டிவிட்டர் மூலமாக ஆதரவு தேடுகிறார் அஸ்தானா

டிவிட்டர் மூலமாக தனக்கு வேண்டியவர்களை டிவிட் செய்ய வைத்து தான் நல்லவர் என்று நிரூபிக்க அஸ்தானா முயற்சி

0
1531
டிவிட்டர் மூலமாக தனக்கு வேண்டியவர்களை டிவிட் செய்ய வைத்து தான் நல்லவர் என்று நிரூபிக்க அஸ்தானா முயற்சி
டிவிட்டர் மூலமாக தனக்கு வேண்டியவர்களை டிவிட் செய்ய வைத்து தான் நல்லவர் என்று நிரூபிக்க அஸ்தானா முயற்சி

#RakeshAsthanaSupport என்ற ஹஷ் டேக் மூலமாக இந்த சி பி ஐ அதிகாரி தான் நேர்மையானவர் என்று மற்றவர்கள் கருதும்படி சில உள்ளடி வேலைகளை செய்து வருகிறார். இதற்காக அவர் நிறைய பணம் செலவு செய்கிறார். இந்த RakeshAsthanaSupport என்ற இணையதளம் என்பது அவர் மிக மிக நல்லவர் என்றும் அவர் மீது யாரோ வீண் பழி சுமத்துவதாகவும் எண்ணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தங்கத்தை பார்த்து சிரித்ததாம் பித்தளை என்ற கதையாக சி பி ஐ தன் மீது வீண் பழி சுமத்தியிருப்பதாக என்று இந்த ‘நல்லவர்’ சொல்கிறார்.

இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவானதன் விவரத்தை காண்போம். அதற்கான தொடர் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துவோம். இவர் மீதான முதல் தகவல் அறிக்கை இவர் டில்லியில் உள்ள பிரஸ் கிளபில் இருந்து 1.95 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சுமத்தி உள்ளது. இந்த இலஞ்சத்தை வாங்கி தருவதில் இடைத் தரகராக செயல்பட்ட மனோஜ் குமார் தன் வாக்குமூலத்தில் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். இவர் ஒரு சி பி ஐ வழக்கை முடித்து வைப்பதற்காக அஸ்தானாவிடம் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி இலஞ்சம் கொண்டு வந்து கொடுத்தார். இது பற்றி டிவிட்டரிலும் ஒரு பதிவு வந்தது.

அஸ்தானாவுக்காக ஒரு புதிய இணையதளம் தொடக்கம்
hindurasthra10.com என்ற பெயரில் ஒரு புதிய இணையதளம் தொடங்கப்பட்டு ஒரே ஒரு பதிவு அஸ்தானாவுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் எழுத்துப் பிழையுடன் ஒரு தகவல் பதிவாகி உள்ளது. அதே தகவலை எடுத்து பலர் தமது பதிவில் ஏற்றியுள்ளனர். ஆனால் எழுத்துப் பிழை அப்படியே உள்ளது.

இந்த பதிவில் Destroy என்ற சொல்லை distroy என ஆங்கிலத்தில் தவறாக தட்டச்சு செய்திருப்பதை மறு பதிவுகளும் தெள்ளத் தெளீவாக எடுத்துக்காட்டுகின்றன. அஸ்தானாவுக்கு ஆதரவாக விளங்கும் சில குழுக்கள் இத்தகவலை மறு பதிவு செய்துள்ளன.

Figure 1. Same tweet text with destroy misspelled
Figure 1. Same tweet text with destroy misspelled

அஸ்தானாவும் விஜய் மல்லையாவும் 

விஜய் மல்லையா வங்கி கடன் மோசடி செய்ததால் வெளி நாட்டுக்கு ஓடிப்போய்விட்டதை கடுமையான குற்றமாக கொள்ள முடியாத வகையில் அவர் மீது வலுவற்ற வழக்கை பதிவு செய்துள்ளனர். அவரை காப்பற்ற முனைவதில் அஸ்தானா முன்னணியில் இருக்கிறார். முன்னர் நம் செய்தி தளத்தில் எவ்வாறு அரசியல்வாதிகள் மல்லையாவை தப்பிக்கவிட்டு அவர் மீது வலுவில்லாத வழக்குகளை பதிவு செய்துள்ளனர் என்று ஒரு செய்தி கட்டுரை வெளியிட்டிருந்தோம். இவர்கள் பதிவு செய்திருக்கும் வழக்குகளுக்கு ஆதாரங்கள் கிடைப்பது மிக அரிது என்பதால் அரசு தரப்பில் இந்த வழக்கு தோற்றுவிடும்.

இங்கு அந்த செய்திக் கட்டுரையில் இருந்து சில பகுதிகள் மட்டும் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. இதை படித்து பார்த்தால் அந்த கேவலமானவர்கள் வழக்கு பதிவு செய்த இலட்சனத்தை நீங்களும் உணர்ந்துகொள்ளலாம்.

சரவ்தேச நீதிமன்றங்களில் குற்றவியல் சட்டப் பிரிவு 164இன் படி சிபிஐ தன் தரப்பு சாட்சிகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே விஜய் மல்லையாவை தண்டிக்க இயலும். இந்நிலையில் சிறப்பு இயக்குனர் அஸ்தானா தலைமையிலான சிபிஐ குழு 161ஆம் பிரிவின் கீழ் விஜய் மல்லையா மீதான வழக்கை பதிவு செய்தது ஏன்? அதுவும் விவாதத்துக்குரிய வாக்குமூலங்களை தாக்கல் செய்தது முட்டாள்தனம் இல்லையா? ராகேஷ் அஸ்தானாவின் பணி நியமனம் குறித்து இயக்குனரே வினா எழுப்பியுள்ளார்.

சில நாட்களில் இலண்டன் நீதிமன்றம் சிபிஐ தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பரிசீலனை செய்யும். இலண்டன் பத்திரிகையாளர்கள் ‘அங்குள்ள நீதிமன்றத்தில் இந்திய சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்த ஏழு குற்றச்சாட்டுகளில் ஐந்து குற்றச்சாட்டுகள் ஒன்று போலவே உள்ளன’ என்கின்றனர். அதாவது ஏதோ வெட்டி ஒட்டி தயாரித்தது [copy-paste job] போலவே தோன்றுகிறது. என்று ஒரு இலண்டன் பத்திரிகையாளர் தெரிவித்தார்.

வெட்டி ஒட்டப்பட்டது என்பதை இரண்டு பதிவுகளில் இருக்கும் ஒரே மாதிரியான எழுத்துப்பிழைகள் காட்டி தருகின்றன.

எதிர்பார்த்திருங்கள்; இப்போது தான் வேடிக்கை தொடங்கியிருக்கிறது;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here