துப்பு துலக்கிக் கண்டுபிடிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும் என சுவாமி வலியுறுத்தல்
நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் [சி பி டி டி] வழியாக ஒரு சுற்றறிக்கையை 2௦18ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி சோனியா காந்தி மற்றும் அவர் மகன் ராகுல் காந்தியை நேஷனல் ஹெரால்டு வழக்கில் இருந்து காப்பற்றும் நோக்கில் அவர்களுக்கு அனுப்ப காரணமானவர் யார் என்பதை உடனே கண்டுபிடிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பி ஜே பி யின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஓர் அவசரக் கடிதம் எழுதியுள்ளார். ஜனவரி மாதம் நான்காம் தேதி சி பி டி டியின் சுற்றறிக்கையை திரும்ப பெறும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்ததால் அதனை அந்த வாரியம் உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டது. இப்போது தனது அடுத்த கடிதத்தில் சுவாமி நிதி அமைச்சகத்தை சேர்ந்த எந்த அதிகாரி [அண்டர் செகரட்டரி] சோனியா மற்றும் ராகுலை இந்த வருமான வரி வழக்கில் இருந்து காப்பாற்ற விரும்பி இந்த சுற்றறிக்கையை அனுப்ப சொன்னார் என்பதை கண்டுபிடிக்க உடனே உத்தரவு இடுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு ஒரு கடிதம் அனுபியுள்ளார்.
“நீங்கள் சோனியாவும் ராகுலும் இன்னும் சிலரும் கைதாகி பிணையில் வெளியே வந்திருப்பதால் ஊழல் பற்றி பேச அவர்களுக்கு அருகதை கிடையாது என்று மேடையில் பேசி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விஷயத்தை நீங்கள் மக்கள் அத்தியில் கொண்டு போனது மிக மிக நல்ல விஷயம் ஆகும் இதற்காக நான் உங்களை பாராட்டுகிறேன்”, என்று ஆந்த கடிதத்தில் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
ஏ ஜே எல் [ Associated Journals Limited] என்ற நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 99% பங்குகளை எடுத்துக்கொண்டு யங் இண்டியன் என்ற புதிய பத்திரிகையை தொடங்கி இருப்பதாகக் பேர் பண்ணிக்கொண்டு மிகப் பெரியளவில் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ள சோனியாவையும் அவரது மகன் ராகுலையும் சில கேவலமான் அதிகாரிகள் வழக்கில் இருந்து காப்பாற்ற முயல்கின்றனர். அவர்கள் யார் என்பதை கண்டு பிடித்து சட்டத்தின் கைகளில் ஒப்படைக்கும் படி நீ’ங்கள் உத்தரவிட வேண்டும் அப்போது தான் ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இவர்கள் நம் ஊழலற்ற அரசின் நற்பெயரை கெடுத்து விடுவார்கள். இவர்கள் மோசமானவர்கள். அரசு அதிகாரிகள் என்ற பெயரில் இருந்து கொண்டு நம் அரசின் நேர்மையை உறிஞ்சி கொழுக்கும் புல்லுருவிகள் ஆவர்.
இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை என்றும் சொல்லுமளவுக்கு இது ஒரு மோசமான முன் உதாரணமாக அமைந்துவிட்டது. ஊழலுக்கு எதிராக அரசு இறங்கியிருக்கும் முயற்சியில் ஒரு சுற்றறிக்கை ஊழல்வாதிகளை காப்பாற்றும் நோக்கில் அளிக்கப்படுவதும் பின்னர் 24 மணி நேரத்தில் உடனே அதை திரும்பப் பெறுவதும் இதுவரை நடந்திராத விஷயங்கள் ஆகும். டிசம்பர் கடைசி நாள் அன்று சுற்றறிக்கை தயாரிக்கப்பட்தாலும் அந்த விஷயம் ஜனவரி மூன்றாம் தேதி தா மக்களுக்கு தெரிய வருகிறது. . இதை தெரியாமல் செய்தார்களா [அப்படி செய்யக் கூடியவர்கள் கிடையாது] அல்லது தெரிந்தே செய்தார்கள் என்றால் ஏன் அப்படி செய்தார்கள். இந்த சுற்றறிக்கையில் கையெழுத்திட்ட நிதி அமைச்சக அதிகாரி ஏன் அவ்வாறு செய்தார்.? அவர் ஏன் சோனியாவையும் ராகுலையும் காப்பாற்ற வேண்டும்? இல்லையெனில் வேறு எதற்காக அவர் அப்படி செய்தார்.? ‘’ இந்த சுற்றறிகையைத் தயாரித்ததில் பல அதிகாரிகளின் பங்கு இருந்திருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் ராஜாங்க அமைச்சராக இருக்கும் முனைவர் ஜித்தேந்திர சிங் என்பவரின் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து இந்த சுற்றறிக்கை சதியின் பின்னணியைத் துப்பு துலக்கும்படி சுவாமி பிரதமரைக் கேட்டு கொண்டார்.