ராகுல் காந்தி ஓர் அதிசயம்!

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் தொடர இயலுமா?

0
1549
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் தொடர இயலுமா?
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் தொடர இயலுமா?

இப்போது கர்னாடகா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுதும் வெளியாகிவிட்டன. நாம் இப்பொது ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்வோம் ராகுல் காந்தியின் மந்திரம் இன்னும் பலிக்கிறது.  அவர் பி.சி சர்க்கார் போல மாயாஜால வித்தைகள் செய்யலாம். சித்தராமையாவின் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சி தன்னுடைய மிக் குறைந்த பலத்தால் பாரதீய ஜனதா கட்சி என்ற மலையை அசைத்து பார்த்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் [பல நிகழ்ச்சிகளுக்கு] வந்தார் [பலவற்றையும்] பார்த்தார்  [தன் கட்சியை] அழித்தார். 2013இல் காங்கிரசுக்கு கிடைத்த 122 இடங்கள் இப்போது எண்பதாக குறைந்துவிட்டன.

ராகுல் காந்தி இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்துக்கள் அல்லாதவர் என்றும் பிரித்து பேசும் சூழ்ச்சியை தனது ஆயுதமாக அடிக்கடி பயன்படுத்தினார்.

அதே வேளையில் பி.ஜெ.பி கட்சிக்கு மக்கள் ஆதரவு இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. சில இடங்களில் மிக்குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வாக்கு பகிர்வில் காங்கிரஸ் பி.ஜெ.பிக்கு பிந்திய நிலையிலேயே உள்ளது. இந்த செய்திக்கட்டுரை எழுதும் வரை ராகுல் காந்தி பற்றிய எந்த செய்தியும் அவர் அளித்த அறிக்கை ஒன்றும் வெளிவரவில்லை. அவரது தாயார் சோனியா காந்தி தான் ஹெச், டி தேவ கௌடாவிடம் ஆட்சி அமைப்பது குறித்து பேசி வருகிறார். மக்களின் ஆதரவுக்கும் மக்களாட்சி தத்துவத்துக்கும் எதிர்த்து இச்செயலில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் வந்த அறிக்கையில் இருந்து இப்போது வரை பிரதமரின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இருந்த வரவேற்பு ராகுல் காந்தியின் பிரச்சாரத்துக்கு இல்லை என்பது தெளிவாகிறது.  இப்போது அவரால் அவர் கட்சி இழப்பை சந்தித்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. அவர் தொடர்ந்து அவர சார்ந்திருக்கும் காங்கிரசு கட்சிக்கு இழப்பைத் தேடித்தான் தந்திருக்கிரார், அவர் தலைமை பொறுப்பேற்ற பிறகும் அதே நிலை தொடர்கிறது.. ராகுல் காந்தி பி.ஜெ.பி கட்சிக்கு மிகப்பெரிய சொத்து என்று சொன்னால் அது மிகையில்லை. அவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்வரை பிஜெபி கட்சிக்கு தோல்வி என்பதே கிடையாது.  போஃபார்ஸ் ஊழல் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட ஒரு கார்ட்டூனை எதிர்த்து அதன் மீது ராஜிவ் காந்தி அந்தக் காலத்தில் தொடர் தாக்குதல் நடத்தினார். இதனால் அந்த நாளிதழின் விற்பனை அதிகரித்து அதன் செல்வாக்கு மக்களிடையே உயர்ந்தது.  அந்த நாளிதழ் ராஜிவ் காந்தியை தனது விற்பனை அதிகமாக காரணமாக இருந்த  மார்க்கெட்டிங் மேனேஜராக ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. இன்றைக்கு ராகுல் காந்தி அந்த பணியை பிஜெபிக்கு செவ்வனெ செய்கிறார்.

ராகுல் காந்தி மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக உருவாக இயலாதது ஏன்? அவர் என்ன முயற்சி செய்தாலும் இது நடக்காது. அவர் கர்நாடகாவில்  காங்கிரசு கட்சி இந்துக்களை பிரித்ததை ஏற்றுக்கொண்டார். இந்த தவறான கொள்கைக்கு ஆதரவளித்தார்.  அவர் இந்துக்களை பிரித்தாள முயன்றார். லிங்காயத்துகள் என்றும் லிங்காயத் அல்லாதவர் என்றும் பிரித்ததற்கு சம்மதித்தார். மக்களின் வெறுப்புக்கு ஆளான இந்த கொள்கையை அவர் புரிந்துகொள்ளவில்லை; தன் கட்சியினரை தடுத்து நிறுத்தவில்லை. இந்திய ஜனநாயகத்தில் சரி எது தவறு எது என்பது அவருக்கு தெரியவில்லை. இதனை இந்திய உளவுத்துறை, கேரளா காவல் துறை, அமலாக்க துறை போன்ற பல துறைகளின் ரகசிய அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

