ஜெட்லி மீண்டும் நிதி அமைச்சர் பதவிக்கு ஏங்குகிறாரா?

ஜெட்லி தனது வலைப்பதிவுகளில் தான் நிதி அமைச்சராக இருப்பது போலவே பதிவுகளை இடுகிறார்

0
3087
ஜெட்லி தனது வலைப்பதிவுகளில் தான் நிதி அமைச்சராக இருப்பது போலவே பதிவுகளை இடுகிறார்
ஜெட்லி தனது வலைப்பதிவுகளில் தான் நிதி அமைச்சராக இருப்பது போலவே பதிவுகளை இடுகிறார்

சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிழைத்து உடல் நலம் தேறி வந்திருக்கும் ஓர் அமைச்சர் தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சகத்தின் கடமைகளில் ஆர்வம் கொண்டு சொல்கின்ற கருத்துக்களை நாம் பொறுப்பின்றி  எடுத்துக்கொள்ளக் கூடாது.

இவ்வாறு ஜெட்லி சொல்லியிருப்பது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி வருபவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்லும் கருத்து அல்ல.

ஜெட்லி தனது வலைப்பதிவுகளில் தான் நிதி அமைச்சராக இருப்பது போலவே பதிவுகளை இடுகிறார். இது அவர் பழைய நிலைக்கு வந்துவிட்டார், இனி நிதி அமைச்சகத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளலாம்  என்று நிரூபிப்பதை போல் இருக்கிறது.

மத்திய அமைச்சர் ஜெட்லி தன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட நிதி அமைச்சகத்தை மீண்டும் பெற ஆசைப்படுகிறார். ஆனால் மத்திய அரசு அவரது ஆசையை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிப்பது போலத் தெரியவில்லை. ஜெட்லிக்கு சிறு நீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய் வேண்டி இருந்ததால் அவரிடம் இருந்த நிதி அமைச்சகம் பியுஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது ஆனால் ஜெட்லி சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி வந்த பின்பும் கோயல் தன்னிடம் இருக்கும் நிதி அமைச்சகத்தை ஜெட்லிக்கு திருப்பி தரும் எண்ணத்தில் இல்லை. நிதி அமைச்சகப் பொறுப்புகளில் அவர் இரண்டறக் கலந்து விட்டதாகவே தோன்றுகிறது. தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியனின் பதவி விலகலை முதலில் அறிவித்தவர் ஜெட்லி தானே தவிர பியுஷ் கோயல் அல்ல. ஜெட்லி தனது முக நூலில் ’சில நாட்களுக்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் என்னை  காணொளியில்  சந்தித்தார். அவர் தன்னைக் கட்டாயப்படுத்தும்  குடும்பப் பொறுப்புகள் காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார். அவர் சொன்ன காரணங்கள் தனிப்பட்டவை; அவை அவருக்கு மிகவும் முக்கியமானவை. அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை’’ என்று பதிவிட்டிருந்தார்.

ஜெட்லியின் முக நூல் பதிவில் அவருக்கு சுப்பிரமணியன் “சொல்வதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழி இல்லாத நிலை’’ ஏற்பட்டிருப்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

திங்கட்கிழமை அவர் தன் முக நூலில் “கடைசி நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியா 7.7 % வளர்ச்சி அடைந்திருப்பது இந்தியா வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தி என்பதை நிரூபித்துள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்

அதே பதிவில் அவர் ‘குடிமக்கள் தங்கள் வரிகளைத் தவறாமல் செலுத்த வேண்டும். இதனால் [எரிபொருள்] எண்ணெயின் மீதான நிதி சார்பு குறையும்’ என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். ‘சுங்க வரி குறைந்தால் எண்ணெய் விலை குறையும்’ என்றார். மேலும் அவர், “அரசியல் தலைவர்களிடமும் கருத்து உருவாக்குனர்களிடமும் என் பணிவான வேண்டுகோள் என்னவென்றால் … எண்ணெய் தவிர்த்த மற்ற பொருட்களுக்கான  வரி வகைகளில் ஏமாற்றுவதையும் உடனடியாக தடுத்தாக வேண்டும். மக்கள் தங்கள் வரிகளை ஒழுங்காகச் செலுத்தினால் எண்ணெய் பொருட்கள் தொடர்பான வரியும் விலை உயர்வும் உடனே கீழிறங்கி விடும். நீண்ட காலமாக, நிதி கணக்குகளை தலைகீழாக்குவதும் குழப்புவதும் பின்பு உற்பத்திக்கு எதிரானதாக மாறிவிடும்’’ என்றார்.

இவ்வாறு ஜெட்லி சொல்லியிருப்பது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி வருபவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்லும் கருத்து அல்ல. அவரிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட நிதி அமைச்சகத்தின் மீதான் அக்கறையில் அவர் சொல்கின்ற கருத்தாகும். அவருக்கு திரும்பவும் அந்த பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற ஆதங்கமும் அதில் தொனிக்கிறது.

இவரது ஆர்வத்தைச் சிதைக்கும் வகையில் இப்போது கோயல் நிதி அமைச்சகத்தில் தீவிர அக்கறை காட்டி வருகிறார். அதிகாரிகளையும் பொது வங்கிகளின் தலைமை நிர்வாகிகளைச்  சந்திக்கிறார். முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.

எடுத்துக்காட்டாக, நிதி அமைச்சகம் இப்போது, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள், வால்னட், எஃகு [non-alloy steel] போன்றவற்றிற்கு வரி விதித்துள்ளது. வெளி நாடுகளில் இருந்து இங்கு இறக்குமதி ஆகும் ஆப்பிள்களுக்கு ஐம்பது சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு முறை வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here