத்தி அவர்களின் பங்குகளை தேசிய பங்கு சந்தைக்கு ஆதரவாக திரும்பப்பெறும்படி செய்து அதன் மூலமாக NCDEX இன் பங்குகள் வைத்திருக்கும் முறையில் தலையிடுவார். இந்தத் தலையீடு வங்கிகளிலும் பங்கு பத்திரங்களிலும் அந்நிய செலாவணி மாற்றச சந்தையிலும் [FOREX] தொடரும்.
  3. இவர் ப. சிதம்பரத்துக்கு ரிசர்வ் வங்கியின் திட்டங்கள் குறித்து டிப்ஸ் கொடுப்பார்.  பங்குச்சந்தையிலும் அந்நிய செலாவணி மாற்றம் குறித்தும் வங்கி எடுக்கும் முடிவுகள் குறித்தும் இவர் முன்னரே ப சிதமபரத்துக்கு தெரிவித்து அவரை ‘உள் வர்த்தகத்தில்’ [internal trading] ஊக்குவிப்பார்.  இது சட்டத்துக்கு புறம்பானது என்றாலும் இது குறித்து இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் [SEBi] கவனத்துக்கு கொண்டு வந்த வழக்குகளை அது ஆமை வேகத்தில் தான் நடத்தி செல்கிறது.
  4. கிருஷ்ணன் உயர்மட்ட அதிகாரிகளிடம் தன செல்வாக்கை பயன்படுத்தி பணக்கொள்கை [Monetary Policy Committee] குழுவில் தனக்கு வேண்டியவர்களை நியமித்து தான் நினைத்ததை சாதித்து காட்டுவார். அவர் ரிசர்வ் வங்கியில் தன் ஆட்களை கொண்டு தங்களுக்கு மட்டுமே இலாபம் தரக்கூடிய கொள்கைகளை உருவாக்கினாலும் அவர்கள் அவற்றை எந்த அளவுக்கு புரிந்து செயல்பட்டார்கள் என்பது கேள்விக்குறியே ஆகும்.
  5. கே. பி.கே டில்லியில் உள்ள புனித ஸ்டீஃபன் கல்லூரியில் படித்தவர். அங்கிருந்து தான் ஏராளமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் படித்து வந்திருப்பதால் இவருக்கு இங்கு படித்து பதவிக்கு வந்த பல உயர் அதிகாரிகளின் பழக்கமுண்டு. இந்த மேதாவிகளில் பலர் ப சிதமபரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் அவருக்கு  உண்மையாக உழைப்பவர்கள்.
  6. கே. பி. கே கன்னி வலை [honey trap] வீசி தன உயர் அதிகாரிகளை மடக்கி வைப்பதில் கெட்டிக்காரர். இது தவிர சாணக்கியரின் ‘சாம பேத தான தண்டங்களை’ பயன்படுத்தி தன எண்ணங்களை நிறைவேற்றுவதிலும் வல்லவர். முன்னாள் அரசில் நிதி அமைச்சகத்தில் பணி புரிந்த எவரிடம் கேட்டாலும் இவரது முறைகேடான செயல்களை வெளிப்படுத்துவர்..
  7. ஐலா பட்நாயக் என்ற பெண், நிதி அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகரானது எப்படி? நிறுவனத்தின் இலாப நட்டத்துக்கும் உரிமையாளருக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது C- நிறுவனம் எனப்படும் இத்தகைய ஒரு முக்கிய C- நிறுவனத்தின் உரிமையாளரான அஜய் ஷாவுக்கு ஐலா பட்நாயக் மிகவும் நெருக்கமானவர்.  இருவரும் சேர்ந்து NIPFP எனப்படும் பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். கே.பி.கிருஷ்ணன் ப. சிதம்பரத்திடம் இருந்து இந்த ஆய்வு நிறுவனத்துக்காக எந்த ஆவணமுமின்றி நிறைய நிதி பெற்றுள்ளார்.
  8. அஜய் ஷாவும் ஐலா பட்நாயக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை பொதுவெளியில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.மூலதன கணக்கு மாற்றம் [Capital account convertibility] மற்றும் தேசிய கடன் மேலாண்மை [Sovereign Debt Management] குறித்து அவர்களின் விமர்சனம் மிகவும் கடுமையாக உள்ளது
  9. இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன் மேலாண்மையின் கொள்கைகைகளில் ஆர்வ முரண் [conflict of interest] கொண்டிருப்பதாக நடத்தப்படும் விவாதங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் அப்படி முரண்பாடு எதுவும் இல்லை என்று ஆய்வுகள் தெளிவுபடுத்தி விட்டன. ப சிதம்பரம் கோஷ்டிக்கு பொது கடனை சமாளிக்கும் திறன் இப்போது மத்திய அரசுக்கு இல்லை என்பது நன்றாக தெரியும். நிதி அமைச்சகத்தின் கடன் மேலாண்மை அலுவலகத்தில் உள் பணிகாகச் சென்றவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களால் தகவல் கசிந்து விடுகிறது. கடன் மேலாண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி செம்மையாக செயல்பட விடாமல் அதனால் பங்கு சந்தையிலும் அந்நியச் செலாவணி சந்தையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் பலன் ப சிதமபரத்திற்கு முழுமையாக சென்று அவரை கோடிகோடியாக இலாபம் பெறச்  செய்வதாகும். ப. சிதம்பரம் ஒரு அவசரக் குடுக்கை என்பதால் கடன் மேலாண்மை செம்மையாக்கப்படும் வரை அவருக்கு பொறுமையாக இருக்க முடியவில்லை.
  10. இதில் நம்மை அதிகமாக உறுத்துகின்ற விஷயம் என்னவென்றால் கே.பி.கே  தனக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் எந்த அளவுக்கும் வளைந்து கொடுக்க தயங்க மாட்டார். முலதனச் சந்தைப் பிரிவில் இருந்து அவரை வெளியேற்றி முனைவர் தாமஸ் மேத்யூ வந்த பிறகும் கூட அவர் தனக்கு கீழே வேலை பார்த்த ரோஸ் மேரி ஆப்ரஹாம், சந்திரசேகர் மகாபத்ரா மற்றும் சீ.கெ.ஜி.நாயர் ஆகியோர் மூலமாக அந்த அலுவலக நடவடிக்கைகளை அறிந்துகொண்டு இருந்தார். முனைவர் தாமஸ் மேத்யு அன்றாடம் நடத்தும் விவாதங்களின் சாரம்சத்தை ரோஸ் மேரி முதலானோர் தினமும் கிருஷ்ணனுக்கு எடுத்து கூறும் பழக்கம் இருந்தது.

