சனிக்கிழமை சுவாமி ஆதாரங்களை சமர்ப்பிக்க தொடங்கியதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு சூடு பெற தொடங்கியது. கூடுதல் தலைமை பெரு நகர் நீதித் துறை நடுவர் முன்னிலையில் வழக்கு குறித்து சுவாமி வாய் மொழியாக ஆதாரங்களைத் தெரிவித்த போது காங்கிரசின் வக்கீல் குழுவினர் பல முறை மறுப்பு தெரிவித்தனர்
முன்பு நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் பணி புரிந்தவரும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான பூஷன் ரெய்னா இந்த பத்திரிகையை நடத்தும் ஏ ஜே எல் எனப்படும் அசொசியேட் ஜர்ணல்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக தன்னிடம் கூறினார் என்று சுவாமி நீதிமனறத்தில் தெரிவித்தார். பத்திரிக்கை அலுவலகத்தில் பணி புரிவோருக்கு 2008 ஆம் ஆண்டு முதல் சம்பள பாக்கி இருப்பதாக ரெய்னா தெரிவித்ததாகவும் கூறினார்..
2011இல் யங் இந்தியன் என்ற ஐந்து இலட்ச ருபாய் முதலீடு கொண்ட நிறுவனத்தை கொண்டு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இந்தியா முழுக்க சொத்துக்கள் வைத்துள்ள எழுபத்தொரு ஆண்டுகள் பழமையான ஏ ஜே எல் [அசோஸியேடட் ஜர்ணல்ஸ் லிமிட்டட்] நிறுவனத்தை வாங்கியுள்ளனர் என்பது நம்பும்படியாக இல்லை. மேலும் டில்லி ப்ரெஸ் என்க்லேவ் ஏரியாவில் உள்ள ஹெரால்டு ஹவுசில் தற்போது பாஸ்போட் அலுவலகம், டாடா கன்சல்டன்சி அலுவலக வாரியம் போன்ற அலுவலகங்களும் செயல்படுவது நம்முள் பல் கேள்விகளை எழுப்புகிறது என்றார் சுவாமி.
இந்த பிரஸ் என்க்லேவ் ஏரியாவில் குறைந்த வாடகையில் பத்திரிகை அலுவலகங்களை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி இங்கு நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நடத்துவதற்காகவே இங்கு ஏ ஜே எல் [அசோஸியேடட் ஜர்ணல்ஸ் லிமிட்டட் நிறுவனம்] இயங்கி வருகிறது. ஆனால் அதில் வேறு அலுவலகங்கள் நடத்த உள் வாடகைக்கு விடுவது முறையற்றது ஆகும். ‘இது குறித்து ஹெரால்டு ஹவுசுக்கு கடிதல் எழுதி நான் விளக்கம் கேட்க முயன்றேன். அங்கு பத்திரிக்கை அல்லாத வணிக நிறுவனங்களுக்கோ அரசு அலுவலகங்களுக்கோ வாடகைக்கு விடுவது முறையற்ற செயல் ஆகும்’. என்றார் சுவாமி
மூத்த பத்திரியாளர் ஜே கோபிகிருஷ்ணனுக்கு அனுப்பிய மின் அஞ்சலில் ராகுல் காந்தி இனி நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் எண்ணமில்லை என்று தெரிவித்துள்ளார். சுவாமி இதைத் தெரிவித்த போது வழக்கு விசாரணைக்கு இன்னும் ஏற்றுக்கொள்ளப் படாத நிலையில் இந்த விவரங்களை அவர் தெரிவிப்பது தேவையற்றது என காங்கிரஸ் வக்கீல்கள் மறுப்பு தெரிவித்தனர்.
ஏ ஜே எல் [Associated Journal Limited] யங் இந்தியனின் துணை நிறுவனமாக மாற்றப்பட்டிருக்கும் முறை வியப்பை அழைக்கிறது என்றார் சுவாமி. இதற்கும் காங்கிரஸ் வக்கீல்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினர். சுவாமி இது என்னுடைய அபிப்பிராயம்தான் என்றார். என்னுடைய வாக்குமூலத்தை முதலில் ஆதாரமாக சமர்ப்பித்துவிட்டு பிறகு என்னிடம் இருக்கும் ஆவணங்களை நீதிமன்றத்தில் அளிப்பேன் என்றார்
குற்றம் சாட்டப்பட்ட சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகர்களான சுமன் டுபே மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோர் சுவாமி தனது அபிப்பிராயம் என்று சொன்னதைக் கூட கடுமையாக எதிர்த்தனர். ஐந்து இலட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட யங் இண்டியன் ஏ ஜே எல்லின் 99.1 சதவீதத்தை வாங்கியதால் அது ஏ ஜே எல் நிறுவனத்துக்கு அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 90 கோடி ருபாய் கடன்பட்டுள்ளது. இதில் நடந்துள்ள மோசடி மற்றும் ஏமாற்று வித்தைகளை ஆதாரப்பூர்வமாக நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்றார். அரை மணி நேரம் சுவாமி தன் தரப்பு ஆதாரங்களை வாய் மொழியாக எடுத்துரைத்ததை கேட்டுக்கொண்டிருந்த நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். சுவாமி தனது ஆதாரங்களை அளித்த பிறகு அவரை கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி தலைமையிலான வக்கீல் குழுவினர் அவரை குறுக்கு விசாரணை செய்வர். குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேர் சார்பில் ஒரு மிகப் பெரிய வக்கீல் குழு இந்த வழக்கில் ஆஜர் ஆகின்றது.