திப்பு சுல்தான் என்ற கருத்து  முரண்பாடு கொண்ட மன்னரின் பிறந்த நாளை கொண்டாடி அதனை தன் சாதனையாக காங்கிரசு கட்சி பிரச்சாரக் கூட்டங்களில் தெரிவித்தபோது அதன் பாதிப்புகளையும் பின்விளைவுகளையும் அறியாத ராகுல் அகமகிழ்ந்து போனார். மோடி அரசு தாழ்த்தப்பட்டவருக்கும் பழங்குடியினருக்கும் எதிரான அரசு என்று பொய் பிரச்சாரம் செய்து வந்தார். ஜி எஸ் டி வரி மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்தார்.  அதாவ்து அவர் எப்போதும் தவறான பிரச்சாரத்தையே செய்து வந்தார். அவர் கட்சி ஆட்களின் அரை வேக்காட்டு  வார்த்தைகளை கேட்டு அவற்றை ஆராயாமல் உண்மை என்று நம்பி கிளிப்பிள்ளை சொல்வது போல சொல்லி வந்தார். அவர்களின் பொருந்தா பேச்சுக்கு அவர் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ராகுல் காந்தி தான் தவறு செய்கிறார் என்பதல்ல, பல அரசியல்வாதிகள் இந்த தவறை செய்வதுண்டு. அதாவது தவறு அல்லது தோல்வி ஏற்பட்ட போது அதில் இருந்து இவர்கள் பாடம் கற்றுக்கொள்வதில்லை. குஜராத்திலும் இதே தவறைத்தான் ராகுல் செய்தார்.  இவரது தவறான தேர்தல் வழிமுறைகள் காங்கிர்சுக்கு தோல்விகளுக்கு ஒரு காரணமாயிற்று. இருபதாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை சொல்லி பிஜெபி கட்சிக்கு எதிராக பேசியது; பாரம்பரிய வாக்காளர்களாகிய பட்டெல் சமூகத்தினரின்  அதிருப்தியை சம்பாதித்தது; பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்படுத்தப்பட்ட சமூகத்தினருடன் தன் கட்சிக்கு கொள்கை ரீதியான ஒட்டுதல் இருப்பதாக காட்டிகொண்டது என இதே தவறுகளையே அப்போதும் காங்கிரசு கட்சி செய்து தோல்வியை தழுவியது.

ராகுல் காந்தி இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்துக்கள் அல்லாதவர் என்றும் பிரித்து பேசும் சூழ்ச்சியை தனது ஆயுதமாக அடிக்கடி பயன்படுத்தினார். அவர் அங்கிருந்து என்ன படித்திருக்க வேண்டும் என்றால் பிரித்து பேசினால் அதன் விளைவு தோல்வி மட்டுமே என்பது தான் இந்த பாடத்தை குஜராத் தேர்தலில் ராகுல் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் ராகுல் காந்தி ராகுல் காந்தியாக இருப்பதால் அதே தோல்வி பிரச்சாரத்தை கர்னாடகாவிலும் செய்து தோற்று போனார்.

காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் தலைவரான ராகுலை எதிர்த்து புரட்சி செய்ய போவதில்லை, ராகுல் காந்தி நரசிம்ம ராவை போல சீத்தாராம் கேசரியை போல சாதாரன மனிதர் அல்ல-எதிர்த்து பேசி கண்டனம் தெரிவித்து விலக்கி வைப்பதற்கு,  ஆனால் எதிரணியில் இருப்பவர்கள் தொடர் தோல்வியை சந்தித்து வரும் அவரை ஆதரிக்க தயாராக இல்லை. அதாவ்து பிஜெபி கட்சியையும் மோடியையும் எதிர்த்து அவர் அரசியல் செய்யலாம் என இனி கனவு கூட காண இயலாது. கர்னாடகா தேர்தல் முடிவுகள் பின் பிஜெபி அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஒதுக்கிவிடலாம்  என்பது முடிவாகிவிட்டது

இன்னும் விளையாட்டு முடியவில்லை என்று ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டின் இறுதியில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜ்ஸ்தானில் கட்சியில் மாற்றம் கொண்டு வந்து பிஜெபியை எதிர்க்க போவதாக கூறிவருகின்றனர். இந்த இரு மாநிலங்களிலும் என்ன நடக்க போக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். உண்மையில் இந்த  நாட்டை விட்டு காங்கிரஸ் வெளியேறும் வரை ராகுல் காந்தியுடனான விளையாட்டும் ஒரு முடிவுக்கு வராது. நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை என்றாலும் அதை நம்புவோம், ஏனென்றால்  நம்பிக்கையே வாழ்க்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here