பிரதமர் அலுவலகம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்

ரிசர்வ் வங்கி இப்போது பின்வருவனவற்றில் முடிவெடுக்க வேண்டும்

  • இப்போது காலியாக இருக்கும் துணை ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டியவர் வணிக வங்கியாளராக இருக்க வேண்டுமா இல்லையா?
  • இந்த வங்கி கறைபட்ட கரங்களுக்கு சொந்த்காரரான ப சிதமபரத்தின் கையாள் ஒருவரை கொண்டு இயங்கவேண்டுமா?
  • ரிசர்வ் வங்கியின் ஆளுனரை காட்டிலும் அதிக செல்வாக்குடைய ஒரு துணை ஆளுநர் தேவையா?
  • பொது கடன் மேலாண்மை, பணக் கொள்கை, செலாவணி பரிமாற்ற விகிதம் போன்றவற்றை முடிவு செய்வதில் ‘’மெத்த படித்த மேதாவிகளான’’ ஐலா பட்நாயக் மற்றும் அஜய் ஷாவின் தலையீடு தேவையா?

இப்போது பிரதமரின் அலுவலகத்தினர் தான் முடிவெடுக்க வேண்டும். துணை ஆளுநராக கே.பி.கிருஷ்ணனை தெரிவு செய்வது இரகுராம் ராஜனை முன்பு ஆளுனராக்கிய தவறுக்கு நிகரானதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here